28 ஜூலை, 2011

ஓமந்தையில் புகையிரதம் லொறி விபத்து-இருவர் பலி

சற்று முன் ஓமந்தப்பகுதியில் புகையிரத்ததுடன் மரங்களை ஏற்றி வந்த லொறி மோதியதால் ஸ்தலத்திலேயே 22 வயதான சாரதியும் கிளீனரும் உடல் சிதறி பலியாகினர்.மேலும் இருவர் காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் நடைபெற்ற இடத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்ததைப்பார்த்த ஒர் சிலர் மயங்கி விழுந்தனர்.















24 ஜூலை, 2011

"கேடி பிறந்தர்ஸ்" என்ற பெயரில் மாறன் சகோதர்கள் பற்றி புத்தகம் வெளியீடு

கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

அதில் கலாநிதிமாறன்- தயாநிதி மாறன் (கே.டி) ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளில் மிரட்டல் மற்றும் அரசியல் செல்வாக்கை வைத்து எப்படியெல்லாம் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்தார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்ற பத்திரிகையாளர் கே.டி. பிரதர்ஸ் என்ற பெயரில் சிறிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அவர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பராக விளங்கி தியாகராஜ செட்டியாரின் பேரன் ஆவார்.

வர்த்தகத்தில் தங்களுக்கு எதிரானவர்களை பணிய வைக்கவும், தொழிலில் இருந்து விரட்டவும், சன் டிவிக்கு அடங்கி கட்டணம் செலுத்தவும் சட்டத்தை எப்படியெல்லாம் வளைத்தார்கள் என்ற விவரத்தை புத்தகத்தை எழுதியவர் தகவல் அறியும் (ஆர்டிஐ) சட்டத்தின் வாயிலாக திரட்டியுள்ளார்.

செல்போன் நிறுவனங்களுக்கு மட்டுமே பூமிக்கு அடியில் ஆப்டிகல் பைர்கேபிள் பதிக்க அனுமதி இருந்த போதிலும் சட்ட விரோதமாக தங்களது செயற்கைகோள் டிவி சேனலுக்காக ஆப்டிக்கல் பைர் கேபிளை எப்படி பதித்தார்கள் என்பதில் தொடங்கி அவர்களது முறைகேடுகள் அடுக்கடுக்காக விவரிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான கேபிள் டிவி கார்ப்பரேஷன் கூட ரெயில்வேயின் பைபர் கேபிளை பயன்படுத்துவதற்காக ரெயில்வே அமைச்சகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி வாடகை செலுத்த வேண்டும். ஆனால் மாறன் சகோதரர்கள் சட்டவிரோதமான இந்த செயலுக்காக ஒரு நயா பைசா கூட செலவழிக்கவில்லை என்று புத்தக ஆசிரியர் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் பரவலாக கார்ப்பரேட் அலுவலகங்களைக் கொண்ட 13 கம்பெனிகளை எப்படி பதிவு செய்து கொண்டார்கள் என்ற தகவலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தொலைக்காட்சிக்கான சிக்னல்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய எப்.எம். வானொலி நிலையங்கள் அமைப்பதற்கான உரிமங்களை பெறவும் ஒரே நாளில் ரூ. 50 கோடி செலவழித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் இதற்கு முன் நடந்தது இல்லை என்று நூலாசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். _

இலங்கை வடக்கில் தமிழருக்கு பெரு வெற்றி 18 சபைகளும் கூட்டமைப்பு வசம்; ஈ.பி.டி.பி+ஆளும் கட்சி தோல்வி

நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது. அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது. யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்களிப்பு இடம்பெற் றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 
 
யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதாக தெரிவத்தாட்சி அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர். 
 
அரச தரப்பினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமக்குப் பெரு வெற்றியை ஈட்டித் தந்த தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை வென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்ந்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின. உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி வேலணை பிரதேச சபை மட்டும்  அரசு பக்கம் போக எஞ்சியவற்றில் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
 

08 ஜூலை, 2011

இலங்கை பாராளுமன்ற உறுபினர்களின் சம்பள விபரம்


  சம்பளம் மற்றும் அரச செலவுகள் பாரளுமன்ற உறுப்பினருக்கு
 (MP)

  மாச சம்பளம்:
Rs. 12,000/-

அரசியல் செலவு:
Rs. 10,000/-

அலுவலக செலவு மாதம் :
Rs. 14,000/-

  போக்குவரத்து சலுகை(Rs. 8 per km) :
Rs. 48,000/-
600 km  
பாரளுமன்ற தகவல் அளிப்பு தின சம்பளம்
Rs. 500/day

புகையிரத முதலாம் வகுப்பு பெட்டி:
             இலங்கை பூராகவும் எத்தனை தடவை என்றாலும்


 விமான சொகுசு இருக்கை :
இலவசம் 40தடவை/வருடம்
(மனைவியுடன்.)  

  கொழும்பில் வீட்டு வாடகை:
இலவசம்.

வீட்டுக்கான மின்சாரம்
:
50,000 யுனிட் வரை இலவசம்.

உள்ளூர் தொலைபேசி அழைப்பு செலவு :
 1, 70,000 அழைப்புகள் வரை இலவசம்

மொத்த செலவு - MP
[எந்தவித தகுதியும் இல்லாமல்)
வருடத்திற்கு:  Rs.3,200,000/-
( 2.66 லட்சம் மாசம்)
 5 வருடங்களுக்கு மொத்த செலவு :  
Rs. 16,000,000/-
229 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
5 வருடத்திற்கு
Rs. 3,664,000,000/-
 (366 கோடி கிட்டத்தட்ட)
  மக்களின் வரிப்பணம் இவ்வாறுதான் செலவிடப்படுகிறது



 

d.