13 ஜூன், 2012

முள்ளீவாய்க்காலின் இன்றைய நிலை-காணொளி இணைப்பு

முள்ளிவாய்க்காலில் மக்களின் வாகனங்கள் அனைத்து கரிக்கட்டை பிணங்களாக கிடக்கும் காட்சி
பயணிகள் மினி பஸ் பிளந்து போய் கிடக்கும் காட்சி

22 மே, 2012

கழுகாய் நீ குஞ்சுகளாய் நாம்

                   
கழியும் நாழிகைளில் கடைக்குட்டி தேசம் கூட
உன் கழுகுப்பார்வையில் தப்பாது
மைய அச்சில் சுத்தும் தேசமாய் நீ-உன்
கட்டளையில் சுருண்டு கிடக்கும் நாய்குட்டி நாம்.

உலக கொள்ளைக்காரரின் குடியேற்றமே
கண்டம் தாண்டியும் கல்லா கட்டும் உன் ஆதிக்கமே\
கறுப்பு வெள்ளை காய்களாய் சிட்டிசன்கள்
ஆட்டுவிக்கும் ராணியாய் ஆட்சியாளர்கள்
நீங்களே உத்தமர்களாய்  உலகிற்கு எம தர்மர்களாய்
செத்தாலும் விடமாட்டீர் ,பூத உடலை தரமாட்டீர்
ஊருக்கு உபதேசம் செய்வீர் உமக்கென்று வந்துவிட்டால்
சிமபிளாய் ஒரு வார்த்தை சொல்வீர் “அப்பலொஜீஸ்”

காரியதரிசியயே முட்டி போட வைத்த காதல் தீவிரவாதி
ஒசாமை போட்டுத்தள்ளிய நீ உலக பயங்கரவாதி
எதிரியை சில்லம் சில்லமாய் உடைக்கும் தந்திரவாதி
தூக்கம் தொலைத்து உலகை காக்கும் மந்திரவாதி

 ஊருக்கொன்றாய் ஒரு பிகர் கொடுத்தான்
நீ  உலக்குக்கே ஒரே ஒரு பிகர் கொடுத்தாய்
 அடிச்ச காத்தில மர்லின் கிளப்பின பாவாடை
 மன்மத அம்பாய் பாய்ந்த பூவாடை கோடி
அந்த கோடியில் உன் கெனடியும் ஒரு கேடி.

சண்டையென்று வந்தாலும் சமாதானம் சொன்னாலும்
அட்டவணை தந்து அதன்படி ஒழுகவைத்தாய்
எட்டி உதைத்தவனை எங்கு சென்றாலும் ஓட வைத்தாய்
பற்றி உன் கால் பிடித்தவனை பகட்டாய் வாழவைத்தாய்
போற்றீ புகழ் பாடதவனை போட்டுத்தள்ள் பிளான் போட்டாய்


 ஆண் பெண் புணர்தல் இயற்கையென்றூ
இறைவன் கலைகளில் வரைந்து வைத்தான்
ஓரினமும் சேரலாமென்று சட்டம் நீ இயற்றீ வைத்தாய்.
கந்தர்வ காதலை இலைமறை காயாய்
புராணங்களில் ஓதி வைத்தோம்
கந்தர்வமே வாழ்க்கையென்று
விதி  ஓத வழி சமைத்தாய்வஞ்சினம் கொண்டு நீ வரும் வேளை
பயந்து பதுங்கி வழிவிடும் எம் பாதை
செங்கோல் கொண்டு நீ செய்யும் ஆட்சி
பல தேசங்களின் சுயநிர்ணயத்தின் வீழ்ச்சி.
கத்துவீரோ ,கல்லெறிவீரோ
கடைத்தெருவில் குண்டுவைப்பீரோ
கைப்பிள்ளைகளாய் எம் கழுத்து நெரிக்கபடுகையில்
கட்டதுரையே உன் கொற்றம் வாழி என
உன் கைப்பொம்மை கைகட்டி வாய்பொத்தி
காலம் காலமாய் விளக்குபிடித்து காவல் காக்கும்.

பூத்த புது மலராய் தேசமிருந்தால்
தேனுண்டு நீ கழிக்க நாள் பார்ப்பாய்
வண்டு அனுப்பி வேவு பார்த்து
பொய் தோற்றம் காட்டிவிட்டு போர் தொடுப்பாய்
அபிவிருத்தி எண்டு சொல்லி ஆகாரம் ஊட்டுவாய்
நாக்கு இழந்த நமக்கு நாலு சுவை கலந்தளிப்பாய்.


அப்பன்காரன் வெப்பனோட மத்தியகிழக்கை ஆண்டான்
மகனோ மணல் தேசம் சென்று மலையெல்லாம் குடைந்தான்
செருப்பு தைத்தவரும் தலைவராகலாம்
செருக்கு மிகுந்தவனும் உலகை ஆளலாம்.
சட்டம் உன் விரல்களின் நுனிமுனையில்
உன் கையெழுத்தில் உலக தேசமே  
ஒளிமங்கி மண்ணாகிப் போகும் உன் வினையில்


சின்னப்பையன் கொண்டு நீ போர் முடித்தாய்
என்ன பயன் கண்டு நீ முள்ளிவாய்க்காலில்
முதலை கண்ணீர் வடித்தாய்..
கப்பல் வருமெண்டு சொல்லி
கடல்கரைக்கு வரவழைத்தாய்
கண்கள் வரை வெள்ளம் வந்து
கடவுளாய் உனை நோக்கி கூவிய வேளை
கண்டிசன் போட்டு கதை முடித்தாய்.
வருவாரோ எமை காப்பாரோ உரிமை பெற்று கொடுப்பாரோ
 ஏங்கி ஏங்கி நாம் விழிவைத்து காத்திருக்க
வியாபாரம் தொடங்கினாய் மீன்சந்தையில்
குற்றுயிர் மீன்களாய் எம் உரிமை செத்துகிடக்கிறது.

21 ஏப்ரல், 2012

மூன்றெழுத்தின் என் மூச்சிருக்கும்

வாழ்வின் முதன் முதலாய் - நீ
எனை அள்ளி அணைத்த கணம்
உனை தூரவே உதறி எறிந்தேன்

கால்கள் தரை தட்டாமல்
நொண்டிக்குதிரையாடிய கணங்கள்
உன்னில் கோபம் கொண்டேன்

உன் அருகாமை மெளனங்களில்
முத்தமிட்டு உனை நனைத்த வேளையிலே
நான் வயசுக்கு வந்த நாள் அறிந்தேன்
முப்பொழுதும் சொப்பனங்கள்
இண்டர்நெட்டில் அப்படங்கள்
கண் மூடி மையல் கொள்ளும்
கதிரவன் மறைந்த நேரம்
காரிருள் கரைபுரண்டோடும்
காரிகை காட்சி தெரியும்வேளை - உன்
முத்தங்கள் சத்தமின்றி செய்யும் யுத்தங்கள்!

அணைப்புகளில் திமிறினாலும்
ஆர்வங்களில் எகிறினாலும்
காமங்களில் விசிறினாலும்
கந்தர்வ காதலில் கூடுகையில்
உன்னை கன்னி கழித்திருக்கிறேன்

நெரிசலான பேரூந்து பயணங்களில்
நீயே என கவசகுண்டலமாய்
திண்மையை திரைமறைப்பதில்
கிருஷ்ணனாகி மானம் காக்கிறாய்

அடங்கியிருந்த ஆர்ப்பலைகள்
ஆசைகொண்டு ஆர்ப்பரிக்கையில்
அடைமழையில் நீ நனைந்து
நீர்மட்டம் குறைக்கிறாய்!
வெள்ளைப்பூக்கள் வெண்மை கொண்டு
நீ என்னை அலங்கரிக்கையில்
மனதின்  கறுப்பான களங்கங்களையும்
கழுவிப்போய்விடுகிறாய்
408260_2577582036999_1177822838_32209583_844903673_n
விட்டுக்கொடுத்து வாழ்தலில் பிடிமானமும்
ஆர்வத்தை அடக்கி ஆளுதலில் நோயின்மையும்

வாழ்க்கையின் தத்துவமே நீயாகி


மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலே நாறடிக்கும்!

எக்கசியப்பணாய்க்கு மூன்றென்று கூவுவார்
எந்திரன் கூட ஒருகட்டத்தில் போடுவார்!
என் இனிய ஜக்கி!
உன்னில் உயர் சாதி ஜாக்கி!
உந்தன் ஒரே பெயர் ஜட்டி ஜட்டி ஜட்டி!

08 ஏப்ரல், 2012

நந்தன வருட ராசி பலன்கள் சித்திரை 2012

மேட ராசி

 நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள் கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆனால் 12.9.12 முதல் வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், பண இழப்புகள் வந்து போகும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.10.12 முதல் 15.11.12 வரை சூரியன் சனியுடன் சேர்ந்து இருப்பதால், அந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை. 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைச்சுற்றல், முன்கோபம், ஒருவித சலிப்பு வந்து நீங்கும். 2.12.12 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில்... வைகாசி, ஆனி மாதங்களில் பற்று- வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவர். புது சலுகைகளால் போட்டியாளர்களைத் திகைக்க வைப்பீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். சங்கத்தில் உங்களுக்கென்று தனியிடம் உண்டு. மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. வருட ஆரம்பம் முதல் 11.9.12 வரை 6-ல் சனி நீடிப்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் ஆவார்கள். 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் பங்குதாரர்களுடன் அவ்வப்போது கருத்து மோதல்கள் வரக்கூடும். கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான மனக்கசப்புகள் விலகும். 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் வேலைப்பளு குறையும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் புதிய பொறுப்புகள் சேரும். சம்பளம் உயரும். எனினும் 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்குமுன் யோசிப்பது நல்லது. கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும். அரசு கவுரவிக்கும். வீண் வதந்திகள் விலகும். கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். கல்யாணம் நடக்கும். வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. மாணவ- மாணவியருக்கு நினைவாற்றல் பெருகும்; கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவதுடன், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் நந்தன புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்!
 ******************************************************
ரிஷபம்

கடந்த கால நினைவுகளில் மூழ்கித் திளைப்பவர் நீங்கள். உங்களின் சுகாதிபதியின் நட்சத்திரத்தில் நந்தன வருடம் பிறக்கிறது. புதிய பாதையில் பயணிப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். ஆனால், புத்தாண்டு 8-வது ராசியில் பிறப்பதால் அலைச்சல், உடல்நலக் குறை மற்றும் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் யோகம் உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். 17.5.12 முதல் ஜென்ம குருவாக வருவதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். வேலைச் சுமை அதிகரிக்கும். உழைத்தும் பயனில்லையே எனும் ஏக்கம் வாட்டும். முக்கிய முடிவுகளைப் பலமுறை யோசித்து செயல்படுத்துங்கள். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடலாம். 30.6.12 முதல் வருடம் முடியும் வரை ரோஹிணி நட்சத் திரத்திலேயே குரு செல்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம், யோகா போன்றவற்றில் நாட்டம் செலுத்துங்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் வாரிசு உருவாகும். வரவேண்டிய பணமும் தக்க நேரத்தில் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள். 23.6.12 முதல் 14.8.12 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். வருடத்தின் பிற் பகுதியில் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சகோதர-சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். 11.9.12 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து சாப்பிடுவதை, தொலைதூர பயணங்களைத் தவிர்க்கவும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ஆம் வீட்டி லேயே தொடர்வதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். 2.12.12 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், முன்கோபம் நீங்கும். ஆனால் கேது 12-ல் நுழைவதால் வீண் செலவுகள் வேண்டாம். 2.12.12 முதல் 6-ஆம் வீட்டுக்கு ராகு வருவதால் வி.ஐ.பி-கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். சனியுடன் ராகு 2.12.12 முதல் 13.4.13 வரை நீடிப்பதால், எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கலைத்துறையினர், அரசால் கௌரவிக்கப் படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு. கல்யாணம் கைகூடும். மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் வேலைச் சுமையையும் அலைச்சலையும் தந்தாலும் பண வரவையும், புகழையும் தருவதாக அமையும்!
 ***************************************
 மிதுனம்

எதையும் இலவசமாக ஏற்க விரும்பாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. திறமைகள் வெளிப்படும்; வேலை கிடைக்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். உங்கள் ராசியை சந்திரன் பார்க்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். செலவுகள் குறையும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சித்திரை மாதத்தில் வழி பிறக்கும். சகோதரர்கள் உதவுவர். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வேலை அதிகரிக்கும். புகழ், கௌரவம் வளரும். சவாலான வேலைகளையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளும், இதர வழக்குகளும் சாதகமாகும். சனி பகவான், 13.4.12 முதல் 11.9.12 வரை அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால், தாயின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வீண் பழிகளும் ஏற்படும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. கூடா நட்புகளைத் தவிர்க்கவும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண் டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். 12.9.12 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரது சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். 2.12.12 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் லாபம் தரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். ராகு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். உங்களின் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். சிலர் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை 5-ஆம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் கர்ப்பிணிகள்... கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மெடிஸ்கேன் மூலம் கண்காணிப்பது நல்லது கனமான பொருட்களை கவனமாகக் கையாளுங்கள் ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பண வரவு, திடீர் யோகம் உண்டு. வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். ஆவணியில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள்- உறவினர்கள் உதவியால், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் உண்டு. போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்பர். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளி நாட்டு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பங்குனியில் பதவி உயர்வு உண்டு! கலைஞர்களுக்குப் புகழ் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடா முயற்சி யாலும், தன்னம்பிக்கையாலும் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்!

 ************************************

கடகம்

சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். அலட்சியம் விலகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். வழக்குகளில் தேக்க நிலை மாறும். வருட முற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனத்தை உணர்த்துவதாகவும் அமையும். செவ்வாய் 2-ஆம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் கடுமை வேண்டாம். சேமிப்பு கரையும். ஆனாலும் புது வீடு- மனை வாங்கும் அளவுக்கு பணமும் சேரும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. தம்பதிக்கு இடையே சின்ன பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சொந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். 17.5.12 முதல் வருடம் முடியும் வரை குரு லாப வீட்டில் அமர்வதால், உங்கள் கை ஓங்கும். ஷேர், ஸ்பெகுலேஷன் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். வங்கியில் கடனுதவி கிடைக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தம்பதிக்கு இடையே இருந்த வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் புது வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்றுபோன பணிகள்... வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முடிவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்-நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 11.9.12 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 12.9.12 முதல் சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க நேரிடும். அரசாங்க வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ல் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் போராடி முன்னேறு வீர்கள். 2.12.12 முதல் ராகு 4-ஆம் வீட்டுக்கு வருவதால் தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில், போட்டியாளர்களைத் திணறடிக்கும் வகையில் உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் பணியை எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 17.5.12 முதல் 10-ஆம் வீட்டை விட்டு குரு விலகுவதால், கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி வந்து சேரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகளும் தேடி வரும். வருடத்தின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; தை மாதம் கல்யாணம் நடக்கும். மாணவர்கள், எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்னை களுக்கு நல்ல தீர்வு தருவதாகவும் அமையும்!

 ******************************

சிங்கம்

எதையும் ஆழமாக அலசி ஆராய்பவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும்போது, குரு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. பழைய பிரச்னைகள், கடன்கள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு அழகான வாரிசு உருவாகும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். குழப்பங்கள், டென்ஷன் விலகும். சச்சரவுகள் குறையும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபகாரியங்கள் கூடிவரும். 17.5.12 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால், எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பிறகே முடிக்க முடியும். வீண் பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். எவரை நம்பியும் எந்தப் பணியையும் ஒப்படைக்காதீர்கள். திடீர் பயணம், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஆனி, தை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந் திருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சகோதரர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சனி பகவான் 11.9.12 வரை பாதச் சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம்; கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எவரிடமும் வாக்குறுதி அளிக்காதீர்கள். 12.9.12 முதல் சனி 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு; அவ்வப்போது மனஸ்தாபமும் எழும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி, சரியாகப் பராமரியுங்கள். 2.12.12 முதல் ராகு 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். இரவு நேர - நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி யில் அரசு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும். அரசியல்வாதிகள், தலைமையைப் பகைக்க வேண்டாம். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். புது போட்டியாளர்கள் வருவர். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 17.5.12 முதல் குரு 10-ல் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை உண்டு. சின்ன சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும். விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றப் படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைஞர்கள், சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். கன்னிப் பெண்கள், புதிய நண்பர்களிடம் கவனமுடன் இருக்கவும். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளால் நிம்மதி ஆகியவற்றைத் தருவதாக அமையும்!

 ***********************
கன்னி
வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. நீங்கள், பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் திருமணத் தடை நீங்கும். வருடம் பிறக்கும்போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங் களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 12-ஆம் வீட்டில் தொடர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.5.12 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பண வரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. சேமிக்கத் துவங்குவீர்கள். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறு சிறு விபத்து, காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவார்கள். அண்டை வீட்டாருடனான சச்சரவுகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ஜென்மச் சனியாக இருப்பதால் சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 12.9.12 முதல் பாதச்சனியாக தொடர்வதால் திடீர் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 2.12.12 முதல் ராகு உங்கள் 2-ஆம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். இரவு நேர பயணங்கள் வேண்டாமே. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று, சில முக்கியஸ்தர் களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி மற்றும் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் பதவி உயர்வு கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடியாகும். அயல் நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைவாய்ப்பும் தேடி வரும். கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவர். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். ஏழரைச் சனி தொடர்வதால், கன்னிப் பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்படவும். கல்யாணத் தடை விலகும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் சமயோசிதமாகச் செயல்படுவது நல்லது. கவிதை- கட்டுரைப் போட்டி களில் பரிசு வெல்வீர்கள். உயர்கல்வியிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்!

**********************************************

துலாம்

கனிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால், முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. நிர்வாகத்திறன் கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. வீடு கட்டுதல், நண்பர்-உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் விலகும். 17.5.12 முதல் குரு 8-ல் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். சிலரது சதியால் சொத்தை இழக்க நேரிடும். எதிலும் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ஆவணி யில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களுடன் கருத்து வேறுபாடும் வந்து போகும். பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு. ஆனால், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிறுசிறு விபத்துகள், மனைவிக்கு உடல்நலக்குறை ஏற்படும். வருட மையப் பகுதியில் வீடு மாறுவீர்கள். வருட ஆரம்ப முதல் 11.9.12 வரை விரயச் சனி நடைபெறுவதால், தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். செலவுகளும் உண்டாகும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி. எனவே, பெரிய நோய் இருப்பதாக எண்ணுவீர்கள். நடைபயிற்சி அவசியம். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் மிக நல்லது. 2.12.12 முதல் கேது 7-ல் அமர்வதால், மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், முன்கோபம் வந்துபோகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில நேரம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கவும் நேரிடலாம். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பு. மூத்த கலைஞர்களைப் பகைக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணத் தடை நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அவசியம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்கள் வளர்ச்சியை தங்குதடையின்றி தொடர வைப்பதாக அமையும்.

 *******************************************************

விருச்சிகம்

எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. தன்னம் பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பால் காரியம் சாதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் களத்தில் இறங்கு வீர்கள். சித்திரை மாதம் செலவுகள் இருந்தாலும், அரசு காரியம் முடியும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிய ருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பதவிகள் தேடி வரும். 17.5.12 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதலிடம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 12.9.12 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் டென்ஷன் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே சந்தேகங்கள் வரக்கூடும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எனினும், வீண் செலவுகள் வேண்டாம். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல், ரத்த அழுத்தம் வந்துபோகும். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால், நெருக்கடிகள் குறையும். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம் விலகும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால், லாபத்தை பெருக்குவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். யாருக்கும் அதிக முன்பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்தியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களை எதிரியாக நினைத்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றி பெற்று, நீங்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரை, அலட்சியப்படுத்திய நிறுவனமே மீண்டும் அழைத்துப் பேசும். வதந்திகள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு தோஷங்களால் தடைப் பட்ட கல்யாணம், நல்லவிதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள், விளையாட்டை குறைத்து கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தேர்வில் மதிப்பெண் கூடும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன் புது வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்!

**********************************************

 தனுஷ்

மனதுக்கு சரியெனப்பட்டதை தயங்காமல் செயல் படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. எதிர்ப்புகள் யாவும் அடங்கும். நீங்களும் வி.ஐ.பி ஆவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும். எனினும், உங்கள் ராசியிலேயே நந்தன வருடம் பிறப்பதால், வேலை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடனை அடைக்கும் வகையில் வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேல் இருந்த கோபதாபங்கள் விலகும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அம்மாவின் உடல்நலன் மேம்படும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 17.5.12 முதல் உங்கள் ராசிநாதனான குரு பகவான் 6-ஆம் வீட்டில் நுழைவதால், செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். கையிருப்பு கரையும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். எவரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். முன்கோபத்தைத் தவிருங்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வருங்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு சுபவேளை கூடிவரும். மார்கழியில் சற்றே உடல்நலக்குறைவும் அலைச்சலும் ஏற்படலாம். பணம் கேட்டு நச்சரிக்கும் உறவுகளிடம் உங்கள் நிலையை நயமாக எடுத்துச் சொல்லுங்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 10-ல் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். 12.9.12 முதல் 11-ஆம் வீட்டுக்கு சனி நுழைவதால், உத்தியோகத்தில் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். 2.12.12 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வர். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உங்களின் புதிய கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, பெட்ரோகெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதம் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழல் உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினரின் கனவு நனவாகும்; படைப் புகள் பாராட்டப்படும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்குக் கண்ணுக்கழகான கணவர் அமை வார். தடைப்பட்ட படிப்பைத் தொடர்வீர்கள். மாணவர் களுக்குப் பரிசு-பாராட்டு கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அதிகச் செலவு, கடின உழைப்புக்கு உங்களை ஆட்படுத்தினாலும், வெற்றியையும் பெரும் புகழையும் பெற்றுத் தருவ தாக அமையும்!

 ***************************************

மகரம்

மன்னிப்பதில் மகத்தானவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர். வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலை மாறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய மனிதர்கள் உதவுவார்கள். எனினும் உங்களின் 12-வது ராசியில் நந்தன வருடம் பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக இருப்பதாகக் கருதி, பலரும் தொந்தரவு செய்வார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தையில், வைகாசி மாதம் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 8-ஆம் வீட்டில் தொடர்வதால், சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும். செலவுகளும், சொத்துப் பிரச்னைகளும், சிறு சிறு விபத்துகளும், விலையுயர்ந்த பொருட்களின் இழப்பும் வந்து போகும். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 5-ல் நுழைவதால் தாயாருடனான மனத்தாங்கல் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலையில் அமர்வீர்கள். வருமானம் உயரும். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் விருப்பம் அறிந்து, செயல்படுவீர்கள். சகோதரர்களுடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். அம்மாவின் நெடுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். ஆனி மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பண வரவு உண்டு. வீடு- மனை சேரும். ஆடி மாதத்தில் வீண் செலவு, அலைச் சல், மனைவிக்கு உடல்நலக்குறைவு வந்து போகும். உடன் இருந்துகொண்டு உபத்திரவம் கொடுப்பவர்களை விலக்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அக்கம்பக்கத்தாரிடம் அந்தரங்க விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 9-ஆம் வீட்டுக்குள் நிற்பதால், கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 12.9.12 முதல் 10-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்குச் செல்வதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனாலும் பதவி, சம்பள உயர்வு உண்டு. 4-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபமும், சலிப்பும் மேலோங்கும். சில விஷயங்களை பலமுறை முயற்சித்து முடிப்பீர்கள். வியாபாரத்தில், தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக் கும். கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், வைகாசி அல்லது ஆனி மாதத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வேலை தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத் துறையினர், புகழ் அடைவார்கள்.அரசு விருது உண்டு. பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து வேலையிலும் சேர்வீர்கள். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. அதிக மதிப்பெண்கள் எடுப்பீர்கள். மொத்தத்தில் இந்த புத்தாண்டு பண வரவும், வாழ்வில் புதிய சகாப்தத்தை படைக்கும் வல்லமையை யும் தருவதாக அமையும்!

****************************************************

கும்பம்

மற்றவர்கள் உரிமையில் தலையிடாத பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. சோம்பல் நீங்கும். உள்ளமும் உடலும் மலர்ச்சியாகும். கடந்த வருட பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் நல்ல தீர்வுகள் உண்டு! தம்பதிக்கு இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் செயலில் கவனம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். 23.6.12 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ல் அமர்ந் திருப்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 17.5.12 முதல் குரு 4-ஆம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம், தாயார் மற்றும் உறவினர் பகை வரக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்தப் போராடுவீர்கள். வாகன விபத்து ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ராசிநாதன் சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். 12.9.12 முதல் 9-ஆம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால், தந்தையின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அரசியல்வாதிகள், மற்றவரை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. பாதியில் நின்றுபோன கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்து, புது வீட்டில் குடிபுகுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டுக்குச் செல்வதால், தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து போகும். கேது, ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடன் தீரும். தாம்பத்யம் இனிக்கும்.நவீன ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் போட்டியாளர் களை திகைக்கச் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். பங்குதாரர் களிடம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பது நல்லது. இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், பிடிப்பு ஏற்படும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்; சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் மீது மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்தவிதமான முடிவும் எடுக்க வேண்டாம். மாணவ-மாணவியரின் நினைவாற்றல் கூடும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். நல்ல நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம்... பிரச்னைகள் மற்றும் செலவுகளில் உங்களைச் சிக்க வைப்பதாகத் தோன்றினாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

***************************************************

மீனம்

அடுத்தவரை வெற்றி பெற வைத்து அகமகிழ்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங் களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்கும் எண்ணம் வரும். புது வேலைக்கான முயற்சிக்குப் பலன் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளை களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். மகளின் கல்யாணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார்; உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதம் அரசு காரியங்கள் முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவல் ஆகும். சகோதர- சகோதரிகள் பாசமழை பொழிவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்று கடனை அடைப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற தருணம் வாய்க்கும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 6-ஆம் வீட்டில் நீடிப்பதால்... உங்களின் மாறுபட்ட அணுகுமுறை மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கால், பழைய பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். புறநகர் பகுதியிலாவது வீட்டுமனை வாங்கிவிடலாம் என்று முயற்சிப்பீர்கள். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில்தான் முடியும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பழைய நண்பர்கள், உறவினர்களிடம் பகை ஏற்படலாம். வீட்டுக் கடன் தவணையை கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், வீண் கவலைகள் வந்து போகும். மனைவியின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 12.9.12 முதல் அஷ்டமத்துச் சனியாக வருவதால் எதிலும் போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண் பழி, பணப் பற்றாக்குறை, தம்பதிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சாட்சி கையெழுத்திட வேண்டாம். காசோலை தரும்போது, வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பது நலம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சில நேரம், பெரிய நோய் இருப்பது போல் தோன்றும். எனினும் பதற்றம் வேண்டாம். 2.12.12 முதல் கேது ராசிக்கு 2-ஆம் வீட்டுக்கு வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். ராகு 8-ஆம் வீட்டுக்கு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். தந்தையின் உடல் நிலை மேம்படும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.சனியின் போக்கு சரியில்லாததால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதம் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்பு தேடி வரும். கலைஞர்களுக்கு, திறமைகள் வெளிப்படும்; கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள். கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பயில வாய்ப்பு கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவர்களுக்கு, கல்வியில் அலட்சியம் கூடாது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு-பதக்கம் கிடைக்கும். விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பார்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தின் அவசியத்தை உணர வைப்பதாகவும் அமையும்!


மூலம்: சக்தி விகடன்
நன்றீ சக்திவிகடன்

09 பிப்ரவரி, 2012

படம் பார்த்து கவ்ஜையை கக்கு

#KAVI16 கவிதை ப்ளீஸ்  on Twitpic


உன் வயிற்றில் கருத்தரிக்கவில்லை இந்த உயிர் 
ஆனாலும் நீயும் நானும் ஒரே ஜாதி அம்மா என்று அழைப்பதால்

என் தாயின் கொங்கை தவிர்த்து நானறியேன்  
இவ் உலகில் உன் போல் பசிதீர்க்கும் பாத்திரமே

கணநேரம் மடியில் வைத்து என் பசி போக்கினாள் என் அன்னை
இன்றூ உன் மடி தேடி வந்தேன் அநாதை கன்றுகுட்டியாய்

உன் மொழிகள் நானறியேன்,உன் இனத்தை நானறியேன்.
உன் மடி கண்டு அதன் பால் உண்டு நானறிந்தேன் நீயும் தாயென்று..


ஆறறிவென்றார் எமக்கு ,அதில் ஓரு அறிவு குறைவு உனக்கு,
எனைத்தெருவில் விட்டுபோனோர் இனி எதற்கு நீதான் தாயே என குலவிளக்கு


கோமாதவென்று உனை அழைப்பர் கோயில் சென்று அன்னதானம் கொடுப்பர்,
ஆனால் உனையும் எனையும் எச்சில் உண்ணவே மிச்ச இலையை கொடுப்பர்

#KAVI15 கவிதை ப்ளீஸ் on Twitpic


என் பசிக்கு ரத்தம் காய்ச்சி பால் கொடுத்தாள் என் தாய்
அவளின் பசி போக்க ரத்தம் சக்தியாக்கி சுமை தூக்குகிறேன்

விழியோரம் விம்பமாகும் உன் சோகமும்
கைகளின் வீரிய ரெளத்திரமும்  
நீயும் திறந்தவெளிச்சிறை தமிழனின் விதையா

கால்களில் தூரமும் கைகளில் பாரமும் தெரியவில்லை தாயே
கண்ணீரும் வற்றிய உன் கண்கள் என்னுள் காட்சியாகும் போது

பென்சில் பிடிக்கவேண்டிய என் கைகளில் 
பெற்றிடுத்த பெண்மையின் இலக்கணமே
உனக்கு உணவளிக்க கல் சுமக்கிறேன்

நீ பசித்திருந்து  எனை வெளிக்கொணர்ந்து
தொப்புகொடி அறுத்தாய்
படுக்கையில் உன் நிலை உணர்ந்து
என் கல்வி தொலைத்து 
காலம் முழுக்க கூலியானேன்

21 ஜனவரி, 2012

முத்திரை வெளியீடும் முள்ளிவாய்க்கால் நினைவுகளும்

சென்றவாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு போயிருந்தேன் யாழ்ப்பாண வீட்டில பொங்கல் கொண்டாடலாம் எண்டு.. நான் ஊருக்கு போனாலே நம்ம பெரியம்மாவுக்கு சந்தோசம் களை கட்டிடும்.தன்னந்தனியாகவே வீட்டிலேயே இருப்பதால் நான் போனால் வீட்டுக்கு கூட்டிப்போய்  ஊர்ப்புதினம் எல்லாம் கேட்பா, முக்கியமா நம்ம நாட்டு அரசியலை ஒரு குடை குடைவார். அப்படித்தான் இந்தமுறையும் நான் மாட்டுப்பட்டேன்...

தம்பி பார்த்தியா பிரான்ஸ்ல பிரபாகரனோட முத்திரை வெளியிட்டிருக்காங்களாம்.லண்டனில புலி சீல் முத்திரை வெளியிட்டிருக்காங்களாம், ராஜபக்சேவுக்கு ஒரே பிறசராமே இப்போ...


இதெல்லாம் யார் பெரியம்மா சொன்னது உங்களுக்கு

உதயன் பேப்பரில போட்டிருந்தாங்க..அதோட பக்கதில பஞ்சாட்சரமும் சொன்னார் கோயில்ல எல்லாச்சனமும் கதைச்சாங்களாம் எண்டு..''

இல்லை பெரியம்மா முத்திரை விசயம் கொஞ்சம் சீரியசும் சிக்கலான விசயம்தான்..
Add caption
ஏண்டா லண்டன் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி கொடுத்திட்டாங்களாமே..அப்போ இலங்கை அரசாங்கம் ஒண்ணுமே செய்யேலாது தானே..

இல்ல பெரியம்மா அரசாங்கம் அறீவிச்சிருக்கு அந்த முத்திரை எல்லாம் ஒட்டி இலங்கைக்கு லெட்டர் போடவேண்டாம் அனுப்பினா நாங்கள் அதை கவனிக்கமாட்டோமெண்டு..

சரி அதை விடு ஏன் இப்ப முத்திரை வெளியிட்டிருக்காங்க..

Add caption
இப்போ  எல்லா நாடும் புலிகளை பயங்கரவாத பட்டியலில வைச்சிருக்கு,இப்படி ஏதாச்சும் முத்திரைகளை வெளிநாடுகளில் அனைத்து அனுமதிகளையும் எடுத்து வெளியிட்டால் அது புலிகளை  பயங்கரவாதச்சட்டத்தில இருந்து நீக்கிறதுக்கு ஒரு துருப்புச்சீட்டா பயன்படுத்தலாம் அதோட தமிழ் மக்களோட போராட்டம் நியாயமானது என்பதை உலகளாவிய ரீதியில் உணரவைக்கணும் அதுக்காகத்தான் ..  

Add caption
அப்படா இந்த முத்திரை வெளியிட்டா எப்படியும் தலைவரை வெளில கொண்டுவரலாம் எண்டு சொல்லுறாங்கள்..

சரி தலைவர் வெளில வந்து என்ன செய்யப்போறார்...
இப்ப எல்லா நாட்டில இருந்தும் வந்து புனர்வாழ்வில இருந்து வெளில வந்த இயக்க பெடியள் பெட்டையளை சந்திச்சு கதைச்சு இருக்காங்களாம்.. ஆயுதம் எல்லாம் வாங்க இப்ப காசு சேர்க்கிறாங்களாம், 

அது கோத்தபாய அவிழ்த்துவிட்ட கதை பெரியம்மம,அபப்டி சொன்னால்தானே புனர்வாழ்வில இருக்கிறவங்களை வெளில வரவிடாம தடுக்க சொன்ன கதை இது.இதெல்லாம் யார் பெரியம்மா உங்களுக்கு சொன்னது

கோயில்ல கதைச்சாங்களடா..

அப்ப கோயிலுக்கு கும்பிட போறேல்லையா பெரியம்மா,சரி ஒரு கதைக்கு கேட்கிறன், திரும்பி ஒருக்கா சண்டை தொடங்கினா நீங்க என்ன செய்வீங்க, உங்கட மகனோட பிள்ளைகளை வெளிநாட்டில இருந்து வந்து சண்டை பிடிக்க விடுவீங்களா பெரியம்மா..

டேய் என்னடா கதைக்கிறே.

பின்ன என்ன பெரியம்மா.. நீங்க ஆரம்பத்தில போராட்டுத்துக்கு ஆதரிச்சிருக்கலாம்.. ஆனா இறுதிக்கட்டத்தில வன்னிச்சனம் பட்ட துன்பத்தை போல யாருமே பட்டிருக்க ஏலாது. இனி எந்த சனமும் போராட்டத்துக்கும் ஆதரவு கொடுக்காது அந்தளவு வேதனைகளையும் சோதனைகளையும் சந்திச்சிட்டாங்க, மெனிக்பாம் முகாமில ஒரு நாள் வந்து பார்த்திருந்த தெரிஞ்சிருக்கும,அதோட யாழ்ப்பாணத்தில இருக்கிற பொடியன்கள் பெட்டையள் எல்லாம் நல்லா வசதியா வாழ பழகிட்டுதுகள்,அதுகள் எல்லாம் இனிமேல் துப்பாக்கி மட்டுமல்ல.. ஒரு சுலோக அட்டை எடுத்துக்கொண்டு கூட அமைதி போராட்டம் போராட முன் வரமாட்டாங்கல்,உங்களைப்போல பெரியவங்கதான்  போராட ரோட்டில இறங்கணும் நீங்க ரெடியா ..

டேய் பேப்பரிலயும் போட்டிருக்காங்களாம்.. திரும்ப சண்டை வரப்போகுதெண்டு.. பிரபாகரன் திரும்ப வருவார் எண்டு..


நிற்க****************


எனது பெரியம்மா மட்டுமல்ல இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் எண்ண ஓட்டங்களும் இதுதான்..

1) திரும்ப இயக்கம் வரப்போகுது சண்டை தொடங்கப்போகுது
2) தலைவர்  பிரபாகாரன் தப்பிப்போய் பாதுகாப்பா இருக்கிறார் ,நேரம் சரியா வாறப்ப தலைவர்  திரும்ப வருவார்...

முதலாவது விடயத்தை விட்டுவிடுவோம் இரண்டாவது விடயத்துக்கு வருவோம்.

1985 இல இருந்து போராட்டத்துடன் ஊறீப்போன குடும்பத்தில் நானும் பிள்ளையாக இருந்ததால் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்திச்சு...அதன்பின்பு  2006 இல் இருந்து இறுதி யுத்தம் வரை வன்னியிலேயே வாழ்ந்த போது போராட்டத்தை என் ரத்தத்தில் கரைந்து ஊறியிருந்த ஒரே காரணத்தினால் இந்த பதிவு ,பலர் சண்டைக்கு வரலாம்,பலர் திட்டலாம்,ஆனால் உண்மைகளை அவர்கள் உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதே என் கருத்து.

2007 ம் ஆண்டுகாலப்பகுதியில் " 300 " என்ற ஸ்பார்டர்ஸ் என்ற விடுதலை போராட்ட வீரர்கள் பற்றீய ஒருதிரைப்படம் வந்திருந்தது.அந்த படம் வன்னி மண்ணிலும் தமிழீழ திரைப்படத்துறையினரால் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டது.தமீழீழ திரைப்படத்துறையினர் எப்போதும் பெருமிதம் கொள்வது என்னவெனில் தலைவர் அவர்களை ஒரு இடத்தில் உட்கார்த்தி வைத்து தமது தமிழாக்க திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பிக்கும் வரம்தான்.2 மணித்தியாலங்கள் அமர்ந்திருந்து பார்த்துவிட்டு தனது விமர்சங்களை சொல்லிவிட்டு போவாரம் தலைவர்.அதேபோல் இந்த 300 படத்தை தலைவர் அவர்கள் பார்த்து விட்டு சொன்னார்"இந்த படத்தை வன்னியின் மூலைமுடுக்கெல்லாம் திரையிடுங்கள்,அனைத்து தமிழ் மக்களும் பார்க்கணும்,அந்த ஸ்பாக்டரன் வீரர்கள் போல எம் மக்களின் உணர்வுகளும் இறுதி வரை இருக்கவேண்டும்"

அடுத்ததாக 2009 இன் ஆரம்ப நாட்களில் போர் உச்சக்கட்டம் பெற்றிருந்தபோது  புதுக்குடியிருப்பில்  ஒரு இடத்தில்  அனைத்து தளபதிகளுடன் போர் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது தலைவர் அவர்கள் அனைத்து தளபதிகளிடம் சொன்னது ,

"நீங்கள் எல்லாரும் 300 படம் பார்த்திருப்பீங்க.. அதேபோலத்தான் நம்மோட இந்த போராட்டமும் இப்ப இருக்கு. உலக அரக்கர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறம்.எங்கட சண்டை டீமில் 50 பேர் இருந்தா அதில 30 பேர் கட்டாய ஆள்சேர்ப்பில வந்த பெடியளும் பிள்ளையுளும்.. அவங்க எப்போ வீட்டுக்கு போவம் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர முன்னால வார எதிரியை அவங்க வீட்டுக்கு அனுப்பவேணுமெண்டு நினைக்கினமில்லை. அந்த 300 படம் மாதிரி நாங்களும் சுகந்திர உணர்வுள்ள அனைவரும் இந்த போராட்டத்தோட ஒரு கட்டத்தில மக்கள் இல்லாத ஒரு இடத்தில ஒன்றூ கூடி எதிரியோட சண்டை பிடிக்கோணும்.சனத்துக்கு இழப்பு வரக்கூடாது என்ன எல்லாருக்கும் புரியுதுதானே"

ஆனால் இதனை தலைவர் இறுதி நாட்களில் செயல்படுத்துவதற்காய் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரத்திலே அனைத்து தளபதிகளுடனும் பாரிய இறுதி யுத்ததுக்காக ஒன்றுகூடியிருந்தபோது அனைத்துமே கைமீறி போனது.
அந்த இடத்தில் தலைவர் அவர்களை பாதுகாக்கவும் எதிரியை பின்நோக்கி நகர்த்தவும் அனைத்து தளபதிகளும் போராளிகளும் எதிரியுடன் முன்னரங்குநிலைகளிலேயே மூர்க்கமாக போராடினார்கள்.மூன்று தடவைக்கு மேல் பலமாக காயப்பட்டு இருந்த தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களையும் மற்றைய தளபதிகளையும் மீட்பதற்காய் வெளிப்பகுதியிலிருந்து பொக்ஸ் அடித்து நின்ற ராணூவத்தினர் மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தப்பட்டபோது பிரிகேடியர் தீபன் அவர்கள் சொன்னது

"நான் என்னோட இவ்வளவு போராளிகளையும் விட்டிட்டு வரமாடேன்,எனது வீரமரணம் இங்கேயே இந்த மண்ணிலேயே நிகழவேண்டும்"

அதுவே அவரின் இறுதி ஆசையாக இருந்தது.ஆனாலும் ஒரு சிறு ஒழுங்கை போன்ற பகுதியூடாக ரத்னம் மாஸ்டர் அவர்களின் கமாண்டோ போராளிகள் மூர்க்கத்தனமாக ஒரு சண்டையை பிடித்து பொக்ஸை உடைத்துக்கொண்டு தலைவரையும் அவர்களுடன் நின்ற மற்றைய போராளிகளையும்  காப்பாற்றீக்கொண்டு முள்ளீவாய்க்கால் பகுதிக்கு சென்றார்கள்.அந்த இறுதி நிமிடங்கள் நீங்க நினைத்துபார்ப்பது போல் சாதாரணமாக இல்லை..

"எல்லாரும் அடிச்சுக்கொண்டே ஓடுங்க்கோ ,நிக்காமால் ஒடுங்கோ" எண்டு கத்திகொண்டே போராளிகள்  ஒரு ஒழுங்கை போன்ற பகுதியை உருவாக்கி தாக்குதல் நடத்திக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தினம்,பெண்,ஆண் போராளிகளும் பின்னால் சுட்டுக்கொண்டே ஒடிக்கொண்டிருந்தபோதே ராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு சில போராளிகள் காயம்பட்டு ,வீரச்சாவடைந்து கீழே விழுந்துகொண்டிருந்தார்கள்,அவர்களை மீட்க கூட நேரமில்லாமல் போராளிகள் சுட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள், தென்னங்காணியில் நின்ற ஒவ்வொரு தென்னைக்கும் தாவி தாவி ஓடி தாக்குதலில் இருந்து தப்பி ஒடிக்கொண்டிருந்தார்கள்.அனுபமிக்க உணர்வுமிக்க தளபதிகள்,மூத்த போராளிகள் வித்தாகிவிட இறுதி நாட்களீல் 30 நாள் 20 நாள் யுத்த பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளுமே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"பிள்ளையள் நிக்காமல் ஒடுங்கோ ஒருத்தரும் நிக்கேலாது "என்று கத்திக் கொண்டிருக்கும்போதே..

"அண்ணே  காலில வெடி விழுந்திட்டு காப்பாத்துங்கோ"எண்டு கத்திக்கொண்டே ஒரு பெண்போராளி நிலத்தில் வீழ்ந்த போது கூட திரும்பி ஓடிப்போய்காப்பாத்த முடியல.

"தங்கச்சி கொஞ்சத்தூரம் ஓடி வாம்மா என்று கத்தியபோது"

உயிர் வாழவேண்டும் என்ற அந்த ஏக்கம் அந்த பெண்போராளியின் கண்களில் தெரிந்தது,ஒருமாதிரி திரும்ப எழும்பி ஓடி வந்த போது திரும்ப கழுத்தில் வெடி "அண்ணே" என்று கத்திக்கொண்டு கீழே விழுந்த போது   ரீ 56 சை ஓட்டோவில விட்டு சுட்டுக்கொண்டே ஓடிபோய் அந்த பெண்போராளியை தூக்கிகொண்டு கடற்கரை வரை நாக்கில் நுரை தள்ள ஓடிவந்து சேர்ந்த ஒவ்வொரு போராளியின் வேதனைகளும் சோதனைகளும் எனது பெரியம்மா போல கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த தமிழருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அந்த கழுத்தில் வெடி வாங்கிய பெண் இன்றூ கழுத்திலேயே அந்த ரவுண்ட்ஸ் ஜ ஆப்பிரேசன் பண்ணீ வெளியில் எடுக்க முடியாமல் இன்றும் அந்த ரவுண்ட்ஸ் உடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது என் கண்முன்னே நின்ற ஒரு விம்பம் மட்டுமே..

இறுதி நாட்கள் நெருங்கியபோது தலைவர் மீதமாக இருந்த தளபதிகளிடம் சொன்ன வார்த்தைகள்

"சனம் பிரபாகரன் இருக்கிறார் இயக்கம் இருக்கு சண்டை பிடிச்சு காப்பாத்தும் எண்டு இண்டைக்கு வரைக்கும் எங்களுக்கு பின்னால வந்திட்டு எல்லா கஸ்டத்தையும் தாங்கிக்கொண்டு,ஆனா யாருமே அதே உணர்வோட போராட வரேல்லை..,இண்டைக்கு நாங்கள் உலகநாடுகளுக்கெதிராக சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கிறம். ஆனால் முடிவு எனக்கு தெரியுது.அதனால இறுதிவரைக்கும் நான் இந்த மண்ணை விட்டு தப்பி போகப்போறதில்லை. என்னோட கடைசி நிமிடம் வரை இந்த மண்ணிலேயே இருக்கணும். என்னோட பிஸ்டலோட கடைசி ரவுண்ட்ஸ் இருக்கும்வரை நான் எதிரியோட சண்டை பிடிக்கவேணும் யார் என்ன சொன்னாலும்.என்னோட வீரச்சாவு இந்த மண்ணிலேயே நிகழ வேணும்.இவ்வளவு மக்களையும் போராளீகளையும் போராட்டத்துக்காக இழந்திட்டு நான் மட்டும் தப்பி ஓட விரும்பேல்ல.. எனக்காக துர்க்கா,விதுஷா,தீபன் கடாபி ஆயிரமாயிரம் போராளிகள் கடைசிவரை சண்டை போட்டது கண்ணுக்குள்ள இப்பவும் இருக்கு..எனது வீரமரணம் உலக்குக்கே தெரியவேணும்.அப்போதான் இனிமேலும் பிரபாகரன் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் எண்டு தமிழ்ச்சனம் இருக்கமாட்டினம், இனிமேல் தமிழ் மக்கள்தான் போராட்டத்தை தங்களோட கையில எடுக்கவேணும். அதுக்காக நான் சண்டை போட்டு செத்திட்டாலும் என்னோட பொடியை எல்லாச்சனமும் பார்க்கவேணும். 1987  இல தம்பி தமிழீழத்தை கைவிட்டு வேற எதையெண்டாலும் இந்திய திம்பு பேச்சு வார்த்தையில வாங்கிட்டு வந்தாலும் நானே அவனை சுடுவேன் எண்டு சொன்னவர் கிட்டு.. அவரோட அந்த சொல்லை பொய்யாக்க நான் விரும்பேல்ல,எங்கட இயக்கத்தை ஒரு கொள்கையோட வளர்த்தனான்.அந்த கொள்கையை நானே பொய்யாக்க விரும்பேல்ல..எங்கட இயக்க கொள்கையை நான் கடுமையா கடைப்பிடிப்பேன். தயவு செய்து என்னோட கடைசி ஆசையை தட்டிக்கழிக்காதீங்க "

இது அவர் உறுதியுடனும் கண்களில் தமிழீழக்கனவுகளுடனும் சொன்னது.அவர் என்ன சொல்லி இயக்கத்தை கட்டுக்கோப்பாகா வளர்த்தாரோ அதன்படியே அவரும் ஒழுகி எம் தாயகமண்ணீலேயே வீரவித்தாகினார்.

ஆனாலும் இது தெரிந்துகொண்டும் இன்றும் நெடுமாறன்,வைகோ அய்யாவிலிருந்து உலக நாடுகளில் உள்ள புலிகள் சார்ந்த அமைப்புக்கள் தலைவர் அவர்கள் இறுதிக்கட்டத்தில் தாக்குதல் நடத்தி தப்பி ஓடி வாழ்ந்து வருகிறார் என்று ஒரு மாவீரரை ,அவரின் கொள்கையை, விடுதலைப் போராட்டத்தின் கொள்கைகளை சேறு பூசி வருகின்றனர்.

அவர் வீரவித்தாகிவிட்டார் என்று சொல்லிவிட்டு அவருடன் வித்தாகிப்போன அந்த இருபதினாயிரம் மாவீரர்களின் கனவை நனவாக்க நாம் உழைக்கவேண்டும் என எல்லோரும் ஒன்றாக நினைக்கவேயில்லை.
 இனிமேலும் தலைவர் அவர்களை கேவலப்படுத்தி அவர்கள் அரசியல் நடத்துபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.அனைத்துமக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.இனிமேல் தமிழர்களின் எதிர்காலம் எங்களின் ஒன்றுபட்ட கைகளில் தான் இருக்கென்று உரத்து சொல்லவேண்டும்.இன்று உலக நாடுகளின் கொள்கை வரைபுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.எமது போராட்டம் நியாயமானது என்றூ சிறுக சிறுக தெரிய வந்துகொண்டிருக்கின்றன.அதனை அப்படியே விட்டு விடாமல் அனைவரும் கரம் கோர்த்து எமது திசையிலேயே இழுத்து வரவேண்டும் அதற்கான திட்டங்களை செயல்படுத்துங்கள். அதைவிடுத்து மீண்டும் ஆயுதம் தாங்கி போராடுவோம்  என்று வீண் கூச்சல் போடாதீர்கள்.இன்றூம் அவரின் பெயரில் இயக்கம் நடத்தவும் காசு சேர்க்கவும் பயன்படுத்தவது எந்தளவில் நியாயம் ? மக்களின் பொறுப்பை அவர்களின் கைக்களில் கொடுக்கவேண்டும், இல்லாவிடில் 2020 இல் கூட தலைவர் திரும்ப வருவார் எண்டு கதை அளந்துவிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஏனேனில் இனிமேல் ஆயுதபோராட்டம் என்று ஒன்று வந்தால்

1) போராட்டத்தால் பாதிப்புற்ற மக்கள் மத்தியில் எதிர்ப்பே மிஞ்சும்.

2) உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற உணர்வு  மங்கியிருக்கும் இந்த காலத்தில் மீண்டும் போராட ஆள் சேர்த்தால் அது மற்றைய ஆயுதகுழுக்களைப்போல்தான் போய் முடியும்.

3) விடுதலைபோராட்டம் பற்றீய உணர்வுள்ள தலைமுறை இன்று குடும்பம்,பிள்ளைகள் என்று செட்டிலாகிவிட்ட நிலையில் மீண்டும் சிந்திக்கவே மாட்டார்கள்.

இவையெல்லாத்தையும் விட முக்கியமான கேள்வி..
பலர் சொல்வது போல ஒரு வேளை தலைவர் அவர்கள் திரும்பி வந்தால் அவரிடம் மக்கள் முன்பு வைத்திருந்த பாசம்,அன்பு,உரிமை இருக்காது.. உங்களை நம்பி வந்த எம்மை ஏன் விட்டு போனீர்கள் என்ற கேள்வி கணைக்களுடன் தான் மக்கள் காத்திருப்பார்கள் ???????????????????????????????????
08 ஜனவரி, 2012

புதுக்குடியிருப்பில் எம்மவர்களின் உள்ளூர் தயாரிப்புகள்

 இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான தகவல்களை பெற புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்தபோது இராணுவத்தளபதியின் அனுமதி பெற்று கொண்டு தேசியத்தலைவர் அவர்களின் நிலக்கீழ் இருப்பிடங்களுக்கும் உள்ளூரில் நம்மவர்களால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பாதுக்காக்கப்பட்டுவரும் தளத்துக்கும் சென்று வந்தேன்.. கண்ணீரைக்கூட வெளியிடமுடியாமல்

01 ஜனவரி, 2012

புது வருட நல்வாழ்த்துக்கள் 2012

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,எவற்றையெல்லாம் சென்ற வருடம் செய்ய நினைத்து எம்மால் முடியாமல் போனதோ அவற்றை இந்த வருடம் செய்ய முயற்சிப்போம். மன்னிப்பை எம் எதிரிகளுக்கு ஒரு தடவை கொடுத்துபார்ப்பொம்  துரோகிகளை மட்டும் தூரமாய் தள்ளீ வைப்போம்