31 மே, 2011

கட்டுநாயக்காவில் சிங்கள மக்கள் மீது சிங்கள பொலிசார் அடிதடி-காணொள் இணைப்பு

இலங்கை அரசாங்கம் கொண்டுவர இருக்கும் தனியாருக்கான் பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் பெரு ஆர்ப்பாட்ட பேரணீ ஒன்றை நடத்தினர்.

இவ் ஆர்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாவித்ததோடு, துப்பாக்கி ரவைகளைப் பாவித்தும் அவர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளால், அப்பகுதி மேகமூட்டம் நிறைந்த பகுதிபோல காணப்பட்டது. இதனிடையே வழி தெரியாது, ஆர்பாட்டக் காரர்கள் பக்கமாகச் சென்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை ஆர்பாட்டக்காரர்கள் பிடித்து நையப்புடைந்துள்ளனர், இவரைக் காப்பாற்ற அங்கே ஓடிய மேலும் 15 பொலிசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்து அடித்துள்ளனர்.

இதில் கலவரம் எதுவும் நடாக்காதபோதும் அங்குவந்த பொலிசார் திடீரென கண்ணீர் புகைகளைப் பரவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க முயன்றதாலேயே மோதல் பலமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட மேலும் 14 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, சர்ச்சைக்குரிய இந்த ஓய்வூதியத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


யாழ் பொது நூலகம் எரிப்பு, 31 மே 1981 -40 ஆண்டு நிறைவில்யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது[1]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது[2][3]. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

30 மே, 2011

2ஜி ஊழல்: சிறையில் அடைக்கப்படுகிறார் கரீம் மொரானி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியுக் பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் கரீம் மொரானியின் முன் ஜாமீன் மனுவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படவுள்ளார்.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ரூ.200 கோடி தொகை, டிபி ரியால்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்வதற்கு மொரானி வழிவகுத்தாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.சிங் வாதிட்டார்.


இந்த பணப் பரிமாற்றத்துக்காக, சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கரீம் மொரானி ரூ.6 கோடி பெற்றுக் கொண்டதாக சிபிஐ தரப்பு குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில், மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

26 மே, 2011

5 வயசிலிருந்தே போட்டிருந்த மூக்குத்திய கழட்டிய கனிமொழி

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.


மீடியா வெளிச்சம் படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந் தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி,

அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருக்க மாட்டான். ஆதி கிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’என்ற படியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப்பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான். 'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும் ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதறவைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’

''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம்அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக்கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப்போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி.டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப்போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க,'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!
நன்றி- ஆனந்தவிகடன்

23 மே, 2011

புத்தம் புதியதோர் இராம கதை.....!

முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும்
முழுமையாய்க் கிடைக்கப் பெற்று
ஒப்பரும் பதவியைத் துறந்து
ஓதரும் கலைஞர் சென்றார்

கட்டிய காவியோடு அன்னார்
கால்நடை ஆகச் செல்ல
கனிமொழி கண்ணீர் சிந்தி
கதாநாயகன் பின்னே செல்ல
சண்டையிட்ட மைந்தர்களும்
சரிவரப் பின்னே செல்ல
உற்ற நல் மனைவி மாரும்
உளம் நொந்து வழி அனுப்ப
காவியம் பாடிய கவிஞர் எல்லாம்
கண்ணீர் சொரிந்து நிற்க
சோனியா அம்மையாரும் இதை
சோர்வுற்று பார்த்து நிற்க
புத்தம் புதியதோர் இராமகாதை
புவி மீது அரங்கேறிற்றன்றோ?

இப்படித் தீர்ப்பை மக்கள்
இணைத் தொன்றாய் அளிப்பாரென்று
கற்பனைக் கனவில் கூட
கண்டிரார் கலைஞர் அன்றோ?
விதி இது இதனை வெல்ல
வேறெந்த வழியுமில்லை யென்று
அன்பழகனாரும் ஆசிகள் கூறிச் செல்ல
விடுதலைச் சிறுத்தைகளும் கூடி
விரைந்திவர் பின்னே செல்ல
பாட்டாளி மக்கள் கட்சி
பரிதவித்து தவறி ஏங்க
காவிய நாயகன் கலைஞரின்
காப்பியம் முடிந்ததன்றோ?
வெற்றிப் புயலில் சிக்கி
வென்ற வீர அம்மை கேள்மின்!
உண்மையில் இக்காதை உமக்கு
உவப்பான பாடம் சொல்லும்
எதிர்ப் புறத்து வீற்றிருந்த வண்ணம்
எதை எதையோ பேசி விட்டீர்
ஆட்சியை கையில் தாரும்
அசத்தியே காட்டுவேன் நான்
பசிப்பிணி பஞ்சம் நோய்கள்
பாழ்பட்ட வறுமை இனி இங்கில்லை
இலஞ்சமும் ஊழலும் இனி இல்லையென
உரத்து நீர் உறுதி சொன்னீர்
ஈழத்தீர் அஞ்ச வேண்டாம்
இடரினி உமக்கு இல்லை
அற்புத அமைதி பூக்குமிங்கு
ஆட்சியார் அனைத்தும் தந்து
வன்செயல் அற்ற நாடாய்
வான் புகழ் ஈழம் காண்பீர்
இப்படிப் பேசிப் பேசி நீரும்
இணையிலா வெற்றி பெற்றீர்
அண்மையில் கதையை மாற்றி
மாநில அரசால் எதுவுமாகாது
மத்திய அரசே இதனை நன்கு
மனதினில் கொள்ள வேண்டும்
இப்படிக் கதையை மாற்றி
இனிமையாய் பேசி விட்டீர்
கெட்டிக்காரன் புழுகு எல்லாம்
எட்டு நாளில் கலைந்தே போகும்
அம்மையே மண் குதிரையாக
ஆற்றினில் கரைந்து போகாதீர்
உண்மையில் தேர்தல் பேச்சு
உருப்படி ஆவதில்லை
நிலமகள் தென்றல் வானம்
நீள் புவி உமது பேச்சை
கேட்டது இதனை நீரும்
மறந்திட முடியுமோ சொல்
ஆதலால் குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு என்று
நம்மவர் எண்ணும் வண்ணம்
நடந்திடில் நீதி கொல்லும்.

நன்றி விகடகவி

22 மே, 2011

மங்காத்தா பாடல் தரையிறக்கிகொள்ள

நேற்றைய தினம் வெளியான அஜித் இன் மங்காத்தா திரைப்படத்தின் பாடலை தரையிறக்கிகொள்ள இங்கே கிளிக்குங்கள்

20 மே, 2011

கனிமொழி ,சரத்குமார் ரெட்டி கைது

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை

உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

கனிமொழியை நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

19 மே, 2011

ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது,சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்க்கு

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது: ஆடுகளம் படத்துக்காக பெறுகிறார்!


ஆடுகளம்' படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருது: மத்திய அரசு அறிவிப்பு


'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது!

தென்மேற்கு பருவக்காற்று சரண்யா பொன்வண்ணன் - சிறந்த நடிகைக்கான தேசிய விருது

பாடலாசிரியர் :கவிப்பேரரசு வைரமுத்து!

திமுக வின் தோல்விக்கான ஆய்வு அறிக்கை சமர்பிப்பு-மு.க கடும் விசனத்தில்

09 மே, 2011

இவிங்களுக்கு நாங்கள் டெடிகேட் செய்யும் பாடல்கள்

கருணாநிதிக்கு :நேற்று இல்லாத மாற்றம் என்னது பாலு என்காதில் ஏதோ சொன்னது..

தங்கபாலு:நானடிச்சா தாங்கமாட்டே நாலுமாசம் தூங்கமாட்டே

அத்வானி (பி ஜே பி) :கல்லை மட்டும் கண்டால்.... கடவுள் தெரியாது.....

சோனியா.... : மச்சான பாருடி.... மச்சமுள்ள ஆளுடி.... .......

மன்மோகன் சிங் : மௌனமே சாட்சியாய் ஒரு பாட்டு பாட வேண்டும்....

வைகோ : தென்பாண்டி சீமையிலே.... தேரோடும் வீதியிலே... மான்போல வந்தவனே.... யாரடிச்சாரோ .....

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் : கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும்.... நீ காணும் காட்சி உண்மை இல்லாதது...

கீ. வீரமணி....: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே....நண்பனே....நண்பனே...

சுப்ரமணியம் சுவாமி : என்கிட்டே மோதாதே.... நான் ராஜாதி ராஜனடா...

டாக்டர் ராமதாஸ் : பச்சை புள்ள அழுதுதுன்னா பால கொடுக்கலாம்..

ரஜினிகாந்த் : ஊர தெரிஞ்சுகிட்டேன்... உலகம் புரிஞ்சிகிட்டேன்...

சி பி ஐ : ராஜாத்தி....ராஜாத்தி... அட்ரஸ் என்ன கண்டுபிடி...ராவோடு ராவாக...
அள்ளி வர நாங்க ரெடி...

ஜெயலலிதா : எடுத்த சபதம் முடிப்பேன்.....

கனிமொழி & ராஜா : நாலு பக்கம் வேடருண்டு....நடுவினிலே மான் இரண்டு ....கூடல்...கொஞ்சம் ஊடல்...

பொதுஜனம் : அந்தி மழை மேகம்..........எங்களுக்கும் காலம் வந்ததென்று பாடும் .......திருநாளாம்.....

06 மே, 2011

வாளைமீன் தர்றோம்; வஞ்சிர மீன் தர்றோம் ஆனா "ஜாமீன்" மட்டும் தரவே மாட்டோம்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் 'கூட்டுச் சதியாளர்' என இடம்பெற்றுள்ள தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பாவம்...ஓரமா உட்காந்து மிச்சர் சாப்டுட்டு இருந்தவன புடிச்சு இழுத்துட்டு வந்துட்டாங்களே

சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானிக்கும் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ சிகிச்சை காரணங்களைக் காட்டி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கனிமொழியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைச்சர்கள் பழனிமாணிக்கம், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோரும், கனிமொழியின் கணவர் அரவிந்தன், ராசாத்தி அம்மாளும் உடன் வந்தனர்.

எம்.பி.!

பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழி சிரித்த முகத்துடன் காரில் இருந்து இறங்கினார். அவருடன் இருந்த திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலக்கத்துடன் இறுக்கமாகவே காணப்பட்டனர். அப்போது, திமுக எம்.பி. ஆதி சங்கர் திடீரென மயங்கி விழுந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளேயே தொடங்கியாச்சா

ஈழத்தில் போர் ஓய்ந்து ...

ஈழத்தின் நவீன கவிஞர் சி. சிவசேகரம் அவர்களின் கவிதை....


என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்!

இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்


இழவு விடுகளை என்றாள் ஒரு கிழவி

குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்


போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து

ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி

கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்

முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்


உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி

மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி

இறக்குமதி வாய்ப்புகளை என்றான் ஒரு விநியோகஸ்தன்

விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்


மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி

பொருட்களின் தட்டுபாட்டை என்றாள் ஒரு குமரி

பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்

தரவேண்டிய என் பங்கை என நினைவுடினான் நினைவூட்டினான் ஒரு

சோதனைச் சாவடி அதிகாரி

இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்


என்னுடைய கமிஷனை என்றான் ஒரு தரகன்

குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்

மேலுழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி


ரத்துச் செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்

போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி

மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்

பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி

என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி

என் நண்பனின் பிரிவை என வருந்தினான் அவனது தோழன்

வீர மரணங்களை என்றான் ஒரு பிரச்சாரகன்

விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி

பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன்

பைத்தியக்கராத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி

பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்

பால்க்கான கியூ வரிசையாய் என்றாள் ஒரு சிறுமி


போக முடியாத சாலைகளை என முறையிட்டான்

ஒரு வாடகை வண்டியோட்டி

வெறித்தான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்


திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை

நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்

நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி


மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்

மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்.ஜி.ஒ ஊழியன்


எராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்


என்னை என்ற குரல் வந்த திசையில்

கவனிப்பாரற்று கிடந்தது


ஒரு அகதியின் பிணம்!!!!!!!!!!!!!

05 மே, 2011

கலைஞர் டீவி பெருமையுடன் வழங்கும் "நெஞ்சுக்கு நீதி" -சூட்டிங் டெல்லியில் அமர்க்கள ஆரம்பம்

கோடை விடுமுறை கொண்டாட தி.மு.க மற்றும் தலைவர்கள் டெல்லி படையெடுப்பு.

அங்கு வீர(கனி) மொழி படம் ஷூட்டிங்.
உடன்பிறப்பு(டெல்லிருந்து):தலைவரே நாங்க எல்லாம் வந்துட்டோம்.நீங்க எப்ப இங்க வரீங்க?
மு.க : பொன்னர் சங்கர் முடித்த கையோடு,தீரன் சின்னமலை கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்.சீக்கிரம் முடித்து விட்டு வந்திடறேன். அது போகட்டும்,கதாநாயகி,எப்படி இருக்காங்க.?
மு.க. நீங்க எல்லாம் எடுத்துசொல்லுங்கயா. இயக்குனரே நான் தான்.நான் பார்துக்குரென்யா


உடன்பிறப்பு: முதல் படம்கிற்தினால கொஞ்சம் பதட்டமாதான் இருக்காங்க.நீங்க கொஞ்சம் தெம்பு கொடுத்தா நல்லாஇருப்பாங்க. தலைவரே படத்தோட கதை படி சில சண்டை காட்சியெல்லாம் இருக்கு.அப்படியே நம்ம காங்கிரஸ் ஆளுககிட்ட சொல்லி அவங்களேயும் இங்க அனுப்புங்க.அவங்க தான் பெஸ்ட் சாய்ஸ்.அவங்களோட fight தான் சும்மா naturala ஆ இருக்கும்.audience கிட்ட நல்லா ரீச் ஆகும்.வடிவேலு க்கும் சில ரோல் இருக்கு.அவரேயும் சீக்கிரம் வரசொல்லுங்க.ஏன்னா ஒரு சீன்ல நீதிபதி கதாநாயகிக்கு ஜாமீன் தர மறுத்துடுவாரு. அப்ப தான் வடிவேலுவோட என்ட்ரி .சும்மா வச பாடுவாரு பாருங்க ........அத அப்படியே சன் t.v . ல,நம்ம கலைஞர் t .v ல,குங்குமத்தில,போட்டு பெருசா விளம்பரபடிதிட்டோம்னா படம் சூப்பர் டூபர் ஹிட் ஆயிடிங்க.

மு.க : ஹீ ...ஹீ .... . நாம பண்ற அலப்பறைய பார்த்து சும்மா டெல்லி யே அதிரும்ல....
உடன்பிறப்பு:அப்பிடியே நம்ம நொந்தபாலுவை விட்டு ஒரு அறிக்கை விட வைச்சிடுவோம்." கதாநாயக்கிக்கு விடுதலை கிடைக்காவிட்டால் தமிழகமே பத்தி எரியும் எனது மனைவி தீக்குளிப்பார் என்று "

தலைவரே அந்த கதாநாயகன் கடைசி வரைக்கும் ஜெயில் லே தான் இருப்பாரா?
மு.க : படத்தோட கதை படி கதாநாயகனும், நாயகியும் ஜெயில்ல மீட் பண்றதுதான் கதை யோட திருப்பமே ...........
உடன்பிறப்பு:அப்போ ஏன் தலிவரே கதாநாயகியோட ஒரியினல் புருசனும் கூட அனுப்பி வைச்சிருக்கீங்க.


மு.க:கிரவுட்டை கிளியர் பண்ணத்தான்..
உடன்பிறப்பு:தலிவரே பாருங்களேன் நீதிமன்ற சீன் வந்த பிறகு டெல்லியிலேயெ உங்க கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணூவய்ங்க், உங்க டைம் லை அப்பிடி
மு.க: இதில உள்குத்து ஓண்ணூம் இல்லையே.

உடன்பிறப்பு:தலிவரே நீங்க பாடுறமாதிரி " ராசாத்தி " உன்னுசுரு என்னதில்ல" எண்ட பாட்டை ரீமிக்ஸ் பண்ணி போட்டிடுவோம்... அதோடா செயிலில இருக்கிற ராசா பாடுறமாதிரி " பொன் மகள் வந்தாள் எத்தனைகோடி தந்தாள் " எண்டு ஒரு ரீமிக்ஸ்ம் போட்டிட்டா படம் 200 நாள் ஓடும்.

மு.க : அப்போ அந்த பாராட்டு விழா இருக்குமில்ல..நம்ம மானாடா மயிலாடா நமியை வைச்சு சும்மா போட்டு தாக்கிடலாம்..அப்பிடியே ஹன்சிகா மோத்துவனியை கூப்பிடுங்கடா
பார்க்கும் போதே அப்பாவியா இருக்காடா

04 மே, 2011

உள்ளே வருகையில் பத்தாயிரம் வாசகர்களை தாண்டியது நமது வலைப்பூ

8 ம் திகதி பெப்ரவரி தொடங்கப்பட்ட எனது " மன்மதக்குஞ்சு" என்ற இந்த வலைப்பூ இன்றுடன் 10000 வாசகர்களை தன்னகத்தே வரவேற்று தகவல்களை பகிர்ந்துள்ளது.இங்கே வந்து தகவல்களை பெற்றுக்கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள்

கலைஞர் அறிக்கைக்கு கசாப்புக்கடை உரிமையாளர்கள் கண்டனம்

கத்தியை கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவான் என்ற பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடன் வாழ்க்கை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி - உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்துவந்த ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதைத்தொடர்ந்து கறி கடைக்கள் வைத்திருப்போர் சங்கத்தினர் தமினத்தலிவர் கலைஞருக்கு எதிராக கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியுள்ளன்ர்.தலிவரின் இந்த அறீக்கையால் கறி கடை வைத்திருப்போரின் உறவினர்கள் அவர்களை கத்தியை கீழே போட்டுவிடுமாறும் இல்லாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஒசாமை போல போட்டுத்தள்ளீவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

அப்பிடி கத்தியை கீழே போட சொல்லி வீட்டுக்காரம்மாக்கள் சண்டை பிடிப்பதால் கறிக்கடை உரிமையாளர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.இதன்காரணமாக இனி சாப்பாட்டுகடைகளிலும்,ஹோட்டல்களிலும் கறிக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.ஒரு பிளேட் கறீ 1000 ரூபா வரையிலும் விற்பனையாவதாக நமது உளவுத்துறை குமர்பெடியன் குஞ்சுமணி தெரிவித்தார்.ஒரு சில கறிக்கடைக்காரர்களை பேட்டி கண்டபோது அவர்கள் தெரிவித்த கருத்து உங்களுக்காக

கறிக்கடை கற்பூரம்: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்று சொன்ன கருணாநிதிக்கு கணக்கில்லாம பொண்டாட்டி கட்டுனதால அவிங்க புள்ளைகளாலேயே சங்கு.

கறிக்கடை காஞ்சிபுரம்:கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு-மு.க அப்ப லத்தி எடுத்தவனுக்கு எதால சாவு தலிவா..

கறிக்கடை காட்டுப்பூச்சி:கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்.டெலிபோனில் ஊழல் தெய்தவன், டெலிபோனில் பேசியே மாட்டினான்.(நீரா ராடியா)

கறிக்கடை கந்தசாமி:அப்போ ஊழல் மேல ஊழல் செய்தவனுக்கு கடூழிய சிறையா- தலிவர் குடும்பத்துக்கு ஒரு திகார் சிறை ஆர்டர்.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்


அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் பயணம் செய்த நால்வரும் பலியாகினர்.
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த தீவிரமான தேடுதலில், டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டது.
முன்னதாக, பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் யூரோகாப்டர் பி3 ரக ஹெலிகாப்டரில் டோர்ஜி காண்டு உள்ளிட்ட 5 பேர் தவாங்கில் இருந்து மாநிலத் தலைநகர் இடாநகருக்குப் பயணம் செய்தனர். இரு விமானிகள் அந்த ஹெலிகாப்டரை இயக்கினர்.இடாநகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாங்கில் இருந்து சனிக்கிழமை காலை 9.56-க்கு புறப்பட்டது. அது 11.30 -க்கு இடா நகருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தவாங்கில் புறப்பட்ட 20 நிமிஷங்களிலேயே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்தது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்குமோ என்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி தீவிரமானது.
பூடான் எல்லைப் பகுதி, தவாங் - இடாநகர் இடையே கடந்த ஐந்து நாட்களாக தேடும் பணியில் விமானப்படையின் சுகோய், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அத்துடன், தரை வழித் தேடும் பணியில் சுமார் 3,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், செவ்வாய்க்கிழமை இரவு வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், செலா பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்ததை தேடலில் ஈடுபட்ட வான்படையினர் இன்று காலை கண்டறிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் டோர்ஜி காண்டு உள்பட 5 பேரில் 3 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாச் சந்தையிலும் கேட்டிட்டோம் தலிவரே ,,,ஜாமீன் கடல்லேயே இல்லையாம்

மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.
யார் இந்த அமிர்தராஜ்?
ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.
''ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார். உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது.
மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, இளைய சகோதரர் பிரமோத் கோயங்காவின் பின்னணி​களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்புவைத்து இருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.
தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்துகொண்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீமின் வாக்குமூலத்தில், திருமணத்தில் பிரமோத் கலந்துகொண்டதைச் சொல்லி இருக்கிறார். மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு. இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவர இருக்கிறார்​களாம்.
தயார் நிலையில் 6-ம் எண் சிறை?
மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது. பெண்களுக்கு என்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கே இரண்டு ஃபைல்கள்?
''சமீபத்தில் இரண்டு ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.
'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்துவைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது. அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

நன்றி: ஜீனியர்விகடன்

தருமருடன் தன்னை ஒப்பிட்டதால் கருணாநிதிக்கு கண்டனம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் தி.மு.க.விற்கு சங்கடத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் “மகாபாரதத்தில் தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம் தி.மு.க.விற்கு ஏற்படாது.(தி.மு.க.என்பதும் கருணாநிதி என்பதும் ஒன்றுதானே) அந்த சங்கடம் என்னவென்று நான் விபரிக்க விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்.
இந்தக்கூற்றால் இப்போ பலரிடமிருந்து பலத்த கண்டனம் ஏற்பட்டிருக்கின்றது.1.76 லட்சம் கோடி அடித்த கருணாநிதி எப்பிடி இப்பிடி தன்னுடன் ஒரு தர்மம் காத்து அரசாட்சி நடாத்திய அரசனுடன் ஒப்பிட்டு பேசலாம் என அனைவரும் விசனம் அடைந்துள்ளனர்.

இதைப்பற்றி தினமலர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளது.

தர்மனுக்கு ஏற்பட்ட சங்கடம் என்ன? பாரதத்தில் சொல்லப்படுவது இரண்டு,ஒன்று கௌரவர்களின் தலைநகரான ஹஸ்தினாபுரம்.அதாவது இன்றைய டில்லி அங்கு சூதாட வருமாறு பாண்டவர்களுக்கு துரியோதனன் அழைப்பு விடுக்கிறான்.அன்றைய ராஜ மரபுப்படி சூதாட்ட அழைப்பை ஒரு அரசன் விடுத்தால் அதை மற்ற அரசன் ஏற்க வேண்டும் என்பது விதி.
சகுனியின் சூதாட்டத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதும், சூதாட்டத்தை வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் வைத்திருக்கிற பாண்டவர்கள் நிச்சயமாக தோல்வியுறுவர் என்பதை தெரிந்த துரியோதனன் தர்மபுத்திரனை நயவஞ்சகமாக ஹஸ்தினாபுரத்திற்கு அழைக்கிறான்.அங்கு வந்த தர்மபுத்திரன் தோல்வியுறுகிறான்.காங்கிரஸ் டில்லிக்கு தங்களை வஞ்சகமாக அழைத்து ஸ்பெக்ட்ரம் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி வழக்கு விசாரணை, கைது, பத்திரிகைகளில் அவப் பெயர், தேர்தலில் தோல்வி ஏற்படுத்தும் முயற்சி இவைகளை செய்கிறது.இந்த முயற்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாது.தி.மு.க.விற்கும் கலைஞர் “டி.வி’க்கும் தயாளு, கனிமொழி கடைசியாக ராஜாவிற்கு சங்கடங்களை ஏற்படுத்த முடியாது என டில்லிக்கு இதன் மூலம் சொல்கிறாரா? மகாபாரதக் கதை மூலம் காங்கிரஸிற்கு எச்சரிக்கை விடுக்கிறாரா?


இரண்டாவது …. சூதாட்டத்தில் பணயம் வைத்து தோற்ற பின் இழுத்து வரப்பட்ட திரௌபதி துகிலுரியப்படும் போது தர்மபுத்திரரும் அவரது தம்பிமார்களும் வாளாவிருக்கின்றனர்.தருமனுக்கு ஏற்பட்ட இந்த சங்கடத்தை கருணாநிதி குறிப்பிட்டிருக்க முடியாது.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்கும் பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் பா.ஜ.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் காங்கிரஸிற்கு ஆதரவாக 10 பேர் எதிராக 11 பேர்.அந்த எதிர் வாக்கு உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக உள்ள முலயாம் சிங்கின் சமாஜ்வாடி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஒரு உறுப்பினர்களை காங்கிரஸிற்கு ஆதரவாக மாற்ற பெரும் விலை பேசப்பட்டது.அதன் விளைவு, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு அடுத்த தந்திரம் அரங்கேறியுள்ளது.
“தந்திர பூமி’ என்ற தலைப்பில் டில்லியைப் பற்றி நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவல் எழுதியிருந்தார்.அந்த “தந்திர பூமியில்’ தற்போது தி.மு.க.வின் ராஜதந்திரம் தடுமாறி நிற்கிறது.இப்படிப்பட்ட தந்திர பூமியின் நிஜாம்கள் தனக்கெதிராக நகர்த்தும் காய்களை தவிடு பொடியாக்குவேன் என்பது மட்டும் கருணாநிதியின் செய்தியாக இருக்க முடியாது.
இவர் தர்மனானால் ஹஸ்தினாபுரம் டில்லி ஆனால், காங்கிரஸ் துரியோதனனும் கௌரவர்களும் தானே! தர்மபுரத்திரருக்கும் ஏற்பட்ட சங்கடம் தனக்கு ஏற்படாது என இவர் கூறுவதன் மூலம் இவரை தர்மபுத்திரருக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார்.இதிகாச புராணங்களை எட்டிக்காயாய் வர்ணித்தாலும் அக்கதாபாத்திரங்களில் தன்னை உவமானப்படுத்தி அடி மனதில் சந்தோஷம் காண்கிறார்.கடுமையான சிக்கலில் மாட்டித் தவிக்கும் இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும் ஒரு ஆறுதல் இவர் தன்னைத் தானே தருமபுத்திரரோடு ஒப்பிட்டு கொண்டது மட்டும் தான்.

03 மே, 2011

ராகு கேது மாற்றம் 16.05.2011


ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, 8-ஆம்வீட்டில் சென்று மறைகிறார் ராகு. மன நிம்மதி, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.
தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி சொத்துச் சிக்கல்கள் நீங்கும். ஆனால் எதிர்பாராத செலவுகளும், வீண் பயணங்களும் அதிகரிக்கும். தம்பதிக்குள் சிறு கருத்து மோதல் களும் ஏற்படும். அந்தரங்க விஷயங்களில் மூன்றாம் நபரை நுழைக்காதீர்கள். மனைவிக்கு, பெண்களுக்கே உரிய உடல் உபாதைகள் வந்து நீங்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த கால கட்டத்தில் திடீர் பயணம், வாகனச் செலவுகள் வந்துபோகும். சொத்துப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. பழைய வழக்கில், வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குழப்பம், காரியத் தடங்கல் வரக்கூடும். அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். பழைய கடன் தொந்தரவு மனசை வாட்டும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு கட்டும் பணியைத் தொடர வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விமர்சனங்கள் எழுந்தாலும் உங்களின் புகழ் கூடும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை; அசைவம் தவிர்க்கவும். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது, வீட்டு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். எவருக்கா கவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள், உயர் கல்வியில்
கூடுதல் கவனம் செலுத்தவும். அரசியல்வாதிகள், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை வசூலிப்பதில் போராட்டம் உண்டு. கமிஷன், ஷேர், புரோக்கரேஜ் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்குதாரர்கள், உங்களின் நிர்வாகத் திறனை மதிப்பர். உத்தியோகத்தில் தொல்லை தந்து வந்த மேலதிகாரியே, இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகை மீண்டும் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பரிசும், பணமுடிப்பும் உண்டு.
கேது பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் கேது பகவான், ராசிக்கு 2-வது வீட்டில் நுழை கிறார். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். சிலநேரம், பேச்சால் பிரச்னைகளும் ஏற்படலாம்! பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். எனினும், உங்கள் யோகாதிபதியின் நட்சத்திரங்களில் கேது செல்வதால் இடையிடையே பண வரவு, யோக பலன்களும் உண்டாகும். மகனுக்கு, எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் இருந்த சிக்கல்கள் நீங்கி, திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது பகவான் செல்வதால், இந்த காலகட்டத்தில் கௌரவப் பதவிகள், பண வரவு, சகோதர உதவி உண்டு. 19.9.2011 முதல் 25.5.2012 வரை ரோஹிணி நட்சத்திரத்தில்  கேது செல்வதால் புகழ், கௌரவம் உயரும். புது இடம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. 26.5.2012 முதல் 30.11.2012 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சலிப்பு வந்து நீங்கும். வீண்பழியும் ஏற்படலாம். சொத்துப் பிரச்னையில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.     
வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங் கள். உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஓரளவு பண வரவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல், ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். டென்ஷன், மன உளைச்சல்கள் நீங்கி, இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.
கணவன்- மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலைக்கும். எனினும், களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், மனைவியுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படலாம்; பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். அவர் வழி உறவினர்களால் கருத்துமோதல்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகும் அறிவும் மிகுந்த குழந்தைச் செல்வம் வாய்க்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களில் தடுமாற்றம் விலகும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், பிள்ளைகளால் செலவு கள் உண்டு. எனினும் அவர்களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் தீர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷத்தில் ராகு செல்வதால், தந்தைவழிச்
சொத்து கைக்கு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். வேலை கிடைக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் அலைச்சல், பணப் பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும்.
பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவர். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைப்பட்ட காரியங்களும் முழுமை பெறும். எவருக்காகவும் ஜாமீன் போடாதீர்கள். மதிப்பு கூடும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் பாச மழையில் நனைவர். மாணவர்களுக்கு, விளையாட்டின்போது கவனம் தேவை.
வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் சாதிப்பீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. வேலை ஆட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில், உயரதிகாரி நேசக் கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வேலை அதிகரிக்கும். கலைத் துறையினர் போட்டி- பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், நேரத்துக்கு தக்கவாறு பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தாரின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை- படிப்பு குறித்தும் அதிகப் போராட்டம் இருக்கும். தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சகோதரர்கள், நண்பர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை, மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தின் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். பிற்பகுதியில் ஓரளவு பண வரவு உண்டு. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு சிறு சிறு விபத்துகள் ஏமாற்றங்களும் நிகழலாம். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த நட்சத்திரக்காரர்கள், சாட்சி கையப்பம் இடவேண்டாம். இருசக்கர வாகனத்தில் கவனம் தேவை. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் வீண் கவலை, விரயம், சோம்பல், வந்து நீங்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எவரையும் நம்பி ஏமாறாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.     
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாகச் செலுத்துவது நல்லது. உத்தி யோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, இடைவிடாத முயற்சியால் எண்ணியதை எட்டிப் பிடிக்க வைக்கும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
ராகு பகவான் 16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 6-வது இடத்தில் வந்து அமர்வதால், எதிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாழ்க்கைத் துணையின் தேக ஆரோக்கியம் மேம்படும். மறுமணத்துக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல சேதி வந்துசேரும். வரவேண்டிய பணம் தாமதமின்றி வந்து சேரும்; கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
புதிதாக ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டு.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதரப் பகை நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு, அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தைவழியில் சொத்து சேரும். ராகு பகவான், 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் தடைப்பட்டு முடியும். அதேநேரம், வி.ஐ.பி-களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் வந்துசேரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசியும் உண்டு.
மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திரு மணம் இப்போது கூடிவரும். சகோதர - சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். கன்னிப் பெண்கள், தடைப்பட்டிருந்த கல்வியை மீண்டும் தொடருவர். நல்ல வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்ட கட்டட வேலைகள், இனி முழுமை அடையும். பூர்வீகச் சொத்து வழக்குகள் சாதகமாகும். அதிகாரிகளின் துணையுடன் அரசு காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் லாபத் தைப் பெருக்குவீர்கள். மருந்து வகை, எண்ணெய் வித்துகள், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், மேலதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினர் குறித்த வதந்திகள் விலகும். பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
கேது பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 12-ல் சென்று அமர்கிறார் கேது. உடல்நிலை மேம்படும்.
பேச்சில் தெளிவு பிறக்கும். எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்கு தடைப்பட்ட திருமணம் முடியும். சகோதர- சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்துப் பிரச்னைகள் தீரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. இந்த காலகட்டத்தில், மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணியில் செல்கிறார் கேது. புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள்.
வீடு கட்ட லோன் கிடைக்கும். இழுபறியான வேலைகளையும் பேச்சு சாதுரியத்தால் செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கேது 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத் தில் செல்கிறார். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். புது வேலைவாய்ப்பும் உண்டு.
மதிப்பு கூடும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலர், புதிதாக வாகனம் வாங்குவர். கன்னிப் பெண்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியருக்கு நினைவாற் றல் பெருகும். மதிப்பெண் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று- வரவு உயரும். வேலையாட்கள்  விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை அதிர்ஷ்டசாலிகளாக்கி, எல்லா வசதிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
ராகு பகவான் 16.5.2011 முதல், 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும். எனினும் புத்தி ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், எல்லோரையும் ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள். மனதில் வீண் குழப்பம் எழும். நண்டு ராசியில் பிறந்த உங்களுக்கு, யோக வீடான தேள் வீட்டில் கருநாகமான பாம்பு அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் சச்சரவுகள் எழுந்தா லும், உங்களது கருத்துகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிகள் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு பகவான். எதிர்பார்த்த
பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு- மனை வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷம் நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்தக் காலகட்டத்தில் பணப்பற்றாக்குறை, எதிர்மறை சிந்தனை, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் டென்ஷன் வந்து போகும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சகோதர உதவி, அரசு காரியங்களில் தீர்வு, வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் விலகும்.
பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் ஒரு கண் வையுங்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளில் அறிவுப்பூர்வமான அணுகுமுறை தேவை. கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மாணவர்கள், படிப்பதுடன் விடைகளை எழுதிப் பாருங்கள். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் அவசர முடிவுகள் வேண்டாம். அரசியல்வாதிகள், எவரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் கூற வேண்டாம். வியாபாரத்தில், அனுபவ அறிவால் மாற்றங்கள் நிகழ்த்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பாக்கிகளை வசூலிப்பதில் கறார் வேண்டாம். ஹோட்டல், இரும்பு, கமிஷன் மற்றும் எண்ணெய் வகையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் மோதல்போக்கு நீங்கும். வேலை குறையும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். பிரபலங்களைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வங்கி லோன் மூலம், வீட்டை கட்டி முடிப்பீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத முன்னேற்றம் உண்டு; பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலையில் அமர்வீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், சிக்கனம் தேவை.வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம்.
உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி தேடி வரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும். கணினித் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள், போட்டிகளில் பரிசு பெறுவார்கள். உயர் கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
மொத்தத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட் டாலும், கேதுவால் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 4-வது வீட்டில் ராகு வந்து அமர்வதால், மன நிம்மதி தருவார். தடைப்பட்ட வேலைகள் இனி முழுமை பெறும். வீட்டில் அமைதி திரும்பும். தாம்பத்தியம் இனிக்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய வங்கிக்கடனை அடைக்க வழி பிறக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்றுசேருவீர்கள். வழக்கு சாதகமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். சிலர், புறநகர்ப் பகுதிகளுக்கு குடிபெயர்வர்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. பண வரவு உண்டு.  சிறு அறுவை சிகிச்சை, வீண் செலவுகள் வந்து போகும். வீடு- வாகனம் சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.  22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. எனவே, பணத் தட்டுப்பாடு, சொத்துப் பிரச்னைகள் நீங்கும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை வெளியே விவாதிக்க வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத் திரத்தில் ராகு செல்கிறார். எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்குத் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவியுண்டு.
5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்கவும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிகள், கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். மாடிப்படியில் ஏறி- இறங்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் கூடும்.
வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கனிவான பேச்சால் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் எவரையும் விமர்சிக்க வேண்டாம். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் அயல் நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது 10-வது வீட்டில் வந்தமர்வதால், எதையும் திறம்பட முடிக்கும் மனோபலத்தைத் தருவார். சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டும் பணி முழுமை அடையும். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை தொடர்பாக நல்ல சேதி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவர். ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், புது சொத்து வாங்குவீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.  26.5.12 முதல் 30.11.12 வரை கேது கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். தொட்டது துலங்கும். 
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும், வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பைக் கரைக்க வேண்டி வரும். தந்தை வழி உறவுகளால் செலவும் அலைச்சலும் உண்டு.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், புதிய நட்பால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த, புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்கான வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். உத்தியோகத்தில், காலநேரமில்லாமல் உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் போராடி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், திடீர் முன்னேற்றங்களைத் தருவதாகவும் அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்களின் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து ராகு அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். உற்சாகம் கூடும். சவாலான விஷயங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். நீங்களும் கடனையெல்லாம் அடைத்துவிட்டு, கம்பீரமாக வலம் வருவீர்கள்.
தாயாருக்கு ஆரோக்கியம் கூடும். பிள்ளைகளை மேல்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். மகளின் திருமணம் குறித்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து நல்ல பதில் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகான குழந்தை பிறக்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வழி பிறக்கும்.  நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை, கனவுத் தொல்லைகள் நீங்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, ராகு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் பண வரவு உண்டு. வழக்குகளில் நெருக்கடி நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப புது இடம் வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும். அரசியலில் செல்வாக்குக் கூடும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில்  ராகு  செல்வதால், சேமிக்கத் தொடங்குவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களின் கனவு வீட்டை கட்டி முடிக்கும் வாய்ப்பு கூடிவரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தலைமையின் ஆதரவு  உண்டு. என்றாலும், வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். லோன் உதவியால் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறை மாறும். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். விளம்பரங்களால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ஷேர், புரோக்கரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கலைஞர்கள், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வர்; உங்களின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்தமர்வதால், சமயோசிதமாகச் செயல்பட வைப்பார். மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பர்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால், பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வருமானம் உயரும். வீடு- மனை வாங்குவது- விற்பது லாபகரமாக அமையும். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். மூத்த சகோதரர் ஆதரவாகப் பேசுவார். 26.5.12 முதல் 30.11.12 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் கிடைக்கும்.
கேது 9-ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடியுங்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை குறையும். சலுகைகளுடன் கூடிய வேறு வாய்ப்புகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி பலவிதங்க ளிலும் உங்களைச் சாதனையாளராக மாற்றும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார் ராகு. தடைப்பட்டிருந்த பல காரியங்கள், இப்போது முழுமை பெறும். ஆனால், அவர் வாக்கு ஸ்தானத்தில் நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. வருமானம் உயர்வதுடன், செலவுகளும் துரத்தும். குடும்பத்தில் சந்தோஷம் குறையாது.உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களும், தேடி வந்து பணம் தருவர். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். ராகு, அனுஷ நட்சத்திரத்தில் 22.1.12 முதல் 30.9.12 வரை செல்கிறார். தாய்வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்; வீடு- மனை சேரும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில், சிறு விபத்துகள் நிகழலாம்.பணப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்குவதோ, வீண் விவாதங்களோ வேண்டாம்.
மகனுக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் அமைவாள். மகளுக்கு, உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால், உடம்பு லேசாகப் பாதிக்கும். பத்திரங்களில் கையெழுத் திடும்போது கவனம் தேவை. வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள்; கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வீடு- மனை வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சமூக சேவையில் ஆர்வம் பிறக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. லாகிரி வஸ்துகளைத் தவிர்க்கவும். வழக்குகளில் இழுபறி காணப்படும். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர்.
வியாபாரத்தில், பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில்,  உங்களின் பொறுப்பு உணர்வால் புதிய பதவி, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், யோசித்து முடிவெடுக்கவும். கலைத் துறையினரை, பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். அலைச்சல் இருந்தாலும் நிம்மதி உண்டு. குடும்பத்தாரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுங்கள். தடாலடி முடிவுகள் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் மற்றொரு வீடான ரிஷபத்தில் கேது அமர்வதால் கெடு பலன் குறைந்து நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும். சகோதரர்களை அனுசரிக்கவும். வீடு-மனை விற்பது வாங்குவதில் விழிப்பு தேவை. 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், வேலை கிடைக்கும். சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் மன இறுக்கம் நீங்கும். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள்.
கேது ராசிக்கு 8-ல் வந்தமர்வதால் முன் கோபம் அதிகமாகும். சிலருக்குச் செலவுகள் இரட்டிப்பாகும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்களை முடிப்பதில் தடுமாற்றம் இருக்கும். அதேநேரம் ஆன்மிகச் சிந்தனை, யோகா- தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
நேரந்தவறி வீட்டுக்குச் செல்வதால் கருத்து மோதல்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
மொத்தத்தில் கேதுவால் அலைச்சலும் அச்சமும் ஏற்பட்டாலும் ராகுவால் ஆதாயமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார் ராகு. உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவர்களுக்கு, படிப்பில் இருந்த அலட்சியம் மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளும் துரத்தும். வீண் செலவுகளைக் குறையுங்கள். உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்கவேண்டாம்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், இந்த நட்சத்திரக் காரர்களுக்கு சிறிய அளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம். பொறுமையான அணுகுமுறை தேவை. எவருக்கும் ஜாமீன்  போடவேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த நட்சத்திரக்காரர்கள், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பெரிய நோய்கள் இருப்பது போன்று பிரமை ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குடும்பத்தில் நிம்மதி, பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட லோனும் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் தேடிவந்து உதவுவர். கன்னிப் பெண்கள், பிறரை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவர்கள், கணிதத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள். பங்காளிப் பிரச்னை தலைதூக்கும். வெளி உணவுகள், வறுத்த- பொரித்த உணவுகளைத் தவிருங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம். அயல் நாட்டுப் பயணங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள். புது ஆர்டர்களைப் போராடி பெறுவீர்கள். அரசாங்க வரி விஷயத்தில் தாமதம் வேண்டாம். உத்தியோகத்தில், உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் ஆவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு பரிசு - பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைப்பதால், வீண் பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பிரபலங்கள் அறிமுகமாவர். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பர். சகோதரியின் திருமணத்தை கோலாகல மாக நடத்துவீர்கள். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்கு இடையே காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். மனைவிக்கு லேசாக முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்லவேண்டாம்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயம் நல்லபடியாக முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கலாம். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் செல்வாக்குக் கூடும்; சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மாணவ-மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். பதக்கம், பரிசு கிடைக்கும். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில், பதவி உயரும். எந்த நிலையிலும் நேர்பாதையில் செல்வது நல்லது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி யதார்த்தமான முடிவுகளாலும் கடும் உழைப்பாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 12-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், நிம்மதி பிறக்கும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில்  கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லது நடக்கும். வெளி மாநில புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு. சாதுரியமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். அனுபவ அறிவு கூடும். திடீர் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷத்தில் செல்கிறார் ராகு. தைரியமாக புதிய முதலீடுகள் செய்வீர்கள். சுப நிகழ்ச்சி களால் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவீர்கள். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் விலகும். கன்னிப் பெண் களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். கல்யாணம் நடக்கும். மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு முன்னேறுவர். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நாடாளுவோரின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்களின் பலத்தை நிரூபித்து தலைமையிடம் நல்ல பெயரெடுப்பார்கள். சிறு சிறு விபத்துகளும் நிகழலாம் என்பதால் கவனம் தேவை. கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் லாபம் வரும். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர். உத்தியோகத்தில், மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்பு டைய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளால் புகழ் பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களை அறிந்து, அதைத் தீர்க்கும் வல்லமையைத் தருவார். இழந்த அமைதியை மீண்டும் பெறுவீர்கள். தாம்பத்தியம் இனிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதக மாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஷேர் லாபம் தரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்வதால் மதிப்பு கூடும். சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். கமிஷன், ஃபைனான்ஸ் வகைகளால் பணம் வரும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். வேலை கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். திருமணம் கூடி வரும். புது மனை புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
ராசிக்கு 6-ல் கேது நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவிற்கு வருமானம் கூடும். சொந்த ஊர் கோயில் விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி வைப்பீர்கள். பங்கு தாரர்களுடன் பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற உயர்வு உண்டு. 
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்துவதுடன், சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ஆம் வீட்டுக்கு வருகிறார். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை சிரமமின்றி நிறைவேற்ற முடியும். சேமிக்கும் அளவுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் நிலவும்; உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கணவன் - மனைவி இருவரும் நகமும் சதையுமாகத் திகழ்வார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தைச் செல்வம் வாய்க்கும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள், உயர்கல்வியில் வெற்றி பெறுவர். மகனின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், எதிர்பார்த்த பணம் வந்துசேரும். வீடு-மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் ராகு செல்வதால், கல்யாணம் ஏற்பாடாகும். வழக்குகள் சாதகமாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவுகளின் விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
ராசிக்கு 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால், பாதியில் நின்றுபோன வேலைகளை முழுமூச்சுடன் செய்துமுடிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் அமையும். சொத்து வழக்குகள் சாதகமாகும். எதிரிகளும் நண்பர்கள் ஆவர்.
கன்னிப் பெண்களுக்கு, தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். தடைப்பட்ட கல்வியை முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவர். வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவசாலிகளை வேலைக்குச் சேர்ப்பீர்கள்.விலகிச்சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவர். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் இருந்த மோதல்போக்கு விலகும். ஊதிய உயர்வு உண்டு. உங்களின் திறமை வெளிப்படும். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். கலைத் துறை யினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் தேடி வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமை சேரும். கர்ப்பிணிகள், தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்குவீர்கள். எனினும், உள்மனதில் வீண் சஞ்சலங்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு அதிரடி முன்னேற்றம் உண்டு.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.11 முதல் 18.9.11 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்வீர்கள்.
19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் உதவுவார்கள். தள்ளிப்போன திருமணம் தடபுடலாக நடக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால், திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். 
கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள் புதிய நட்பால் சிறப்படைவர். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். தொழில் ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். பங்குதாரர்களிடையே பனிப்போர் நீங்கும். உங்களது ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில், கேதுவால் கொஞ்சம் குழப்பங்கள் ஏற்பட்டாலும், ராகுவால் திடீர் யோகமும், நினைத்ததைச் சாதிக்கும் வல்லமையும் உண்டாகும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்வதால், கடந்த கால உழைப்புக்கான நற்பலன்கள் தேடிவரும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சுயதொழில் செய்யும் வல்லமையையும் தருவார் ராகு. உங்களின் பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் கருத்துமோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு-வாகன வசதி பெருகும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் திட்டமிடலால் அலைச்சல் குறையும். நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் இழப்பால் சில நேரம் வருந்துவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால்,  திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் நெஞ்சு வலி, முதுகு வலி வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 1.10.12 முதல் 30.11.12 முடிய ராகு பகவான் விசாக நட்சத்திரத்தில் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாகக் கிடைக்கும். அதேநேரம், அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். கன்னிப் பெண்கள் தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக்குக் குடிபெயரும் யோகமும் உண்டு. மங்களகரமான செய்திகள் தேடி வரும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே வெற்று பெறும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.
வியாபாரத்தில், புதிய யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் தன்னிச்சையான முடிவுகள் வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், திடீர் இடமாற்றம் உண்டு. வேலை அதிகரித்தாலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.கலைஞர்களுக்கு, வெகுநாட்களாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தடைகள் நீங்கி சுப காரியங்கள் கூடிவரும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஆபரணம் சேரும். சொந்த வீடு வாங்கவேண்டும் எனும் உங்களின் நீண்டகாலக் கனவு நனவாகும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு. சொத்துகள் வாங்கும்போது, தாய் பத்திரத்தை சரிபார்ப்பது அவசியம். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்கிறார். திருமண யோகம் கூடிவரும்.
ராசிக்கு 4-ஆம் வீட்டில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. எவரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வீடு- வாகனப் பராமரிப்பு மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள், போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், பாராட்டும் பதவி உயர்வும் உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும், உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை 9-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், சோம்பல் நீங்கும். வாழ்க்கை பிரகாசிக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சுப காரியங்களால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், வேலைச்சுமை இருக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா பிரச்னை தலைதூக்கும். சில விஷயங்களில் வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு. 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷம் நட்சத்திரத்தில்  ராகு செல்வதால் இழுபறியான வேலைகள் விரைவில் முடிவடையும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். வீடு- மனை வாங்குவீர்கள். திடீர் செலவுகளாலும், பயணங்களாலும் தடுமாறுவீர்கள்.  1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால் செல்வாக்கு கூடும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு மேலை நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் அப்பாவுடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். கனிவான பேச்சால் பிரச்னைகளைத் தவிர்க்கப் பாருங்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல மணமகன் அமைவார். அரசியல்வாதிகளின் மதிப்பு கூடும்; அவர்கள் வீண் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் தளரும். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில், பிரச்னைகள் நீங்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு, புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகள், பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது, 3-வது வீட்டில் வந்து அமர்கிறார்.  குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகள், உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆனால், இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து மறையும். விட்டுக்கொடுத்துப் போகவும். சொத்துப் பிரச்னைகளை கவனமாகக் கையாளுங்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் கேது செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.  விலகியிருந்த உறவினர், சகோதரர்கள்... இனி, உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சொத்து சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால். நீண்டநாட்களாக இருந்த முதுகு வலி, கழுத்து வலி நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
சொந்த ஊரில் உங்களின் மரியாதை கூடும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். சிலர் சொந்த வீட்டுக்கு குடிபுகுவார்கள். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நீங்களும் அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். மாணவ- மாணவியருக்கு தேர்வில் மதிப்பெண் கூடும். வியாபாரத் தில், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு அதிக சம்பளம் - சலுகையுடன்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

நன்றி சக்திவிகடன் மற்றும்