18 டிசம்பர், 2011

அம்மா காப்பாத்து

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் இந்த பழமொழி ஏனோ இன்று வரை உண்மையாகவே உள்ளது ஆனாலும் இந்த பாம்பை விட ஒரு விடயத்துக்கு சிறுவர் முதல் பெரியவர் நடுங்கி கதறும் விடயம் " வைத்தியசாலை ஊசி "சிறுவர்கள் பயப்படுவதில் ஒரு காரணம் இருக்கிறது ஆனால் பெரியவர்கள் இன்றும் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை ஒருதடவை பொது வைத்தியாசாலைக்கு சென்று வந்தீர்கள் என்றால் புரியும் அதில் அதிகமானோர் பெண்களே..




நேற்று எனது மகளின் 2 ம் மாத ஊசி போடுவதற்காக ஆஸ்பத்திருக்கு போயிருந்தோம்,அங்கே எல்லா அம்மா,அப்பாக்களும் தமது பிள்ளைகளை கூட்டிவந்திருந்தார்கள் ஊசி போடுவதற்காக.எமக்கு முன்னால் இருந்த தாயின் 4 வயசு சிறுமிக்கு ஊசி போட போனபோது அந்த சிறூமி

"அய்யோ எனக்கும் அம்மாவுக்கும் ஊசி போட வேண்டாம்,அப்பாவுக்கு ஊசி போடுங்கோ,எங்களுக்கு போடாதீங்க "எண்டு கத்தியது அனைவருக்கும்
ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டார்கள்.அதையும்  பொருட்படுத்தாமல் அந்த அழகான நர்ஸ் ஊசி போட்டபோது அந்த சிறுமி

"அம்மா என்னை காப்பாத்து அம்மா என்னை காப்பாத்து" என்று கத்தியபோது அனைவரும் டாக்டர் நர்ஸ் முதல்கொண்டு அனைவரும் சிரித்தார்கள். அப்போது எனக்கு எனது சிறு வயது ஊசியால் விளைந்த அந்த வினை நினைவில் வந்துநின்றது.

நான் எனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலேயே பயின்றேன்.அங்கே அன்றைய காலத்தில் எனது உற்ற நண்பனாக இருந்தவன் கருணா என்கின்ற கருணசீலன்.என்னுடன் படித்த மாணவர்களில் எமக்கெல்லாம் முக்கியமானவன் சரா என்கிற " சரவணன்" .அவனைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உத்தமபுத்திரனில் வரும் சின்னக்கவுண்டன் புலியாக நடிக்கும் அந்த சிறுவனைப்போலத்தான் இருப்பான் சும்மா தள தளன்னு தக்காளியாட்டம் பம்பிளீமாஸ் கணக்கா எம் மத்தியிலேயே கும்முன்னு இருப்பான்.அது எம்மைபோன்ற ஒல்லிக்குச்சியாட்டம் பல்லியாக இருந்த எல்லா மாணவர்களுக்கு ஒரு வித பொறாமைதான்.ஆனாலும் காட்டிக்கொள்ளமாட்டோம் ஆனால் எமது விளையாட்டு எல்லாம் அவனோடுதான் இருக்கும்.

.எமக்கு 7 வயதில் ஒரு தடுப்பூசி பாடசாலையில் போடுவதற்காக நேர்ஸ் எல்லாரும் வந்திருந்தார்கள்,வகுப்பறையே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது ஊசியை நினைத்து.ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எமது வகுப்பு "அம்மம்மா" டீச்சர் கறிக்கடைக்கு இழுத்துப்போகும் கிடாயாட்டம் இழுத்துப்போய் வாண்டட்டாக ஊசி போட வைத்தார்கள்,நாமும் அழுதுகொண்டே வகுப்புக்கு வந்தபோது அங்கே சராவை காணோம்.


"டேய் கருணா எங்கேடா சரா,ஊசி போட்டிட்டானா?அவன் தானே ஊரே அழியப்போறமாதிரி அழுதுகிட்டு இருந்தானே

"ஓமடா இங்க தான் இருந்தவன்,ஊசி போடுற இடத்திலயும் நான் காணேல்லயே"

"டேய் வசி நீ பார்த்தனியா"

என்று அனைவரிடமும் அக்கறையாக நாம் விசாரித்துக்கொண்டிருந்தது அவனைக்காணவில்லை என்பதற்காக இல்லை அவனுக்கு ஊசி போடும்போது அவன் எப்படி ரியாக்ட் பண்ணீ அழுகிறான் எண்டு பார்க்கதான..நாங்க இப்பவே இப்படி அப்ப சொல்லவா வேணும்..

ஆனாலும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது,சில நிமிட தேடல்களுக்கு பின் டீச்சர் சொன்னது சரா புத்தகபையையும் தூக்கிகொண்டு பக்கத்தில் இருக்கும் அவன் வீட்டுக்கு தப்பி ஓடிவிட்டான் ஊசி பயத்தில் என்று..ஆனால் எமக்கெல்லாம் ஒரெ வருத்தம் ஒரு சூப்பர் சீனை பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று.

அடுத்த நாள் சரா பள்ளீக்கூடம் வந்தப்போது நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டோம்.நாங்கள் எல்லோரும் வகுப்பில் இருக்கும்போது கோபிகா ஓடிவந்து எல்லோரிடமும்

"நேற்று ஊசி போடாதவங்களுக்கு ஊசி போட இண்டைக்கு நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொல்லணூம்" அப்போ நாங்கள் எல்லோரும் பல்க்காக இருக்கும் சராவை ஊசி போட போகச்சொல்லி வற்புறுத்தவேண்டும் என்பதே.எல்லாத்திட்டமும் சரிபார்க்கப்பட்டு அப்படியே ஸ்கிரிப்ட் பிரகாரம் நான் ,கருணா,ரஞ்சித்,புரந்தரன்,மதுரா,கோபிகா நிறைவேற்றினோம்..

கட் பண்ணீ ஓப்பின் பண்ணீனா

கருணா,நான்,புரந்தரன்,கோபிகா மதுரா,ரஞ்சித், எல்லோரும் அதிபர் அறையில் நின்றுகொண்டிருந்தோம்.அதிபர் பிரம்பை கையில் எடுத்துக்கொண்டு அருகில் வருவது தெரிந்தது.

குண்டுபயபுள்ள நாங்க ஒரு ஜாலிக்காக

"டேய் சரா ஊசி போடுவோம் வாடான்னு " வற்புறுத்தி இழுத்துகொண்டு வர

"அம்மா காப்பாத்து அம்மா காப்பாத்து" 

எண்டு கத்திக்கொண்டு அப்பிடியே மயங்கி விழுந்திட்டான்..

அப்போ எங்களுக்கு எதுவுமே புரியாத அறியாத  வயசு ஏழு

"டேய் சராவை இவங்கள் இழுத்துபோக சரா கீழே விழுந்து செத்திட்டாண்டா" 

எண்டு பக்கி பய சுதாகரன் கத்திகொண்டு ஓட பாடசாலையே கலவரப்பட்டது.
டீச்சர் வந்து பார்த்தபோது மூச்சு இருந்தது.உடனேயே பக்கத்தில இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு ஓடினார்கள்..அப்பிடியே நம்ம டீமையும் அள்ளீக்கொண்டுபோய் அதிபர் அறையில் நிறுத்திவிட்டார்கள்.

"சேர் சேர் நாங்க வேணுமெண்டே செய்யல சேர்..அவன் நேற்று ஊசிக்கு பயந்து ஊசி போடாம வீட்டுக்கு ஓடிட்டான் சேர்.அதுதான் அவனுக்கு பயத்தை போக்குவமெண்டு இப்படி செய்தனாங்கள் சேர்.."

எண்டு கத்தி கதறிக்கொண்டிருக்கும்போது கோபிகா சொன்னாள்

"சேர் நேத்து அம்மா சொன்னவா அந்த ஊசி போடாட்டி எங்களோட கால் ரெண்டும் சொத்தியாகிடுமாம்,போலியோ வருமாம்.நாங்கெல்லாம் ஊசி போட்டிட்டம் சரவணன் போடாட்டி அவனுக்கு போலியா வந்தா எப்படி சேர் நடப்பான்,இப்பவே பயங்கர குண்டன் நடக்கவே பஞ்சிப்படுறான் பிறகு நடக்கவே ஏலாம போய்ட்டா பாவம்தானே சேர் அதுதான் நாங்கெல்லாம் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தப்போ மயங்கி விழுந்திட்டான் சேர் "நாங்க அவனுக்கு நல்லது செய்ய நினைச்சது தப்பா சேர்"

என்று கோபிகா கேட்ட கேள்வி அதிபருக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும்,சரி சரி இனி இப்பிடி குளப்படி செய்யக்கூடாது வகுப்புக்கு ஓடுங்கோ என்று சொன்னது நாங்கள் வகுப்புக்கு
போகத்தொடங்கினோம்.

அதன்பிறகு எமக்கு சரவணனை அழவைக்க வேண்டுமென்றால் டேய் ஊசி போட நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொன்னால் போது வாயிலேயே வயலினில் முராரி ராகம் வாசிப்பான்.

இப்போ சரா அவுஸியில செட்டில் ஆகிட்டான் ,கொஞ்ச நாளுக்கு முன்னால ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி வீட்டுக்கு வந்தான் அப்போ நானும்  தமசாக கேட்டேன்,

"என்ன மச்சான் ஒரு கிழமை ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே இப்பவும் நீ ஊசிக்கு பயந்து கத்தி மயங்கி விழுவியான்னு " கேட்டப்ப சொன்னான் பாருங்க கேட்டா நீங்களே ஷாக்காயிடுவீங்க.

"டேய் இங்கெல்லாம் ஆஸ்பத்திரி சூப்பர் பசிலிட்டி மச்சான், போன முறை எனக்கு ஊசி போடப்போனப்ப நானும் பயந்துகிட்டுதான் இடுப்பை காட்டினேன்"

" தம்பிரி அது இடுப்பில்ல அடுப்பு"

"அந்த சூப்பர் பிகர் நர்ஸ் ம் ஊசி போட நான் என்னை அறியாமல் கத்தி" 

" டேய் இது உனக்கே ஓவராயில்ல, 30 வயசில உன்னை அறியாமல் கத்தினியா,நீ ஏதாசும் ரீசனோடதாண்ட கத்தியிருப்பே"

"நீ கேளு மச்சி, வலியில எதையோ பிடிச்சிட்டு கண்ணை திறந்து பார்த்தா அந்த நர்ஸோட இடுப்பை பிடிச்சிட்டிருந்தேன்..சாரி மிஸ் ஒரு கில்ப்புக்காக தெரிஞ்சு உங்க இடுப்பை பிடிச்சிட்டேன் எண்டு சொன்னேன் "

"அடப்பாவிப்பயலே ,நச்சுன்னு அந்த நர்ஸ் உன்னோட தாவாங்கட்டையிலேயே ஒண்ணு விட்டிருக்குமே"

"அதெல்லாம் இலங்கையிலதான் மச்சி,இங்கே அப்பிடியில்ல , பயமாயிருந்தா பிடிச்சுக்கொள்ளுங்கன்னு அந்த நர்ஸே சொல்லிட்டா"

"நர்ஸே சொல்லிட்டாளா,சிறுக்கி மக ... அப்போ நீ  அடுத்தநாள் விடியும் வரைக்கும் பிடிச்சிட்டு இருந்திருப்பியேடா"

"சீ இந்த மேட்டர் நமக்கு தெரியாமப்போய்ட்டே,நம்ம ஊரிலையும்தான் எத்தனை நர்ஸ் இருக்காளுக மூஞ்சியை உம்முன்னு வைச்சிகிட்டு மாட்டுக்கு ஊசி போடுற நினைப்பிலேயே ஒரே செருகுதான்..

ஓ இதனாலதான் நம்ம பயபுள்ளக எல்லாம் டூரிஸ்ட் விசாவில அங்கே போனாப்பிறகு அசேலம் அடிக்குதா  ?

15 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மொத சைட்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

?>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி பிரபல பதிவர் போல அவ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

போஸ்ட் பூரா கலர் கலரா இருக்கு, ஆனா ஒரு கலரையும் காணோமேய்யா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>"சீ இந்த மேட்டர் நமக்கு தெரியாமப்போய்ட்டே"

மேட்டரா? எங்கே ? எங்கே?

மன்மதகுஞ்சு சொன்னது…

அண்ணே அங்கே பசிலிட்டி எண்ட பெயரில ஆஸ்பத்திரியில இந்த மேட்டரெல்லாம் சர்வ சாதரணம்..பேசண்ட ரொம்ம்ம்ம்ம்ப பக்க்க்க்க்க்குவமா கவனிப்பளவை ..நம்மூர்ல செருப்பை கழட்டி அடிப்பாளுக நர்ஸ் எல்லாம் ..

மன்மதகுஞ்சு சொன்னது…

சி.பி அண்ணே அது தானேவே செட் பண்ணி வைச்சிருந்தது.. இப்ப மாத்தியாச்சு.. உங்கள மாதிரி ஒவ்வொரு நாளும் சுவரஸ்யமாக எழுத முடியாது அண்ணே ஏதோ நம்மால முடிஞ்சது..

ஜேகே சொன்னது…

மச்சி நீ மீண்டும் ஆட ஆரம்பிச்சிட்டியா? எதோ நீ அசந்த சமய அத இத எழுதி ஹிட்ஸ் வாங்கிக்கொண்டு இருந்தன்... அதுக்கும் ஆப்பா?

மன்மதகுஞ்சு சொன்னது…

JK இல்லை மச்சி நேரம் கிடைக்கல .. 258 ராங்கில இருந்து 648 க்கு வந்திட்டு, நெலமை கைமீறிப்போகக்கூடாதுன்னு பட்டி ரிங்கரிங் பெயிண்டிங் பார்த்து நம்ம ஸ்டைல்லுக்கு இறங்கியாச்சு,இனிமேல் ஒன்லி நம்ம சொந்தக்கதைகள இங்கே களைக்கட்டும் பாரென்ன்..உனக்கு போட்டியெல்லாம் ஒரு மண்ணூமில்ல,உன்னோட ஸ்டைலே தனிதாண்டா..

classic k7 சொன்னது…

கலக்கல் மச்சி :-) வாழ்த்துகள்

AnbuJ சொன்னது…

இந்த வலைப்பூ எப்படி இதுவரை என் கண்களுக்கு படவில்லை..???

மன்மதகுஞ்சு சொன்னது…

அன்பு இப்பவாச்சும் பட்டதே.. உன்னோட விமர்சனத்தை பதிவு செய் மச்சி..

பெயரில்லா சொன்னது…

எங்க மாமா பையனையும் நாங்க சரானு கூப்பிடுவோம். குஞ்சு அதை நினைவு படுத்திவிட்டாய். சராக்கள் எப்போது 'சுறா'வாக மாறுவார்கள் என்பதைக் கணிப்பதென்பது இயலாத காரியம். முன்னாள் சட்டமன்றமும் இப்போது 'சூபர் பசுலிட்டி'யாக மாறிவிடும் என்பதால் வாழ்த்துக்கள் சகோ. ;p @SeSenthilkumar

மன்மதகுஞ்சு சொன்னது…

ஓ தெரிஞ்சா அப்போ எல்லாபயபுள்ளையும் அங்கே போய் மாசக்கணக்கில படுத்துக்கிடக்குமே நன்றி செந்தில் அண்ணாது

மகேந்திரன் சொன்னது…

இன்றுதான் உங்க தளத்துக்கு வந்தேன்
அருமையா இருக்குது..
தொடர்கிறேன்..

மன்மதகுஞ்சு சொன்னது…

ரொம்ப நன்றி மகேந்திரன் அண்ணா, உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் தெரிவியுங்கள் அதுதான் எனக்கு புத்தூக்கம் தரும்