17 மார்ச், 2011

கம்பியூட்டர் மற்றும் வேறு விதத்தில் வரும் கதிவீச்சிலிருந்து பாதுகாப்பது எப்படி

கம்பியூட்டர் மற்றும் வேறு விதத்தில் வரும் கதிவீச்சிலிருந்து எமது வீட்டு அறைகளில் பாதுகாப்பு





ஏற்பாடுகளை எப்படி செய்வது என ஆராட்சியாளர் ஆண்ட்ரே சேர்னோவ் ஒரு மொடல் அறையினை தயாரித்துள்ளார்

16 மார்ச், 2011

பவானி புதிய திரைப்படம்- தரையிறக்கிக்கொள்ள...



நடிகர்கள்: சிநேகா,விவேக்,கோட்டாசீறீனிவாசராவ் ,சம்பத்,டெல்லிகணேஸ்  இசையமைப்பு :தினா
இயக்கம்: கிச்சா



பாகம் 1 இங்கே அழுத்துக
பாகம் 2 இங்கே அழுத்துக 
பாகம் 3 இங்கே அழுத்துக 
பாகம் 4 இங்கே அழுத்துக
பாகம் 5 இங்கே அழுத்துக 

15 மார்ச், 2011

யப்பான் புக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கத்தால் ஆபத்து-வீடுகளினுள்ளே இருக்குமாறு உத்தரவு


ஃபுக்குஷிமாவிலிருந்து கசியும் கதிரியக்கம், ‘சட்டப்படியான அதன் பாதுகாப்பு அளவையும்’ கடந்து ஒரு கட்டத்தில் வெளியேறியதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மின் நிலையத்திலுள்ள அணு உலையொன்றின் மையப்பகுதியில் அதிகரித்துள்ள வெப்பத்தை கடல் நீரைக்கொண்டு தணிக்க அதிகாரிகள் முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.
இருந்தாலும் உலையின் பாதுகாப்புக் கவசம் மிகப் பலமாக இருப்பதால் வெடிப்பொன்று ஏற்பட்டாலும் அதனை ஈடு கொடுக்க கூடிய நிலை இருப்பதாகவும் இப்போது, உருகும் அபாயம் எதுவும் இப்போது இல்லையென்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். 
ஃபுக்குஷிமா மின்நிலையத்தின் ஆறு அணு உலைகளில் குளிரூட்டல் கட்டமைப்பு தொடர்ந்தும் செயலிழந்தே காணப்படுகின்றது.
புளூட்டோனியமும் யூரேனியமும் கொண்டுள்ள மூன்றாம் இலக்க உலையை உடனடியாக குளிர்மைப் படுத்தும் முயற்சி இது வரை தோல்வியிலேயே உள்ளது.

சுகாதாரப் பாதிப்புகள்
இதேவேளை ஃபுக்குஷிமாவை அண்டிய 20 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், கதிரியக்கக் கசிவு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்களா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். 
ஓரளவு கட்டுப்பாடான அளவுக்குள் கதிரியக்க தாக்கத்துக்கு உள்ளாகுபவர்களுக்கு முதற் கட்டமாக வாந்தி, வயிற்றோட்டம், தலைவலி காய்ச்சல் போன்ற சாதாரண நோய் அறிகுறிகளே ஏற்படும்.
ஆனால், முதற்கட்ட அறிகுறிகளுக்குப் பின்னர், சில காலம் குறிப்பிடத்தக்க நோய்கள் எதுவும் காட்டாத போதிலும் கூட பின்னர் சில வாரங்களிலேயே இன்னும் மோசமான அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது.
இதேவேளை, உயர் அளவு கொண்ட கதிரியக்கத்தின் தாக்கத்துக்கு உள்ளாகுவோர் இந்த எல்லா அறிகுறிகளுடன் உயிரிழக்கக் கூடிய அளவுக்கு உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் சேதமடைந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது.
உடலுக்குள் ஊடுறுவும் உயர் கதிரியக்கம், உடலில் இராசயன சுரப்பிக் கட்டமைப்புகளை சேதப்படுத்தி, அதன்மூலம் உடல் திசுக்களையும் பாதிக்கச் செய்யும்.
கதிரியக்கத்தின் ஊடுறுவால் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்பு என்றால் புற்றுநோய்களே.
இவ்வாறான சுகாதாரப் பாதிப்புகளை தவிர்ப்பதற்காகவே ஜப்பான், ஃபுக்குஷிமா பிராந்தியத்திலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
கதிரியக்கச் செயற்பாட்டுக்குள்ளான அயடின் மனிதர்களுக்குள் சென்று தைரொய்ட் புற்றுநோயை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு பாதகமற்ற அயடின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

‘செரினோபில்’
இதற்கிடையே, டோக்யோவுக்கு வெளியே நாரிட்டா விமானநிலையம் ஜப்பானை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களால் நிரம்பிவழிகின்றது.
ஐப்பானில் அணு உலைகள் உருகிப்போகும் அபாயம் உள்ளதாக செய்திகள் வெளியானது முதலே வரலாற்றில் 1979 இல் அமெரிக்காவில் த்ரீ மைல் ஐலண்டிலும் அதற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் உக்ரைன் செரினோபில்லிலும் ஏற்பட்ட அணு உலை விபத்துக்களே மீண்டு்ம் நினைவுக்கு வருகின்றன.
அந்த சம்பவங்களின் பின்னர் அணு உலை பாதுகாப்புகள் குறித்து கூடுதல் அக்கறைகள் செலுத்தப்பட்டன.
ஜேர்மனில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கி விட்டன.
ஐப்பான் அணு உலை சம்பவம், அணு தொடர்பான உலகத்தின் விவாதங்களை பல கோணங்களில் முடுக்கி விட்டிருக்கின்றது.
   65 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மீது நிகழ்த்தப்பட்டுள்ள 3வது அணுகுண்டுத்தாக்குதல் இதுவாகும் ஆனால் இம்முறை நாங்களே எங்கள் மீது போட்டுக்கொண்டோம் என ஹிரோஸிமா அணுகுண்டுத்தாக்குதலில் இருந்து தப்பித்து உயிர் வாழ்ந்து வரும் 82 வயதான Keijiro Matsushima  என்பவர் கருத்து தெரிவித்துள்ளதாக சி.என்.என் செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் செல்லும் சோனியாகாந்திக்கெதிராக புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு



நாளை மறுதினம் லண்டனில் நடைபெற இருக்கும் பொது நலவாய மகாநாட்டில் பெண்களின் பங்களிப்பு பற்றி திருமதி சோனியா காந்தி அவர்கள் பேச உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு இன்று அவர் லண்டன்  செல்கிறார்.இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் நசுக்குவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்து இராணுவ மற்றும்  இதர உதவிகளையும் செய்திருந்தது வெட்டவெளிச்சமானது.இது அனைத்துமே திருமதி சோனியாகந்தியின் கணவரும் 1987 -1989 வரை இலங்கை வடக்கு தமிழ்மக்கள் மீது வன்முறையை ஏவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும், பல தமிழ்பெண்கள் மீது ராணுவத்தினரை ஏவி பாலியல் பாலாத்காரம் செய்து பல கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சொத்துக்களை சூறையடி தமிழ்மக்களினின் மனதில் நீங்காத வடுவாய் இருக்கும் முன்னாள்  இந்திய பிரதமர் ராஜீவின் கொலைக்கு பழிவாங்கவே. எனவே இந்தியாவைஇலங்கைத்தமிழ்மக்களும் ,புலம்பெயர் தமிழ்மக்களும்  எட்டப்பனாகவும்,துரோகியாகவும் தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் திருமதி சோனியாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில்
லண்டன் வாழ்தமிழ் மக்கள் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 மார்ச், 2011

கலைஞரின் ஆட்சி சிறப்புகள்

கன்னித்தமிழ்ப்பெண்ணின் கற்பு அழித்து
சிங்களம் கொக்கரிக்க 
கண்ணகிக்கு சிலையெடுத்த கருநாகமே.
தமிழர்களே உங்களைத்தாங்குவேன் என்று
குரல் கொடுத்து  எம் குலம் வேர் அறுத்தவனே.


மாப்பிள்ளை -புதிய திரைப்பாடல்கள்




தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
நடிகர் : தனுஷ்,ஹனிஷ்கா
இயக்குனர் :சுராஜ்
இசை :மணிசர்மா
பாடல் வரிகள்: விவேகா, பா.விஜய்,சிநேகன்

பாடல்களை தரையிறக்கிக்கொள்ள இங்கே கிளிக்குங்கள்

பாஸ்வேர்ட் : maappilai

பென்சீன் வளையமும் முன்னால் இருந்த மாணவியும்

யாழ்ப்பாணத்தில் மிகவும் பேமஸாக இருக்கிற தனியார்கல்வி நிலையங்களில் (டியூசன்) "Science Hall " டியூசனும் ஒன்று. இந்த டியூசனில் க.பொ.த உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களையும் மிகப்பிரபலமான ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது .இங்கே யாழில் மட்டுமில்லாது தென்மராட்சி,வடமராட்சி பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படிப்பார்கள்.ஏனெனில் அனைத்து பாட ஆசிரியர்களும் மிகவும் பிரபலமானவர்கள் மட்டுமல்ல,பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்துக்கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.

ஆனால் இந்த டியூசன் பற்றி இங்கே சொல்லியாகவேண்டும்... நாங்கள் அனைவரும் "Science Hall " டியூசனுக்கு போறோம் என்று சொல்வதில்லை... அனைவரும் செல்லமாக " கொட்டிலுக்கு" போறோம் என்று சொல்வதே வழமையானது.
ஏனெனில் அங்கே கிடுகுகளால் வேயப்பட்ட 7 மிகப்பெரிய கொட்டில்கள் உண்டு. இதில் குறைந்தது 500 மாணவர்களாவது கல்வி பயிலமுடியும்.. இதிலும் வாங்குகள் ,இருக்கைகளாக இருப்பவை சாதாரண பலகைகளால் செய்யப்பட்டவை.
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் நமது காற்சட்டைகளின் பின்பக்கத்தில் ஓட்டை வந்துவிடும் நிலைமைதான்..ஆனாலும் எம்மைப்பொறுத்தவரை அது ஒன்றும் பெரிதாகப்படுவதில்லை.ஏனெனில் நாங்கள் போர்க்காலத்தில் அனைத்து
பொருளாதார பிர்ச்சினைகளுக்கு முகம் கொடுத்து வளர்ந்துவிட்டதால் இதை நாம் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அத்துடன் நிலம் கூட சீமெந்து தரையினால் ஆனது இல்லை.. மணல் பரப்பப்பட்ட தரையாகும்.

சரி மேட்டருக்கு வருவோம்.கணித பிரிவில் கல்வி பயிலும் பலருக்கு இரசாயனவியல் ( மானாட மயிலாட ஸ்டைலில் சொல்வதென்றால் "கெமிஸ்டிரி "மச்சான்ஸ்) என்றால் ஒரு சிலருக்கு தேன் குடிப்பது போல் ஆனால் பலருக்கோ புளிக்கரைசலைக்குடிப்பது போன்றது..
கெமிஸ்ட்ரிக்கு ஒரு ஆசிரியர் கொட்டிலில் படிப்பித்துக்கொண்டிருந்தார்..அவர் மிகவும் அமைதியனவர்..சிறந்த ஆசிரியர்..வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அனைவருக்கும் புரியும்படி கெமிஸ்ட்ரி பாடத்தை படிப்பிப்பார்.அவர் ஒரு சில ஆண்டுகளுக்கு
முன்பு தீராத நோய் ஒன்றினால் எமை விட்டுப்பிரிந்த்திருந்தார்.ஆனாலும் அவரின் கெமிஸ்ட்ரி பாடபுத்தங்கள் இன்னும் அவரை எம்மத்தியில் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாள் எமது வகுப்பிற்கு அவர் கெமிஸ்ட்ரியில் பென்சீனைப்பற்றி - Benzene படிப்பித்துக்கொண்டிருந்தார்.


பென்சீன் வளையத்தை படத்தில் குறிப்பிடப்பட்ட
மாதிரி குறியீட்டை வரைய வேண்டும்.அதில் உள்ளே உள்ள வட்டத்தை போடாவிட்டால் அந்தக்குறியீடு பென்சீனைக்குறிக்காது.மொத்தமே தப்பாகிப்போய்விடும்.இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அன்று முன்வரிசையில் இருந்த ஒரு மாணவி
இதை மறந்துவிட்டு அந்தகுறியீட்டின் உள்ளே உள்ள வட்டத்தை போடாமலேயே அனைத்து குறிப்புக்களை எழுத்திக்கொண்டிருந்தார்.இதனை முதலிருந்தே எமது ஆசிரியரும் நோட் பண்ணிக்கொண்டிருந்தார். இறுதியில் பொறுக்கமுடி யாமல் அந்த பென்சீன் குறியீட்டின் முக்கியத்துவத்தை நினைத்துக் கொண்டு அந்த மாணவியிடம் பின்வருமாறு எல்லாருக்கும் முன்னால் சர்வசாதரணமாக சொன்னார்.

"பிள்ளை நானும் உம்மை வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் .. முன்னுக்கு இருந்து கொண்டு உள்ளுக்கும் ஒன்றும் போடாமல் இருக்கிறீர்"

அவர் சொன்னது அந்த பென்சீன் குறீயீட்டின் உள்ளே போடப்படும் வட்டக்குறியீட்டை..ஆனால் அது சந்தர்ப்ப சூழ்நிலையால்
இரண்டாவது அர்த்தத்திலேயே அங்கிருந்த அனைத்து மாணவர்களிடம் போய்ச்சேர்ந்தது... அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று
நினைத்துப்பாருங்கள்... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆரம்பித்த மாணவர்களின் சத்தம் நீண்ட நேரத்தின் பின்புதான்
நிசப்தமானது...ஆனால் தனது வார்த்தைப்பிரயோகம் தப்பாகிப்போனதை அறிந்த அந்த ஆசான் ஏன் தான் அப்படி சொன்னேன் என்பதற்கு
தன்னிலை விளக்கம் அளித்தார்...ஆனாலும் நம்மாளுக... விடுவானுகளா.. பாவம் அந்தப்பொண்ண்னு.. கனகாலம் பிறகு கிளாஸிக்கு வருவதில்லை..

11 மார்ச், 2011

சற்று முன் ஜப்பானின் தென்கிழக்குப்பகுதியை சுனாமி தாக்கியது





சற்று முன் ஜப்பானின் தென்கிழக்குப்பகுதியை சுனாமி தாக்கியது.8.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து ஜப்பானின் தென்கிழக்குப்பகுதிகளை 32 அடியளவில் கடலைகள் தரைப்பகுதியைத்தாக்கியது..ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது.



இதனைத்தொடர்ந்து அங்கு அவசர காலநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல ஆசிய பசுபிக் வலய நாடுகளையும் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஜப்பானில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கிய நகரில் சுமார் 400 000 பேருக்கான மின்னிணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.


மேற்படி நில அதிர்வானது அண்மையில் நியூசிலாந்து கிரைஸ்ட் சர்ச்சில் ஏற்பட்டதைவிட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது

வீடியோவினைப்பார்ப்பதற்காக இங்கே கிளிக்குங்கள்

படங்களுக்கு இங்கே கிளிக்குங்கள்

Deadliest earthquakes

26 Dec 2004, Sumatra, Indonesia: 9.1 quake and tsunami kills 227,898 across Pacific region

12 Jan 2010, Haiti: 222,570 killed, 7.0

12 May 2008, Sichuan, China: 87,587 killed, 7.9

8 Oct 2005, Pakistan: 80,361 killed, 7.6

20 June 1990, Manjil, Iran: 40,000 killed, 7.4

26 Dec 2003, Bam, Iran: 31,000 killed, 6.6

16 Jan 2001, Gujurat, India: 20,023 killed, 7.7

17 Aug 1999, Izmit, Turkey: 17,118 killed, 7.6

30 Sep 1993 Latur, India: 9,748 killed, 6.2

16 Jan 1995, Kobe, Japan: 5,530 dead, 6.9

பழைய இரும்புச்சாமானுகளுக்கு தும்புமுட்டாஸ்..

1990 ம் ஆண்டு நடுப்ப்பகுதி வரையில் யாழ்ப்பாணத்திலே முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள்.. அவர்களுடைய பகுதிக்கு சோனகர் தெரு என்று பெயர். அவர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்வதில் கைதேர்ந்த வர்களாக இருந்தனர். அவர்களில் ஏரியா சீற் தைப்பது, பாண் பேக்கரி.. வீட்டுப்பாவனைப்பொருள் விற்பனை என்று சில வியாபாரங்களில் களைகட்டி காணப்பட்டது.

நாங்கள் சிறுவயதாக இருந்த காலமாதலால் 1 மணிக்கெல்லாம் பாடசாலை முடித்துகொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.அன்றையகாலங்களில் எமது பகுதிக்கு "காக்கா" என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு முஸ்லீம் நபர் ஒருவர் கிழமைக்கு ஒரு தடவை எமது பிரதேசமெங்கும் ஒரு சைக்கிளில் அனைத்து வீட்டு உபயோகப்பொருட்களை கட்டிக்கொண்டு விற்பதற்காக வருவார். கூடுதலாக பெண்களைக்கவரும் .. அலுமினியம், பிளாஸ்டிக் சமையலறைப்பாத்திரங்களாகவே இருக்கும்,இவர் வந்து விட்டு போனபிறகு இன்னொருவர் சைக்கிளில் மணியடித்துக் கொண்டு வருவார் .. இந்த மணிச்சத்தம் கேட்டதுமே
சும்மா காலில் பம்பரம் கட்டி சுழலுவதைப்போல அலேர்ட்டாகி நானும் எனது அக்காவும் வீட்டுக்கும் வாசலுக்குமாக ஓடித்திரிவோம் .ஏனெண்டு கேட்கிறீங்களா.. அந்த மணீ அடித்து கொண்ட் சைக்கிளில் வருபவர் அந்த சைக்கிளின் பின்னால் ஒரு பெட்டியில் பிங்க் கலரில "தும்பு முட்டாஸ் " ( தற்போது அது சோன் பப்டி என்று அழைக்கப்படுகிறது) கொண்டு வருவார்.
நாங்கள் காசு கொடுத்தும் வேண்டலாம் இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் பழைய இரும்புச்சாமானுகள் ( பழைய வாளி, சைக்கில் றிம்,) அலுமினிய பாத்திரங்களைக்கொடுத்தும் வாங்கலாம்..கரகாட்டக்காரன் படத்தில பழைய இரும்புச்சாமன்களுக்கு பேரிச்சைம்பழம் எண்ட சீன் மாதிரி...


அதனால அந்தாள் வாறன்னைக்கு நம்மிடம் ஒரு 5 ரூபாயோ, 10 ரூபாயோ இருந்திட்டா நம்மளுக்கு கொண்டாட்டம் தான் ..அப்படி இல்லாட்டி நானும் அக்காவும் நம்மட வளவுக்குள்ள ஏதாச்சும் பழைய இரும்புச்சாமான் இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்திடுவோம்..அங்கேயும் கிடைகலைன்னா , வீட்டுக்கு முன்னால இருக்கிற வெறும் வளவுக்குள்ள தேடப்போவோம் அங்கேதான் நம்ம ஏரியாக்கள் எல்லாரும் குப்பையை கொண்டு வந்து கொட்டுவார்கள்.. அங்கே எப்படியாச்சும் ஏதாவது ஒரு பழைய இரும்புச்சாமான் இருக்கும்.. சிலவேளைகளில் மணீச்சத்தம் கேட்டவுடனேயே பட்ஜெட் இடிக்கிற நம்ம ஏரியா பயபுள்ளக எல்லாரும் அந்த வளவுக்குள்ள வந்து நிண்டு தேடிக்கொண்டிருப்பானுக.. இது சிலவேளைகளில அடிதடியில கூட முடிஞ்சிருக்கு..ஆனாலும் வீட்டில அடிச்சு கேட்டாலௌம் சொல்லமாட்டோம் என்ன பிரச்சைனை எண்டு.


ஆனால் அந்த தும்பு முட்டாஸ் சுவை இருக்கே , சொல்ல இப்ப கூட நாக்கில எச்சி ஊறுது ... சூப்பரா இருக்கும்.. அந்த ரேஸ்டுக்காக நாங்க பழைசை பொறுக்குவதில் தவறே இல்லை எண்டு நாங்கள் எங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுவோம்.
நாங்கள் கொடுக்கும் காசுக்கும்/ பழைய இரும்புச்சாமான் மதிப்புக்கு ஏத்தவாறு ஒரு பேப்பரில் எடுத்து மடித்துத்தருவார் அந்த முஸ்லீம் பெரியவர். ஆனால் இது வீட்டுக்கு தெரியாமல்தான் நாங்கள் வாங்கி சாப்பிடவேண்டும்.. ஏனெனில் அந்த பெரியவர் ஊரெல்லாம் வேர்க்க வியர்க்க சைக்கிளில் போய் வருவார்.. அதே வியர்வை காஇயுடனேயே தும்பு முட்டாஸையும் கையாள்வார்.இதனால் வீட்டில்
கண்டிப்பான உத்தரவு எனக்கும் அக்காவுக்கு அம்மாவிடம் இருந்து போடப்பட்டிருந்தது.அதை வாங்கிச்சாப்பிட வேண்டாம் எண்டு.. ஆனா நாங்க எங்க சொல் பேச்சு கேட்டிருக்கிறோம் மணீ அடிச்சதுமே பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டு வாறோம் எண்டு சொல்லிட்டுப்போய் அந்த தும்புமுட்டாஸை வாங்கிக்கொண்டு நம்மவீட்டுக்கு பக்கத்தில இருக்கிற வைரவர் கோயில் பின்பக்கத்துக்கு போவோம்..,ஆனால் ஏற்கனவே
நம்மளைப்போல நம்ம ஏரியா பயபுள்ளகளும் அங்கே வந்து நிண்டுகொண்டு அந்த தும்பு முட்டாஸை ஒரு கை பார்த்துகொண்டிருப்பானுக. ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிடமாட்டோமில்ல ... (பச்சைத் தமிழன்டா)..

சரி இப்படித்தான் ஒருநாள் நானும் அக்காவும் தும்பு முட்டாஸ் வாங்கித்தின்னுட்டு ஹாயாக வீட்டுக்கு வந்திட்டோம் .ஒரு 10 நிமிடம்தான் போயிருக்கும் " தும்புமுட்டாஸ் தின்னுட்டு கமுக்கமா இங்கே வந்து நிக்கிறியா எண்டு அம்மா பெரியம்மாவீட்டுக்கு கத்திகொண்டேவந்தார் ...அம்மாவின் ஒருகையில் . அக்காவோ அழுதுகொண்டிருந்தார்... துரோகி காட்டிக்கொடுத்திட்டாளா எண்டு நினைத்துக்கொண்டு அடுத்த கையில் பூவரசு தடி அடியில தும்பு மாதிரி மாறியிருந்திச்சு ஆஹா அக்காவுக்கு ஏற்கனவே ஒரு ரவுண்டு
போய் முடிஞ்சிருச்சு போலா எதுக்கும் இந்த நேரம் பார்த்து விலக்குபிடிக்க பெரியம்மா வேற இல்லையே..கண்ணில பீதியை காட்டாம சமாளிடா கீர்த்தி எண்டு மனசுக்குள்ளே நினைச்சுக்கொண்டே என்னம்மா ஆச்சு எண்டு அப்பாவித்தனமா கேட்க.. டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் தும்பு முட்டாஸ் வாங்கி சாப்பிடவேணாம் எண்டு...இல்லைம்மா நான் வாங்கிச்சாப்பிடவேயில்ல.. என்னட்ட காசே இல்லை எண்டு சொல்ல..... டேய் அதுதான் வீட்டில கறி காய்ச்ச வைச்சிருந்த புது
அலுமினியச்சட்டியை கொண்டு போய்க்கொடுத்து தும்புமுட்டாஸ் வாங்கினீங்களாடா... நேற்றுதான் அதை 250 ரூபா கொடுத்து வாங்கினேன் எண்டு சொல்லவும் .. நான் அப்படியே ஷாக்காயிட்டேன் என்னாது 250 ரூபாயா.. அடப்பாவி 10 ரூபாக்குதானே தும்பு முட்டாஸ் கொடுத்தான்..மிச்சம் 240 ரூபா கம்பெனிக்கணக்கா.. ஏமாந்திட்டியேடா கீர்த்தி , அம்மா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நம்மட ஏரியா எல்லையைத்தாண்டியிருக்கமாட்டான் போய் எப்படியாச்சும் அந்த அலுமினியச்சட்டியை வாங்கிட்டு வாறேம்மா எண்டு அட் த டைமிலேயே அப்புரூவர் ஆனேன்..

ஏண்டா போய் மிச்சக்காசுக்கும் தும்பு முட்டாஸ் வாங்கி வரவா எண்டு கேட்டுக்கொண்டே பூவரசுத்தடி நம்மோட கால்களைப்பதம் பார்த்தா...அடடே நம்ம ரெரர் பிளானை அடுத்த செக்கனிலேயே அம்மா கண்டு பிடிச்சிடாய்ங்களே.. ஏந்தான் இதுக்கும் மட்டும் இப்படி அறிவாளித்தனமா யோசிக்கிறாய்ங்களோ..பின்னே நம்மட ரெர்ர் அறிவில அவிங்களுக்கு 10% மவது இருக்கிறது ஜகஜம் தானே..

அம்மா நம்பிக்கைதான் வாழ்க்கை! எப்புடி திரும்பி வர்றேன்னு மட்டும் பாருங்கம்மா எண்டு சொல்லி கெஞ்சிக்கூடத்தான் பார்த்தேன்.. ம்கூம்
வேர்க்கவுட்டே ஆகல... ஆனா அந்தாள் எப்படியும் திரும்பி வாருவாரு ஒரு கை பாத்திடணும்டு நம்மட ஏரியா பயபுள்ளகளிடம் சொல்லி நம்மளோட கூட்டணி சேர்த்து காத்திருந்தேன்... ஆனால் அடுத்த நாள் பேப்பரில நியூஸ் வந்திருந்தது.. அனைத்து முஸ்லீம் மக்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் எண்டு... அப்போ மிச்ச 240 க்கும் தும்புமுட்டாஸ் .....

10 மார்ச், 2011

ஆத்தாதாதா நான் வயசுக்கு வந்துவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்

யாழ்ப்பாணத்தில விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் அனைத்து சினிமா படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.அவர்களின் திரைப்படத்துறையினர் அனைத்து திரப்படங்களையும் பார்வையிட்டு நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ற படங்களை மட்டும் தணிக்கை செய்து வெளியிட்டு வந்தனர்.தாக்குதல் மற்றும் தேசபற்று நிறைந்த படங்கள மட்டுமே வெளியிடப்பட்டன. மற்றைய சினிமா படங்கள் பலமான தணிக்கைக்கு பிறகே வெளீயிடப்படும்..அதனால் ஹீரோயின் புடவை கட்டியிருந்தால் மட்டுமே நாம் அவர்களை திரைப்படங்களில் பார்க்க முடியும்.குட்டைப்பாவட்டை... லோ நெக் போன்ற உடைகள் அணியும் ஹீரோயின்களை நாங்கள் பார்க்கவே முடியாது.. ஏறகனவே கத்தரிக்கப்பட்டிருக்கும்.ஒரு சில படங்கள் தணிக்கை செய்த பின்பு பார்த்தால் படத்தில் எழுத்தோட்டப்பகுதியும் முடிவு சுபமும் மட்டும்தான் வந்தது .ஏனெனில் அந்தளவுக்கு அந்தப்படத்தில் ஹீரோயின் படம்முழுக்க சின்ன காற்சட்டையும் பனியனும் மட்டும் போட்டிருந்தாராம்..

1996 க்கு பின்பு இலங்கை அரசாங்கத்தின் ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்பு இந்த நிலைமை மாறியது. திரும்பும் இடமெல்லாம் சிறிய சினிமா கொட்டகைகள முளைத்திருந்தன.

இதில் உலகம் முழுவதும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு சினிமா கொட்டகை என்றால் அது சந்திரன் தியட்டர் தான்.சந்திரன் என்பவர் இந்த சிறிய தியட்டரை நடத்திவந்தார்.அவரை யாழில் எல்லோரும் செல்லமாக மாஸ்டர் என்றுதான் அழைப்பார்கள்.ஏனெனில 1996 வரை ஆங்கிலத்திரைப்படங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுத்தான் புலிகளின் திரைப்படத்துறையினர் வெளியிட்டிருந்தனர்.அதனால் ஆங்கில மொழியில் எந்த திரைப்படங்களையும் பார்க்க முடியாது.ஆனால் சந்திரன் உலக ஆங்கில மொழி திரைப்படங்களையும் தனது தியட்டரில் வெளியிடத்தொடங்கினார்.
சிம்பிளா சொல்லுறதெண்டா ஆங்கில மொழியை எம்போன்ற இளைஞர்கள் மத்தியில் இலகுவாக கற்றுக்கொள்வதற்கு பெரும் பங்காற்றியிருந்தார்.இன்று உலகம் முழுக்க ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று எமது இளைஞர்கள் முன்னேறியிருப்பதற்கும் அவர்தான் குரு.இதனால்தான் அனைவரும் அவரை செல்லமா சந்திரன் மாஸ்டர் என்று அழைப்பதுண்டு.

சிறிய வீட்டையே தியட்டராக மாற்றியிருந்தார்.அதிலே ஸ்பெசாலிட்டி என்னவெண்டா பக்கத்திலே இருக்கிறவன் யாருன்னு கூட தெரியாது அந்தளவுக்கு இருட்டாக இருக்கும். அந்த 21 இன்ச் டிவியில படம் பார்ப்பது ஏதோ தெய்வ தரிசனம் கிடைச்சது போல அப்போதையகாலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் தியட்டரில் குவிவார்கள் இளைஞர்கள்.

அதிலும் மாஸ்டரின் விளம்பரமே தனியாக இருக்கும்.. ஒரு ஒழுங்கையூடாகத்தான் அந்த தியட்டருக்கு செல்ல வேண்டும். அந்த ஒழுங்கையின் தொடக்கத்தில் உள்ள சுவரில் அழகான எழுத்தில் அன்றைய தினம் திரையிடப்படும் படத்தின் அனைத்து விபரங்களையும் எழுதி..அத்துடன் கதையை ஒரு சிறு வரியில் எழுதிவிடுவார்.. உதாரணத்துக்கு
"இப்படியும் காதலிக்கலாமா-காதலர்கள் இணைவார்களா " இது காதல்கோட்டைக்கு அவர் எழுதியிருந்தது...

ஆனால் இதைவிட அவர் ஆங்கிலத்திரைப்படங்களுக்கு எழுதப்படும் ஒரு வரிதான் அனைவரும் விரும்பி படிப்பார்கள் அது " வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற வாசகம்... சனி, ஞாயிறு தினங்களில் காலை டவுனில் உள்ள
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் இந்த வீதியாலேயே வந்து அன்று என்ன திரைப்படம் என்று பார்த்துக்கொண்டு போவதுதான் வழமை.அன்று வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்று போடப்பட்டிருந்தால் அந்த நியூஸ் அப்படியே டியூசனிலும் தலைப்புச்செய்தியா எல்லாருக்கும் வாசிச்சிடுவானுக நம்மாளுக..

மச்சான் இண்டைக்கு மாஸ்டரிட்டை இங்கிலிஸ் கிறமர் மச்சான்.. சுப்பர் படம் போல கிடக்கு ( ஆமா அதில ஒளிபதிவு, ஒலிப்பதிவு.. சிறந்த நடிப்பு தானெ பார்க்கப்போறாய்ங்க). ஆனாலும் ஆஸ்கார் அவார்ட் கிடைச்ச படம்
ரேஞ்ச்சுக்கு நம்மாளுகளே விளம்பரம் பண்ணிடுவானுக..அதுக்கப்புறம் எப்படி படிப்பு ஏறும் .. அய்யயோ எப்படியாச்சும் 10.30 சோ , இல்லாட்டி 2.30 சோவுக்காவது போயிடணும் எண்டு துடிப்பானுக. பல தடவை டியூசன் செக்கி சந்திரி தியட்டருக்கு வந்து டியூசனுக்கு மாசக்காசு கட்டாதவங்களை வலுக்கட்டாயாம தூக்கிட்டே போயிருக்காங்க எண்டா பார்த்துக் கொள்ளுங்களேன் தியட்டரோட மதிப்பை பற்றி...

அப்போ நம்மில் பாலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவன்
மாஸ்டரின் ரெகுலர் கஸ்டமரா ஆகியிருந்தான்.. இங்கிலீஸ் கிறமர் படங்களை ஒன்றும் கூட மிச்சம் வைக்காமல் பார்த்து விடுவான்., நம்மட பள்ளிகூட கா.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலுக்காக நாங்கள் முதல் நாள் பின்னேரம் பாடசாலைக்கு வந்து அனைத்து ஆயுதங்களை செய்து கொண்டிருந்தோம்.ஆனால பாலா மட்டும் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. மாலை 4 மணியாகிவிட்டதால் நாங்கள் அனைவரும் அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்துவிட்டு எல்லோரும் வீட்டுக்கு சென்று விட்டோம். ஆனால் பாலா வீட்டிற்கு 5 மணி வரை போய்ச் சேரவில்லை.இதனால் அச்சமுற்ற அவனின் அம்மா பக்கத்தில் உள்ள டில்சான் வீட்டுக்கு சென்று அவனிடம் பாலா எங்கே என்று கேட்க அவனும் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்று கூறிவிட அவனது தாய் அழவே தொடங்கிவிட்டார்... ஏனென்றால் அன்றைய காலப்பகுதியில் யுத்தம் நமது பகுதியில் நடைபெற்றுகொண்டிருந்தபடியால் பின்னேரம் 6 மணிக்கும் முன்பு அனைவரும் வீட்டிற்குள் சென்று விடவேண்டும்...அத்துடன் இளைஞர்கள் காணாமல் போவது அதிகரித்திருந்தது இதனால் டில்சானின் தாயும் அவனிடம் பாலா எங்கே போயிருப்பான் என்று கேட்டு நச்சரிக்க தொடங்கிவிட டில்சானால் ஒன்றும் செய்யமுடியவில்லை... ஏனெனில் டில்சானுக்கும் தெரியும் அவன் எங்கே போயிருப்பான் என்ற சரி இருங்கோ அன்ரி அங்கே ஒரு பிரண்ட் வீடு இருக்கு அங்கே போயிருப்பான் என்று வெளிக்கிட.. இல்லை நானும் வரேன் எண்டு பிடிவாதமாக அவனுடன் செல்லதொடங்கினார்.

டில்சானும் சந்திரன் தியட்டர் செல்லும் வீதிக்கு வெளியே நின்று,அன்ரி நீங்க இங்கேயே நிண்டு பாருங்கோ ரோட்டால சிலவேளை பாலா வருவான் எண்டு சொல்லி அவரை ரோட்டில நிப்பாட்டி விட்டு அவன் சந்திரன் தியட்டர் ஒழுங்கைக்குள்ள சென்றான்.தியட்டரில் வெளியே நிண்டு எத்தனை மணிக்கு படம் முடியும் எண்டு கேட்கவும் படம் முடியப்போகுது எண்டு வாசலில நிண்ட பொடியன் சொல்லவும் பாலா படம் முடிஞ்சு வெளில வந்து கொண்டிருந்தான்.. டில்சானும் அவனைக்கண்டது சந்தோசடமடைந்து  
டேய் பாலா கெதியா வெளீல வாடா "
எண்டு கூப்பிட சைக்கிளை வெளியில எடுத்துகொண்டு வந்த பாலா..

"ஏண்டா மச்சான் பள்ளீக்கூடத்துக்கு வரேல்ல" 
 என்று டில்சான் கேட்க.. பாலாவும்

"மச்சான் சுப்பர் படம்டா மச்சான்..சீனைக்கேட்க மாட்டாய் சூப்பரா இருந்திச்சுடா ,நல்ல ஒரு சுப்பர் பிகரை போட்டிருந்தாய்ங்க என்னா ஒரு பர்போமன்ஸ்"

எண்டு சொல்லிகொண்டு வந்தவன் அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டான்
முன்னாலே அவனின் தாய் அவன் சொன்னதை எல்லாம் கேட்டபடி நின்றுகொண்டிருந்தார்.. அவருக்கு அருகில் இருந்த சுவரில் சந்திரன் மாஸ்டரின் கைவண்ணத்தில் திரைப்படத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது...மலையாள கனவுக்கன்னி ஷகிலா நடிக்கும் " மயக்கும் மோகினி " வயது வந்தவர்களுக்கு மட்டும்.....

09 மார்ச், 2011

ராச(சா) துரோகம்

இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் தோல்வி அடை​வதன்
பின்னணியில், சீனா, பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவன சதி வேலைகள் இருக்​குமா? ஹிமாசலப் பிரதேசத்தில் இந்திய விருந்​தினராகத் தங்கியிருக்கும் தலாய் லாமாவுக்கும், இந்திய பிரதமர் அலுவல​கத்துக்கும் இடையே நடக்கும் பேச்சுகள், கடித விவரங்களை அறிய சீனா ரகசிய வேலை​களில் ஈடுபடுகிறதா?
center;">
இப்படியெல்லாம் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சந்தேகப் படுகிறார்கள். ஏனென்றால், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை​வரிசை என்ற போர்வையில் அந்நிய நாட்டு உளவு சக்திகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதுதான்!

''எடிஸாலட் டெலிகாம் நிறுவனம் துபா​யில் இருக்கிறது. அதற்கும் பாகிஸ்தான் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்துக்கும் வியாபாரத் தொடர்புகள் உண்டு. இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்வது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம்தான். அதேபோல், டெலிநார் என்கிற இன்னொரு வெளிநாட்டு நிறு​வனமும், சீன உளவுத்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் வந்தபோது, இந்திய கம்பெனிகளை கேடயமாகப் பயன்படுத்தி, உள்ளே நுழைந்துவிட்டன.


இந்தியப் பாதுகாப்புக்கு சவால்விடும் இதுபோன்ற அந்நிய சக்திகளை ஆ.ராசா எப்படி ஊடுருவ அனுமதித்தார்? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்தச் செயலை மும்பைத் தொழில் அதிபர் ஷாகித் பால்வாவே முன்னின்று செய்து இருக்கிறார்!'’ என்பதுதான் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.

இதற்கு ஆதாரமாக மார்ச் 3-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஓர் கடிதத்தைத் தாக்கல் செய்தார் சுவாமி. உள்துறை அமைச்சகத்தில் இருந்து நிதித் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்ட ஷாக் கடிதம் அது!

உள்துறை அமைச்சராக சிவராஜ் பாட்டீல் இருந்தபோது உள்துறையில் இருந்து, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலுவல​கத்துக்கு போன கடிதம் அது. அதில், 'துபாயைச் சேர்ந்த எடிஸாலட் டெலிகாம் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவ​னத்தில் நேரடி முதலீடு செய்வதால், நமது தேசப் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படலாம்’ என்று சுட்டிக்காட்டி உள்ளது. இதனை தொலைத்தொடர்புத் துறையின் கவனத்துக்கு நிதி அமைச்சகம் உரிய நேரத்தில் கொண்டுசென்றதா? என்று தெரியவில்லை! ஆ.ராசாவும் இது விஷயமாக மற்ற இரு துறைகளிடம் கருத்துக் கேட்டிருக்கவேண்டும். ஆனால், கேட்கவில் லை. இந்த நிலையில்தான் டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 சர்க்கிள்​களுக்கு செல்போன் சேவை நடத்த அந்த வெளிநாட்டு கம்பெனிக்கு உரிமங்கள் வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தை சுவாமி எப்படியோ கைப்பற்றி, தனது தரப்பு வாதத்துக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

''அந்த கம்பெனிகளுடன் தொடர்​பில் இருந்த ஆ.ராசா மீதும், அவருடன் தொடர்பில் இருந்த வேறு சில அரசியல் பிரமுகர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும்'' என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சுவாமி.

இது தொடர்பாக, விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி, கோர்ட்டில் பதில் மனுவைத் தாக்கல் செய்யச் சொல்லி இருக்​கிறார்கள். அதனால், ''இனி நடக்கப்​போவதை மார்ச் 15-ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்..!'' என்று டெல்லியில் அதிகாரிகள் சிலர் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.

இது குறித்து நாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டோம்.

''குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பலன்பூர் என்கிற ஊரில் ஷாகித் பால்வாவுக்கு ரகசிய விமானதளம் உள்ளது. அங்கே இருந்து, அடிக்கடி துபாய்க்கு சென்று வந்திருக்கிறார். சட்ட விரோதமான முறையில் பால்வா ஒரு விமானதளம் நடத்தி வந்ததை விசாரிக்க வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் கேட்டு இருக்கிறேன். இந்திய உள்துறை அமைச்சகம் சந்தேகங்கள் எழுப்பிய கடிதத்தை ஆ.ராசா புறக்கணித்துவிட்டு, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை அவசரமாக வழங்கியது ஏன் என்ற கேள்வி இந்தியாவின் இறையாண்மைக்கு முக்கிய​மானது.

மும்பையில் இருந்து அடிக்கடி குஜராத் வரும் பால்வா, தனி விமானம் மூலம் துபாய்க்கு சென்று தாவூத் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட சில இடங்​களுக்கு சென்று வந்துள்ளார் என்பதே என் சந்தேகம். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து 2ஜி அலைவரிசை உரிமங்களை 4,500 கோடிக்கு எடிஸாலட் டெலிகாம் நிறுவனம் வாங்கிக்கொள்வது தொடர்பான பணப் பரிமாற்றங்​களுக்காகவும், பால்வா துபாய்க்கு ரகசியமாகப் போய் வந்திருக்கிறார். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்!'' என்கிறார் சுவாமி.

இந்த விவகாரம் இப்போது புயல் கிளப்பி வருவதால், 'எதுவுமே வேண்டாம்... நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம்' என்று எடிஸாலட் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் சுழலில் இருந்து மீள வழி தேடி, இந்திய அரசியல் வி.ஐ.பி-கள் மூலம் லாபி செய்துவருகிறது.

ராசா மீதான வழக்கை இறுக்க இந்த ஆதாரம் அதிகம் பயன்படும் என்கிறார்கள்! இத்தனைக்கும் நடுவே டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையிலிருந்தே அவசரமாக ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாராம் ஷாகித் பால்வா. இது ராஜ துரோக வழக்கிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவா... அல்லது, கம்பெனியைக் காப்பாற்றவா?

நன்றி

ஜீனியர் விகடன்..

07 மார்ச், 2011

வானம் திரைப்படப்பாடல்-எவண்டி உன்னைப்பெத்தான்..



சிம்பு ,பரத்,அனுஸ்கா செட்டி,பிரகாஸ்ராஜ்,சரன்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவர இருக்கும்
திரைப்படம் வானம்,இந்தப்படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.முதல்முறையாக படத்தின் ஒரெஒரு பாடலை மட்டும் இந்தப்படத்துக்காக வெளியிட்டிருக்கிறார்கள்.. சிம்ம்பு தனது ஸ்டைலில் பாட்டில் பட்டை கிளப்பியுள்ளார்.


பாடலை தரையிறக்கிகொள்ள இங்கே கிளிக்குங்கள்

60 இன்னா ஆட்சியில பங்கு 63 இன்னா இருக்குடி உனக்கு சங்கு

60 இன்னா ஆட்சியில பங்கு 63 இன்னா இருக்குடி உனக்கு சங்கு என்று சோனியாவிற்க்கு
கதை வசனம் எழுத துடிச்சிருக்கிறீங்க போல... தாரேன்னு சொன்ன 60 க்கும் அதிகமா 3 தொகுதி கூட கேட்டாய்ங்க... நீங்களும் வெட்கம் மானம் சூடு சொரணையை எத்தனை தடவைதான் அடகு வைக்கிறது... இப்ப உண்ணாவிரதம் 1 மணித்தியாலம் கூட இருக்கமுடியாத நிலைமையில கூட உங்கட பாடி கொண்டிசன் இல்லை,எற்கனவே எத்தனியோ தடவை பட்டி, ரிங்கரிங் பார்த்து ஏதோ இன்னைக்கோ நாளைக்கோ பாடி விழுகிற நிலைமையில இருக்கு ஏன் றிஸ்க்கு எடுக்கிறீங்க... பேசாம ஓய்வு எடுத்திடுங்களேன்...அதுதான் உங்கட பரம்பரைக்கு 2500 வருடம் வரைக்கும் சொத்தை ஏத்தீட்டீங்களே.


3 தொகுதிகள் கூடக்கேட்டதால் தமிழனுக்கு தலைக்குனிவு ஏற்பட்டது அதுதான் தொடர்ந்தும் குனியாமல் நிமிர்ந்து பார்த்து வெளியே போ என்று சொல்லிவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிறீர்களே இதை 2009 ம் ஆண்டு எம் தமிழ்மக்கள் பிணங்களாய் வீழ்ந்து கொண்டிருக்கையிலே நிறுத்தச்சொல்லு இல்லாவிட்டால் 40 பேரும் ராஜினாமா என்றீர்களே அதை நீங்கள் நடைமுறைப்படுத்தியிருந்தால் அனைத்து ஈழத்தமிழர்களும் உங்களை இதயத்தில் வைத்து கொண்டாடியிருப்பார்களே...ஆனால் இப்போதுதான் தெரிகிறது
ஏன் அப்படி செய்யவில்லை என்று... அந்த ஒப்பிரேசன் ராஜினாமவுக்காக எவ்வளவு கோடி கைமாற்றினீர்கள் காங்கிரசிடமிருந்து ?

500 க்கும் மேல் தமிழ்நாட்டு தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவம் கொலை பண்ணிய போது கடிதம் போட்டு தந்தி அடித்து காதல் பண்ணினீர்களே .... அப்போது ஏன் பண்ணவில்லை ராஜினாமா ?

இப்போ உங்கள் வீட்டுக்குள் பிரச்சினை வந்தவுடன் ராஜினாம நாடகம்... அதுசரி ... இலவசத்தை அள்ளி வழங்கினால் இந்த ஈனத்தமிழர்கள் இழிச்சுக்கொண்டு நமக்கு வோட்டுப்போடுவார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நம்பியிருந்தவர்களை கைவிட்டீர்களே அந்த வினைக்கான அறுவடை வெகுவிரைவில் அனுபவிக்கப்போகிறீர்கள்.....

கண்மணியே பேனாக்கு ஓய்வு ஏது
இந்த "க" னாவுக்கு ஓய்வு ஏது
அரசியலில் நான் ஒரு முடிச்சவிக்கி
எம்புள்ள ஒரு மொள்ளமாரி
நான் முதலமைச்சர் ஆகவேண்டும்
உன் குடும்பம் அதற்காய் கடலில் சாக வேண்டும்
ஈனத்தமிழன் நீயிருக்கும் வரைக்கும்
நான் போடுவேன் இலவச அரிசி
நீ கொடு எனக்கு முதலமைச்சர் பரிசை

06 மார்ச், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தில் எந்திரனுக்கும் முதலீடு..

தொகுதி உடன்பாட்டுக்காக ஆ.ராசாவை பகடைக்காயாக வைத்து மங்காத்தா விளையாடி வந்த காங்கிரஸ் கட்சிக்கு தடாலடியாக கூட்டணியில் இருந்து விலகி செக் வைத்திருக்கிறார் கருணாநிதி.பல அலைகழிப்புக்கள்,படியாதா பேரமென ஜவ்வாக இழுபட்டுக்கொண்டிருந்த இந்த இழுபறி இப்போ முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியையும் ,ஒரு சிலருக்கு ஆப்பையும் தி.மு.க விற்கு கலக்கத்தையும் கொடுத்திருக்கிறது.கூட்டணியில் இருந்து கொண்டே ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் ராசா ராஜினாம,கைது,கலைஞர் டீ.வி ரெய்டு எண்டு டெயிலர் ஓட்டியவர்கல் இனிமேல் எப்படியெல்லாம் மெயின் பிக்சர் ஓட்டப்போகிறார்களோ எண்டு கதி கலங்கிப்போயிருக்கிரார்கள் தி.மு.க வினர்.. ஆனாலும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாங்களும் சப்பாத்தியில உப்பு போட்டுத்தான் திங்குறோம் குட்டகுட்டக் குனிய மாட்டோம்னு பேட்டி கொடுத்து காங்கிரசை உசுப்பேத்தியிருக்கிறார்.



ஆனாலும் ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குபற்றியவர்கள் ,அந்த ஊழல் பணத்துக்கு
என்ன நடந்தது என்பதை 60% மான தகவல்களை சி.பி.சி.ஜ.டியினர் கலெக்ட் பண்ணி வைத்திருந்தனர்.கூட்டணி தொகுதி பங்கீட்டில் துருப்புச்சீட்டாக பயன்படுத்தாலம் என நினைத்திருந்தார் சோனியா,இனிமேல் வேலைக்கு ஆகது என்பதால் முழுப்பலத்தையும் உபயோகித்து திமுகவின் பலத்தை சிதைக்க ஸ்பெக்ட்ரம் விடயத்தை ஊதிப்பெரிதாக்க
அனைத்து ஆர்டர்களை கொடுத்துவிட்டார் எனத்தெரிகிறது.


இந்த விடயத்தில் சூரிய தொலைக்காட்ச்சி நிறுவனத்து உரிமையாளருக்கு லம்பா ஒரு சூட்கேஸ் கல்லாகட்டப்பட்டிருக்கிறது.இந்தப்பணத்திலேயே மிகப்பிரமாண்டமாக எந்திரன் படம் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான ஒரு சில உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை
சி.பி.சி.ஜ.டியினர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இனிவரும்காலங்களில்
மத்தியில் ஆட்சியில் பங்கு வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க வின் அமைச்சர்கள்
மீதும் கட்சியின் மீதும் ஆக்ஸன் தொடங்கலாம் என அச்சம் நிலவுகிறது.




இதனால் வெகுவிரைவில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில்
ராத்திரி நேரத்தில் படுக்கையில் கிடந்தவரை அலேக்காக தூக்கியது சி.பி.ஜ
என்று பிளாஸ் நியூஸ் போட்டு " அய்யோ கொல்லுறாங்க அய்யோ கொல்லுறாங்க " என்டு
இளைஞனுக்கு கதை வசனம் எழுதிய கலைஞர் அந்த வசனத்தை டப்பிங் இல்லாமல் தானாகவே பேசுவதையும் குளோசப்பில் காட்டப்போகிறார்கள்...
முடிஞ்சா ஏதாச்சும் பிட்டை சேர்த்துப்போடுங்க மக்கள் அப்பத்தான் தொடர்ந்து பார்த்து
ரெரராவாய்ங்க...

பத்த வைச்சிட்டியே பரட்டை....

04 மார்ச், 2011

உந்தாளுக்கு நாக்கில சனி பாருங்கோ-குமர்ப்பொடியன் குஞ்சிதபாதம்




போன 25 ம் திகதி இலங்கையோட விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக சொல்லியிருந்தார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்குப் பேரிழப்பாக அமைந்ததாகவும் அத்தோட விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால போரில் ஆனையிறவு வீழ்ச்சியே இராணுவத்தின் பாரிய தோல்வியாகும். அனுராதபுர விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் நாங்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் சேதமாகும் என்றும் அவர் தனது பேட்டியில மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதை உந்த மனுசன் மனசில ஒண்ணுமே வைச்சுக்கொள்ளாம வெளியில சொன்னதை பாருங்கோ உவன் கோவிந்தசாமிக்கு பிடிக்கல போல....
அதுமட்டுமில்ல இந்தாள் இதைச்சொல்லி 5 நாள்தான் போயிருக்கும்..உந்த தாக்குதலில
பங்குபற்றிய கிபிர் நடுவானில வெடித்துச்சிதற , அதை ஓட்டி வந்த விமானியும் பலியாகி
இருந்தார்...



உது மட்டுமில்ல உந்த மனுசனோட தேப்பன் ஹரி குணதிலக்கவும் உவங்கட விமானப்படைத்தளதியா 1976- 1981 வரைக்கும் இருந்தவரெல்லே,அதுக்குபிறகு அந்த மனுசன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராகவும் இருந்தவர்..அதால உவங்களோட குடும்பத்துக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறதை உந்த கோவிந்தசாமிக்கு பிடிக்கல பாருங்கோ... உவனும் சரத் மாதிரி அரசியலில இறங்கிடுவானோ எண்டு பயத்தில பயபுள்ள இரவுபகலா குப்பிறக்கிடந்து யோசிச்சிருக்கிறான்.அதுக்குபிறகு உவருக்கு பாதுகாப்பு அமைச்சில ஒரு பொறுபான பதவியைகொடுத்துப்போட்டு அந்தாள தங்களோட கண்காணிப்பிலேயெ வைச்சிருக்கிற பிளான் போல...

இன்று கடாபிக்கு ராஜபக்ஷே ஆறுதல் தெரிவிப்பு



தனது நாட்டு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது
அந்நாட்டு ராணுவத்தினரை ஏவிவிட்டுள்ள முகமது கடாபியை கைது செய்யுமாறு சர்வதேச போர்க்குற்றவையல் நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியுள்ள நிலைமையில் இன்று முகமது கடாபியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி கடாபியை ஒரு தீரமான தலிவா என்றும் ... அவரினால் இப்போது மக்களால் நடத்தப்படும் பயங்கவாதத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் அவருக்கு ஊக்கம் அளித்துள்ளார். இதனை கடாபியின் கட்டுபாட்டிலுள்ள தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையம் சற்று முன் அரேபிய மொழியில் இலங்கை ஜனாதிபதியின் படத்துடன் ஒளி பரப்பியுள்ளது .

சேர் நியூ டைமா ஓல்ட் டைமா

1996 ம் ஆண்டு இலங்கையில் மழைவிழ்ச்சி குறைவானதால நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனை ஈடு செய்யும் முகமாக அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் இலங்கை நேரத்தை 30 நிமிடங்களால்
முன்நகர்த்த ஏற்பாடு செய்தார்.அப்போது இலங்கை நேரமும் இந்திய நேரமும் ஒரேநேரமாகத்தான் இருந்து வந்தது( ஒரு சிலநிமிடங்கள் வேறுபாடு) ஆனால் இந்த ஏற்பாட்டின் பின்பு இலங்கையில் காலை 8 மணியென்றால் இந்திய நேரம்
7.30 ஆக இருந்தது. இந்த நேர மாற்றத்தின் காரணமாக பாமர மக்கள் மத்தியில் பாரிய சிக்கல்களை ஏற்படுட்தியது. அப்போது மாணவர்களாக இருந்த நம்மத்தியிலும் கூடத்தான்.யாழில பல பாடசாலைகள் இந்த நியூ டைமை( புதிய நேரம்)
தமது பாடசாலை இறுக்கமாக கடைப்பிடிட்தார்கள்.. சிறு பாடசாலைகளில் ஓல்ட் டைமையே( பழைய நேரத்தை)கடைப்பிடித்தார்கள்..
இந்த சிக்கல் காரணமாக யாராவது டைம் கேட்டால் நமக்கு ரெண்டு விதமா டைம் சொல்லவேண்டிய கடப்பாடு இருந்திச்சு.அப்படி மொட்டையா 8 மணி எண்டால் திருப்பி நம்மகிட்ட நியூ டைமா ஓல்ட் டைமா எண்டு கேட்பானுக.



இப்படி இருக்கையில் நமது க.பொ.த உயர்தர வகுப்பறையில் நடந்த கதைதான் இது.நம்ம கிளாஸில வெறைட்டிய நம்ம பயலுக இருந்தானுக.... ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப். ஒரு சிலர் புத்தகத்துக்குள்ளேயே மூஞ்சியை எந்த நேரமும்
புதைச்சு வைச்சிருப்பானுக.. ஒருசிலர் புத்தகம் அரட்டை , அடுத்தது நம்ம கோஷ்டி.. எப்பவும் அரட்டை..வகுப்புக்குள்ள சேர் வந்தா மட்டும் நல்லபிள்ளையாட்டம் பாடத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவோம்..நாமெல்லாம் உயர்தர கணித பாட பிரிவில படிச்சுக்கொண்டிருந்தோம்.. அப்போ நமக்கு பிரயோக கணித பாடத்தை( Applied Maths)
சிறிதரன் ஆசிரியர் எடுத்து வந்தார். அவர் அநியாயத்துக்கு ரெம்ப சின்சியரா படிப்பிப்பார்.. நாங்க இடையில கேள்வி கேட்டா மனுசன் கிளீன் போல்ட் ஆகிடுவார்..அதுக்கப்புறம் எல்லா புத்தங்களையும் Refer பண்ணி நமக்கு விடை சொல்லுவார்.
அதனால நாங்கெல்லாம் அடிக்கடி அவரை குழப்பி விடுவதுண்டு.

அன்றையதினம் எமக்கு சார்பு வேகம் பற்றி பாடம் எடுத்து விட்டு .டேய் நான் சொல்லுற இந்த கணக்க எழுதுங்கடா எண்டு சொல்லிவிட்டு புத்தகத்தில் இருந்த ஒரு கணக்கை வாசிக்கத்தொடங்கினார்.

ஒரு கப்பலானது காலை 9 மணிக்கு துறைமுகத்தைவிட்டு புறப்பட்டது என்று தொடங்க

நாங்க பின்னுக்கிருந்து

"சேர் நியூ டைமா ஓல்ட் டைமா "எண்டு கேட்க மனுசனும் ஏதோ நினைப்பில் நியூடைம்தாண்டா எண்டு சொல்லிவிட்டார்..
அப்புறம் பாருங்க சிரிப்பு சத்தம் வகுப்பறையையே அதிரவைத்தது.அப்போதுதான் சுதாகரித்துக்கொண்டு முன்னுக்கிருந்த பையன் கிட்டகேட்டார் ஏண்டா சிரிக்கிறாங்கள் எண்டு அவனும் நம்ம கதையை சொல்ல...
டேய் அப்பிடியே அந்த பின் பெஞ்ச்காரர் முன்னுக்கு வாங்கடா எண்டு கூப்பிட்டு.... பிறகென்னா எல்லாருக்கும்...
சங்கே முழங்கு ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

03 மார்ச், 2011

ராங்கோலும் மொபிட்டல் சிம்மும்..

2003 ம் ஆண்டு காலப்பகுதியில் டயலொக் சிம் வாங்குவதெண்டால் வீட்டு முகவரி, டெலிபோன் பில் இல்லாட்டால் மின்சார பில் கொடுக்கவேணும் எண்டு பல கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் நாங்களெல்லாம் நம்பி இருந்தது இரவு 10 மணிக்கு பிறகு 5 ரூபா குற்றீயைப்போட்டு 10 நிமிடம் கதைக்கும் SLT பப்ளிக் டெலிபோன் பூத்தைத்தான். நம்ம கெளடான ஏரியாவில ஒரே ஒரு பூத் மட்டும் இருந்திச்சு.அதுவும் அந்த நேரம் பார்த்து கியூவில நித்திரை முழிச்சு வந்து நிப்பானுக.அப்படியே லைனில நிண்டு ஒருமாதிரி நம்ம டேர்ண் வந்தவுடனேயே போய் ஒரு வாயில வந்த 10 நம்பரைப்போட்டு டேய் மச்சி ஏண்டா இண்டைக்கு லெக்சர்ஸ்க்கு வரல எவ்வளவு நேரம் பார்த்துக்கிட்டு நின்னோம் தெரியுமா …இண்டைக்கு பிரக்டிக்கல் நல்லாப்போச்சு எண்டு ஒரு பிட்டை போடுவோம்.(கேக்கிறவன் கேனயனா இருந்தா நாங்க கிபிரே (Kifir )ஓட்டுவோமில்ல_.. மறுபக்கத்தில யாராச்சும் பொண்ணு கதைச்சா சாரி மிஸ் மாறி அடிச்சிட்டோம்னு ஒரு பிட்டை போட்டு அந்த பக்கதில ரியாக்சன் என்னன்னு பார்ப்போம் , பரவாயில்ல ,நீங்க எந்த யூனிவேர்சிட்டியில படிக்கிறீங்க எண்டு அந்த பொண்ணு மட்டும் கேட்டிட்டான்னு வைச்சுக்குங்களேன்..அப்படியே அந்த நம்பரை நம்ம டேட்டா பேசில அப்லோட் பண்ணிவைச்சிடுவோம்... யாராச்சும் ஆம்பிளீஸ் கதைச்சா லைன் கட்தான்.



இப்பிடி நம்ம டெலிபோன் ராங்கோல மேட்டர் போய்க்கொண்டிருக்கும் போதுதான்2003 ம் ஆண்டு ஜீன் மாதம் என நினைக்கிறேன் ,அப்போ மொபிடல் நிறுவனம் இலங்கையிலே தனது சேவையை தொடங்குவதற்கான ஆரம்ப வேலைகளில் மும்முரமாக இருந்தது.மொபிடலின் வருகை எமக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது. அப்போ நம்ம வேலாசென்னும் அதற்கு அப்பிளை பண்ணீயிருந்தாப்பில.

நம்மளக்கு செமிஸ்டர் லீவு விட்டதனால நான் யாழ்ப்பாணம் போய்விட வேலாசென் மட்டுமே ரூமில் தங்கியிருந்தான். நான் யாழ் போய் 3 ம் நாள் விக்கி அக்கா ஓடி வந்து சொன்னா ,கீர்த்தி உன்னோட பிரண்ட் றமணனும் வேலசென்னும் இத்தோட 4 தடவையா போன் பண்ணிட்டாங்கள் இன்னும் 15 நிமிடத்தில போன் பண்ணுறன் எண்டு சொன்னவங்கள் கெதியா வா எண்டு சொல்லிட்டு போனா.

விக்கி அக்கா எங்கட வீட்டுக்கு ஒரு 100 மீட்டர் தூரத்திலதான் இருக்கிறா.அவவோட வீட்டில லாண்ட் லைன் போன் இருக்கு.அவங்க வீட்டில குட்டி கொமினிகேசனே நடத்தி வந்தாங்க அந்த ஏரியாவுக்கு. அப்போ லாண்ட் லைன் போன் வீட்டுக்கு எடுப்பதெல்லாம் முடியாத காரியம் ஆகையால் அந்த ஏரியாவில் உள்ள எல்லாரும் அவவோட வீட்டு நம்மரைத்தான் தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து வைச்சிருந்தோம் அவசரத்துக்கு கோல பண்ணுவதற்காக.

நானும் வீட்டில இருந்து உடனேயே விக்கி அக்காவீட்டுக்கு போய் விட்டேன்.ஏன் இவனுங்க இவ்வளவு தடவை கோல் பண்ணினாங்க எனக்கு என்ன அப்படி அவசரமா இருக்கும்.... வேலாசென்னுக்கு ஏதாச்சும் லவ் கிவ் சக்கஸ் ஆகிட்டா ? எந்த பொண்ணாவது லவ் லெட்டர் கொடுத்திட்டாளா ? இல்லாட்டி ஏதாச்சும் நம்ம கெளடான ஏரியாவுக்குள்ள பிராப்பிளம் ஆகிட்டா எண்டு சோசிச்சுகொண்டிருக்கும்போதே டெலிபோன் மணி ஒலிக்கத்தொடங்கியது.அது உண்ட பிரண்டாத்தான் இருக்கும் எடு எண்டு விக்கி அக்கா சொல்லவும் நான் எடுத்து ஹலோ என்றேன்.. அடுத்த முனையில டேய் மச்சான் கீர்த்தி எப்படி இருக்கிறாய் எண்டான் வேல சென்..
நல்ல சுகம் மச்சான் ஏண்டா எடுத்..... அதை கேட்டு முடிக்கவிடாமல் வேலாவே கதைக்கத்தொடங்கினான்.... என்னமச்சான் காலைல சாப்பிட்டாய் எண்டு கேட்டான் ? புட்டும் கிழங்குக்கறியும் எண்டு சொல்ல , டேய் கிழங்கை மச்சான் நல்லா
வதக்கி கறி வைச்சு புட்டோட சாப்பிட்டு பாரு மச்சான் சூப்பரா இருக்கும் ,கட்டாயம் கருவப்பிலை இலை போடணும்
அப்பதான் கறி வாசமா இருக்கும் அதுசரி நைட்டில அங்கே மழையாடா... இங்கே ஒரே வெய்யில் மச்சான்..
இப்பிடி என்னை கதைக்கவிடாமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே போனான். அதுக்கு பக்கத்தில நிண்டு றமா
எடுத்துகொடுத்துக்கொண்டிருந்தான்.. நானும் கடுப்பாகி டேய் ஏண்டா அவசரமா கோல் பண்ணினாய் எண்டு
கேட்டேன்... அப்போ வேலா கேட்டான் , மச்சான் காலங்காத்தாலேயெ 4 தரம் நாங்க எடுத்திட்டம் எண்டு விக்கி அக்கா
சொல்லியிருப்பாவே ... நானும் ஓம் மச்சான் அதுதான் நானும் ஏதாச்சும் அவசரமோ எண்டு ஓடிவந்தனான் என்ன மேட்டர் சொல்லுடா
எண்டு சீரியஸாய் கேட்டேன் அதுக்கு அவன் சொன்னான்

இல்லை மச்சான் மொபிட்டல் சிம்முக்கு அப்பிளை பண்ணியிருந்தேன் தானெ அது இண்டைக்கு தந்திட்டாங்கடா எண்டு சொல்லவும்
அதைச் சொல்லவாடா இவ்வளவு அவசரமா எடுத்தாய் எண்டு கேட்டேன்... இல்ல மச்சி இந்த சிம்மில அவுட்கோயிங்,இன்கம்மிங்,SMS
எல்லாமெ பிறீடா,அதுதான் எடுத்தனாங்கள் நீ கதைச்சுக்கொண்டிரு மச்சான்... 11 நிமிசத்துக்கு ஒரு தடவை கட்டாகும்
திரும்ப நான் எடுக்கிறேன் எண்டு சொல்லவும் எனக்கு ரெம்ப கடுப்பாகிட்டு... ஏன்னா நான் இன்கமிங் வதாலும் நிமிடத்துக்கு
விக்கி அக்காவுக்கு காசு கொடுக்கணுமெல்லோ...அதனால் டேய் வேலா நீ பிறகு எடுடா எனக்கு கொஞ்சம் அலுவல்
இருக்கு எண்டு சொல்லி நழுவப்பார்க்க அவனும் ஓக்கேடா.. நீ கொழும்பு வரும்போது உனக்கு தெரிஞ்ச பிகர்களோட வீட்டு
நம்பரை எடுத்துக்கொண்டு வாடா பிறீதானே கதைக்கலாம் எண்டு வேற உசுப்பேத்தி விட்டான்... அப்போ நான் சொன்னேன்
வேண்டாம் மச்சான் பிறகு பிடிபட்டா பிரச்சைனை ஆகிடும் எண்டு சொல்ல... அப்போ.. உண்ட ஏரியாவில
இருக்கிற நல்ல பிகருகள் வேர்க் பண்ணுற கொமினிக்கேசன் நம்பர் எல்லாம் நோட் பண்ணிட்டு வா மச்சான் டைம்
பாஸிங்கா கதைக்கலாம்டா எண்டு பிஞ்சு மனசில நச்சு விதையை வேற விதைச்சு விட்டான் வேலாசென்.. நாமளும் அப்போ
மந்திரிச்சு விட்ட கோழியாட்டம் சரி கொஞ்சம் போய்த்தான் பார்ப்பமே எண்டு முக்கியமான நம்பர்களை நோட்
பண்ணிக்கொண்டு கொழும்புக்கு 2 வது கிழமையே போனேன்... அதுக்குப்பிறகுதாங்க
வேலாசென்னுக்கு சுக்கிரதிசையும் நம்மளுக்கு 7 1/2 நாட்டு சனி சுழட்டி அடிக்க ஆரம்பிச்சிச்சு....

தொடரும்...