27 ஜூன், 2011

ஈழ்த்தமிழருக்காக மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோரில் மெழுவர்த்தி அஞ்சலி

இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.

20 ஜூன், 2011

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காதமைக்கு லலித் மோடி விவகாரம் காரணம்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) சபை மறுத்தமைக்குக்கு லலித் மோடி விவகாரம் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திடம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்க கிரிக்கெட் சபை) வழங்கியுள்ளது.

சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனத்திற்கும் லலித்மோடிக்கும் தொடர்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை சந்தேகிப்பதாலேயே ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பீ.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி இப்போது பிசிசிஐயினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கை லீக்கின் பின்னால் மோடி இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டுள்ளோம். ஐ.பி.எல்.லில் பணியாற்றிய அவரின் நபர்கள் பலர் இப்போது சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்தின் ஊடக இலங்கை லீக்கை நிர்வகிக்கின்றனர்' என பிசிசிஐ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தாமல் எஸ்.ஈ.வி. நிறுவனத்திடம் ஏற்பாட்டுப் பொறுப்பை ஒப்படைத்ததால் இப்போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

08 ஜூன், 2011

கனிமொழி,சரத் ரெட்டியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், இவ்விருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் கனிமொழி, சரத்குமார் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 23 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 24-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பரிகோகே, அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்விருவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

04 ஜூன், 2011

மதுரையின் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அழகிரிக்கு எதிரான கோஷம்

னைத்து மாவட்டங்களிலும் கடந்த 23-ம் தேதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அஞ்சாநெஞ்சன் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் மட்டும், கடைசி நேரத்தில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. காரணம், கூட் டத்தை நடத்த மண்டபம் கிடைக்கவில்லை. குறிப்பாக, கட்சியின் உடன்பிறப்பு ஒருவரே தனது மண்டபத்தைத் தர மறுத்துவிட்டார்!
இத்தனைக்கும் அந்த மண்டபத்துக்கு சொந்தக்காரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அழகிரியின் பெயரைச் சொல்லியும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் முடிந்த வழிகளில் எல்லாம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர். தேர்தலின்போது இவரது மண்டபத்தில் வைத்துத்தான் பட்டுவாடா நடந்தது. ஆனால் இப்போது, 'யாரைக் கேட்டு இங்கே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தீர்கள்? இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வந்தால்..?'' என்று ஆவேசப்பட்டாராம் அந்தப் பிரமுகர். இதனால் இரண்டு நாட் கள் கழித்து ஒரு ஹோட்டலில் வைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார்கள். மதுரையில் தி.மு.க-வின் இன்றைய பரிதாப நிலை இதுதான்!
மதுரையில் கட்சியின் உண்மையான விசுவாசிகளோ, ''ஏதாச்சும் கேஸ்ல நீங்களா அந்தாளப் பிடிச்சு உள்ள வெச்சுட்டீங்கன்னா நல்லது. இல்லாட்டி எங்க ஆளுங்க இருக்குற ஆத்திரத்துக்கு என்ன பண்ணுவாங்கனு தெரியாது'' என்று அழகிரியையும் மதுரை தி.மு.க-வையும் ஆட்டிப் படைத்த முக்கியப் புள்ளியின் பெயரைச் சொல்லி டென்ஷன் ஆகிறார்கள்.
மேலும் பேசியவர்கள், ''தி.மு.க. ஆட்சிக்கு வரும்போ தெல்லாம் புதுசு புதுசா ஒரு கூட்டம் வந்து அழகிரியை ஆண்டுட்டு போயிடுது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்ப வீடியோ கடை அண்ணாமலையும் ஹோட்டல் பிரமுகர் ஒருத்தரும் அழகிரியை ஆட்டுவிச்சு அவங் களுக்கு வேண்டியதை சாதிச்சுக்கிட்டாங்க. ஆட்சி மாறுனதும் அவங்க காணாமப் போயிட் டாங்க. சோதனையான அடுத்த ஐந்து ஆண்டு களும் நாங்கதான் மதுரைக்குள் கட்சியை காப்பாத்தினோம்.
1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்ததும் அழகிரியை வளைக்க இன்னொரு கூட்டம் வந்தது. எங்களை அழகிரி வீட்டுக்கு வெளியே நிறுத்திட்டாங்க. அப்போ புத்தகக் கடை சந்திரன் என்பவர் அழகிரியை வளைச்சு தன்னுடைய யாதவர் சாதிக்காரர்களை எல்லாம் கை தூக்கி விட்டார். இவர் சொல்லைக் கேட்டுத்தான் யாதவரான குழந்தை வேலுவை மேயராக்கினார் அழகிரி. அந்த ஆட்சி முடிந்ததும் அவங்களும் அழகிரியை விட்டுட்டுப் போயிட்டாங்க. அ.தி.மு.க. ஆட்சியில் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கிய நேரத்தில் அவரை வைத்து வாழ்ந்தவங்க எல்லாம் ஓடி ஒளிஞ்சுட்டாங்க.
2006-ல் மீண்டும் கழக ஆட்சி வந்ததும் மதுரை தி.மு.க-வை ஆட்டிப் படைக்க வந்தார் ஒரு கான்ட்ராக்டர். கடந்த கால அனுபவங்களில் பாடம் கற்காத அழகிரி,  அவரையும் அனுமதித்தார். மதுரை மேயர் பதவியில் தனது சாதிக்காரரான தேன்மொழியை அமரவைத்தார். இவரோடு கூட்டு என்ற ஒரே காரணத்துக்காக புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தளபதியை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆக்கினார். கட்சியில் அதிகாரம் செய்யும் அந்த நபர் இதுவரை கட்சிக்காக போராடி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா?
தா.கி. கொலை வழக்கில் அழகிரி கைதாகி வேனில் ஏற்றப்பட்டபோது அந்த வேனுக்குப் பின்னால் ஓடிய தி.மு.க. தொண்டர்களை கண் மூடித்தனமாக தாக்கி யவர் போலீஸ் உதவிக் கமிஷனர் குமாரவேலு. கடந்த ஆட்சியில் அவர்தான் ஐ.எஸ். உதவி கமிஷனராக இருந்து மதுரையை ஆட்டிப் படைச்சார். இதன் பின்னணியிலும் அந்த நபரின் சாதி இருக்கிறது. 
மதுரை உயர் நீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்திலும், கட்சிக்காக உழைத்தவர்களை துரத்திவிட்டு காசுக்காக சிலரை நியமித்த கொடு மையை அழகிரியிடம் யார் சொல்வது? தேர்தல் முடிவுகளுக்குப் பின் அழகிரியை பார்க்கப் போன ஒன்றிய செயலாளர்களை, 'தோத்துப் போயிட்டு இங்க எதுக்காக வர்றீங்க’னு எடுத்தெறிந்து பேசும ளவுக்கு அழகிரி இன்னமும் அவர்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறாரே!'' என்று ஆதங்கத்தில் கொதிக்கிறார்கள்.
''இடைத் தேர்தலில் தனது உறவினருக்கு அழகிரி மூலம் ஸீட் வாங்கிக் கொடுத்தவர்தான் இப்போது கட்சிக் கூட்டம் நடத்த மண்டபம் கொடுக்க மறுக்கிறார். இதெல்லாம் ஆரம்பம்தான். இப்படி இன்னும் பலர் கிளம்பக் காத்திருக்கிறார்கள். 'என்னைக் காப்பாற்ற அ.தி.மு.க. அமைச்சரின் தம்பி இருக்கிறார்’ என்று சொல்லிக் கொண்டும், வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிவிடலாமா? என ஆலோசனை நடத்திக் கொண்டும் இருக்கும் துரோகிகளைத்தானே அழகிரி இன்னமும் நம்புகிறார்?'' என்றும் வேதனைப்படுகிறார்கள் தொண்டர்கள்.
இதற்கிடையே கடந்த 27-ம் தேதி நடந்த மதுரை புறநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில், ''பணம் இருக்குறவனுக்குத்தான் தேர்தலில் ஸீட்டும், பதவிகளும் குடுத்தீங்க. இப்ப என்னாச்சு?'' என்று ஆவேசப்பட்ட உடன்பிறப்புகள், முக்கியப் புள்ளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ''அந்த நபரைக் கட்சியைவிட்டு நீக்கு!'' என்று கோஷம் போட்டு இருக்கிறார்கள்.
இந்த தோல்வியிலாவது, அழகிரி தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளட்டும். 

நன்றி ஜீனியர் விகடன்

01 ஜூன், 2011

தோல்விக்குக் காரணம் தி.மு.க. நிர்வாகி வேட்டி கிழிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கூட்டம்

டலூர் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், குறிஞ்சிப்பாடியில் கடந்த 25-ம் தேதி நடந்தது. ஆவேசமாகப் பேசிய இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் தணிகைச்செல்வம், ''கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக நம் கட்சிக்காரர்களே வேலை செய் தார்கள். அதுமட்டுமின்றி, பணம் கொடுத்தும் உதவிசெய்து, சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தார்கள். அதனால், கட்சியில் களை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மாவட்டச் செயலாளர் ஆணை இட்டால், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்!'' என்றார்.
பண்ருட்டி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சபா ராஜேந்திரன், ''அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்தான் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்தார், நிதி உதவியும் செய்துள்ளார். தி.மு.க-வுக்குத் துரோகம் செய்து விட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இந்தக் கூட்டத்துக்கு வந்து பல்லைக் காட்டிக்கொண்டு முன் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறார். இதுபோன்ற துரோகிகளை உடனடியாகக் களை எடுக்க வேண்டும்!'' என்று சீறினார்.
இதைக்கேட்ட தொண்டர்கள் கடும் ஆத்திரத்துடன், 'அந்தக் கருங்காலியை வெளியே அனுப்புங்கள், அடித்தே கொல் கிறோம்’ என்று பாய... நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கடும் ரகளைகளுக்கு இடையே மைக் பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ''மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை, வெட்கமாக இருக்கிறது. தலைகுனிய வைத்து விட்டனர், தமிழக மக்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சியாக உட்காரும்போது என் உடம்பே கூனிக்குறுகுகிறது. மீண்டும் மக்களை சந்திப்போம்... வெற்றி பெறுவோம்!'' என்று அழாத குறையாகப் பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்.
பன்னீர் செல்வத்துடன் வெளியேறிய வெங்கட்ராமனுக்கு சரமாரியாக அடி. அவரது சட்டை, வேஷ்டியைக் கிழித்து எறியவே, ஜட்டியோடு கிடந்த வெங்கட்ராமனை, பன்னீர் செல்வம் காப்பாற்ற முயற்சி செய்தார். உடனே தொண்டர்களின் கோபம் அவர் மீது பாய்ந்தது. அதனால் பன்னீர்செல்வத்தை எதிர்த்தும் கோஷம் போட்டார்கள்.
ஆவேசமாக நின்ற தொண்டர்களிடம் பேசினோம். ''தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு வெங்கட் ராமன் பணம் கொடுத்து உள்ளார். இருவரையும் சந்திக்க வைத்ததே பண்ருட்டி டாக்டர் ஒருவராம். இருவரும் ஒன்றாக இருப்பதை பா.ம.க-வில் உள்ள ஒரு முக்கியப் பிரமுகர் பார்த்துள்ளார். தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று சொன்னதற்கு சி.டி. ஆதாரம் இருக்கிறது. வெங்கட் ராமன், பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இந்த உள்குத்து பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்!'' என்றார்கள்.
நடந்த சம்பவம் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் விசாரித்தபோது, ''செயல் வீரர்கள் கூட்டத்தில் எந்த மோதலும் நடக்கவே இல்லையே'' என்றார். வெங்கட்ராமனிடம் கேட்டபோது, ''என் மீது பொய்யான புகார் சொல்கிறார்கள். இதில் உண்மை இருந்தால் என் மீது கட்சி நடவ டிக்கை எடுக்காமல் இருக்குமா? சி.டி. பற்றி சொல் வது எல்லாம் கட்சிக்குள் இருக்கும் எனக்குப் பிடிக்காதவர்கள் செய்யும் வேலைதான் இது!'' என்கிறார்.

நன்றி:ஜீனியர்விகடன்