23 டிசம்பர், 2011

மணி டியூசன் பயபுள்ளக-உண்மைக்கதை

 1995 இடப்பெயர்வுக்கு முன்பு கொக்குவிலில் மணி டியூசனில் நாங்கள் கல்வி கற்றிருந்தோம். மணி டியூசன் பற்றி இன்னுமொரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி சொல்லுவதை தவிர்த்துவிடுகிறேன்.அங்கே படித்த இரண்டு நண்பர்களின் கதைதான் இது .

1995 ம் ஆண்டு ஏப்பிரல் 3ம் ஈழப்போர் ஆரம்பித்ததன் பின்பு யாழ்ப்பாணத்தை நோக்கி இராணுவத்தினர் பெருமெடுப்பில் தாக்குதல் நடத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக1995 ம் ஆண்டு ஜப்பசி மாசம் 30 ம் திகதி காலையில் யாழ்ப்பாணதின் அனைத்து மக்களையும் உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளுக்கு  செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் .


பூத்த கொடி பூக்களின்றீ தவிக்கின்றது.பூங்குருவி துணைகளின்றி தவிக்கின்றது என்ற பாட்டிற்கு உதாரணமாக அன்றைய பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றது. சுமார் 300,000 க்கும் மேற்பட்ட யாழ் மக்கள் ஒரே நாளில் ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.இதில் பல சொந்தங்கள், நட்புகள் எல்லாம் விடுபட்டன.



ஆனால் அதன்பின்பு அனைவரையும் இணைத்துக்கொண்டது தபால் மூலமாகத்தான்.அப்போதைய காலத்தில் தொலைபேசி வசதிகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.அப்போது தபால் மட்டுமே தொடர்பாடலில்100 %  உதவிகளைச் செய்திருந்தது. இதே போலத்தான் நண்பர்களும் தொடர்பு அறுந்துபோன நட்புகளை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்கள்.


பள்ளீ பருவ நண்பர்களான ரஜீவ் பருத்தித்துறை சென்று விட பிறேம் கிளிநொச்சி சென்றுவிட்டான்.சிறிது காலத்தின் பின்பு இவர்கள் இருவரும் தபால் மூலம் தொடர்பு கொள்ளத்தொடங்கினார்கள்.அதுவரைகாலமும் ஜாலியாய் திரிந்த பிறேம் வாழ்க்கையில்  மண்ணை அள்ளிப்போட்டான் ரஜீவ் ஒரு கடிதம் மூலமா.


நீண்டகாலத்திற்கு பிறகு தொடர்புகொள்ளுவதால் ஊர் நிலைமையையும் தங்களோட பழைய நினைவுகளையும் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லாம கடித்ததில் இப்படி எழுதி இருந்தான் ரஜீவ் .

"என்ன மச்சான் பிறேம் எப்படி போகுது கிளிநொச்சியில . இங்கே ஒரே போர் மச்சான்.என்னதான் இருந்தாலும் மணீ டியூசன் இந்துக்கல்லூரி போல வராது. டேய் நீ மணி படிக்கேக்க சைட் அடிச்சியே அந்த வேம்படி கலட்டி லேன் பொண்ணு , இப்போ எங்கட வீட்டுக்கு பக்கதிலதாண்டா இருக்கிறாள் "

"நீ எத்தனை தடவை டிரை பண்ணீயிருப்பாய் லெட்டர் கொடுக்க.இப்போ நல்ல டைம் மச்சி , ஆனா நீ அங்கேயில்ல இருக்கே என்ன செய்யுறது.. நீ வேணும்னா எனக்கு அனுப்புற லெட்டருக்குள்ள வைச்சு அந்த பொண்ணுக்கு லெட்டரை அனுப்பி விடு நான் அதை கொடுத்துவிட்றேன் "

எண்டு நண்பேண்டா கணக்கில கடிதம் எழுதி இருந்தான்..

இது நல்ல விடயம் தானெ எண்டுதானே கேட்கிறீங்க..அதுதான் இல்லை கடிதத்தை பிரித்து வாசிச்சது பிறேம் ன் அம்மா... டியூசன் விட்டு நேரம் பிந்திப்போனாலே ஒண்ணுக்கு போற அளவில அடி பின்னி எடுக்கிற அண்டி ,இந்த கடிதம் வாசிச்ச பிறகு என்ன நடதிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்களேன்.பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் முடிந்த பிறகு அன்ரி பிறேம் ஜ கூப்பிட்டு

"டேய் நீ அவனுக்கு எனக்கு முன்னால ஒரு கடிதம் எழுது, இனிமேல் அதை பற்றி கதைக்கவேண்டாம் ,எனக்கு படிப்பு அம்மா அப்பா தான் முக்கியம் எண்டு சொல்லி "

என்று பத்ரகாளியின் அவதாரமாய் பிறேமின் முன்னால காட்சிகொடுத்துக்கொண்டிருந்தார்.

பிறேம் மனசில்லாமல் ஏதோ இப்போதைக்கு தலை தப்பினா போது எண்டு நினைச்சுக்கொண்டு  விரிவா கடிதம் எழுதி விட்டு அன்ரி உள்ளே போன காப்ல


"மச்சான் அம்மா உன்னோட கடித்ததை வாச்சிட்டா,அதனால இங்கே ரொம்ப பிரச்சினை..இனிமேல் அப்படி எழுத வேணாம்.அந்தக்கடிதமும் சும்மா ஒரு தமாசுக்கு தான் எழுதினான்.அதை  சீர்யாஸா எடுக்காதே எண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போடு அதை அம்மா வாச்சிச்சா எல்லா பிரச்சினையும் போயிடும் "

எண்டு  ஒரு சின்னதா ஒரு துண்டுக்கடிதம் எழுதி உள்ளே வைச்சான்.


இந்தக்கடிதம் கிடைச்ச உடனேயே ரஜீவ் வாசிச்ச உடனேயே வெலவெலத்துப் போனான். ஏனெண்டா அவனுக்கு பிறேம் உடைய அம்மாவோட ஸ்ரிக்ட் பற்றி ரொம்ப தெரியும். உடனேயே கடிதம் எழுதி அனுப்பினான் பிறேம் க்கு.

பிறேம்  வந்த கடித்தத்தை அம்மா முன்னால வாசிச்சான் .. அதில் பிறேம் ரொம்ப நல்லவன் சத்தியம் பண்ணாத குறையா பிறேமைப்பற்றி புகழ்ந்து எழுதியிருந்தான் ரஜீவ் ..அன்ரியும் அதைப்பார்த்திட்டு ரொம்ப சந்தோசபட்ட நேரத்திலதான் பிறேம் க்கு சந்திராஸ்டமம் நல்லா வேலை செய்தது.. பிறேமின் தங்கச்சி வந்து தபாலில் இருந்த முத்திரையை எடுப்பதற்காக கடிதம் வந்த உறையைக்கிழிக்க அதனுள்ளே இன்னுமொரு கடிதம் இருந்தது.

"அம்மா உள்ளுக்குள் இன்னொரு லெட்டர் இருக்கு இதை வாசிக்கலையா"
எண்டு அதை எடுத்து தாயிடம் கொடுத்தாள் தங்கை.அதில் ரஜீவ் எழுதியிருந்தான்

மச்சான் நீ சொன்ன மாதிரியே உன்னைப்பற்றி நல்ல மாதிரி எழுதி இருக்கிறேன் அந்த லெட்டரை அம்மாவிடம் கொடுத்துவிடு.  இந்த லெட்டர் உனக்கு .

". அந்த பொண்ணை  இங்க இன்னும் ரெண்டு பேர் சைட் அடிக்கிறாங்கள் என்னமாதிரி உன்னோட முடிவு பேசாமா கடிதத்தில எழுதி எனக்கு அனுப்பி விடு நான் கொண்டு போய் கேட்கிறேன் ,மச்சி உடனேயே கேட்டிடு இல்லாட்டி மிஸ் ஆகிடும்டா ( நண்பன்னா  இப்பிடிதான் இருக்கணும்)"

என்று காதல் தூதுவனாக ரஜீவ் எழுதியிருந்தான் ஆனால் விதி யாரை விட்டது .
 
இதையும் பிறேமின் அம்மாவும் வாசிச்ச பிறகு என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் தானே . காணி எல்லையில கதியாலாக போட்டிருந்த பூவரசந்தடி முறிக்கப்படும் சத்தம் விருட்சமே முறியும் அளவுக்கு கேட்டது, தடி முறிக்கிற சத்தமே இப்படியெண்டா அடிவாங்கின பிறேம் எத்தனை நாளைக்கு படுக்கையில் உடம்பு பூரா எண்ணெய் பூசி பாயிலயே படுத்த படுக்கையா கிடந்திருப்பானோ ....

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
மன்மதகுஞ்சு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

நல்ல நினைவுப் பகிர்வு தான்..

ஃஃஃபூத்த கொடி பூக்களின்றீ தவிக்கின்றது.ஃஃஃ

இந்தப்பாடலை விட.. பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது பாட்டு இன்னும் பொருத்தம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாவம் பிரேம்