14 பிப்ரவரி, 2011

30 ம் முடிவும்



கடந்த வாரத்தில் மக்கள் மத்தியில் வெகுவாகப்பேசப்பட்ட விடயம் எகிப்து மக்களின் அதிபர் முபார்க்குக்கு எதிரான புரட்சிதான். இது பல நாட்டில் கொடுங்கோலாட்சி வரும் பல அதிபர்களுக்கு வாந்தி பேதியையும்..அந்நாட்டின்எதிர்கட்சிகளுக்கும் மக்களுக்கும் வயித்தில பீர் வார்த்ததையும் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும்.இப்பவெல்லாம் ஆ.. ஊன்னா எதிர்கட்சித்தலைவர்கள் .. பார்த்தீல்ல டீவில... எகிப்து மக்களோட போரட்டத்தை..
நீங்க மட்டும் எங்களோட குரலுக்கு செவி சாய்க்கல அதே போல நம்ம நாட்டு எல்லாப்பயபுள்ளைகளையும் ரோட்டுக்கு கொண்டுவந்திடுவோம்ன்னு வாண்டட்டா வெருட்டுறானுக நாடளுமன்றத்தில..



அதுசரி உந்தக்கதைக்கும் உன்னோடா தலைப்புக்கு என்னடா சம்மந்தம் மேட்டருக்கு வா மச்சி எண்டு கூப்பிடுறவங்களுக்காக நாம மேட்டருக்குள்ள போயிடுவோம்.

நாமளும் ஆர்வக்கோளாறில ஒரு பதிவுலகத்தில இணைஞ்சாச்சு...ஏதாச்சும் சுவாரஸ்யமா போட்டு ஹிட்டானாத்தானே நம்மளையும் ஒரு பதிவரா ஏத்துக்கொள்ளுவாய்ங்க என்பதால நம்மோட 3 வது பதிவா என்ன போடலாம் எண்டு யோசிச்சுகிட்டே
இருந்தப்பதான் இந்த எகிப்து புரட்சி நம்மோட கவனத்தை ஈர்த்திச்சு.ஆனா அதைப்பற்றி பலர் விரிவான பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்ட படியால புதுசா எப்படி இதை இணைச்சு என்னத்தை எழுதலாம் எண்டு மேல்மாடியை தீவிரமா யோசிக்க வைச்சோம் அப்போ பொறி தட்டியதுதான் இந்த தலைப்பு..( மவனே நீ இன்னுமே மேட்டருக்கு வரலயேடா)

1981 ம் ஆண்டு பதவியேற்ற எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் அங்கே பெப்ரவரி 2011 வரை ஒரு சர்வாதிகார ஆட்சியையே நடத்தி முடிச்சிருந்தார்.( இப்ப மேட்டருக்கு வந்திட்டோமில்ல). அவருக்கு அமெரிக்கா மிகவும் பின்பலமாக இருந்து கொண்டு அங்கே இருந்த வளங்களை சுரண்டிக்கொண்டிருந்தது.ஆனால் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரப்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்று கூட்டப்பட்டு எதிரான மிகப்பெரிய பலத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து இப்போ அவரை பதவி இழக்கச்செய்ததன் மூலம் தமது விடுதலைக்கான அத்திவாரத்தைப்போட்டுள்ளனர்.இது அங்கே 30 வருடமாக
நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.


அடுத்ததாக 1618 ம் ஆண்டு தொடக்கம் 1648 ம் ஆண்டு வரை ஜரோப்பிய
நாடுகளில் புரட்டஸ்தாந்து மற்றும் கத்தோலிக்க மத மக்களிடையே 30 வருடம் பெரும் போர் நடைபெற்று அது மிகப்பெரிய அழிவின் பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.இங்கேயும் 30 என்ற இலக்கம் போர் முடிவில் ஒட்டிக்கொண்டுள்ளது.


இதேபோன்றுதான் நமது மண்ணில் கூட 1976 ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டம் மிகவும் பலம் பெற்று உலக அளவில் பேசப்பட்டு தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நேரத்தில் கடந்த வருடம் 2009 ம் ஆண்டு உலக ஆதிக்கங்களுடன் இரும்புக்கரம் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலுமாக நசுக்கப்பட்டது.அதன் காரணமாக இன்று குரல் கொடுக்க சரியான தலைமை இல்லாமல் இல.தமிழர்கள் ஒவ்வொரு நாளும் வருந்திகொண்டிருக்கின்றார்கள்.இதிலும் உற்றுக்கவ் கவனித்தால் ஒரு விடயம் விளங்கும்.தமிழர்களின் தனித்தலைமயாக
இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் புலி சின்னத்தில் 33 துப்பாக்கி சன்னங்கள் இருக்கும்.இது தற்செயலாக நடந்த விடயமா இல்லை தலையெழுத்தா என்பது தெரியவில்லை.சரியா ஒவ்வொரு வருடங்களூக்கும் ஒரு துப்பாக்கி சன்னம் என்ற ரீதியில்
2009 ம் ஆண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.





இதை எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக முக்கியமான விடயம் என்னவெனில் 1980 ம் ஆண்டு நமது யாழ் மண்ணில் பிறந்த அனேகமான ( 70% ) ஆண்கள் 30 வயதின் பின்னர்தான் திருமணம் நிகழும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளதுங்க .இதைப்பற்றி நான் நீண்டகாலமா ஒரு ஆராட்சியை செந்திருந்தேன்.அப்போ என்னுடன் படித்த
பல பாசக்கார பயபுள்ளக( 1980 ம் ஆண்டு பிறந்தவர்கள்) இன்னும் திருமணம் செய்யாமல் இருந்தது தெரிய வந்திச்சு ( பயபுள்ளக ரெம்ப அவதானம இருக்காங்க போல)..அதில பலருக்கு இந்த வருடம் (2011) திருமணம் நிச்சயமாயிருப்பதும் ஆச்சரியப்படத்தக்க விடயம்.ஆனால் அவர்களுக்கு பின் பிறந்தவர்கள் பலர் திருமணம் செய்து குழந்தை குட்டிகளுடன் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உங்கள் உறவினர்கள்,நண்பர்களிடமும் இதை ஆராட்சி
செய்து பாருங்கள் உண்மை புரியும்.

இப்போ சொல்லுங்க 30 என்ற இலக்கத்திற்கும்... முடிவுக்கும் ஒரு தொடர்பு இருக்குதானே.

கருத்துகள் இல்லை: