27 டிசம்பர், 2011

ஆட்டிறச்சி கறியும் ஆத்து வெள்ளமும்


"என்னடா இண்டைக்கு மத்தியான சாப்பாடு" என்று அம்மா ஸ்கைப்பில் கேட்கவும்


"இண்டைக்கு  ஆட்டு இறைச்சி வாங்கி கறி காய்ச்சப்போறேன் கூடவே கோவா கறி" 

"டேய் நீ பிள்ளைக்கு மொட்டை அடிக்க கதிர்காமம் போட்டு வந்திருக்கிறாய்...
அப்பொ இண்டைக்கு நீ மச்சம் சாப்பிடக்கூடாது,அதால இண்டைக்கு மரக்கறி சமைச்சு
 5 பிட்ஷா பாத்திரம் ஏந்துவோருக்கு சாப்பாடு கொடுக்கணூம்டா"  என்று அம்மா சொல்லவும்
 எனக்கு சப்பென்று போயிட்டு 

சீ இண்டைக்கு ஆபீஸ் லீவு, அதிகாலை தான் கதிர்காமத்தில இருந்து வீட்டுக்கு வந்திருந்தோம்..
3 நாள் மரக்கறி சாப்பிட்டு நாக்கு செத்துபோயிருந்திச்சு..லீவுதானே ஆட்டிறச்சிக்கறியோடா ஒரு வெட்டு வெட்டுவோம்ன்னு பார்த்தா அம்மா அதுக்கு புல்ஸ்டாப் போட்டிட்டாங்க.காலையில கலண்டரில மிருகஷீரடம் நட்சத்திரத்துக்கு சந்திராஸ்டமம் எண்டு போட்டிருந்தப்பவே கொஞ்சம் அலேர்ட் ஆகியிருக்கணும் சரி கடவுளோட விடயம் விளையாடமா இருப்பம் எண்டு நினைச்சுகொண்டு வரும் வழியில் நுவரேலியாவில்  இருந்து வாங்கி வந்த மரக்கறீ எல்லாத்தையும் குளிர்சாதனப்பெட்டியில இருந்து  எடுத்து வைந்தேன்..

"என்னங்க பொண்ணூ என்னை விடுறா இல்லை.. அழுதுகிட்டே இருக்கிறா... நேரம் வேற போய்க்கொண்டிருக்கு.... நீங்க சமைக்கிறீங்களா இண்டைக்கு " வீட்டுக்காரம்மா குண்டைத்தூக்கி போட்டா..

"என்னம்மா இண்டைக்காச்சும் நாக்குக்கு ருசியா சாப்பிடலாம்ன்னு பார்த்த விடமாட்டியாடி"

ஆஹா சிங்கம் இண்டை கிடாய் இறைச்சிய வேட்டையாடி உடம்பு அசதி தீர ஒரு தூக்கம் போடுவோம்ன்னு பார்த்தா இப்படி ஒரு சத்திய சோதனை..சரி சரி குடும்பம்ன்னு வந்திட்டாலே  இதெல்லாம் சகஜம்தானே எண்டு மனதிற்க்குள் நினைத்துக்கொண்டே சமையல் வேலையைத்தொடங்கினேன்..

அப்போதுதான் அந்த 5 பெக்கேர்ஸ் க்கு எங்கே போவதுன்னு யோசித்தபோது நினைவு வந்தது Cargills Food City தான் . அங்கேதான் வாசலில் அமர்ந்திருந்து போற வாற அனைவரிடமும் உதவி கேட்பார்கள். அப்பொ அவர்களுக்கே கொடுத்திடலாம்ன்னு நினைத்த போதே மனம் கொஞ்சம் கிலேசமடைய தொடங்கியது..

எனேனில் சாதரணமா வீட்டில அப்பா வீட்டுக்காரம்மா எனக்கு மட்டும் சமைக்கிற நான் இன்று இவர்களுடன் சேர்த்து 5 பேருக்கும் சமைக்க வேண்டிய நிலைமை வீட்டில இருக்கிறவங்க உப்பு புளி முன்ன பின்ன இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க,ஏன்னா அப்படி சொன்ன அடுத்த முறை அவங்களையே சமைக்க சொல்லிவிடுவேன்னு பயம் ஆனா Cargills Food City க்கு அடிக்கடி போய் பொருட்கள் வாங்கி வருவேன்..அதனால கொடுக்கும் உணவை சுவையாக கொடுத்துவிடவேண்டும் இல்லாட்டா அடுத்த முறை அங்கே போகும்போது எல்லோருக்கும் முன்னால என்னோட உணவோட திறத்தை சொல்லி அண்டர்வெயரை உருவி விட்டு சிங்கத்தை அசிங்கப்படுத்திடுவாங்களே, டேய் கீர்த்தி உனக்கு இண்டைக்கு விஷ பரீட்சைபார்த்து பாத்தியை கட்டுடான்னு மனசாட்சி அபாய கொடியை காட்டியது.. சரி வாறது வரட்டும்ன்னு பீற்றூட்,கரட் & லீக்ஸ்,உருளைக்கிழங்கு கறியுடன் வல்லாரை சம்பலும் அப்பளமும் பொரித்து சமையலை முடித்தேன்..


உடனேயே அவற்றையெல்லாம் 5 பார்சலாக கட்டி டவுனுக்கு போனேன், அங்கே போய்ப்பார்த்தா அதிர்ச்சியா இருந்திச்சு, எந்த ஒரு பிட்ஷா ஏந்துபவர்களையும் Food City வாசலில் காணவில்லை..என்னடா இது இனி எங்கே போய் தேடலாம்ன்னு யோசிச்சுக்கொண்டே டவுனில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று தேடினேன்..
அசுமாத்தத்திற்க்கு கூட ஒருத்தரையும் காணவில்லை... ரெயில்வே ஸ்டேசனுக்கும் போய் பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது.. 

என்னங்கடா நான் கதிர்காமம் போயிருந்த 3 நாளிலையே வவுனியா டெவலப் ஆகிட்டிச்சா,ஒருத்தனை கூட கண்ணீல காணோம்,இதையெல்லாம் சொல்லிட்டு செய்யமாட்டிங்களாடா, 


தொங்கிய முகத்தோடு வீட்டுக்கு போகவும் கையில் பார்சலைப்பார்த்ததும்

"என்னங்க கொடுக்கலையா என்று கேட்டா வீட்டுக்காரம்மா  எல்லா இடத்திலயும் தேடிட்டம்மா ஒருத்தனையும் காணேல்ல என்ன செய்ய "என்று கேட்டேன்.

ஏங்க ஜெயக்குமரன் அண்ணா கூடவா இல்லை ஒரு மிஸ் கோல் போட்டு பாருங்க ஆட்டோ புடிச்சு வந்து 
புல் கட்டு கட்டுவாரே என்று சொல்லவும் 

என மனம் போன மாசம் நாம சாப்பாடு கொடுக்க பெக்கேர்ஸ் தேடி யாருமே இல்லாத போது JK க்கு ஒரு மிஸ் கோல் போட்டவுட்னே அவன் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்து  முருங்கக்காய் தோல் கூட விடாம சப்பி சாப்பிட்டு காயாலேயே சாப்பட்டு கோப்பையை வழித்து கழுவி விட்டு போனது நினைவுக்கு வந்தது .

இல்லம்மா அவன் புது வருசம் ஊருக்கு போய்ட்டான் ..



".மாமி சொன்னா கட்டாயம் கொடுக்கணுமாம் இல்லாட்டி சாமிகுத்தமாயிடுமே" என்று பீதியை கிளப்ப என்ன செய்யலாம்ன்னு சோசிச்சுக்கொண்டிருக்கும்போதே K டீவியில பஞ்சதந்திர பட ஒளிபரப்பு விளம்பரச்ம் போய்க்கொண்டிருந்திச்சு.. லைட்டா மைண்டில பொறீ தட்டியது..

பழைய துணிக்காக வைச்சிருந்த லுங்கியையும் பனியனையும் எடுத்து வந்தேன் .அங்கங்கே லைட்டா கிழிச்சேன், அப்படியே நிலத்தில போட்டு கால்களால மிதித்துவிட்டு எடுத்து எனக்கு போட்டு பார்த்தேன்..
நானே ஷாக்காயிட்டேன், அப்பிடியே ஒரு  பெக்கரை போலவே இருந்தேன்.. கீர்த்தி உனக்குள்ளே இப்படி ஒர் கலைஞன் ஒளிஞ்சிருந்திருக்கானேடா என்று சொல்லவும்

"அது ஒன்றும் கலைஞன் இல்லை அப்பிடியே ஒரியினல்  பெக்கர் மாதிரியே இருக்கீங்க " என்றாங்க வீட்டுக்காரம்மா... 

"காப் கிடைக்கிற நேரமெல்லாம் சிங்கத்தை சீண்டிப்பார்க்கிறதே உனக்கு வேலையாப்போச்சு..பொறு பொறு பொண்ணு கொஞ்சம் வளருட்டும் அதுக்குப்பிறகு பாருடி இந்த சிங்கத்தோட அனிமல் பிளனட்

வேட்டை டிரையிலரை"  என்று சொல்லிக்கொண்டே அந்த 5 பார்சலை நானே பஞ்சதந்திர 5 வேஷம் போட்டு உண்டு முடித்தேன்.. முடித்ததும் வீட்டுக்காரம்ம கைத்தாங்கலா எழுப்பி விட்டாங்க...


******************************************************************


"என்னங்க மணி ஆறாச்சு.... சாப்பிட்டு  2 மணிக்கு வோஷ் ரூமுக்குள்ள போனீங்க இன்னும் என்னங்க செய்துகிட்டிருக்கீங்க கதவை பூட்டிக்கொண்டு" 

"ஆ இங்கே வடை சுட்டு கொண்டிருக்கிறேன் ,ஏண்டி வோஷ் ரூமுக்குள்ள என்ன செய்வாங்கன்னு தெரியாதா உனக்கு"
"அதுசரி 6 மணியாச்சா !!!!!!

"பின்னே ஆகாதா போய் 4 மணித்தியாலம் ஆச்சு  என்ன ஆச்சு உங்களுக்க"

"ஏண்டி நானா விரும்பியா இங்கெ டெண்ட் அடிச்சு உட்கார்ந்து இருக்கேன்... நிக்காம போய்க்கிட்டிருக்கம்மா ...
"நீ ஏதோ சொல்லிகொண்டிருக்கிறாய் என்கிறது மட்டும் புரியுது ஆனா கிணத்துக்குள்ள இருந்து கதைக்கிறது மாதிரி கேட்குதம்மா"

"அய்யய்யோ என்னாச்சுங்க  என்ன திடீரெண்டு"


"அதுதாண்டி எனக்கும் புரியல  நானும் ரேஸ்ட்டா இருக்கெண்டு 5 பார்சலையும் சாப்பிட்டேன், இப்ப வயித்துக்குள்ல யாழ்தேவி ரெயினே ஒடிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்குதடி "

"அதுசரி நீயும் தானே சாப்பிட்டாய் எனக்கு மட்டும் ஏன் இப்பிடி ??? "

"நான் எங்கே சாப்பிட்டேன்"

"ஏண்டி நீ இன்னும் சாப்பிடலையா"


"இல்லங்க நீ வெளில போயிருந்த நேரம் கொஞ்ச சாப்பாட்டை நாய்க்கு கொஞ்சம் வைச்சேன் சாப்பிட்ட நேரத்தில இருந்து ஊளையிட்டுகொண்டே இருந்திச்சு,அதனால நானும் மாமாவும் எதுக்கு ரிஸ்க் எடுப்பான்னு நினைச்சு திரிபோஷா குழைச்சு சாப்பிட்டோம்டா"


" அஹா எல்லாரும் அலார்ட்டாத்தான் இருந்திருக்கீங்களா அப்ப நான் தான் அவுட்டா ,அடிப்பாவி ஏண்டி இதை முதல்லேயே சொல்லல.. ஓ அதுதான் நான் வீட்டுக்கு வரும்போஒது நம்ம நாய் என்னை வெறித்தனமா பார்த்துகிட்டு இருந்திச்சா "அய்யய்யோ கடவுளே அது மனசில இதை வைச்சு நாளைக்கு பாய்ஞ்சி கறியை கவ்விடாம பார்த்துக்கொள்ளுப்பா "

"ஏண்டி ஒரு வார்த்தை சொல்லல"


"இவ்வளவு நாளும் நீங்க சமைச்சு வைச்சிட்டு ஆபீஸ் போய்ட்டு கடையில சாப்பிட்டு வாறீங்கநாங்க பட்ட வேதனை கஸ்டம் உங்களுக்கு தெரிய வேணாமா அதுதான் சொல்லல..சரி சரி வெளில வாங்க கெதியா" 

"என்னது கெதியா வெளில வரவா போடி இவளே ,நல்லா வருது வாயில ஆத்தில வெள்ளம் ஓடின கணக்க போய்க்கிட்டிருக்கு இந்த நிலைமையில நான் எப்போ வெளில வாறது , ரூமுக்கு தவண்டு வந்து சேரவே விடிஞ்சிடும்டி "

.


3 கருத்துகள்:

ஜேகே சொன்னது…

சூப்பர்டா .. இரண்டு கதை ஒன்றில் இருக்குது! அன்னிக்கு பிரியா கூடாவா ப்ரீயா இருக்கல?

மன்மதகுஞ்சு சொன்னது…

அடப்பாவி ஏண்டா அவனையும் என்னையு கோர்த்து விடுரே.அம்புட்டும் வெசம் வெசம்.. இருடி உன்னோட மருமக் புள்ளக வரும்போது வறுக்கிறேண்டியேய்

சுகந்தி சொன்னது…

அண்ணா நல்லா எழுதி இருக்கீங்க,வாசிக்கும்போதே என்னால சிரிப்பை அடக்க முடியல,அதுசரி உங்க வீட்டுக்காரம்மா இதெல்லாம் வாசிக்கமாட்டாங்களா அண்ணா ?