உன் வயிற்றில் கருத்தரிக்கவில்லை இந்த உயிர்
ஆனாலும் நீயும் நானும் ஒரே ஜாதி அம்மா என்று அழைப்பதால்
ஆனாலும் நீயும் நானும் ஒரே ஜாதி அம்மா என்று அழைப்பதால்
என் தாயின் கொங்கை தவிர்த்து
நானறியேன்
இவ் உலகில் உன் போல் பசிதீர்க்கும் பாத்திரமே
இவ் உலகில் உன் போல் பசிதீர்க்கும் பாத்திரமே
கணநேரம்
மடியில் வைத்து என் பசி
போக்கினாள் என் அன்னை
இன்றூ உன் மடி தேடி வந்தேன் அநாதை கன்றுகுட்டியாய்
உன் மொழிகள் நானறியேன்,உன் இனத்தை நானறியேன்.
உன் மடி கண்டு அதன் பால் உண்டு நானறிந்தேன் நீயும் தாயென்று..
ஆறறிவென்றார் எமக்கு ,அதில் ஓரு அறிவு குறைவு உனக்கு,
எனைத்தெருவில் விட்டுபோனோர் இனி எதற்கு நீதான் தாயே என குலவிளக்கு
கோமாதவென்று உனை அழைப்பர் கோயில் சென்று அன்னதானம் கொடுப்பர்,
ஆனால் உனையும் எனையும் எச்சில் உண்ணவே மிச்ச இலையை கொடுப்பர்

நீ பசித்திருந்து எனை வெளிக்கொணர்ந்து
தொப்புகொடி அறுத்தாய்
படுக்கையில் உன் நிலை உணர்ந்து
என் கல்வி தொலைத்து
காலம் முழுக்க கூலியானேன்

என் பசிக்கு ரத்தம் காய்ச்சி
பால் கொடுத்தாள் என் தாய்
அவளின் பசி போக்க ரத்தம் சக்தியாக்கி சுமை தூக்குகிறேன்
அவளின் பசி போக்க ரத்தம் சக்தியாக்கி சுமை தூக்குகிறேன்
விழியோரம்
விம்பமாகும் உன் சோகமும்
கைகளின் வீரிய ரெளத்திரமும்
நீயும் திறந்தவெளிச்சிறை தமிழனின் விதையா
கைகளின் வீரிய ரெளத்திரமும்
நீயும் திறந்தவெளிச்சிறை தமிழனின் விதையா
கால்களில்
தூரமும் கைகளில் பாரமும் தெரியவில்லை
தாயே
கண்ணீரும் வற்றிய உன் கண்கள் என்னுள் காட்சியாகும் போது
கண்ணீரும் வற்றிய உன் கண்கள் என்னுள் காட்சியாகும் போது
பென்சில் பிடிக்கவேண்டிய என் கைகளில்
பெற்றிடுத்த பெண்மையின் இலக்கணமே
உனக்கு உணவளிக்க கல் சுமக்கிறேன்
பெற்றிடுத்த பெண்மையின் இலக்கணமே
உனக்கு உணவளிக்க கல் சுமக்கிறேன்
தொப்புகொடி அறுத்தாய்
படுக்கையில் உன் நிலை உணர்ந்து
என் கல்வி தொலைத்து
காலம் முழுக்க கூலியானேன்
8 கருத்துகள்:
வணக்கமுங்க!உங்க கவி பார்த்து மனசு என்னமோ பண்ணுது.எப்போ இந்நிலை மாறும்னு பெருமூச்சு தான் விட முடியுது!வாழ்த்துக்கள்!!!!!
சில நாட்களுக்கு பிறகு நெஞ்சை வெகுவாக தொட்ட கவிதை தங்களது..ஏதோ உள்ளுக்குள் சிந்தனையை தூண்டுகிறது..அழகான எழுத்துக்கள்..என் நன்றிகளோடு வாழ்த்துக்கள்.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
ரொம்ப நன்றி யோகா உங்கள் பாராட்டுக்கள் என்னை இன்னும் எழுத தூண்டும்
குமரன் எல்லோர் மனதிற்குள் இதே போன்ற எண்ண நீரோட்டங்கள் இருக்கிறது ஆனால் வெளிக்கொணர்வது இல்லை,நன்றி உங்கள் கருத்துக்கு
வலி மிகுந்த கவிதை நண்பா
இன்று ..
உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .
தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது
http://www.facebook.com/Channel4.Fake.Video
எவ்வளவு முடியுமோ comment பண்ணுங்கள்
fake account விரும்பத்தக்கது
இலங்கைத்தமிழன்: உங்களின் தகவலுக்கு நன்றூ என்னால் முடிந்தளவு செய்கிறேன்
கருத்துரையிடுக