29 ஏப்ரல், 2011

ரஜனியை தூக்கி எறிந்த வடிவேலு..மறைத்த சண்டீவியும் போட்டுக்கொடுத்த தினமலரும்

சற்று முன் சன் டீவியிலும் கலைஞர் டீவியிலும் வடிவேலு கலைஞரை சந்தித்து விட்டு வேளியேறும் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த காணொளியை பிளாஷ் நியூஸில் போட்டுக்காண்பித்துக்கொண்டிருந்தார்கள்

"அதில் தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.

ஆனால் அடுத்ததாக நிருபர் கேட்ட ஒரு கேள்வியையும் பதிலையும் கட் பண்ணிவிட்டார்கள் ஆனாலும் விடுவார்களா நம்ம நிருபர்கள் வெளியிலே பத்தவைச்சிவிட்டார்கள்
அந்த உலக மகா கேள்வியும் பதிலும் இதுதான்


"ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க... என்று சிரித்தபடியே கூறினார்"

இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே என்ற சவுந்தர்ராஜனின் பாட்டுத்தான் நினைவு வருகிறது...


அதுசரி கலைஞருக்கே ஆறுதல் சொல்லுமளவிற்கு வடிவேல் அரசியலில் பெரிய அறிவாளியாகிட்டாரா... இல்லை மத்திய அமைச்சர் பதவி கேட்கிறாரா?

மச்சி வில்லி திருமண வாழ்த்துக்கள்டா

1 ஆம் நூற்றாண்டின் ஒரு அரச குடும்ப மணப்பெண்ணான கேட் மிடில்ட்டன், தனது திருமணத்தின் போதான பிரமாணத்தில், தனது கணவருக்கு கீழ்ப்படிந்து நடப்பேன் என்று வாக்குறுதி அளிக்காமல், அவர் மீது காதலுடனும், மரியாதையுடனும், ஆறுதலுடனும் அவரை வரிந்திருப்பேன் என்று வாக்குறுதிவழங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்.வில்லியத்தின் தாயாரான டயனாவை பின்பற்றும் வகையிலேயே இவ்வாறு பிரமாணத்தை எடுத்துக்கொள்வதென அவர் முடிவு செய்துள்ளார்.

1902 ஆம் ஆண்டு ஏழாவது எட்வேர்ட் அரசருக்கு முடிசூட்டுவதற்காக இசையமைக்கப்பட்ட வைபவ பாடல் இசைக்கும் போது தேவாலய நடைபாதை வழியாக எதிர்கால அரசியாக வரக்கூடிய அவர் பவனி வருவார்.

ஜெரூசலம் மற்றும் கிறீன்ஸ்லீவ்ஸ் ஆகிய பிரபலமான பாடல்களும் இந்த திருமணத்துக்கான இசையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரித்தானியத் தன்மையும், அரங்கியல் உணர்வும் வரவேண்டும் என்ற காரணத்துக்காக இளவரசர் சார்ள்ஸ்தான் இதனை தேர்வு செய்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திருமண நிகழ்ச்சி நிரல் தற்போது இணயத்தில் பிரசுரமாகியிருக்கிறது. அதில் தமது திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்து தம்மீது மக்கள் காண்பித்த அபிமானமும் ஆதரவும் தம்மை நெகிழச் செய்துள்ளதாக திருமண ஜோடி தெரிவித்துள்ளது.

27 ஏப்ரல், 2011

கலைஞர் அய்யா தள்ளாத வயசில ஏன் இந்த அந்தர் பல்டி-தனி ஈழமே இறுதி தீர்வு

தனித் தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.துவண்டு கிடக்கும் தனது செல்வாக்கை கபால்ன்னு செங்குத்தாக தூக்கி
நிறுத்த இப்பிடி அந்தர் பல்டி அடித்துள்ளார் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதை தொடர்ந்து திமுக தீர்மானம் மற்றும் திமுக உயர்நிலைக்கூட்டத் தீர்மானம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், தனி தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என்றார்.

அத்துடன், இலங்கை யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்;.
இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்ட குழு இன்று வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று இடம்பெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. (அய்யா அப்போ நீங்க உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்னாச்சு)

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது. (அதுசரி உங்கட மகளை 2 ஜீ ஊழல் குற்றப்பத்திரிகையில சேர்த்திருக்காங்களே அதுக்கும் இதே பதில்தானா)

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கனி களி தின்பாரா இல்லையா - சூதாட்டம் சூடு பிடித்ததால் IPL சோபையிழந்தது

இன்றைய ஹாட் டாபிக் கனிமொழிபற்றிதான்.
டிவிட்விட்டர்கள்,மூஞ்சிப்புத்தகம்,இணையத்தளங்கள் என்று ஆல்ரவுடராக வலம் வருகிறார் கனியக்கா. இது போதாது என்று ஜ.பி.எல் இல் களமிறங்கியிருந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் இந்த மேட்டரை கையில் எடுத்திருக்கிறார்கள்.அங்கே பிஸினெஸ் டல்லடிப்பதாலும் வரலாற்று பக்கங்களில் இப்பிடியான திமுக- காங்கிரஸ் இழுபறிகளால் ஏற்கனவே நிரப்பப்பட்டிருபதாலும் இங்கே எப்பிடியும் கொள்ளை லாபம் பார்க்கலாம் என முடிவெடுத்து இங்கே களமிறங்கியுள்ளார்கள்.இதனலா ஜ.பி.எல் பக்கம் சோபையிழந்துள்ளதாக நமது உளவுத்துறை செய்தியாளர் குமர்ப்பெசியன் குஞ்சுமணி தெரிவித்தார்.


இதனை அறிந்த ஒரு சில டீவி சனல்கள் மக்கள் மத்தியில் கனி கைது செய்யப்படுவாரா இல்லையா என்று கருத்துகேட்டறிந்துள்ளன.அவை உங்களுக்காக


காடுவெட்டி கோவிந்தன்
:தானை தலைவரையும், வருங்கால தலைமையையும் நான் மிகுந்த அறிவாளிகள் என் நினைத்தேன். உண்மையில் இந்தியாவிலயே மிகுந்த அறிவாளி லாலு பிரசாத் யாதவ் ஒருவர் தான். இன்னும் மண்டை குடைந்து ஒவ்வொரு மாடாக பல் பிடித்து லாலுக்கு எதிரான ஆதாரம் தேடி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அவரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

ஓட்டேரி நரி:ஒரு "மாணவன் பெயில் ஆனதற்கு ஸ்கூல் பிரின்சிபாலை அடிப்பீர்களா" கண்டிப்பாக தலைமை ஆசிரியர் சரியாக இருந்தால் ஆசிரியர் சரியாக பாடம் எடுப்பார்...எந்த மாணவனும் பெயில் ஆக மாட்டன்...எனவே admk வை குறை கூறுவதை விட்டு உங்கள் தலைவரை குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைய சொல்லுங்கள்.......

பான்பராக் ரவி:இதெல்லாம் பொய் புகார். கலைஞர் டிவி க்கு கொடுத்த பணத்துக்கு வட்டியும் முதலும் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. கனிமொழிக்கு சார்ஜ் சீட் வெறும் மிரட்டல், வரும் ஆட்சியில் பங்கு கேட்பதற்காக, காங்கிரஸ் விடுத்துள்ள மிரட்டல். இதற்கெல்லாம் பயப்பட மாட்டார் எங்கள் தலைவர் கலைஞர். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மாபெரும் வீரர்.( ஆமா தலிவர் தலைவைத்து படுத்தது சினிமாவுக்காக செட் போட்ட ரயில் தண்டவாளதிலாமே)

மதுரை தோத்தகிரி:பேசாம நாம எல்லாரும் கூண்டாக போயி சோனியாஜி மற்றும் manmohanji காலில் விழுந்து எப்படியாவது ராசாவையுuம் கனியையும் காப்பாற்றவேண்டும். அவர்கள் நம்மை எவ்வளவு அடிச்சாலும் நாம் மனம் தளர கூடாது. விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து காலில் விழுவதில் நாம் எல்லாரும் Ph.D பட்டம் பெற்றவர்கள். மேலும், ராமதஸையையும் குருமா வையும் சோனியாஜி காலில் விழ வைக்க வேண்டும். மீறினால் கட்சியில் இலிருந்து அனைவரும் நீக்கபடுவார்கள்.

குடல் புடுங்கி கோடீஸ்வரன்:அப்ப ஊழல் பண்ணனும்னா வயதான நம்ம அம்மா , பாட்டிய பினாமியா யூஸ் பண்ணி அவங்க பேர்ல அக்கவுன்ட்லாம் திறந்து என்ன வேணா தில்லு முல்லு பண்ணலாமா? சொத்து கணக்கு கேட்டா எல்லா சொத்தும் வயதான மனைவி, அம்மா , பாட்டி பேர்ல இருக்கு அவ்ங்க தனியா தொழில் செஞ்சு சம்பாதிக்கறாங்கன்னு சொல்லிடலாம். மனைவி, அம்மா , பாட்டி ய கேட்டா அவங்களும் தான் வயசானவங்க சொன்ன எடத்துல கையெழுத்து போட்டேன், தனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமா? இப்படி எல்லாம் பண்ணாதான் நம்மள இல்ல நம்ம வயசான அம்மா , பாட்டி ய சும்மா உட்டுருவாங்களா?

இறுதியாக நம்ம தமிழ்காத்த தானைத்தலைவர் தமிழ்செம்மல் தமிழர்களைக்காக்கும் கட்டுமரம் கண்ணகியை வாழ்வைத்த குடும்பத்தலைவன் இலவசத்துக்கே பெருமை சேர்த்த கருணாநிதி அவர்கள் பின்வருமாறு கூறினார்

"அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியாட்சி என்றால் நாடு வறுமை தீருமென்று அடவியில் துறவி சொன்னார் தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழ்த்த தந்ததுதான் கருத்து தந்த நெல்லிக்கனி எம் தலைவி செம்மொழி கனி எம் இனத்தின் தமிழ் ஆர்வம் போற்றி அவ்வை தந்த நன்றிக்கனி தங்க தலைவி அருட்கனி. விழிகவலை கொண்டால் வள்ளுவதுகன்றோ பழி. விழிகண்ணீர் கொண்டால் தமிழுக்கன்றோ பழி. பகை விலக்கி வெற்றி கொள்ள ஆதிசக்தி துணை வருவாள்.

எலே அழகிரி போடுறா மதுரை பீச்சில் டெண்டை ..மைக் பிடிக்க

தீக்குளிக்கதயாராகுங்கள்,தலைவரே தண்ணிக்கானுக்குள்ளே பெற்றோலை கலந்திடுவானுக

இன்றைய ஹாட் டாபிக் .

கருணாநிதியின் அழைப்பில் ஓடிவருகிறார்கள் அமைச்சர்கள்.
கருணா: அனைவரும் உடனடியாக ராஜினாமா கடிதங்களை எழுதுங்கள்
டி.ஆர் பாலு: எதுக்கு தலைவரே புதுசா அதுதான் போன மாசம் திகதி போடாம எழுதி
கடிதம் இன்னும் ஸ்டாக்கில தான் இருக்கு.
ஸ்டாலின் : அப்பா இந்தக்கதைவசனத்தை நீங்க 2 தடவை மேடையேத்தியாச்சு..அதனால
புதுசா ஏதாச்சும் டிரை பண்ணுங்கப்பா ,உங்களால முடியும்
கருணா : சரி காங்கிரஸின் அட்டூளியத்தை எதிர்த்தும் தேர்தல் கமிஷனை கண்டித்தும்
தலைவரும் அமைச்சர்களும் தீக்குளிக்கப்போல்கிறார்கள் எண்டு செய்தி அனுப்பிடு
அன்பழகன்: நீங்க வேற தலிவரே மக்கள் இருக்கிற கடுப்பில நம்ம
கழககண்மணீகளே தண்ணீ கானில பெற்றோலை மிக்ஸ் பண்ணி
வைச்சிடுவானுக
நெப்போலியன் ( மைண்ட் வாய்ஸ் இல்):இந்தாளு பெற்றோல் ஊத்தினாலும் எரியாத கட்டைய்யா அது.6வது தடவையா முதல்வர் ஆகாமல் மேலே போகாது
கருணா: உன்னோட மைண்ட் வாய்ஸ் ஜ கட்ச் பண்ணிட்டேன் .
அழகிரி: தலிவரே தயாளு அம்மாள் பெயரைச்சேர்க்காமல் "கூட்டுக்குடும்பத்துக்குள்
குழப்பம் விளைவித்த கோடாரிக்காம்பே சி.பி.ஜ இன்னு தமிழ்நாடு புல்லா
பேனர் வைச்சிடுவோமா.
கருணா:இப்பத்தான் தெரியுது இன்போமர் இங்கேயே இருந்திருக்கிறான் எண்டு.
கலாநிதி மாறன்: தலவரே நீங்க பேசாம சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுங்களேன்..
அழகிரி: தலிவரே அப்போ மதுரையிலிருந்து கறுத்த இளம் கிடாயை வெட்டி கறி குழம்பு
சமைச்சிடட்டுமா..
கருணா: முதல்ல இந்த சேவலை அறுக்காம விட்டது தப்பாபோச்சே.


வடிவேலு : அய்யா பேசாம டெல்லிக்கு போய் சோனியா போஸ்ட்டரில சாணி அடிப்போமா
ஸ்டாலின்: முந்தியெல்லாம் அடிச்சு விரட்டுவனுக , இதுக்குபிறகு விரட்டி விரட்டி அடிப்பானுக.
ராமதாஸ்:தலிவரே பேசாம பாபாவைப்பார்க்கப்போறமாதிரி போய் சோனியாவிடம் பாபா பாடி மேலேயே நம்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிடுவோமா.

கனிமொழி: அப்பா பேசாம நம்ம கூட்டாள் "ராஜபக்சேயிடம் போய் ஆலோசனை கேட்போம்
டீ.ஆர் பாலு: ஆங் இது நல்ல ஜடியா,அப்பத்தான் சோனியாவை பிளாக்மெயில் பண்ணலாம்.
கருணா: அப்பவே கள்ளிப்பால் கொடுத்திருக்கணும் .... இப்போ யோசிச்சு என்ன பயன்
தயாளூ: யோவ் இண்டைக்கு கலைஞர் டிவியில மானாட மயிலாட மீட்டிங் இருக்கு. நமிதாக்கா வந்திருக்காக,கலாமாஸ்டர் வந்திருக்காக.குஷ்பு அக்கா வந்திருக்காக...வாறியாய்யா
கருணா : ஏன் தயாளு இவிங்களைத்தூக்கி தமன்னா, ஹன்சிகா,வெள்ளைத்தாராவி தப்ஸியை வைச்சு சோ நடத்தக்கூடாதா,எவ்வளவு காலமாத்தான் இந்த ஆன்ரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
ராஜாத்தி: ஏறகனவே நீ போட்ட ஆட்டதிலதான் நானும் அக்கா தயாளும் இப்பிடி
யோசிச்சுக்கொண்டிருக்கோம் இதுள்ள சின்னதா செக்ஸியாகேட்குதோ.

தயாநிதிமாறன்:தலிவரே நம்மகிட்ட 1985 ஆம் ஆண்டு சோனியாவோடா இத்தாலி
சீ.டி ஒண்ணு மாட்டிருக்கு செம சீன்.. பேரத்தை பேசிடுவா இல்லாட்டி
சண்டீவியில சோ போட்டிடுவோமா
கருணா:அப்போ டெல்லிக்கு பிளைட் டிக்கெட்டை போடு..கிளம்பிடுவோம் அதுக்கு முன்னால
சீ.டி வேலைசெய்ய்தான்னு பார்ர்த்திட்டு தாரேன்..
ராசாத்தி: அப்போ இன்னைக்கு இரவு விடிஞ்சமாதிரித்தான், எதுக்கும் முருங்கக்காய் கூட்டு
செய்து வைப்போம்

26 ஏப்ரல், 2011

முடிஞ்சா எறியுங்கடா பார்போம் செருப்பை கனியக்கா மேல

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பெரும் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


காமன்வெல்த் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து “டைமர்” கருவிகளை வாங்கியதிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளை வாங்க முதலில் டெண்டர் கோரப்பட்டது. அப்போது பல்வேறு நிறுவனங்கள் கருவிகளை தர முன்வந்தன. அதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.எல் நிறுவனம் ரூ. 48 கோடிக்கு கருவிகளை தர சம்மதித்து இருந்தது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 107 கோடிக்கு தருவதாக கூறியது. ரூ. 48 கோடிக்கு தர முன் வந்த எம்.எஸ்.எல். நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 107 கோடிக்கு கருவிகளை வாங்கி உள்ளார்.
இதனை அடுத்து மதுரை சிங்கம் மு.க.அழகிரி தானே நேரில் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்
கனிக்காக வாதாடப்போவதாக தெரிவித்துள்ளார் ." யுவர் ஆணர் ஜம் பானர்"
ஆனால் நம்ம உளவுத்துறை குமர்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்த கருத்தின் படி.. கனிக்காக வக்கீல் வண்டுமுருகன் வடிவேல் ஆஜர் ஆகலாம் என திமுக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனவாம்..

ஆமா இவ்வளவு களேபரம் நடந்துகிட்டிருக்கே கனியை கரெக்ட் பண்ணி கைபிடிச்ச மாப்பிளே எங்கேப்பா..

ஆனால் இந்த வெறும் ரூ 60 கோடிக்கே செருப்பு எறிஞ்சீங்களே நம்ம கனியக்கா அடிச்சதில நமக்கு தெரிஞ்சது மட்டும் ரூ 214 கோடி அறிஞ்சது மட்டும், செருப்பை எறிஞ்ச பருப்பு முடிஞ்சா மே 6 அண்டைக்கு எறிஞ்சு பாருடா கனியக்கா மேல உங்களோட செருப்பை .
கனியக்கா தொட்டால் சீறும் நெருப்புடா, அவ புருசன் கிட்ட கேட்டு பாரு... (கனியோட புருசன் யாரு -டவுட்டு)

இலங்கை ராணூவம் பெண்போராளிகளை அவமதிக்கும் காணொளி-அல்ஜெசீரா தொலைக்காட்சியில்

புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை இராணுவ அதிகாரியொருவர் ஏற்றுக் கொள்ளும் ஒளிக்காட்சிகளை அல் ஜெசீரா வெளியிட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஐ.நா. நிபுணர் குழுவினர் மருத்துவமனைகள் மீது இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆயினும் பாதுகாப்புத் தரப்பு அதனை வன்மையாக மறுத்திருந்ததுடன், அவ்வாறு எந்தவொரு மருத்துவமனை மீதும் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என்று பதில் அறிக்கை விட்டிருந்தது. பல ஊடகங்களின் நோ்காணல்களின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அதனை வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் சேதங்களைப் பார்வையிடும் அல்ஜெசீரா ஊடகவியலாளாரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் இராணுவ அதிகாரியொருவர் அந்த சேதங்கள் ஷெல் தாக்குதலின் காரணமாக நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றார்.

அத்துடன் இறந்த பெண் போராளிகளின் சடலங்களை இராணுவத்தினர் சப்பாத்துக்காலால் உதைக்கும் காட்சிகளும் இந்த ஒளிப்பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரஸ்தாப ஒளிநாடாக்கள் இலங்கையில் செயற்பட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரால் முன்னமே அல் ஜெசீராவுக்கு வழங்கப்பட்டவையாகும். அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார் என அறிய முடிகின்றது.

அத்துடன் சிவில் இலக்குகள் மீது விமானப்படையினர் குண்டு வீசியதை ஒளிப்பதிவு செய்துள்ள விமான ஒளிப்பதிவுக் காட்சிகளும் அல்ஜெசீரா ஒளிநாடாவில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல பொது மக்களும் இதில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஜ.நா சபையின் இலங்கை யுத்த குற்ற அறிக்கை

நேற்று ஜ.நாவினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்தகுற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளாது.அதனை வாசிக்க இங்கே கிளிக்குங்கள்

25 ஏப்ரல், 2011

கலைஞர் கருணாநிதியின் இன்றைய நிலை - செமகாமெடி

ம் கிளம்புங்கள் டெல்லிக்கு ராஜினாம செய்வதற்கு-கருணாநிதி அமைச்சர்களுக்கு ஆர்டர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


இதனை அறிந்த கருணாநிதி கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறிவிட்டது என்று சகபாடிகளிடம் கவலைப்பட்டார்.சென்ற தடவை ராஜினாமா செய்ய தமிழக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்ற போது 2 ஜி மணியை லவட்டிய கனிமீதும் திருமது தயாளுஅம்மாள் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சோனியா அவரின் மாமியார் இந்திராகாந்தி மீது சத்தியம் பண்ணி கருணாநிதியை சமாதானப்படுத்தி விட்டு இப்போ சத்தியத்தை மீறியுள்ளதால் கருணாநிதி மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

நம்பியவர்களை நாம் மட்டும்தான் நட்டாற்றீல் விடலாம்.ஆனால் நாங்கள் நம்புவர்கள் மட்டும் எங்களை எப்போதும் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பாரிய சூட்டைக்கிளப்பிவிட்டுள்ளது. எனவே சோனியாவுக்கு இந்த தடவை ஸ்ராங்காக பதில் சொல்லவேண்டும் என கருணாநிதி தனது சக அலிபாபாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.ஆனாலும் அந்த அலிபாபாக்கள் தமக்கு நெருங்கியவர்களிடம் கூட்டணீயில் இருக்கும் போதே அந்தம்மா வேட்டியை உருவுது...
ராஜினாமா பண்ணீவிட்டால் ஜட்டியையும் சேர்த்து உருவப்போகுதே என்று கவலை தோய்ந்தமுகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.இதனால் கூட்டுக்குடும்பத்தில் விரிசல்விழுந்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர்.குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கிய ”கோடாரி காம்பு” சி.பி.ஐ என்று பலவர்ணத்திலும் மிக நீளமான
பானர்களை பெருந்தெருக்களில் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குமர்ப்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்தார்.

இதனை கேள்விப்பட்ட ஆ.ராசா அவர்கள் கனி'யிருப்ப காய் கவர்ந்தற்று போல சிறைச்சாலையில் இருந்து கொண்டே சூரியன் எம்.எம் இல் "தெய்வம் தந்த வீடூ ஜெயிலு இருக்கு "என்ற பாடலை கனிக்காக டெடிகேட் செய்தார்..

பாபா காலி,பாப்பா குற்றவாளி, கல்மாடிக்கு களி ,மு.க.வுக்கு கிலி
மானாட மைலாட கலா மாஸ்டர் பாஷைல சொன்னா சும்மா கிழி..கிழி..கிழி..

பேசாம சென்னையிலேயெ ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சுட சொல்லுங்கப்பா.. எல்லாரும் திஹாருக்கு போயிட்டா சிங்க்காரச்சென்னையை யாரு ரன் பண்ணுறது ?

சுரேஷ் கல்மாடி இன்று சி.பி.ஜ ஆல் கைது செய்யப்பட்டார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த கல்மாடியை சி.பி.ஐ.,ஒருவழியாக இன்று கைது செய்தது .காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்து வந்தவரும் அந்த கமிட்டிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வந்தவர் சுரேஷ்கல்மாடி.


இவர் காங்.,தலைவர் சோனியாவிற்கு நெருக்கமானவராக இருந்தவர். போட்டிக்கான மைதானம் அமைத்தல், போட்டி ஒளிபரப்பு உரிமம். தளவாட பொருட்கள் வாங்கியது , லண்டன் ஜோதி ஓட்டம் பணிகள் ஏற்பாடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் பணியில் பல கோடி முறைகேடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரம் பார்லி.,யில் எதிர்கட்சியினரால் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தியது.

இதில் ஏ.எம்., பில், டி.எஸ்.ஆர்., கம்பெனிகளுக்கான கான்ட்ராக்ட் பணியில் முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தது. இதனையடுத்து இன்று கல்மாடியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர் முன்னதாக இன்று 4 வது நாளாக விசாரணை நடத்த சி.பி.,ஐ., தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கல்மாடியை கைது செய்தது குறித்து சி.பி.ஐ., இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.

லண்டன்‌ சென்றசி.பி.ஐ., அதிகாரிகள் அங்குள்ள கம்பெனி நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தி போதிய ஆவணஙகளை கொண்டு வந்தனர்.

22 ஏப்ரல், 2011

ரைம்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இருந்து போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஸே நீக்கம்

உலகில் மிகவும் வலிமை மிக்க மனிதர்களை தெரிவுசெய்வதற்கு ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதிப்பட்டியலில் இருந்து சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான தெரிவுகளுக்காக ரைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் நான்காவது இடத்தில் மகிந்தா இருந்தபோதும் தற்போது இறுதிப் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை சஞ்சிகையின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளது.

இணையத்தளம் ஊடகா எகிப்தில் புரட்சியை ஏற்படுத்தி அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து நீக்கிய வேல் கோனிம் என்ற செயற்பாட்டாளர் முதலாவது இடத்திலும், அமெரிக்க பொருளியலாளர் ஜேசப் ஸ்ரிக்லிஸ் இரண்டாது இடத்திலும், மற்றுமொரு அமெரிக்கர் றீட் காஸ்ரிங் மூன்றாவது இடத்திலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கேல் எட்டாவது இடத்திலும், பர்மாவின் எதிர்;க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகியூ 18 ஆவது இடத்திலும் உள்ளனர்.

விளையாட்டுத்துறையில் இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவர் மகேந்திரா சிங் டொனி 52 ஆவர் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

21 ஏப்ரல், 2011

மாணவியின் பிட்டு வீடியோ வெளீயானதால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி

தங்கபாலுவின் அறிக்கையால் தமிழகத்தில் பதற்றம்

40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று தங்கபாலு தெரிவித்ததன் காரணமாக அவரின் கொடும்பாவிகள் லோடு கணக்கில் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பலபாகங்களிலும் எரிக்கப்படவுள்ளன. இதனால் நகரத்தில் தங்கபாலுவின் கொடும்பாவி பொம்மைக்கு பலத்த மவுசு ஏற்பட்டுள்ளது.பல பெண்கள் தமது வீட்டில் காஸ் தீர்ந்து போயுள்ளதால் தங்கபாலு வீடு முன்பாக கைகளில் அரிசியும் பானையும் கொண்டுவந்து நின்று அடுப்பில் உலை வைக்க வாரிகளா என்று கோஷம் போட்டுக்கொண்டிருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனைக்கேள்விப்பட்ட கலைஞர் கருணா தங்கபாலுவுக்கு அனுப்பியுள்ள கடித்ததில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் "செரி செரி எரிக்கலாம் எரிக்கலாம் இப்போ அழுவாம செமத்தா விளையாடணும் சண்ட போட கூடாது...........அப்போ தான் உனக்கு அங்கிள் பொம்ம கார் பொம்ம ஸ்கூட்டர் வாங்கி தருவேன்............ புள்ளையே திட்டாதிங்கே ......கொழந்த பாவம் ......... தெரியாம செஞ்சுட்டான்"

மங்காத்தவில் அஜித் கெட்டவன்-நெகட்டிவ் காரெக்டரில்

மங்காத்தா பற்றி ஆனந்தவிகடனுக்கு இயக்குனர் வெங்கட்பிரபுவின் பேட்டி

இப்போ அர்ஜுன் சார், த்ரிஷா, வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ்னு ஏகப்பட்ட பவர் பெர்ஃபார்மர்ஸ் உள்ளே வந்துட்டாங்க. அஜீத்துக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான போட்டிதான் 'மங்காத்தா’. ஒரு பிரச்னை, அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள்னு முதல் பாதி நகரும். அந்தப் பிரச்னைக்கான தீர்வு இரண்டாம் பாதி. ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள்தான் செகண்ட் ஆஃப். அர்ஜுன் சாருக்கு ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. மாதிரியான கேரக்டர். அஜீத் சாரின் 50-வது படத்தில் அவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்னு தெரிஞ்சும், அர்ஜுன் சார் நடிச்சுக் கொடுத்தது பெரிய விஷயம். 'படத்தில் ஒரு சின்ன கேரக்டர் இருக்கு. நீங்க ஃப்ரெண்ட்லியா பண்ணித் தரணும்’னு ஆண்ட்ரியாகிட்ட கேட்டேன். 'எனக்கு ஓ.கே. ஆனா, உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு தரணும்’னாங்க. 'அதுக்கென்ன கொடுத்துட்டாப் போச்சு’ன்னு அவங்களைப் பிடிச்சுப் போட்டாச்சு!'


படத்தில் அஜீத் சார் முதல் முறையா முழு நெகட்டிவ் கேரக்டர் பண்ணி இருக்கார். அவர் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். 'பாஸிகர்’ ஷாரூக் மாதிரியான கேரக்டர். காமெடி, திரைக்கதைன்னு எல்லாத்தையும் தாண்டி அவரின் கேரக்டர்தான் நிக்கும். டான்ஸ், சண்டைக் காட்சிகளுக்கு ரொம்ப டெடிகேட்டடா வொர்க் பண்ணினார். அவர் இயல்பா கிரே ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் லுக்னு எப்படி இருக்காரோ அப்படியே விட்டுட்டோம். 'ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மாதிரி இருந்தா, நல்லா இருக்கும்’னு சொன்னேன். அப்படியே ரெடி ஆகி வந்து நின்னார். படம் ரிலீஸானதும் பசங்க டை அடிக்கிறதை விட்டுட்டு கிரே ஹேர் ஸ்டைலை டிரெண்ட் ஆக்கிருவாங்க. எங்க டீம் பசங்களைவிட குத்துப் பாட்டுக்கு செமத்தியா ஆட்டம் போட்டாரு. அவர் நல்லா ஆடிட்டு இருக்கும்போது பசங்க யாராவது மிஸ்டேக் பண்ணா, 'டேய் நானே நல்லா ஆடுறேன். உங்களுக்கு என்னடா வந்துச்சு?’ன்னு செல்லமாத் திட்டி வேலை வாங்குவார். 'இந்த கேரக்டரை ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்க

''சான்ஸே இல்லை. பொதுவா எல்லாப் படங்களிலும் ஒரு ஹீரோ கெட்டது பண்ணா, உடனே அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு அந்த ஹீரோ எதனால் கெட்டவன் ஆனார்னு சொல்வாங்க. ஆனா, நாங்க அதெல்லாம் பண்ணலை. கெட்டவன்னா... கெட்டவன்தான். 'நான் கெட்டவன்... நீ நல்லவன்’னு எந்த பன்ச்சும் கிடையாது. டயலாக் எல்லாமே யதார்த்தமா இருக்கும்!''


''அவர் பெர்சனல் விஷயங்கள் எதையும் படத்தில் சேர்க்கலை. அவர் சேர்க்கவும் சொல்லலை. 'நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னுலாம் எந்த மெசேஜும் இல்லை. இதுல அஜீத்-பிரேம்ஜிதான் காமெடி கூட்டணி. ஆனா, என் மத்த மூணு படங்களைக் காட்டிலும், இதுல சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா இருக்கும். அஜீத் ரசிகர்களுக்கு 'மங்காத்தா’ டபுள் ஜாக்பாட்!''

நன்றி : ஆனந்தவிகடன்

20 ஏப்ரல், 2011

அண்டங்காக்கா கொண்டைக்காரி என்பதன் சங்க இலக்கிய விளக்கம்

குருபெயர்ச்சி பலன்கள்

பரந்த மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், 9.5.2011 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து, 16.5.2012 வரை ஜென்ம குருவாக அமர்கிறார். அவர் உங்களின் 5-ஆம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

எனினும் ஜென்மகுரு என்பதால், உடல்நிலை பாதிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படலாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு வரக்கூடும். ஆனாலும் குரு உங்களின் 7-ஆம் வீட்டை பார்ப்பதால் கடுமை குறையும்.

மகளுக்கு நல்லவிதமாக திருமணம் முடியும். சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று வருவீர்கள்.அசைவ, கார உணவுகளைத் தவிர்க்கவும்.

தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். குரு பகவான் 7-ஆம் வீட்டையும் பார்ப்பதால் மனைவி வழியில் ஓரளவு மகிழ்ச்சியுண்டு. வீட்டில், தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கோலாகலமாக நடக்கும். சித்தர்களின் ஆசி கிட்டும். வழக்குகளில் பின்னடைவு விலகும். பாக்கிய வீடான 9-ல் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்த்த பணம் தக்க நேரத்தில் வந்துசேரும். தந்தைவழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். திடீரென புதிய பதவியில் அமர்த் தப்படுவீர்கள். அக்கம்பக்கத்தாரிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லவேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வ தால், அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருக்கவேண்டும். பண இழப்பு, ஏமாற்றம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, வீண்பழி, வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்பு, மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழலாம். காய்ச்சல், சளித் தொந்தரவு, சிறு விபத்துகள், வீண் அலைச்சல், வரக்கூடும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களை அறிந்து, முதலீடு செய்யுங்கள். சிலரது ஆலோசனையால் நஷ்டம் ஏற்படலாம். வாடிக்கை யாளர்களிடம் கனிவு தேவை.

ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பக்கத்துக் கடைக்காரர் களைப் பகைக்கவேண்டாம். ஸ்டேஷனரி, உணவு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் சலசலப்புகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகத்தில் போராட்டங்கள் ஓயும். சவால்களைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கௌரவப் பதவிகளால், ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். சக ஊழியர்கள் உங்களைக் குறை கூறினாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி- சம்பளம் உயரும். ஜூன், பிப்ரவரி மாதங்களில் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு சம்பளம் உயரும்.

கன்னிப் பெண்கள், எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். பெற்றோர் ஆலோசனைப் படி செயல்படவும். மாதவிடாய் கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். தடைப்பட்ட கல்வியை முழுமையாக முடிக்கப்பாருங்கள். வருட மத்தியில் திருமணம் கூடி வரும்.

மாணவர்களே, நேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாட் டில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், விமர்சனங் கள் வந்தாலும் அஞ்சவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் உடலையும், மனதையும் திடப் படுத்துவதுடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தையும் ஓரளவு பண வரவையும் தருவதாக அமையும்.

எப்போதும் சிரித்த முகத்துடன் திகழ்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்களின் விரய வீடான 12-ஆம் வீட்டில் அமர்கிறார். செலவுகளைச் சுருக்குங்கள்.

அஷ்டமாதிபதியான குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத முன்னேற்றமும், எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற்றமும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பர். குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். உங்கள் விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில காரியங்கள் இழுபறியாகி முடியும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். குரு உங்கள் 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து வந்துசேரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.

குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சிலநேரம், எதிரிகளாலும் ஆதாயம் கிடைக்கும். இழுபறியான வழக்குகள், சாதகமாகும்.

குரு பகவான், 8-ஆம் வீட்டைப் பார்ப்ப தால், அயல்நாட்டுப் பயணங்கள் இருக்கும். அரசு விஷயங்கள் சுமுகமாக முடியும். அரசியல் வாதிகள், தலைமையை விமர்சிக்கவோ, புதிய பதவிக்கு ஆசைப்படவோ வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், உங்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். மருத்துவச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் உண்டு. மகான்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பண வரவு உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். தடைப்பட்ட கல்யாணம் முடியும்.

2.5.2012 - 16.5.2012 வரை குரு உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்த்து வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடனுதவி பெற்று புதிய முதலீடுகள் செய்வீர்கள். பணியாட்களிடம் தொழில் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். கமிஷன், ஏஜென்சி, மருந்து மற்றும் உர வகைகளால் லாபம் உண்டு. இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம்.

ஜூன் 15 முதல் ஆகஸ்டு 15 வரையிலும் அதிக லாபம் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை.

கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்தச் சூழலிலும் பெற்றோரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீர்கள். வருட பிற்பகுதியில் கல்யாணம் நடக்கும்.

மாணவர்கள், படிப்பில் அலட்சியத்துடன் நடந்துகொள்ள வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.

கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நாலாவிதத்திலும் உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன், உங்களின் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பழைய வாழ்க்கையை மறக்காதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் நீடிப்பதால், தொட்டது துலங்கும். உற்சாகம் கூடும். வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வருமானம் உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும்.

கணவன்-மனைவிக்கு இடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். சகோதரியின் தடைப் பட்டிருந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க நகைகள் சேரும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவார்கள். கல்யாணம் முதலான சுப காரியங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. கடினமான வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். அடகிலிருக்கும் பொருட்களை மீட்பீர்கள். அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும்.

பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டுப் போன வீடு கட்டும் பணிகளை, முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில், இதுவரை உங்களை தாழ்த்திப் பேசியவர்களும் இனி உங்கள் புகழ் பாடுவார்கள். குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தடைப்பட்டிருந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நடந்தேறும். குரு உங்களின் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி மற்றும் மனைவிவழி உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில், நல்ல தீர்வு கிடைக்கும். கூட்டாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் இழந்த

செல்வாக்கை மீண்டும் பெறுவர்; தலைமை, உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.

22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு கூடும். சகோதர வகையில் நன்மைகள் உண்டு.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தேங்கிய சரக்குகளும் விற்றுத் தீரும். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்து

வீர்கள். மே, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கிகள் வசூலாகும். புது சலுகைகளை அறிவிப்பீர்கள். மருந்து, உணவு, கமிஷன் மற்றும் இரும்பு வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

உத்தியோகத்தில், இழந்துபோன சலுகை களையும் மதிப்பையும் மீண்டும் பெறுவீர்கள். வேலை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். உங்களை மனச் சங்கடப்படுத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வுகள் ஜூன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து, அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களுக்கு, மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவர்களுக்கு, படிப்பிலிருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு - பாராட்டு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் வீண் வதந்திகளும் ஓயும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீரைப் போல, உங்களை விரைவாக செயல்பட வைத்து, வெற்றிகள் பலவற்றை அள்ளித் தருவதாக அமையும்.
இளகிய மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரையிலும் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால், எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. எனினும் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பேச்சாலேயே பல காரியங் களைச் சாதிப்பீர்கள்.

வர வேண்டிய பணம் வந்துசேரும். சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், உங்கள் தாயாரின் வருத்த புலம்பல்கள் இனி இருக்காது. அவருடைய உடல்நலன் மேம்படும். தாய்மாமன் வகையிலும் மனக்கசப்புகள் தீரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலருக்கு வீட்டு லோன் கிடைக்கும். 6-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, சிறு சிறு குழப்பங்கள், டென்ஷன் வந்துபோகும். தலைமையின் பார்வை உங்கள் மீது விழும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். சேமிப்புகள் கரையக்கூடும்.

பிள்ளைகளின் பொறுப்பில்லாத தன்மையை நினைத்து வருந்துவீர்கள். அவர்களது போக்கிலேயே சென்று, திருத்தப் பாருங்கள். அவர்களது உயர்கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஒத்துழைப்பு தரும் சகோதரர்கள், பல தருணங்களில் தொந்தரவு தருவார்கள். உங்களுடைய புகழைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். வதந்திகள், விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் செலவுகள் அதிகரிக்கும்; பணவரவும் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், கைமாற்று கடனை அடைப்பிர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுங் கள். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது அவசியம். முடிவெடுப்பதில் புதியவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டாம். கமிஷன், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் ஆதாயம் உண்டு. இதுவரை பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த பங்குதாரர்கள், இனி உங்களுக்குப் பணிவார்கள். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், சிறு சிறு அவமானங்கள், இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வேலை அதிகரிக்கும். மேலதிகாரியால் அலைக்கழிக் கப்படுவீர்கள். வீணாக விடுப்பு எடுப்பதைத் தவிருங்கள். சக ஊழியர்களால் சில இன்னல் கள் வரத்தான் செய்யும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்கள், புதிய நட்பால் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள் வரக்கூடும். அயல்நாடு சென்று உயர்கல்வி பெற உதவிகள் கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைஞர்கள், விமர்சனங்களையும் தாண்டி பெரிதும் முன்னேறுவார்கள். கடுமையான போராட்டத்துடன் தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச்சுமையையும், இழப்புகளையும் தந்தாலும் செயற்கரிய செயல்களையும் செய்ய வைத்து புகழ் சேர்ப்பதாக அமையும்.

வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல், பாக்கிய வீடான 9-ஆம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புது வியூகங்கள் அமைத்து முன்னேறுவீர்கள். எந்த வேலை ஆனாலும் எளிதில் முடியும். குடும்பத்தில் நிலவிய கூச்சல்- குழப்பங்கள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீடு களை கட்டும்.

கையில் நாலுகாசு தங்கும். வருங்காலத்துக் காக சேமிப்பீர்கள். குடும்ப விசேஷங்களில் முன்னிலை பெறுவீர்கள். முதல் மரியாதை கிடைக்கும். வங்கியில் அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். வீடு- மனை வாங்குவீர்கள். சிலர், தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடிப்பீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், உற்சாகம் பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வட்டிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எந்தக் காரியத்திலும் உங்களின் முதல் முயற்சியே வெற்றி பெறும். குரு உங்களின் 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் நீங்கும். ஆபரணங்கள் சேரும்; வாகன வசதி பெருகும். வெகு நாட்களாக தடைப்பட்டிருந்த குலதெய்வ பிரார்த்தனையை செய்துமுடிப்பீர்கள். ஆன்மிக வாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மகனுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு, வேலை கிடைக்கும். கல்யாணம் சிறப்பாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமையின் சொந்த விஷயங் களில் தலையிடும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்களால் பயனடைவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் மக நட்சத்திரக்காரர் களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல்நலக் குறைவு வந்து நீங்கும். பண வரவும் உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், மக நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு; எதிலும் வெற்றியுண்டு. கடன் பிரச்னை ஓயும்; திருமணம் கூடிவரும். ஆனால், பூர நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். ஆனால், முன்னேற்றம் தடைப்படாது.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், நிர்வாகத்திறமை கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில், மந்தநிலை மாறும். பெரிய முதலீடுகளால் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள். உங்களின் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்களை நவீனப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பழைய

சரக்குகள் விற்றுத் தீரும். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ் மற்றும் கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில், திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சிலருக்கு வேறு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறையின ருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களுக்கு, மே, ஜூன் மாதங்களில் திருமணம் கூடிவரும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாணவர்கள், அதிக மதிப்பெண்ணுடன் உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு- பதக்கம் கிடைக்கும்.

கலைஞர்களே, உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதாகவும் அமையும்.
சுயநலம் இல்லாதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் உங்கள் ராசிக்கு 8- வது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் தட்டிக்கொண்டே போகுமே, இருப்பதை எல்லாம் இழக்க நேரிடுமே, என்று கலங்காதீர்கள். உபய ராசியில் பிறந்த உங்களுக்கு, குரு பாதகாதிபதியாவார். அப்படிப்பட்டவர் 8-ல் மறைவதால், கெடுபலன் குறைந்து நல்லதே நடக்கும்.

உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகை வரான குரு 8-ல் மறைவதால், தம்பதிக்கு இடையே சந்தோஷம் பெருகும். பிரிந்தவரும் ஒன்றுசேர்வர். ஆனாலும் ஒருவித வீண் பயமும், மனக்கலக்கமும் இருக்கும். சில விஷயங்களை அதிகச் செலவுடன் முடிக்க வேண்டியது வரும். முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகளும் துரத்தும். கௌரவப் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் உங்களது 2-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களைத் தடையின்றி வாங்குவீர்கள். பழுதான மின்னணு- மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தூக்கம் இல்லாமல் தவித்த நிலை மாறும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் டென்ஷன் விலகும். அம்மா வழி சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாதியில் நின்றுபோன வேலைகள் நிறைவு பெறும். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், பேச்சை விடுத்து செயலில் இறங்குவது சிறப்பு. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 முதல் 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சல் இருந்தாலும் முன்னேற் றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பண வரவு குறையாது. அரசால் ஆதாயம் உண்டு.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் தன பாக்கியாதி பதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் திடீர் வெற்றி, வாகனம்- ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு வாங்கும் நிலை ஏற்படும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசு விஷயங்களில் கவனம் தேவை.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். பங்குதாரர் களுடனான பிரச்னைகள் நீங்கும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், உங்களது திறமையும் பணியும் அங்கீகரிக்கப்படும். எதிர்பார்த்த பதவி- ஊதிய உயர்வு தேடிவரும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை, சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது, யோசித்துச் செயல்படுங்கள். கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கத்தான் செய்யும். புது சலுகைகளும் கிடைக்கும்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் அக்கறை காட்டுவது நல்லது. பெற்றோரின் ஆலோசனையைப் புறந்தள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட மத்தியில் திருமண வாய்ப்பு கூடிவரும்.

மாணவர்கள், வகுப்பறையில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து, பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி உண்டு.

கலைஞர்களுக்கு ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதனை நிகழ்த்துவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடனையும், அதேநேரம் சொத்து சேர்க்கை யையும், அலைச்சலையும், கூடவே ஆதாயத்தையும் தருவதாக அமையும்.
புதுமையான சிந்தனை படைத்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை ஏழாம் வீட்டில் நிற்பதால் மனதில் தெளிவு பிறக்கும்.
குரு உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால், குடும்பத்தவர் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வர். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு, தடைப்பட்ட திருமணம் நல்லவிதமாக கூடிவரும். பிள்ளைகளால் பெருமை உண்டு; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு கனவு நனவாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ஆம் வீட்டில் நுழைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவு, சில நேரங்களில் சண்டை - சச்சரவு, மனைவிவழி உறவினர்களுடன் பகை வரக்கூடும். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் பதவி - பட்டம் பெறுவீர்கள். இளைய சகோதரரால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். புதிய சொத்துகளும் சேரும். வழக்குகள் சாதகம் ஆகும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழிகள் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு, அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், இழுபறியான வேலைகள் உடனே முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரபலங்கள் உதவுவர். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் கையைக் கடிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிலும் வெற்றி, பண வரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு, கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள் கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில், நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.

கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கைகூடும். மாதவிடாய்க் கோளாறு விலகி ஆரோக்கியம் கூடும். மாணவர்களுக்கு சோம்பல் விலகும். நினைவாற்றல் பெருகும். சந்தேகங் களை உடனுக்குடன் ஆசிரியரிடம் தயக்கம் இல்லாமல் கேட்டுத் தெளிவு பெறுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும்.

கலைஞர்களுக்குத் திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்; நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய கோணங்களில் உங்களை யோசிக்க வைப்பதுடன், வளர்ச்சியையும் முன்னேற்றத்தை யும் அள்ளித் தருவதாக அமையும்.

அநியாயத்தைத் தட்டிக்கேட்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 6-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி, எல்லா விஷயங்களிலும் சிறு சிறு தடைகள் இருக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்ற போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன்- மனைவிக்குள் பிரிவு, வீண் சண்டை சச்சரவுகள், உடல்நலக்குறைவு என வரக்கூடும். உறவுகளால் சேமிப்பு கரைவதுடன் மன உளைச்சலும் அதிகரிக்கும்.

எனினும், குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எனினும், அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்களும் எழும்.

குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் உடனே முடியும்.

குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும்; வி.ஐ.பி-களின் முன்னிலையில் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். கட்டடப் பணிகளும் முழுமை அடையும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அக்கம்பக்கத்தாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவும் வந்து போகும். ஆனால் விசாகம் 4-ஆம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். இந்த காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மனைவிவழி உறவுகளுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பண வரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும்.

வியாபாரத்தில், போட்டியாளர்களை சமாளிக்கப் போராட வேண்டியது வரும். அதிரடி முடிவுகள் வேண்டாம். பணியாட்களின் மீது அதிருப்தி உண்டாகும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோ-கெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களிடம் கோபம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். திடீர் இடமாற்றமும் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் சுமுக மான சூழ்நிலை உருவாகும். கணினித் துறை யினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். நினைவுத் திறனை வளர்க்க, உணவில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கலைஞர்கள், இழந்த புகழை மீண்டும் பெறுவதற்கு, யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். அரசு பாராட்டும்; வெளிநாட்டு நிறுவனங்களும் வாய்ப்பு தரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய படிப்பினைகளைத் தருவதுடன், சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் புரியவைப்பதாக அமையும்.
நல்ல கருத்துகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்பவர் நீங்கள். உங்களுக்கு குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 5-ஆம் வீட்டில் அமர்ந்து அள்ளிக்கொடுக்கப் போகிறார்!

வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லாமல் ஏங்கித் தவித்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாயாரின் மூட்டுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினரும் வலியவந்து உறவாடுவர். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். தனிமையில் தவித்த நிலை மாறும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி பெருகும்; வாடிய முகம் மலரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த ஆடை- ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். சிலர், சொந்தமாக வீட்டுக்கு குடிபுகுவர். குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுவோரின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்களின் 11-வது வீட்டை குரு பார்ப்ப தால் மூத்த சகோதர- சகோதரிகளுடனான பனிப்போர் விலகும். வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய மின்சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். அண்டைஅயலாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த கால கட்டத்தில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு சிறிது அலைச்சலும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆனாலும் சவாலான காரியங்களும் எளிதில் முடியும். வீடு மாறுவீர்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான், உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பண வரவு, வழக்கில் வெற்றி உண்டு. தந்தை வழி சொத்து சேரும்.

வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். ஹோட்டல், கமிஷன், என்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

உத்தியோகத்தில், பணி சிறக்கும்; அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். குறை கூறிக்கொண்டிருந்த சக ஊழியர்களும், இனி உங்களைப் போற்றுவார்கள். வேலைப்பளு குறையும். மேலதிகாரியுடன் பனிப்போர் விலகும்.

ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைகள் நீங்கி கல்யாணம் நடக்கும். நல்ல வேலையும் கிடைக்கும். மாணவர்கள், கடினமான பாடங் களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைஞர்களின் திறமை வெளிப்படும். ஆட்சி யாளர்கள் கரங்களால் பரிசு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எதிலும் நாட்டமில்லாமல் இருந்த உங்களை, எல்லாவற்றிலும் சாதிக்கவைப்பதாக அமையும்.

நிர்வாகத்திறமை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 4-வது வீட்டில் அமர்கிறார். விழிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். சேமிப்புகள் கரையும். உறவினர்களின் விமர்சனங்களை மனதில் கொண்டு மனைவி-மக்களை பகைக்க வேண்டாம்.

உங்களின் கோபதாபங்களை, கூடாபழக்க வழக்கங்களை மனைவி சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். விரக்தி, சோர்வு, டென்ஷன் அதிகரிக்கும். எனினும் திடமான சிந்தையுடன் செயல்பட்டு, சாதிப்பீர்கள்.

அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். நீண்ட தூர, இரவு நேர பயணங்களைத் தவிருங்கள். வாகன விபத்துகள் நேரலாம். நண்பர்கள் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வழக்குகளிலும் கவனம் தேவை.

மகளுக்கு கல்யாணம் திடீரென ஏற்பாடாகும். மகனின் கூடாபழக்கவழக்கங்கள் நீங்கும். 4.11.11 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைவதால் சகோதரர்களுடன் மனத்தாங்கல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.

அதேநேரம் குரு பகவான், உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பல்வேறு இடங்களில் இருந்தும் உதவி கிடைக்கும். பிள்ளைகளை அன்புடன் நடத்துங்கள்; அவர்களின் உடல்நலனில் கவனம் தேவை.உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரியலாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சொத்து வாங்குவது- விற்பதில் கவனம் தேவை.

உங்களின் 10-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வரை போகாமல், பேசித் தீர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சலும் செலவும் இருக்கும். பழைய நண்பர்களை பகைக்கவேண்டாம். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பாராத பண வரவு, திடீர் யோகம் உண்டு. காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வீடு கட்டும் பாக்கியமும் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப் படுத்த புதிய அணுகுமுறைகள் நல்லது. உணவு, கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்தியோகத்தில், பல்வேறு வேலைகளை நீங்களே பார்க்கவேண்டி வரும். மூத்த அதிகாரி உங்களை பாராட்டுவார். பதவி- சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். குரு பகவான் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கும் வேலைச்சுமை அதிகரிக்கவே செய்யும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச் சுமையையும், மன உளைச்சலையும் தந்தாலும் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் தந்து, வாழ்வில் வெற்றிபெற வைப்பதாக அமையும்.
அமைதியாக சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 3-வது வீட்டிலேயே நீடிக்க உள்ளதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள் வது நல்லது. சில விஷயங்களில் சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள்.

காரியத் தடைகள், டென்ஷன் வரக்கூடும். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கி தவறானவர்களைப் பின்பற்ற வேண்டாம். பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களை கலந்தாலோசிப்பது நல்லது. இளைய சகோ தரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.

எனினும், உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அந்நியோன்யம் குறையாது. குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அவர்வழிச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். மகன் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு அந்தஸ்துக்கு தகுந்த மணமகன் அமைவார். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவர். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதி கள், மேலிடத்தை அனுசரித்துப் போங்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத் தில் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். செலவுகளும் துரத்தும். பங்காளி பிரச்னைக்காக அவசரப்பட்டு நீதிமன்றம் செல்லவேண்டாம். முதுகு வலி, தலைவலி வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். ஊர் பொதுக் காரியங்களில் மூக்கை நுழைக்கவேண்டாம்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வ தால் அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவு செய்வீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். ஆனால், பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் கனிவு தேவை. ஹோட்டல், விடுதிகள், வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் எழலாம்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். எனினும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலை குறையும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். கெட்டவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுங்கள். இரும்பு, கால்சியச் சத்து உடம்பில் குறையும். மேலைநாட்டு உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். திருமணத் தடை நீங்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆனால் அவ்வப்போது மறதி, அலட்சியம் வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு.

கலைஞர்கள், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களைப் பல்வேறு வகைகளில் பக்குவப் படுத்துவதுடன், சில காரியங்களில் வெற்றியை யும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமையும்.

திட்டமிட்டு செயல்படுபவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்வதால், அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவர். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவருடன் உரசல் போக்கு நீங்கும். இனி பாசமாகப் பேசுவார்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போன்று பயந்தீர்களே, இனி ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும். இனிய பேச்சால் சாதிப்பீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்ப தால், உங்களை எதிர்த்தவர்களும் அடங்குவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலைச்சல்கள் குறையும். குரு பகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். அயல்நாட்டுப் பயணங்கள் கூடிவரும். விசா பெறுவதில் தடையிருக்காது. 10-வது வீட்டையும் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் ரசனைக்கு ஏற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வழக்குகள் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவர். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வேலையாட்களை, பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்வது அவசியம். லாபம் கணிசமாக உயரும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், ஃபைனான்ஸ், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலை நிரந்தரமாகும். எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக்கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடும். பெற்றோரின் ஆதரவு உண்டு. நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் அக்கறை எடுக்காவிட்டால், பின்னர் வருத்தப்பட வேண்டியது வரும். விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வீர்கள். கலைஞர்களுக்கு, அவர்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பிரச்னை தீரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, இடியாப்ப சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதிலும் சாதிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

நன்றி:சக்திவிகடன்

இனிமேலும் பொறுக்க முடியாது மனோகரா


நன்றி: ஆனந்தவிகடன்

19 ஏப்ரல், 2011

இந்திய 100 ரூபாயின் சுற்றுலா

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு விஞ்ஞானிகளினால் பதியப்பட்டுள்ளது-கேட்டுப்பாருங்கள்

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.

பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணரமுடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச்சலைப் பதிவு செய்துள்ளனர்.

வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல்கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள கடலடி ஒலிவாங்கியின் மூலமே இவ்விரைச்சல் ஒலிப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அச்சத்தமானது ஏதோ பொருள் ஒன்று நொருங்குவதினைப் போல உள்ளது.

அவ்விரைச்சலை நீங்களும் கேளுங்கள்.

பங்களாதேஷ் கிரிகெட் டீமின் தீம் பாடலே யுவனின் பையா பாடல்
18 ஏப்ரல், 2011

சற்று முன் தங்கபாலு கைது செய்யப்பட்டார்


தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கைது செய்யப்பட்டார்.

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தடையை மீறி பேரணி நடத்தியதால், காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பட்டம் நடத்திய தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால், தங்கள் போராட்டம் தொடரும் என்று தங்கபாலு எச்சரித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர் கரை திரும்பாத நிலையில், அவர்கள் உடல்கள் கடுமையாக தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டு தமிழக கடலோரங்களில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கண்மூடித்தனமாக, காட்டு மிராண்டித்தனமாக நடைபெற்றுள்ள சிங்கள படையினரின் கொடூரம் தாங்கொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து சிங்கள படையினரின் கொடுமை தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெறுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை சந்தித்து பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

தமிழக அரசும், குறிப்பாக முதல்வர் கருணாநிதியும், நமது தோழமை கட்சியினரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு துணை நின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் பல்வேறு நேரங்களில் தொடர்ந்து சிங்கள அரசோடு இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் பல்வேறு நேரங்களில் தொடர்ந்து உறுதி அளித்தும், தொடர்ச்சியாக சிங்கள படையினரின் வெறியாட்டம் நின்ற பாடில்லை. 4 மீனவர்கள் கொடூர கொலை, அவர்களது உடல் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய நிலை தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில், ஏன் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆற்றொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு படைகளால் நடத்தப்படும் கொலை, குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசின் கபட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் ஒரே ஒரு தமிழக மீனவர் கூட துன்புறுத்தலுக்கு ஆட்படுத்தப்படக்கூடாது, இலங்கை அரசுப் படைகளின் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்," என்று தங்கபாலு கூறியிருந்தார்.

அவன் இவன் திரைப்படப்பாடல்கள் தரையிறக்கிக்கொள்ளநடிகர்கள் :ஆர்யா,விசால்
இசையமைப்பாளர் :யுவன்சங்கர்ராஜா
இயக்குனர் :பாலா


அவன் இவன் திரைப்படப்பாடல்கள் தரையிறக்கிக்கொள்ள இங்கே கிளிக்குங்கள்

17 ஏப்ரல், 2011

அவன் இவன் பாடல்கள் இண்டர்நெட்டில் வெளியானதால் யுவன் சொனி நிறுவனம் மீது விசனம்

நாளைய தினம் அவன் இவன் திரைப்படப்பாடல்கள் வெளியிடப்பட இருந்த நேரத்தில் இன்று அந்தப்பாடல்கள் அனைத்தும் இண்டர்நெட்டில் வெளியாகிய்தால இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அதிர்ச்சியும் விசனமும் அடைந்துள்ளார்.இது பற்றி சோனி நிறுவனத்திடம்
தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.சோனி நிறுவனமே இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியிடவிருந்தது. இது பற்றி யுவன் தனது டிவ்விட்டரில் " சோனி நிறுவனம் அந்தப்பாடல்களை வெளீயிட்ட இணையத்தளத்தை மூடிவிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்..

யுவனின் கலைப்பயணத்திற்க்கு மதிப்பு கொடுக்கும் முகமாக எனக்கு கிடைத்த அந்தப்பாடல்கள் நாளையதினம் எனது வலைப்பூவில் அனைத்து திரைப்பாடல்களையும் தரையிறக்கிகொள்ளலாம்.

15 ஏப்ரல், 2011

மனதைக்கவர்ந்த புகைப்படங்கள்

என்னா ஒரு வில்லத்தனம்-நண்பனின் தளத்தில் இருந்துஇந்தக்கப்பு கடந்த 28 வருசமா நாங்க வாண்டட்டா போய் அடிவாங்கினது இல்லை..
கூப்பிட்டு அடிச்சு அனுப்பினதுக்காக
என்னை மீண்டும் முதலமைச்சர் ஆக்கினால் 2015 இலும் இந்தியாவை கப் வெல்லவைப்போம்...

இந்திய பிரபல பாடகி சித்திராவின் மகள் நீச்சல்குளத்தில் மூழ்கி பரிதாப மரணம்
இந்திய பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா (வயது 8) இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.

பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்நிலையில் துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா.

சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.

துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15 வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.

13 ஏப்ரல், 2011

அமைச்சரின் ஆபாச பேச்சு செல்போன்களில் உலா

சேலம்:சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாகப் பேசியவை செல்போன்களில் உலா வரத் தொடங்கியுள்ளதால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வினர் செல்போன் மூலம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க.ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள்,பயனாளிகளின் புள்ளிவிவர பட்டியல் ஆகியவை,எஸ்.எம்.எஸ்.மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.அ.தி.மு.க.வினர் தி.மு.க.வின் குடும்ப அரசியல்,இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மௌனம்,ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்டவற்றை கிண்டல் செய்து எஸ்.எம்.எஸ்.அனுப்பி வருகின்றனர்.

கடந்த 9 ஆம் திகதி நிருபர்களை சந்தித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் சங்ககிரியில் ரவுடிகள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனரா என்று கேள்வி எழுப்பினர்.அதனால் ஆவேசமடைந்த அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி ஆபாசமாக பேசினார்.அமைச்சரின் பேச்சைக் கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது அமைச்சர் பேசிய ஆபாச பேச்சு தற்போது செல்போன்களில் எம்.எம்.எஸ்.மற்றும் புளுடூத் மூலமாக வேகமாக பரவி வருகின்றன.தி.மு.க.வினரின் நடவடிக்கையால் சேலம் அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

06 ஏப்ரல், 2011

நடிகை சுஜாதா இவ்வுலகை விட்டு நீங்கினார்

1952ம் ஆண்டு இலங்கையில் பிறந்த அவரது தாய் மொழி மலையாளம் ஆகும்.
கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.


அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன. அதிலும் விதி படத்தில் இவரது வக்கீல் பாத்திரத்தில் வாதாடியதை அனைத்து பெண்களும் இவருக்கு ரசிகையானார்கள் .கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.

மகிந்த: பிறீயா இருந்தா வாடா மச்சான் பூனம் பாண்டேயை பார்க்கலாம்ன்னு கூப்பிட்டாய்ங்கபாகிஸ்தான் -இந்தியா கிரிக்கெட் போட்டியின்போது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்
பாகிஸ்தான் பிரதமர் கிலானியை போட்டியைக்காண வருமாறு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார்.அதனைய்ம் ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் வருகை தர பலத்தபாதுகாப்பு போடப்பட்டு அவருக்கான சகல மரியாதைகளும் கொடுக்கப்பட்டு இரு அணிகளும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே..அத்துடன் அன்று பாகிஸ்தானை வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் கிலானி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும்- இலங்கை அணியும் மோதவுள்ள கணத்தில் இலங்கை அதிபர் மகிந்த தனது வழமையான ஸ்டண்டை அடிக்கத்தயாரானார்.அனைத்து இலங்கை மக்களும் இந்த மாத கடைசியில் ஜ.நா சபையால் சமர்ப்பிக்கப்படப்போகும் இலங்கையின் யுத்தக்குற்றம் சம்மந்தமான அறிக்கை பற்றிய செய்திகளை மூடி மறைப்பதற்காக இந்த இறுதிப்போட்டியை மக்கள் மத்தியில் ஒரு வெறியாகவே வளர்த்துவிட்டார். அனைத்து மக்களும் இலங்கை அணிக்காக பேரணீகளை நடத்தவேண்ட்டும் ,பிரார்த்தனை பண்ணவேண்டும் என்று. ஏனெனில் அவருக்குத்தெரியும் தமிழ்மக்கள் இந்திய அணீயைத்தான் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள் என்று. அது ஏனென்பதை எனது இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன் .


தமிழர் பிரத்தேசங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி.. அனைத்து இடங்களிலும் சிங்கக்கொடிகள் பறக்கவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.
இதைவிட மகிந்தர் தன்னிச்சையாக இந்தியா சென்று போட்டியை பார்வையிட விரும்பி அதற்கான போட்டி இருக்கைகள் 30 இனை ஒதுக்குமாறு கேட்டிருந்தார் ,ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 10 இருக்கைகளை மட்டுமே ஒதுக்கியிருந்தார்கள்.

இலங்கையின் காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமான திரையில் போட்டியினை காண்பிப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் 4 க்கும் மேற்பட்ட திரைகள் போடப்பட்டன.சிங்கள மக்களும் ஏதோ 3 ம் உலகப்போரே நடக்கப்போறமாதிரியும் சிங்கள சிங்கங்கள் ஆடுகளத்தில் களமாடி சாதனைபடைக்கப்போவது மாதிரியும் பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் மகிந்த போய் விமான நிலையத்தில் இறங்கியதும் அவரை வரவேற்க பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ஜனாதிபதி பிரதீப பட்டேலோ செல்லவில்லை .இது சிங்க தளபதிக்கு முகத்தில சப்புன்னு விழுந்த முதல் அறை.அடுத்ததாக இலங்கை அணியினரை இவர் சந்திப்பதற்க்கு கோரிய போது அதற்கான அனுமதி மறுகப்பட்டது இரண்டாவது.


மூன்றவது போட்டி தொடங்கும் போது மரியாதக்காச்சும் கூப்பிடுவாய்ங்க என்று ஏங்கிக்கொண்ட்ருந்தவருக்கு அவரை மைதானத்துக்கு கூப்பிடாமலையே அணிகள் ஆடுகளத்தில் களமாடத்தொடங்கியது 3 வது அறை.

இதெல்லாம் சரி ,ஆரம்பத்தில் சரிவு கண்ட இலங்கை அணீயை மஹேல ஜெயவர்த்தனே
அடித்து ஆடி 274 ரன்களுக்கு இலங்கை அணியை நிமிர்த்திய போது .. இந்தியாவுக்கு தலையிடிதான் இந்த ஓட்ட எண்ணிக்கை என்று நம்து உள்ளூர் வானொலிகள் கொடுத்த காசுக்கு கூவிக்கொண்டிருந்தன.

அதுக்கு மேலாக 2 வது பந்துவீச்சில் சேவாக்கும் 18 ஓட்டங்களுடன் சச்சினும் ஆட்டமிழந்தபோது பார்க்கணுமே இவர்களின் கொந்தளீப்பை

ஆனால் நேரம் போக போக ஆட்டத்தின் திசை மாறத்தொடங்கியது..அவித்துவிட்டு ரேடியோவில் கூவிக்கொண்டிருந்தவனெல்லாம் அடக்கி வாசிக்கத்தொடங்கினான்.கடைசியில்
டோனி அந்த சிக்சரை அடித்த போது குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவிற்கு
அமைதி காத்தார்கள் சிங்கபடையின் வானரங்கள்..

இந்திய புலிகளின் அன்றைய இரவு உணவுக்கு சிங்கங்களின் கால் சூப் பரிமாறப்பட்டது.

ஆனால் இந்த வெற்றியை தமிழ் பிரதேங்களில் பலர் வீட்டினுள்ளேயும் சிலர் வெளியேயும் கொண்டாடினார்கள்...மரண அடி வாங்கியதை இலங்கையின் அனைத்து மொழிப்பத்திரிகைகளும் ஒரு வரிகூட எழுதவில்லை. இந்தியா கோப்ப்பையை வென்றது என்று கூட செய்தி போடவில்லை.. இதிலிருந்தே தெரிகிறது எந்தளவுக்கு இனத்துவேசமும் பத்திரிகைசுகந்திரமும் இருக்கிறது என்பதை இதுவே இலங்கை அணீ வென்றிருந்தால் முழுப்பக்கமுமே கிரிக்கெட் கிரிகெட் கிரிகெட் தான்.

இதிலும் நேற்று மகிந்த தெரிவித்த கூற்றுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
20 மில்லியன் எமது மக்கள் 1.2 பில்லியன் இந்திய மக்களுக்கு நல்லதொரு களிப்பான
சந்தோசமான தருணத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று.. பயபுள்ள விழுந்தும் மீசையில மண்ணு படலங்கிறானே ...

ஆனாலும் போட்டி முடிவடைந்தும் கூட பல மணித்தியாலங்கள் மைதானத்தை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாராம் தகப்பனும் மகனும்... க்டைசி வரைக்கும் கண்ணுல காணலையே என்று மனவருத்தப்பட்டுக்கொண்டு பின்னர் வெளியேறினார்..
நாடு படுற பாட்டில நாய் தொதல் கேட்டிச்சாம்

ஆனால் போய் வாங்கிக்கட்டிகொண்ட் வந்ததை வெளியில அடக்கி வாசித்திருக்கிறார்கள்.
" நாங்கெல்லாம் வாண்ட்டட்டா போய் அடிவாங்குவோமில்ல..."