28 பிப்ரவரி, 2011

ஆஸ்கர் விருதுகள் 201183வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நேற்றுகோலாகலமாக நடந்தேறியது.

இதில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.
இன்செப்ஷன் திரைப்படம் 4 விருதுகளைக் குவித்தது. அதேபோல தி கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கும் 4 விருதுகள் கிடைத்தன.

விருதுகள் பெற்றோர் விவரம்:

சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
பொழுதுபோக்கு டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
டாக்குமென்டரி - ஷார்ட் சப்ஜெக்ட்- ஸ்டிரேஞ்சர்ஸ் நோ மோர்
காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
மேக்கப் - தி உல்ப்மேன்
ஒலிக் கலவை - இன்செப்ஷன்
இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
அனிமேஷன் பொழுது போக்குப் படம் - டாய் ஸ்டோரி 3
அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
சிறந்த திரைப்படம் - தி கிங்ஸ் ஸ்பீச்


22 பிப்ரவரி, 2011

திருமாவளவன் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்


இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் நடைபெற இருக்கும் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவின் இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் முகமாக இன்று அதிகாலை 2 மணியளவில் இலங்கை பண்டாரநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆனால் அவரை விமான நிலைய அதிகாரிகள் உட்செல்ல அனுமதிக்காமல் சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் மேலும் இரு அரசியல்வாதிகளும் வருகை தந்திருந்தனர்.இதனால் திருமாவளவன் சென்னையில் உள்ள இலங்கை வெளிவிவகார காரியாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் சென்னைஅ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலும் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினர் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்பவர்களி நோட்டமிட்டு வருகின்றனர்.தமிழ் மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இதைச்செய்கின்றனர்.

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது. சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது.

அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி செய்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று வலி பற்றி குறிப்பிட்டு கொண்டிருந்தார். பேஸ்புக் பயனாளிகள் தங்கள் மன உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் இப்படி செய்திகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம்.

சிலர் தாங்கள் பார்த்த புதிய படங்களை பற்றி கூறலாம். சிலர் காலை செய்தி பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எதனையும் பேஸ்புக்கில் தெரிவிக்கலாம். பீட்டரும் இப்படி தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

பீட்டரின் நல்ல நேரம் அவரது பழைய நண்பர் ஒருவர் தற்போது மருத்துவராக இருப்பவர் இந்த செய்தியை படித்து பார்த்தார். மற்றவர்களுக்கு பீட்டர் ஏதோ புலம்புகிறார் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் மருத்துவரான ராகுல் வெலிநேனி இந்த குறிப்பை பார்த்துமே இவை அபன்டிசைட்ஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார்.

எனவே உடனடியாக பீட்டரின் பேஸ்புக் செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு செய்தியை அனுப்பி வைத்து உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் எழுதியிருந்தார். இருவரும் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் பீட்டரின் தொலைபேசி எண்ணோ, முகவரியோ மருத்துவரிடம் இல்லை. எனவே தனது மருத்துவமனையை குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்திருந்தார்.

பீட்டர் வேறு ஒரு பகுதியில் இருந்ததால் உடனடியாக அந்த மருத்துவமனிக்கு செல்லும் சாத்தியம் இருக்கவில்லை. இருப்பினும் மருத்துவ நண்பரின் எச்சரிக்கையின் தன்மையை புரிந்து கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கே பீட்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அபண்டிசைட்ஸ் நோயல் பாதிக்கப்படிருப்பதை கண்டு கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்து பீட்டர் கண்விழித்ததும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் பேஸ்புக் மூலம் உயிர் காத்த நண்பா என நெகிழ்ந்து போனார்.

டாக்டர் ராகுலோ தன் பங்கிற்கு பிரிந்த பழைய நண்பரை மீண்டும் சந்திக்க இது சுவாரஸ்யமான வழி தான் என்று கூறியுள்ளார். சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கால் சாத்தியமாக கூடிய மாயங்களில் இதுவும் ஒன்று.

மகளுக்கு 'பேஸ்புக்' எனப் பெயரிட்ட எகிப்தியர்


எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மகளுக்கு பேஸ்புக் எனப் பெயரிட்டுள்ளார்.

ஜமால் இப்ராஹிம் (20) என்ற அந் நபர்அங்கு அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டங்களை நினைவு கூறும் முகமாகவே இப்பெயரினை தனது மகளுக்கு சூட்டியுள்ளார்.

அப்பெண் குழந்தையின் முழுப்பெயர் பேஸ்புக் ஜமால் இப்ராஹிம் ஆகும்.

அந் நாட்டு முன்னாள் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பேஸ்புக் வலையமைப்பானது முக்கியமானதோர் பங்கை வகித்திருந்தது.

ஆர்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதிலும், செய்திகளை பரிமாறிக்கொள்வதிலும் அதன் சேவைகள் அளப்பரியதாக இருந்தன.

மத்திய கிழக்கில் உள்ள மற்றைய நாடுகளை விட எகிப்திலேயே அதிக பேஸ்புக் பாவனையாளர்கள் உள்ளனர்.

அங்கு சுமார் 5 மில்லியன் பேர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளதுடன் அவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கெகை வேகமாக அதிகரித்தும் வருகின்றது.

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேக்கினை எகிப்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பங்கிற்காக எகிப்தியர் நன்றி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : வீரகேசரி

21 பிப்ரவரி, 2011

பலசாலிகளும் கத்துக்குட்டிகளும்


சென்ற வாரம் கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகள் வெகு விமரிசையாக தொடங்கிவிட்டன.
இந்த வருடம் இந்தப்போட்டிகளில் 14 அணிகள் விளையாடுகின்றன.சென்ற வருடம் 16 அணிகள்
இடம்பெற்றிருந்தன. அவற்றில் பேர்முடா அணியும் ஸ்கொட்லாந்து அணியும் இந்த வருடம் இடம் பெறவில்லை. முன்பு 50 ஓவர் ஆட்டங்கள் மிகவும் விரும்பி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தன..ஆனால் IPL Twenty Twenty 20 போட்டிகள் வந்த பிறகு ஒரு நாள் 50 ஓவர் ஆட்டங்களில் சுவாரஸ்யம் குறைந்து போனது.ஆனாலும் உலக கிண்ணப்போட்டிகள்
இன்னும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தாலும் அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதையெல்லாவற்றையும் விட கத்துக்குட்டி அணிகளையும் உலகக்கிண்ண போட்டிகளில் இணைத்துக்கொண்டதன் விளைவாக பல சாதனைகளை பலசாலிகளாக இருக்கும் நாட்டு அணிகளின் வீரர்கள் சாதாரணமாக நிறைவேற்றத்தொடங்கிவிட்டார்கள்.
ஆனாலும் கத்துக்குட்டிகள் என்று நினைத்துகொண்டிருக்கும் சில அணிகள் சிங்கங்களாய் சிலிர்த்து நின்ற போட்டிகளும் உண்டு. உதாரணத்துக்கு பங்களாதேஸ் அணியை சின்னப்பெடியங்கள் என்று நினைத்து களமிறங்கிய இந்திய அணியை
அதிர்ச்சி வைத்தியம் கொடுது 5 விக்கெட்டுகளால் வென்று வீட்டுக்கு திரும்ப வைத்த பெருமை பங்களாதேஷ் அணியைச்சாரும்.இதைப்போல பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்று
பாகிஸ்தான் வீரர்களின் கண்களீல் விரலை விட்டு ஆட்டியது.
அதேபோல பலம் வாய்ந்த அணிகள் இவ்வாறான புதிய அணிகளை மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தன.அதுமட்டுமில்லாமல் 100 க்கும் குறைந்த ஓட்ட எண்ணிக்கைகளுக்குள் மூட்டைப்பூச்சிகளை நசுக்குவது போல அடித்து துவைத்திருந்தன.

இந்ததடவையும் இதேபோல கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைக்கணக்கா ஒரு சில அப்பிராணிகளை எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அடிச்சு துவைச்சு காயப்போட்டு விட்டார்கள் ஆரம்ப போட்டியான இந்தியா & பங்களாதேஷ் போட்டியில் போனமுறை பட்ட அவமானத்தையெல்லாம் சேர்த்து வைத்து இந்த முறை விளாசித்தள்ளினார்கள். பட்ட அவமானத்துக்கு இந்த முறை நான் பங்களாதேஷ்க்கு
பாடம் படிபித்தே தீருவேன் என்று மாமியார் மேல சத்தியம் செய்து வந்த சேவாக் சோலோவாய் 175 ரன்களை அடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தளபதியாய் ஆட்சிபீடமேறியது மட்டுமில்லாமால் 50 ஓவர்களும் நின்று அடிப்பேன் எண்டு
ரெரராய் மற்றைய வீரர்களுக்கு வீர சபதம் போட்டு பிலிம் காட்டியுள்ளார்..அது நிறைவேற எமது வாழ்த்துகளும்..

ஆனாலும் ஆரம்பத்தில் அநியாயமாய் சச்சின் ரன் அவுட்டாகிய போது காண்டான கோடான கோடி ரசிகர்களை நிண்டு நிதான ஆடி கோபக்கனல்களை தணித்திருந்தார்.


அதேபோல கென்யாவை 69 ரன்களுக்குள் சுருட்டியது நியூசிலாந்து அணி . ஆனாலும் இதை முன்னமே அறிந்த்திருந்ததால் என்னமோ ரசிகர்கள் கூட்டம் வரவில்லை.


ஆனால் இலங்கை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இலங்கை & கனடா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வீரர்கள் அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.டேய் லெக்கில போடாதே மச்சான் அடிக்கிறான்ல... எண்டு விக்கெட் கீப்பர் சொல்ல .அவன் எந்தப்பக்கம் போட்டாலும் அடிக்கிறாண்டா எண்டு கனடா நாட்டு பந்து வீச்சாளர்கள்
கடுப்பேறியதை டீவியில் பார்க்கக்கூடியதாக இருந்தது.தனது சொந்த ஊரில் சொந்த பெயரில் மைதானம் அமைத்து முதல் போட்டியை நடத்துவதால் மிகப்பெரிய ஓப்பினிங் கொடுப்பதற்காக ரோட்டில போன பயபுள்ளைகளையெல்லாம் பஸ் விட்டு ஏத்தி கொண்டு வந்து இறக்கியிருந்தாக ..

இதே போன்று வரும் போட்டிகளிலும் எத்தனை டீம் அடிவாங்கப்போகுதோ தெரியல..ஆனால் இப்படியான கத்துக்குட்டி அணிகளால் 50 ஓவர் உலகக்கிண்ண போட்டிகள் சரிவுகளை சந்திக்க போகின்றதோ என்று யோசிக்க தோன்றுகின்றது.

விஜய் இன் வேலாயுதம் திரைப்பட Promo பாடல்கள்


வேலாயுதம் திரைப்பட Promo பாடல்களை தரையிறக்கி கொள்ள இங்கே கிளிக்குங்கள்

18 பிப்ரவரி, 2011

அப்பிள் நிறுவனத்துக்கே ஆப்பா???


அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள 'த நெசல் என்குயரர்' என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இதுவரை வெளியிடவில்லை

14 பிப்ரவரி, 2011

30 ம் முடிவும்கடந்த வாரத்தில் மக்கள் மத்தியில் வெகுவாகப்பேசப்பட்ட விடயம் எகிப்து மக்களின் அதிபர் முபார்க்குக்கு எதிரான புரட்சிதான். இது பல நாட்டில் கொடுங்கோலாட்சி வரும் பல அதிபர்களுக்கு வாந்தி பேதியையும்..அந்நாட்டின்எதிர்கட்சிகளுக்கும் மக்களுக்கும் வயித்தில பீர் வார்த்ததையும் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும்.இப்பவெல்லாம் ஆ.. ஊன்னா எதிர்கட்சித்தலைவர்கள் .. பார்த்தீல்ல டீவில... எகிப்து மக்களோட போரட்டத்தை..
நீங்க மட்டும் எங்களோட குரலுக்கு செவி சாய்க்கல அதே போல நம்ம நாட்டு எல்லாப்பயபுள்ளைகளையும் ரோட்டுக்கு கொண்டுவந்திடுவோம்ன்னு வாண்டட்டா வெருட்டுறானுக நாடளுமன்றத்தில..அதுசரி உந்தக்கதைக்கும் உன்னோடா தலைப்புக்கு என்னடா சம்மந்தம் மேட்டருக்கு வா மச்சி எண்டு கூப்பிடுறவங்களுக்காக நாம மேட்டருக்குள்ள போயிடுவோம்.

நாமளும் ஆர்வக்கோளாறில ஒரு பதிவுலகத்தில இணைஞ்சாச்சு...ஏதாச்சும் சுவாரஸ்யமா போட்டு ஹிட்டானாத்தானே நம்மளையும் ஒரு பதிவரா ஏத்துக்கொள்ளுவாய்ங்க என்பதால நம்மோட 3 வது பதிவா என்ன போடலாம் எண்டு யோசிச்சுகிட்டே
இருந்தப்பதான் இந்த எகிப்து புரட்சி நம்மோட கவனத்தை ஈர்த்திச்சு.ஆனா அதைப்பற்றி பலர் விரிவான பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்ட படியால புதுசா எப்படி இதை இணைச்சு என்னத்தை எழுதலாம் எண்டு மேல்மாடியை தீவிரமா யோசிக்க வைச்சோம் அப்போ பொறி தட்டியதுதான் இந்த தலைப்பு..( மவனே நீ இன்னுமே மேட்டருக்கு வரலயேடா)

1981 ம் ஆண்டு பதவியேற்ற எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் அங்கே பெப்ரவரி 2011 வரை ஒரு சர்வாதிகார ஆட்சியையே நடத்தி முடிச்சிருந்தார்.( இப்ப மேட்டருக்கு வந்திட்டோமில்ல). அவருக்கு அமெரிக்கா மிகவும் பின்பலமாக இருந்து கொண்டு அங்கே இருந்த வளங்களை சுரண்டிக்கொண்டிருந்தது.ஆனால் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரப்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்று கூட்டப்பட்டு எதிரான மிகப்பெரிய பலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து இப்போ அவரை பதவி இழக்கச்செய்ததன் மூலம் தமது விடுதலைக்கான அத்திவாரத்தைப்போட்டுள்ளனர்.இது அங்கே 30 வருடமாக
நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.


அடுத்ததாக 1618 ம் ஆண்டு தொடக்கம் 1648 ம் ஆண்டு வரை ஜரோப்பிய
நாடுகளில் புரட்டஸ்தாந்து மற்றும் கத்தோலிக்க மத மக்களிடையே 30 வருடம் பெரும் போர் நடைபெற்று அது மிகப்பெரிய அழிவின் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.இங்கேயும் 30 என்ற இலக்கம் போர் முடிவில் ஒட்டிக்கொண்டுள்ளது.


இதேபோன்றுதான் நமது மண்ணில் கூட 1976 ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டம் மிகவும் பலம் பெற்று உலக அளவில் பேசப்பட்டு தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நேரத்தில் கடந்த வருடம் 2009 ம் ஆண்டு உலக ஆதிக்கங்களுடன் இரும்புக்கரம் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலுமாக நசுக்கப்பட்டது.அதன் காரணமாக இன்று குரல் கொடுக்க சரியான தலைமை இல்லாமல் இல.தமிழர்கள் ஒவ்வொரு நாளும் வருந்திகொண்டிருக்கின்றார்கள்.இதிலும் உற்றுக்கவ் கவனித்தால் ஒரு விடயம் விளங்கும்.தமிழர்களின் தனித்தலைமயாக
இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் புலி சின்னத்தில் 33 துப்பாக்கி சன்னங்கள் இருக்கும்.இது தற்செயலாக நடந்த விடயமா இல்லை தலையெழுத்தா என்பது தெரியவில்லை.சரியா ஒவ்வொரு வருடங்களூக்கும் ஒரு துப்பாக்கி சன்னம் என்ற ரீதியில்
2009 ம் ஆண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக முக்கியமான விடயம் என்னவெனில் 1980 ம் ஆண்டு நமது யாழ் மண்ணில் பிறந்த அனேகமான ( 70% ) ஆண்கள் 30 வயதின் பின்னர்தான் திருமணம் நிகழும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளதுங்க .இதைப்பற்றி நான் நீண்டகாலமா ஒரு ஆராட்சியை செந்திருந்தேன்.அப்போ என்னுடன் படித்த
பல பாசக்கார பயபுள்ளக( 1980 ம் ஆண்டு பிறந்தவர்கள்) இன்னும் திருமணம் செய்யாமல் இருந்தது தெரிய வந்திச்சு ( பயபுள்ளக ரெம்ப அவதானம இருக்காங்க போல)..அதில பலருக்கு இந்த வருடம் (2011) திருமணம் நிச்சயமாயிருப்பதும் ஆச்சரியப்படத்தக்க விடயம்.ஆனால் அவர்களுக்கு பின் பிறந்தவர்கள் பலர் திருமணம் செய்து குழந்தை குட்டிகளுடன் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உங்கள் உறவினர்கள்,நண்பர்களிடமும் இதை ஆராட்சி
செய்து பாருங்கள் உண்மை புரியும்.

இப்போ சொல்லுங்க 30 என்ற இலக்கத்திற்கும்... முடிவுக்கும் ஒரு தொடர்பு இருக்குதானே.

08 பிப்ரவரி, 2011

ரோல்ஸ்ஸா ரொட்டியா ?

1999 ம் ஆண்டு நம்ம A/L பரீட்சை பெறுபேறு வெளிவந்திருந்தது.அதில் நம்ம பாசக்கார பயபுள்ள யோக்கட் என்கிற JK சிறந்த பெறுபேற்றை பெற்று மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தான்.அதுவரைக்கும் சுக்கிரதிசை
அடிச்சுக்கொண்டிருந்த அவனுக்கு கெட்டகாலம் சனிஸ்வரன் 180 CC DTSI பல்சர் பைக்கில வந்து பார்த்த கதையாய்ப்போய்ட்டு.

பின்ன அப்படி ஒரு முடிவை துணிந்து எடுப்பானா....அது வேற ஒண்ணுமே இல்லங்க நம்மளுக்கெல்லாம் பார்ட்டி கொடுக்கிறதுதான்.. பார்ட்டி எண்டவுடன்
கண்டபடி கனவு காணாதீங்க வீட்டில எல்லாரையும் கூப்பிட்டு ரோல்ஸ்,லட்டு,மிக்ஸர்,பற்றிஸ் எண்டு கொடுக்கிற பார்ட்டி
மட்டும்தான். ஆனா இதில என்ன பிரச்சினை எண்டா யோக்கட் பார்ட்டி வைக்கப்போறானாம் எண்ட சேதி யாழ்பாணம் தாண்டி சாவகச்சேரி, பருத்தித்துறை வரைக்கும் பரவிட்டுது.அப்போ யாழ்ப்பாணத்தில கைத்தொலைபேசிகள் பாவனையிலேயே இல்லாத காலம்.ஆனாலும் நம்ம பயபுள்ளக முத்திரை ஒட்டி எல்லாருக்கும் கடிதம் போட்டு விட்டிட்டானுக... ஏன் இந்த கொலைவெறி எண்டு கேட்கிறவய்ங்க வாங்க கொஞ்சம் பிளாஸ்பாக் போய் வரலாம். டொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங் (பிளாஸ்பாக் எண்டா இப்படித்தான் சத்தம்
முதல்ல வரும்னு எத்தனை சினிமாவில காட்டிறுக்காணூக)

யாழ்ப்பாணத்தில கல்யாணி கிறீம் ஹவுஸும், றியொ ஜஸ்கிறிம் கடை, லிங்கம் கூல் பார் என்கிற ஜஸ்கிறீம் கடைகள் எண்டு பேமஸான ஜஸ்கிறீம் கடைகள் இருக்குங்க.
பிறந்தநாள்,விஷேட கொண்டாட்டம் எண்டா இந்தகடைகளிலதான் நாம் எல்லோரும் நம்ம பாசக்காரப்பயலுகளுக்கு ரோல்ஸ் ம் தக்காளி சோஸ்ஸும் காம்பினேசனில வாங்கிக்கொடுப்போமுங்க.அதைத்தவிர இறுதியா ஸ்பெசல் ஜஸ்கிறீமும் குடிச்சிட்டு வாழ்த்துக்களை சொல்லிட்டு எல்லாரும்கிளம்பிடுவாங்க வீட்டிற்கு.
இதில என்ன கொடுமைன்னா நண்பேண்டா கணக்கா யோக்கட் எல்லாரோட பார்ட்டிக்கும் அட்டெண்டன்ஸைப் போட்டிடுவான்.பிறகு அங்கே ரோல்ஸ் ஜ நல்லா ஒரு பிடி பிடிச்சி பில்லை ஏத்தி விட்டு பிரபல ரவுடியா பார்ம் ஆகியிருந்தான்.இதனாலாயே பல பயபுள்ளக நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தானுக..காலம் வராமலா போயிடும் எண்டு பார்திட்டிருந்தவனுக்கெல்லாம் இந்த செய்தி தேனாக பாய்ஞ்சது.பலர் தங்களோட நண்பர்களுக்கெல்லாம் வீட்டில போய்ச்சொல்லி கட்டாயம் வந்திடுங்கடா எண்டு கைண்ட் ரிக்குவஸ்ட்டை வேற போட்டிட்டு வந்திட்டானுக .

இது தெரியாம நாம நம்ம டீமெல்லாத்தையும் சேர்த்து ரிவன்ஞ் அட்டாக் கொடுக்கிறாதுக்கு
பிளானைப்போடத்தொடங்கினோம்.( ஆமா பெரிய தீச்சுவலை நடவடிக்கை பிளான் போடுறாய்ங்க).நம்ம அத்தியடி டீமும் மற்ற பயபுள்ளைகளுமா சேர்ந்து எப்படியும் மிகப்பெரிய பில்லை ஏத்திவிடுறதெண்டு சபதம் போட்டொம் ,உடனேயே வீட்டில அம்மா,அப்பா,அக்காகிட்ட விசயத்தை சொல்லி நான் ஒரு கிழமைக்கு
பட்டினி கிடக்க போறேன் நானே தண்ணி கேட்டாலும் கொடுக்கக்கூடாது ,மீறிக்கொடுத்திட்டா உறவு கெட்டுப்போயிடும்ன்னு ரொம்ப ஸ்ரிக்ட்டான கண்டிசனை போட்டுவிட்டேன் (கலைஞர் ஜயா எல்லாம் நம்மகிட்ட கத்துக்கணும் )

அந்த நாளும் வந்த உடனேயே பின்னேரம் 4 மணிக்கே எல்லாரும் குறூப்பா போய் அட்டெண்டன்ஸைப்போட்டு விட்டோம்.வீட்டுக்குள்ளபோய்ப்பார்த்தா யாழ்ப்பாணத்தில 99 A/L படிச்ச எல்லாப்பயபுள்ளைகளும் வந்திருந்தானுக..( பயபுள்ள ஊரில ஒருத்தன் விடாமா அட்டாக்கை போட்டிருக்கான் போல)உடனேயெ குசினியில இருந்து வீட்டு கோலுக்கு வாற ஓடைப்பகுதியை நம்மட டீம் கைப்பற்றிகொண்டோம்..அங்கிருந்து கொண்டு
குசினியில் இருந்து வரும் சப்ளையை அட்டாக் பண்ணி நம்மகுள்ளையே முடிச்சிடுவதுதான் நம்மோட ரெரர் பிளான்.ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிச்சது. நம்மளோட டீமில ஆச்சி றமா,பப்பா நிசாந்தன்,மக்கர் சஞ்சீ,நம்ம அத்தியடி பிரபல ரவுடிகளான அனுராஜ்,பிரியா,முகுந்தன் அண்ணாவிசு அண்ணா,பிரதீபன் அண்ணா.. .. ..
கேக் வந்தவுடன் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா நாம ஊடறுத்து கடும் தாக்குதலைக்கொடுத்து எல்லா கேக்குகளையும் கைப்பற்றி வாய்க்குள்ளே போட்டுவிட்டோம்.நம்ம கைகளைத்தாண்டி கேக் தட்டு வெறுமையாக முன்னால் போக கொலை பட்டினி கிடந்து வந்து முன்னால காத்திருந்தவங்க கடுப்பாயி சண்டைக்கு போய்ட்டானுக யோக்கட்டோட.. ரணகளமாகிட்டு... பிறகென்ன ... யோக்கட் பாடு
திண்டாட்டமா போயிட்டு. நம்மளை திட்டவும் முடியல கண்டிக்கவும்முடியல, முன்னால ஜட்டங்களை சப்ளை பண்ணமுடியல, பின்ன
எவ்வளவுதடவைதான் அவனும் தட்டு நிறைய ஜட்டங்களை அனுப்பிறது..(1 கிழமையா பட்டினி கிடந்தோமில்ல)...ஆனா அது அவனுக்குள்ளை தூங்கிட்டிருந்த சிங்கத்தோட பிடறி மயிரை சொறிஞ்சு எழுப்பி விட்டிட்டு... அப்பத்தான் அவன் அந்த கொடூரமான திட்டத்தை ஆரம்பிச்சான். நாங்களும் வானத்தில போன சனியனை ஏணிபோட்டு இறக்கி விட்ட கதையாப்போய்ச்சுங்க..

அக்கா ரோல்ஸ் தட்டைக்கொண்டுவாங்க எண்டு குசுனிக்குள்ளகுரல் கொடுத்தான்..அந்த செய்தி நம்ம காதுக்குள்ள தேனாப்பாய்ஞ்சிது.
மச்சான் ரோல்ஸ் வரப்போகுதடா.. ரெடியாகு எண்டு எல்லாரையும் ஆசுவாசப்படுத்தினோம்.
மெயின் அட்டாக்குக்கு ரெடியானோம்.கையில் ரோல்ஸ் தட்டு வந்திச்சு பாய்ஞ்சு விழுந்து எடுத்தா அது அவிங்கட வீட்டிலயே செஞ்ச ரோல் சாதரண ரோலை விட பெரிசா இருந்திச்சு.. ஆஹா இண்டைக்கு வேட்டைதாண்டி எண்டு நினைச்சுகிட்டு கடிச்சா... பொரிச்ச மா மட்டும்தான் வருது கறியையே காணேல்ல.. முக்கால்வாசி ரோலையும்
கடிச்ச பிறகுதான் கறியே வந்திச்சு..நாம ஆளாளுக்கு 5 ரோல்ஸ் படி எடுத்திருந்தோம் கொலைப்பட்டினியில இருந்ததால அப்பாவியான நாங்க யோக்கட்டோட மாஸ்டர் பிளானில பலியாடாகிப்போனோம்..சாப்பிட்டு முடிச்சவுடனேதான் தெரிய வந்திச்சு அது ரோல்
இல்லை ரொட்டின்னு..கொடுமை கொடுமைன்னு கோயில்லுக்கு போன கதையா வயிறு ஊதிப்போக நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு எண்ட நிலைமையில நம்ம டீம் பயபுள்ளக வந்திட்டானுக, அந்த நேரம் பார்த்து யோக்கட் கொண்டு வந்தான் பாருங்க இதரை வாழைப்பழம்...பயபுள்ள வாழைகுலைக்கு யூரியாப்போடு பழுக்க வைச்சிருப்பான் போல
ஒவ்வொண்ணும் 1/2 கிலோ தேறுங்க..சனியனைதூக்கி பனியனுக்குள்ள போட்ட கதையா நாங்களும் அதையும் அட்டாக் பண்ணி உள்ள அனுப்பிட்டோம்..
நம்மால எழும்ப கூட முடியலங்க அந்தளவுக்கு ரொட்டியும் ( ரோல்ஸாமா) இதரைப்பழமும் ஸ்ரோர் ஆகிட்டு.

அதுக்குப்பிறகு யோக்கட்டோட சப்ளையில நம்மால் ஒண்ணையும் புடுங்க முடியல... ஏன்னா நம்மால முடியல..அன்னைக்கு முடிவு பண்ணினோம் யோக்கட் பார்ட்டி வைச்சா நாம முதல்ல செக் பண்ணுறது வீட்டிலையா இல்லை ரெஸ்ரோரண்ட்டிலயா எண்டுதான்..
அதுக்குப்பிறகு ரோல்ஸ் பார்த்தாலே எனக்கு கண்ணைகட்டத்தொடங்கிடும்..

களேபரத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதுதொடக்கமே ஒரு கிளுகிளுப்பானதாகவும் ஒரு தகவலை சொல்லக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன்......

சென்ற சனிக்கிழமை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது காதில் விழுந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எத்தனையோ பேர் நண்பர்களுடன் தண்ணி அடிக்க ஆரம்பிக்க முதல்அனைவரும் தங்களது கோப்பைகளில் மதுபானத்தை ஊற்றி ஒரே நேரத்தில் மேலெ துக்கி மது கிண்ங்களை மென்மையாக மோதி " Cheers " என்று சொல்லுவார்கள்.ஆனால் எத்தனை பேருக்கு அப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன என்று தெரியும்?

நான் கேள்விப்பட்டதை சொல்லுகிறேன் கருத்து சரியாக இருந்தால் அதனை எடுத்து கொள்ளுங்கள், இல்லை தவறு என்றால் உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள்.

" அனைவரும் குடிக்கும் போது நாக்கு சுவையையும்,கண்கள் பார்வையையும் ( இரவில் அச்சுவேலி றோட்டில தட்டு தடுமாறி தண்ணி அடித்தவர்கள் தயவாக வெளியேற்றப்படுகிறார்கள்) ,மூக்கு வாசத்தினையும் செயற்படுத்துகின்றன,ஆனால் காதுக்கு ஒரு வேலையும் இல்லாமல் இருந்ததன் காரணமாக காதுகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக எமது முன்னோர்கள் ( ஆங்கிலேயர் உனது முன்னோர்களா என்று என்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம்) இப்படியான ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தினார்கள் .(ஆனா நம்ம ஒரு சில பயபுள்ளக மூடில ஊத்தி மணந்தாலே போதும் நம்ம ரெண்டு ஸ்பீக்கரிலும் Blood வாற அளவுக்கு பினாத்துவானுக) .அனைவருடைய கோப்பைகளும் ஒன்று சேர்ந்த்து எழுப்பும் ஒலி அத்துடன் " சியேர்ஸ்" என்னும் சொற் பதமும் இணைந்து காதுகளுக்கு வேலை கொடுக்கப்பட்டது.( ஆனா சிலபேர் அடிக்கமுதலே கோப்பையை மற்றவன் கோப்பையுடன் அடித்து கீழே ஊற்றி கடுப்பேத்துவானுக..)


" இந்த கருத்துக்கு இன்னும் சேவை சேர்க்கும் முகமாக இன்னும் ஒரு கதையை சொல்லுகிறேன்.உலக மாவீரன் நெப்போலியன் " வாட்டலூவில் " பிரஞ்சு படைகளிடம் தோல்வி கண்டான்.அவனை பிரஞ்சு ப்படைகள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.அந்தா அஞ்சா நெஞ்சனின் வீரம் கண்ட பிரஞ்சுப்படைகள் அவனை எப்படியாவது பயம் கொள்ள செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.அந்த சிறைச்சாலையில் ஒரு மது பான விருந்துக்கு ஆயுத்தம் செய்தார்கள். அதற்கு நெப்போலியனையும் அழைத்து அனைவரும் ' சியேர்ஸ்" சொல்லும் நேரத்தில் பல பீரங்கி குண்டுகளை வெடிக்கும் படி செய்திருந்தர்கள் அவன் பயப்படுவதற்காக.அனைத்தும் திட்டப்படி நடந்தேறியது. ஆனால் கடைசியில் அனைவரும் குண்டு வெடிப்பு அதிர்வில் மது கிண்ண்ங்களை கீழே விட ,நெப்போலியன் மட்டும் நிதானமாக மதுவை அருந்திகொண்டிருந்தான்.
அனைவருக்கும் திகைப்பு, அவனிடமே கேட்டார்கள் " எப்படி சாத்தியம் என்று"
அதற்கு அவனின் பதில்

" நான் ஒரு காரியம் செய்ய தொடங்கினால்.அதில மட்டுமே அனைத்து புலன்களை ஒருங்குவிப்பேன் என்றான்"

இது அனைவருக்கும் கஸ்டம் என்றாலும் அதில் ஒரு தகவலை சொல்லிவிட்டு போயிருக்கிறான அந்த மாவீரன்.