08 ஜூன், 2011

கனிமொழி,சரத் ரெட்டியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், இவ்விருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் கனிமொழி, சரத்குமார் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 23 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 24-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பரிகோகே, அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்விருவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: