02 மே, 2011

வெளியான ஒசாமவின் படம் பொய்யானது -உண்மை அம்பலம் ப்டம் இணைப்பு

ஒசாமாவுக்காகா தி.மு.க கலைஞரின் அஞ்சலி கவிதை

செளதியில் பிறந்த செளபாக்யனே
எண்ணில்டங்கா மனைவி கொண்ட
என் இனத்த்வனே


அல்கொய்தா ஆரம்பித்த அண்ணலே
நீ அமெரிக்காவை ஆடவைத்த நாள் செப்டம்பர் பதினொன்று
தன் மக்களுக்காக போராடுவதில் நாம் ஒன்று

செல்வம் கொழித்த என் செல்லமே
ஊழல் வழக்குக்காக உன்னைக்கொன்றிருந்தால்
குற்றம் நிருபிக்கப்படாத நீ உத்தமன் என்றிருப்பேன்

அரபு நாட்டின் அறமே
உன் கழகத்தின் மக்களின் ஓட்டு தேவை இல்லாததாலே
என் மூன்று மணீநேர உண்ணாவிரதம் இல்லாமல் போனதே

தாடிவைத்த தூயவனே
என் குடும்பத்துக்கும் உன்னால் எந்த உபயோகம் இல்லை
அதனால் ஒபாவுக்கு நான் கடிதம் எழுதவும் இல்லை

மே1 இல் மறைந்த மேதையே
உன்னோடு சேர்ந்து கொள்ளையடிக்கும் எண்ணத்திற்கு வைத்தாய் தீ
இருந்தாலும் என்றும் இந்த அன்பு அண்ணனின் உடன்பிறப்பு நீ


முத்தமிழ் அறிஞர்,பாசத்தலைவன்.
கலைஞர்,முதல்வர் ,கருணாநிதி

"தலிவரே தமினினத்தலைவனை விட்டுவிட்டார்கள் கிராதகர்கள்"

வெளியானது இறந்த பின்லேடனின் புகைப்படம்

மக்கள் கருத்து-புதுசு கண்ணா ரவுசு..

ஒவ்வொருநாட்களும் ஒவ்வொரு செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒரு எண்ணத்தில் இந்த தொடர் மக்கள் கருத்து பதிவு ஆரம்பமாகிறது...ஆரம்பமே ரணகளமா இருக்க ஒசாமாவோடு ஆரம்பிப்போமா..


அமெரிக்காவிடமிருந்து பல நாடுகளை காப்பாற்றிய நல்லவர் ஒசாமா, உன்னை இழந்து தவிக்கு சுற்றமும் நட்பும் # கண்ணீர் அஞ்சலி

இனி விஜயகாந்த் என்னதான் பண்ணுவாரு! #ஒசாமா மரணம்!

இரும்புக்கோட்டை அமெரிக்காவுக்கே ஆப்படித்த ஆப்கானிஸ்தான் விடிவெள்ளி போர்க்குணம் கொண்ட போர்வாள் அஞ்சா சிங்கன் பின்லேடனுக்கு அஞ்சலி

ஒசாமா பின்லேடன் சாவு. >> அப்போ இனிமேல் அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் அரபு தேசங்களிலிருந்து வெளியேறி விடுவார்களா? # டவுட்டு

அப்பாடா ஒருமாதிரி ஒசாமாவை போட்டுத்தள்ளீயாச்சு நெக்ஸ்ட்டு சிறிலங்காவை குறி வைப்போமா மகிந்த ரெம்ப டாச்சர் கொடுக்கிறான்யா

ஒசாமா பின்லேடன் செத்ததை கொண்டாட ஒரு நாள் லீவு விடலாம்! #சரக்கெடு கொண்டாடு!

அறிந்தே இராத நரகாசூரனை கொன்றதற்காக தீபாவளின்னு சொல்லி லீவு கொடுக்கிறய்ங்க, அமெரிக்கா சாதிச்ச இந்த சாதனைக்காக உலகம் பூரா இதுக்கு லீவு கொடுக்க மாட்டய்ங்களா ?

அதுசரி இவ்வளவு டெக்னோலஜி வைச்சிருக்கிற அமெரிகா இதுவரை ஒசாமாவோட பாடியைக்காட்டலையே-டவுட்டு


வழக்கு வளையத்திலிருந்து தி.மு.க நிச்சயம் வெளியே வரும் # வியுக ரகசியத்தை ராசாவுக்கு சொல்லி கொடுத்திருப்பாரோ ?

அடுத்து அமெரிக்கா தனது எல்லையை பாகிஸ்தான் வரை விரிவுபடுத்தும்

ஹெலிகாப்டரில் சென்ற அருணாச்சல் முதல்வர் மாயம்- தமிழ்நாட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் பார்சேல்....

பல இளம் பெண்களை பதைபதைக்க வைத்த படக்காட்சிகள்


கண்ணா ரெண்டாவது லட்டும் திங்க ஆசையா

அப்பாரு சொன்னாரு தமன்னா வேணாம் இந்த தங்ககிளியே போதும்ன்னு..
பயபுள்ள பண்ணூறதையும் பண்ணீபுட்டு பாரேன் அப்பாவி மாதிரி போஸ் கொடுக்கிறதை..


தமன்னா நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க நாங்க இருக்கோமில்ல..கடைசிவரைக்கு கண்கலங்காம காப்பாத்துவோமில்ல..

துட்டகைமுனுவாக நடிக்கப் போய் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார் அமைச்சர் மோ்வின் சில்வா-காணொளி இணைப்பு

அமைச்சர் மோ்வின் சில்வா துட்டகைமுனு மன்னனாக நடிக்க முயன்று யானையிலிருந்து தவறிக் கீழே விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் மோ்வின் சில்வா துட்டகைமுனு மன்னனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் "சுரங்கனா லொவின்" எனும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் போது அமைச்சர் மோ்வின் யானை மேலேறி போருக்குப் போவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஆயினும் யானை மீதேற முயன்ற அமைச்சர் மோ்வின் சில்வா தவறிக் கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்த வேகத்தில் யானை மிரண்டு குழம்பிவிட அவரது மெய்ப்பாதுகாவலர்கள் விரைந்து செயற்பட்டு அமைச்சரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஆயினும் அமைச்சர் மோ்வின் சில்வா யானையிலிருந்து கீழே விழுந்த காட்சி அங்கு திரண்டிருந்த அனைத்து ஊடகவியலாளர்களினதும் டிஜிடல் கேமராக்களில் படமாக்கப்பட்டுள்ளது. அவற்றை அழித்து விடுமாறு அமைச்சர் கடும் தொனியில் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவ்வாறு தான் கீழே விழுந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானால் அதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துக் கடும் தண்டனையளிக்கவுள்ளதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த காணொளிக்கு பதிலாக அதே பாணீயில் இடம்பெற்ற யானைக்காட்சி உங்களுக்காக

என்மீது போர்க் குற்றமா?'- மேதின கூட்டத்தில் மகிந்த கேள்வி

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.



தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக பொய்க்குற்றச்சாட்டு கொண்டுவருவதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இதன் மூலம் சீர்குலைக்க வேண்டாம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் துறையினர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்காக விசேட ஓய்வூதிய திட்டமொன்றைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சியை எந்தத் தடைகள் வந்தாலும் நிறைவேற்றியேத் தீருவேன் என்றும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மே தினச் செய்தியில் சூளுரைத்தார்.

29 ஏப்ரல், 2011

ரஜனியை தூக்கி எறிந்த வடிவேலு..மறைத்த சண்டீவியும் போட்டுக்கொடுத்த தினமலரும்

சற்று முன் சன் டீவியிலும் கலைஞர் டீவியிலும் வடிவேலு கலைஞரை சந்தித்து விட்டு வேளியேறும் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த காணொளியை பிளாஷ் நியூஸில் போட்டுக்காண்பித்துக்கொண்டிருந்தார்கள்

"அதில் தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.

ஆனால் அடுத்ததாக நிருபர் கேட்ட ஒரு கேள்வியையும் பதிலையும் கட் பண்ணிவிட்டார்கள் ஆனாலும் விடுவார்களா நம்ம நிருபர்கள் வெளியிலே பத்தவைச்சிவிட்டார்கள்
அந்த உலக மகா கேள்வியும் பதிலும் இதுதான்


"ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க... என்று சிரித்தபடியே கூறினார்"

இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே என்ற சவுந்தர்ராஜனின் பாட்டுத்தான் நினைவு வருகிறது...


அதுசரி கலைஞருக்கே ஆறுதல் சொல்லுமளவிற்கு வடிவேல் அரசியலில் பெரிய அறிவாளியாகிட்டாரா... இல்லை மத்திய அமைச்சர் பதவி கேட்கிறாரா?

மச்சி வில்லி திருமண வாழ்த்துக்கள்டா

1 ஆம் நூற்றாண்டின் ஒரு அரச குடும்ப மணப்பெண்ணான கேட் மிடில்ட்டன், தனது திருமணத்தின் போதான பிரமாணத்தில், தனது கணவருக்கு கீழ்ப்படிந்து நடப்பேன் என்று வாக்குறுதி அளிக்காமல், அவர் மீது காதலுடனும், மரியாதையுடனும், ஆறுதலுடனும் அவரை வரிந்திருப்பேன் என்று வாக்குறுதிவழங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்.



வில்லியத்தின் தாயாரான டயனாவை பின்பற்றும் வகையிலேயே இவ்வாறு பிரமாணத்தை எடுத்துக்கொள்வதென அவர் முடிவு செய்துள்ளார்.

1902 ஆம் ஆண்டு ஏழாவது எட்வேர்ட் அரசருக்கு முடிசூட்டுவதற்காக இசையமைக்கப்பட்ட வைபவ பாடல் இசைக்கும் போது தேவாலய நடைபாதை வழியாக எதிர்கால அரசியாக வரக்கூடிய அவர் பவனி வருவார்.

ஜெரூசலம் மற்றும் கிறீன்ஸ்லீவ்ஸ் ஆகிய பிரபலமான பாடல்களும் இந்த திருமணத்துக்கான இசையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரித்தானியத் தன்மையும், அரங்கியல் உணர்வும் வரவேண்டும் என்ற காரணத்துக்காக இளவரசர் சார்ள்ஸ்தான் இதனை தேர்வு செய்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திருமண நிகழ்ச்சி நிரல் தற்போது இணயத்தில் பிரசுரமாகியிருக்கிறது. அதில் தமது திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்து தம்மீது மக்கள் காண்பித்த அபிமானமும் ஆதரவும் தம்மை நெகிழச் செய்துள்ளதாக திருமண ஜோடி தெரிவித்துள்ளது.

27 ஏப்ரல், 2011

கலைஞர் அய்யா தள்ளாத வயசில ஏன் இந்த அந்தர் பல்டி-தனி ஈழமே இறுதி தீர்வு

தனித் தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.துவண்டு கிடக்கும் தனது செல்வாக்கை கபால்ன்னு செங்குத்தாக தூக்கி
நிறுத்த இப்பிடி அந்தர் பல்டி அடித்துள்ளார் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதை தொடர்ந்து திமுக தீர்மானம் மற்றும் திமுக உயர்நிலைக்கூட்டத் தீர்மானம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், தனி தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என்றார்.

அத்துடன், இலங்கை யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்;.
இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்ட குழு இன்று வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று இடம்பெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. (அய்யா அப்போ நீங்க உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்னாச்சு)

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது. (அதுசரி உங்கட மகளை 2 ஜீ ஊழல் குற்றப்பத்திரிகையில சேர்த்திருக்காங்களே அதுக்கும் இதே பதில்தானா)

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கனி களி தின்பாரா இல்லையா - சூதாட்டம் சூடு பிடித்ததால் IPL சோபையிழந்தது

இன்றைய ஹாட் டாபிக் கனிமொழிபற்றிதான்.
டிவிட்விட்டர்கள்,மூஞ்சிப்புத்தகம்,இணையத்தளங்கள் என்று ஆல்ரவுடராக வலம் வருகிறார் கனியக்கா. இது போதாது என்று ஜ.பி.எல் இல் களமிறங்கியிருந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் இந்த மேட்டரை கையில் எடுத்திருக்கிறார்கள்.அங்கே பிஸினெஸ் டல்லடிப்பதாலும் வரலாற்று பக்கங்களில் இப்பிடியான திமுக- காங்கிரஸ் இழுபறிகளால் ஏற்கனவே நிரப்பப்பட்டிருபதாலும் இங்கே எப்பிடியும் கொள்ளை லாபம் பார்க்கலாம் என முடிவெடுத்து இங்கே களமிறங்கியுள்ளார்கள்.இதனலா ஜ.பி.எல் பக்கம் சோபையிழந்துள்ளதாக நமது உளவுத்துறை செய்தியாளர் குமர்ப்பெசியன் குஞ்சுமணி தெரிவித்தார்.


இதனை அறிந்த ஒரு சில டீவி சனல்கள் மக்கள் மத்தியில் கனி கைது செய்யப்படுவாரா இல்லையா என்று கருத்துகேட்டறிந்துள்ளன.அவை உங்களுக்காக


காடுவெட்டி கோவிந்தன்
:தானை தலைவரையும், வருங்கால தலைமையையும் நான் மிகுந்த அறிவாளிகள் என் நினைத்தேன். உண்மையில் இந்தியாவிலயே மிகுந்த அறிவாளி லாலு பிரசாத் யாதவ் ஒருவர் தான். இன்னும் மண்டை குடைந்து ஒவ்வொரு மாடாக பல் பிடித்து லாலுக்கு எதிரான ஆதாரம் தேடி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அவரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

ஓட்டேரி நரி:ஒரு "மாணவன் பெயில் ஆனதற்கு ஸ்கூல் பிரின்சிபாலை அடிப்பீர்களா" கண்டிப்பாக தலைமை ஆசிரியர் சரியாக இருந்தால் ஆசிரியர் சரியாக பாடம் எடுப்பார்...எந்த மாணவனும் பெயில் ஆக மாட்டன்...எனவே admk வை குறை கூறுவதை விட்டு உங்கள் தலைவரை குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைய சொல்லுங்கள்.......

பான்பராக் ரவி:இதெல்லாம் பொய் புகார். கலைஞர் டிவி க்கு கொடுத்த பணத்துக்கு வட்டியும் முதலும் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. கனிமொழிக்கு சார்ஜ் சீட் வெறும் மிரட்டல், வரும் ஆட்சியில் பங்கு கேட்பதற்காக, காங்கிரஸ் விடுத்துள்ள மிரட்டல். இதற்கெல்லாம் பயப்பட மாட்டார் எங்கள் தலைவர் கலைஞர். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மாபெரும் வீரர்.( ஆமா தலிவர் தலைவைத்து படுத்தது சினிமாவுக்காக செட் போட்ட ரயில் தண்டவாளதிலாமே)

மதுரை தோத்தகிரி:பேசாம நாம எல்லாரும் கூண்டாக போயி சோனியாஜி மற்றும் manmohanji காலில் விழுந்து எப்படியாவது ராசாவையுuம் கனியையும் காப்பாற்றவேண்டும். அவர்கள் நம்மை எவ்வளவு அடிச்சாலும் நாம் மனம் தளர கூடாது. விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து காலில் விழுவதில் நாம் எல்லாரும் Ph.D பட்டம் பெற்றவர்கள். மேலும், ராமதஸையையும் குருமா வையும் சோனியாஜி காலில் விழ வைக்க வேண்டும். மீறினால் கட்சியில் இலிருந்து அனைவரும் நீக்கபடுவார்கள்.

குடல் புடுங்கி கோடீஸ்வரன்:அப்ப ஊழல் பண்ணனும்னா வயதான நம்ம அம்மா , பாட்டிய பினாமியா யூஸ் பண்ணி அவங்க பேர்ல அக்கவுன்ட்லாம் திறந்து என்ன வேணா தில்லு முல்லு பண்ணலாமா? சொத்து கணக்கு கேட்டா எல்லா சொத்தும் வயதான மனைவி, அம்மா , பாட்டி பேர்ல இருக்கு அவ்ங்க தனியா தொழில் செஞ்சு சம்பாதிக்கறாங்கன்னு சொல்லிடலாம். மனைவி, அம்மா , பாட்டி ய கேட்டா அவங்களும் தான் வயசானவங்க சொன்ன எடத்துல கையெழுத்து போட்டேன், தனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமா? இப்படி எல்லாம் பண்ணாதான் நம்மள இல்ல நம்ம வயசான அம்மா , பாட்டி ய சும்மா உட்டுருவாங்களா?

இறுதியாக நம்ம தமிழ்காத்த தானைத்தலைவர் தமிழ்செம்மல் தமிழர்களைக்காக்கும் கட்டுமரம் கண்ணகியை வாழ்வைத்த குடும்பத்தலைவன் இலவசத்துக்கே பெருமை சேர்த்த கருணாநிதி அவர்கள் பின்வருமாறு கூறினார்

"அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியாட்சி என்றால் நாடு வறுமை தீருமென்று அடவியில் துறவி சொன்னார் தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழ்த்த தந்ததுதான் கருத்து தந்த நெல்லிக்கனி எம் தலைவி செம்மொழி கனி எம் இனத்தின் தமிழ் ஆர்வம் போற்றி அவ்வை தந்த நன்றிக்கனி தங்க தலைவி அருட்கனி. விழிகவலை கொண்டால் வள்ளுவதுகன்றோ பழி. விழிகண்ணீர் கொண்டால் தமிழுக்கன்றோ பழி. பகை விலக்கி வெற்றி கொள்ள ஆதிசக்தி துணை வருவாள்.

எலே அழகிரி போடுறா மதுரை பீச்சில் டெண்டை ..மைக் பிடிக்க

தீக்குளிக்கதயாராகுங்கள்,தலைவரே தண்ணிக்கானுக்குள்ளே பெற்றோலை கலந்திடுவானுக

இன்றைய ஹாட் டாபிக் .

கருணாநிதியின் அழைப்பில் ஓடிவருகிறார்கள் அமைச்சர்கள்.
கருணா: அனைவரும் உடனடியாக ராஜினாமா கடிதங்களை எழுதுங்கள்
டி.ஆர் பாலு: எதுக்கு தலைவரே புதுசா அதுதான் போன மாசம் திகதி போடாம எழுதி
கடிதம் இன்னும் ஸ்டாக்கில தான் இருக்கு.
ஸ்டாலின் : அப்பா இந்தக்கதைவசனத்தை நீங்க 2 தடவை மேடையேத்தியாச்சு..அதனால
புதுசா ஏதாச்சும் டிரை பண்ணுங்கப்பா ,உங்களால முடியும்
கருணா : சரி காங்கிரஸின் அட்டூளியத்தை எதிர்த்தும் தேர்தல் கமிஷனை கண்டித்தும்
தலைவரும் அமைச்சர்களும் தீக்குளிக்கப்போல்கிறார்கள் எண்டு செய்தி அனுப்பிடு
அன்பழகன்: நீங்க வேற தலிவரே மக்கள் இருக்கிற கடுப்பில நம்ம
கழககண்மணீகளே தண்ணீ கானில பெற்றோலை மிக்ஸ் பண்ணி
வைச்சிடுவானுக
நெப்போலியன் ( மைண்ட் வாய்ஸ் இல்):இந்தாளு பெற்றோல் ஊத்தினாலும் எரியாத கட்டைய்யா அது.6வது தடவையா முதல்வர் ஆகாமல் மேலே போகாது
கருணா: உன்னோட மைண்ட் வாய்ஸ் ஜ கட்ச் பண்ணிட்டேன் .
அழகிரி: தலிவரே தயாளு அம்மாள் பெயரைச்சேர்க்காமல் "கூட்டுக்குடும்பத்துக்குள்
குழப்பம் விளைவித்த கோடாரிக்காம்பே சி.பி.ஜ இன்னு தமிழ்நாடு புல்லா
பேனர் வைச்சிடுவோமா.
கருணா:இப்பத்தான் தெரியுது இன்போமர் இங்கேயே இருந்திருக்கிறான் எண்டு.
கலாநிதி மாறன்: தலவரே நீங்க பேசாம சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுங்களேன்..
அழகிரி: தலிவரே அப்போ மதுரையிலிருந்து கறுத்த இளம் கிடாயை வெட்டி கறி குழம்பு
சமைச்சிடட்டுமா..
கருணா: முதல்ல இந்த சேவலை அறுக்காம விட்டது தப்பாபோச்சே.


வடிவேலு : அய்யா பேசாம டெல்லிக்கு போய் சோனியா போஸ்ட்டரில சாணி அடிப்போமா
ஸ்டாலின்: முந்தியெல்லாம் அடிச்சு விரட்டுவனுக , இதுக்குபிறகு விரட்டி விரட்டி அடிப்பானுக.
ராமதாஸ்:தலிவரே பேசாம பாபாவைப்பார்க்கப்போறமாதிரி போய் சோனியாவிடம் பாபா பாடி மேலேயே நம்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிடுவோமா.

கனிமொழி: அப்பா பேசாம நம்ம கூட்டாள் "ராஜபக்சேயிடம் போய் ஆலோசனை கேட்போம்
டீ.ஆர் பாலு: ஆங் இது நல்ல ஜடியா,அப்பத்தான் சோனியாவை பிளாக்மெயில் பண்ணலாம்.
கருணா: அப்பவே கள்ளிப்பால் கொடுத்திருக்கணும் .... இப்போ யோசிச்சு என்ன பயன்
தயாளூ: யோவ் இண்டைக்கு கலைஞர் டிவியில மானாட மயிலாட மீட்டிங் இருக்கு. நமிதாக்கா வந்திருக்காக,கலாமாஸ்டர் வந்திருக்காக.குஷ்பு அக்கா வந்திருக்காக...வாறியாய்யா
கருணா : ஏன் தயாளு இவிங்களைத்தூக்கி தமன்னா, ஹன்சிகா,வெள்ளைத்தாராவி தப்ஸியை வைச்சு சோ நடத்தக்கூடாதா,எவ்வளவு காலமாத்தான் இந்த ஆன்ரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
ராஜாத்தி: ஏறகனவே நீ போட்ட ஆட்டதிலதான் நானும் அக்கா தயாளும் இப்பிடி
யோசிச்சுக்கொண்டிருக்கோம் இதுள்ள சின்னதா செக்ஸியாகேட்குதோ.

தயாநிதிமாறன்:தலிவரே நம்மகிட்ட 1985 ஆம் ஆண்டு சோனியாவோடா இத்தாலி
சீ.டி ஒண்ணு மாட்டிருக்கு செம சீன்.. பேரத்தை பேசிடுவா இல்லாட்டி
சண்டீவியில சோ போட்டிடுவோமா
கருணா:அப்போ டெல்லிக்கு பிளைட் டிக்கெட்டை போடு..கிளம்பிடுவோம் அதுக்கு முன்னால
சீ.டி வேலைசெய்ய்தான்னு பார்ர்த்திட்டு தாரேன்..
ராசாத்தி: அப்போ இன்னைக்கு இரவு விடிஞ்சமாதிரித்தான், எதுக்கும் முருங்கக்காய் கூட்டு
செய்து வைப்போம்

26 ஏப்ரல், 2011

முடிஞ்சா எறியுங்கடா பார்போம் செருப்பை கனியக்கா மேல

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பெரும் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


காமன்வெல்த் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து “டைமர்” கருவிகளை வாங்கியதிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளை வாங்க முதலில் டெண்டர் கோரப்பட்டது. அப்போது பல்வேறு நிறுவனங்கள் கருவிகளை தர முன்வந்தன. அதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.எல் நிறுவனம் ரூ. 48 கோடிக்கு கருவிகளை தர சம்மதித்து இருந்தது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 107 கோடிக்கு தருவதாக கூறியது. ரூ. 48 கோடிக்கு தர முன் வந்த எம்.எஸ்.எல். நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 107 கோடிக்கு கருவிகளை வாங்கி உள்ளார்.
இதனை அடுத்து மதுரை சிங்கம் மு.க.அழகிரி தானே நேரில் நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்
கனிக்காக வாதாடப்போவதாக தெரிவித்துள்ளார் ." யுவர் ஆணர் ஜம் பானர்"
ஆனால் நம்ம உளவுத்துறை குமர்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்த கருத்தின் படி.. கனிக்காக வக்கீல் வண்டுமுருகன் வடிவேல் ஆஜர் ஆகலாம் என திமுக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனவாம்..

ஆமா இவ்வளவு களேபரம் நடந்துகிட்டிருக்கே கனியை கரெக்ட் பண்ணி கைபிடிச்ச மாப்பிளே எங்கேப்பா..

ஆனால் இந்த வெறும் ரூ 60 கோடிக்கே செருப்பு எறிஞ்சீங்களே நம்ம கனியக்கா அடிச்சதில நமக்கு தெரிஞ்சது மட்டும் ரூ 214 கோடி அறிஞ்சது மட்டும், செருப்பை எறிஞ்ச பருப்பு முடிஞ்சா மே 6 அண்டைக்கு எறிஞ்சு பாருடா கனியக்கா மேல உங்களோட செருப்பை .
கனியக்கா தொட்டால் சீறும் நெருப்புடா, அவ புருசன் கிட்ட கேட்டு பாரு... (கனியோட புருசன் யாரு -டவுட்டு)

இலங்கை ராணூவம் பெண்போராளிகளை அவமதிக்கும் காணொளி-அல்ஜெசீரா தொலைக்காட்சியில்

புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை இராணுவ அதிகாரியொருவர் ஏற்றுக் கொள்ளும் ஒளிக்காட்சிகளை அல் ஜெசீரா வெளியிட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஐ.நா. நிபுணர் குழுவினர் மருத்துவமனைகள் மீது இராணுவத்தினர் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆயினும் பாதுகாப்புத் தரப்பு அதனை வன்மையாக மறுத்திருந்ததுடன், அவ்வாறு எந்தவொரு மருத்துவமனை மீதும் ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என்று பதில் அறிக்கை விட்டிருந்தது. பல ஊடகங்களின் நோ்காணல்களின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அதனை வலியுறுத்தியிருந்தார்.

ஆயினும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் சேதங்களைப் பார்வையிடும் அல்ஜெசீரா ஊடகவியலாளாரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் இராணுவ அதிகாரியொருவர் அந்த சேதங்கள் ஷெல் தாக்குதலின் காரணமாக நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றார்.

அத்துடன் இறந்த பெண் போராளிகளின் சடலங்களை இராணுவத்தினர் சப்பாத்துக்காலால் உதைக்கும் காட்சிகளும் இந்த ஒளிப்பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரஸ்தாப ஒளிநாடாக்கள் இலங்கையில் செயற்பட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரால் முன்னமே அல் ஜெசீராவுக்கு வழங்கப்பட்டவையாகும். அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார் என அறிய முடிகின்றது.

அத்துடன் சிவில் இலக்குகள் மீது விமானப்படையினர் குண்டு வீசியதை ஒளிப்பதிவு செய்துள்ள விமான ஒளிப்பதிவுக் காட்சிகளும் அல்ஜெசீரா ஒளிநாடாவில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பல பொது மக்களும் இதில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஜ.நா சபையின் இலங்கை யுத்த குற்ற அறிக்கை

நேற்று ஜ.நாவினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்தகுற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளாது.அதனை வாசிக்க இங்கே கிளிக்குங்கள்

25 ஏப்ரல், 2011

கலைஞர் கருணாநிதியின் இன்றைய நிலை - செமகாமெடி

ம் கிளம்புங்கள் டெல்லிக்கு ராஜினாம செய்வதற்கு-கருணாநிதி அமைச்சர்களுக்கு ஆர்டர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


இதனை அறிந்த கருணாநிதி கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறிவிட்டது என்று சகபாடிகளிடம் கவலைப்பட்டார்.சென்ற தடவை ராஜினாமா செய்ய தமிழக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்ற போது 2 ஜி மணியை லவட்டிய கனிமீதும் திருமது தயாளுஅம்மாள் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சோனியா அவரின் மாமியார் இந்திராகாந்தி மீது சத்தியம் பண்ணி கருணாநிதியை சமாதானப்படுத்தி விட்டு இப்போ சத்தியத்தை மீறியுள்ளதால் கருணாநிதி மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

நம்பியவர்களை நாம் மட்டும்தான் நட்டாற்றீல் விடலாம்.ஆனால் நாங்கள் நம்புவர்கள் மட்டும் எங்களை எப்போதும் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பாரிய சூட்டைக்கிளப்பிவிட்டுள்ளது. எனவே சோனியாவுக்கு இந்த தடவை ஸ்ராங்காக பதில் சொல்லவேண்டும் என கருணாநிதி தனது சக அலிபாபாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.ஆனாலும் அந்த அலிபாபாக்கள் தமக்கு நெருங்கியவர்களிடம் கூட்டணீயில் இருக்கும் போதே அந்தம்மா வேட்டியை உருவுது...
ராஜினாமா பண்ணீவிட்டால் ஜட்டியையும் சேர்த்து உருவப்போகுதே என்று கவலை தோய்ந்தமுகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.இதனால் கூட்டுக்குடும்பத்தில் விரிசல்விழுந்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர்.குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கிய ”கோடாரி காம்பு” சி.பி.ஐ என்று பலவர்ணத்திலும் மிக நீளமான
பானர்களை பெருந்தெருக்களில் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குமர்ப்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்தார்.

இதனை கேள்விப்பட்ட ஆ.ராசா அவர்கள் கனி'யிருப்ப காய் கவர்ந்தற்று போல சிறைச்சாலையில் இருந்து கொண்டே சூரியன் எம்.எம் இல் "தெய்வம் தந்த வீடூ ஜெயிலு இருக்கு "என்ற பாடலை கனிக்காக டெடிகேட் செய்தார்..

பாபா காலி,பாப்பா குற்றவாளி, கல்மாடிக்கு களி ,மு.க.வுக்கு கிலி
மானாட மைலாட கலா மாஸ்டர் பாஷைல சொன்னா சும்மா கிழி..கிழி..கிழி..

பேசாம சென்னையிலேயெ ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சுட சொல்லுங்கப்பா.. எல்லாரும் திஹாருக்கு போயிட்டா சிங்க்காரச்சென்னையை யாரு ரன் பண்ணுறது ?

சுரேஷ் கல்மாடி இன்று சி.பி.ஜ ஆல் கைது செய்யப்பட்டார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த கல்மாடியை சி.பி.ஐ.,ஒருவழியாக இன்று கைது செய்தது .காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்து வந்தவரும் அந்த கமிட்டிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வந்தவர் சுரேஷ்கல்மாடி.


இவர் காங்.,தலைவர் சோனியாவிற்கு நெருக்கமானவராக இருந்தவர். போட்டிக்கான மைதானம் அமைத்தல், போட்டி ஒளிபரப்பு உரிமம். தளவாட பொருட்கள் வாங்கியது , லண்டன் ஜோதி ஓட்டம் பணிகள் ஏற்பாடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் பணியில் பல கோடி முறைகேடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரம் பார்லி.,யில் எதிர்கட்சியினரால் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தியது.

இதில் ஏ.எம்., பில், டி.எஸ்.ஆர்., கம்பெனிகளுக்கான கான்ட்ராக்ட் பணியில் முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தது. இதனையடுத்து இன்று கல்மாடியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர் முன்னதாக இன்று 4 வது நாளாக விசாரணை நடத்த சி.பி.,ஐ., தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கல்மாடியை கைது செய்தது குறித்து சி.பி.ஐ., இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.

லண்டன்‌ சென்றசி.பி.ஐ., அதிகாரிகள் அங்குள்ள கம்பெனி நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தி போதிய ஆவணஙகளை கொண்டு வந்தனர்.

22 ஏப்ரல், 2011

ரைம்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இருந்து போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஸே நீக்கம்

உலகில் மிகவும் வலிமை மிக்க மனிதர்களை தெரிவுசெய்வதற்கு ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதிப்பட்டியலில் இருந்து சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான தெரிவுகளுக்காக ரைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் நான்காவது இடத்தில் மகிந்தா இருந்தபோதும் தற்போது இறுதிப் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை சஞ்சிகையின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளது.

இணையத்தளம் ஊடகா எகிப்தில் புரட்சியை ஏற்படுத்தி அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து நீக்கிய வேல் கோனிம் என்ற செயற்பாட்டாளர் முதலாவது இடத்திலும், அமெரிக்க பொருளியலாளர் ஜேசப் ஸ்ரிக்லிஸ் இரண்டாது இடத்திலும், மற்றுமொரு அமெரிக்கர் றீட் காஸ்ரிங் மூன்றாவது இடத்திலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கேல் எட்டாவது இடத்திலும், பர்மாவின் எதிர்;க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகியூ 18 ஆவது இடத்திலும் உள்ளனர்.

விளையாட்டுத்துறையில் இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவர் மகேந்திரா சிங் டொனி 52 ஆவர் இடத்தை கைப்பற்றியுள்ளார்.