08 பிப்ரவரி, 2011
ரோல்ஸ்ஸா ரொட்டியா ?
1999 ம் ஆண்டு நம்ம A/L பரீட்சை பெறுபேறு வெளிவந்திருந்தது.அதில் நம்ம பாசக்கார பயபுள்ள யோக்கட் என்கிற JK சிறந்த பெறுபேற்றை பெற்று மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தான்.அதுவரைக்கும் சுக்கிரதிசை
அடிச்சுக்கொண்டிருந்த அவனுக்கு கெட்டகாலம் சனிஸ்வரன் 180 CC DTSI பல்சர் பைக்கில வந்து பார்த்த கதையாய்ப்போய்ட்டு.
பின்ன அப்படி ஒரு முடிவை துணிந்து எடுப்பானா....அது வேற ஒண்ணுமே இல்லங்க நம்மளுக்கெல்லாம் பார்ட்டி கொடுக்கிறதுதான்.. பார்ட்டி எண்டவுடன்
கண்டபடி கனவு காணாதீங்க வீட்டில எல்லாரையும் கூப்பிட்டு ரோல்ஸ்,லட்டு,மிக்ஸர்,பற்றிஸ் எண்டு கொடுக்கிற பார்ட்டி
மட்டும்தான். ஆனா இதில என்ன பிரச்சினை எண்டா யோக்கட் பார்ட்டி வைக்கப்போறானாம் எண்ட சேதி யாழ்பாணம் தாண்டி சாவகச்சேரி, பருத்தித்துறை வரைக்கும் பரவிட்டுது.அப்போ யாழ்ப்பாணத்தில கைத்தொலைபேசிகள் பாவனையிலேயே இல்லாத காலம்.ஆனாலும் நம்ம பயபுள்ளக முத்திரை ஒட்டி எல்லாருக்கும் கடிதம் போட்டு விட்டிட்டானுக... ஏன் இந்த கொலைவெறி எண்டு கேட்கிறவய்ங்க வாங்க கொஞ்சம் பிளாஸ்பாக் போய் வரலாம். டொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங் (பிளாஸ்பாக் எண்டா இப்படித்தான் சத்தம்
முதல்ல வரும்னு எத்தனை சினிமாவில காட்டிறுக்காணூக)
யாழ்ப்பாணத்தில கல்யாணி கிறீம் ஹவுஸும், றியொ ஜஸ்கிறிம் கடை, லிங்கம் கூல் பார் என்கிற ஜஸ்கிறீம் கடைகள் எண்டு பேமஸான ஜஸ்கிறீம் கடைகள் இருக்குங்க.
பிறந்தநாள்,விஷேட கொண்டாட்டம் எண்டா இந்தகடைகளிலதான் நாம் எல்லோரும் நம்ம பாசக்காரப்பயலுகளுக்கு ரோல்ஸ் ம் தக்காளி சோஸ்ஸும் காம்பினேசனில வாங்கிக்கொடுப்போமுங்க.அதைத்தவிர இறுதியா ஸ்பெசல் ஜஸ்கிறீமும் குடிச்சிட்டு வாழ்த்துக்களை சொல்லிட்டு எல்லாரும்கிளம்பிடுவாங்க வீட்டிற்கு.
இதில என்ன கொடுமைன்னா நண்பேண்டா கணக்கா யோக்கட் எல்லாரோட பார்ட்டிக்கும் அட்டெண்டன்ஸைப் போட்டிடுவான்.பிறகு அங்கே ரோல்ஸ் ஜ நல்லா ஒரு பிடி பிடிச்சி பில்லை ஏத்தி விட்டு பிரபல ரவுடியா பார்ம் ஆகியிருந்தான்.இதனாலாயே பல பயபுள்ளக நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தானுக..காலம் வராமலா போயிடும் எண்டு பார்திட்டிருந்தவனுக்கெல்லாம் இந்த செய்தி தேனாக பாய்ஞ்சது.பலர் தங்களோட நண்பர்களுக்கெல்லாம் வீட்டில போய்ச்சொல்லி கட்டாயம் வந்திடுங்கடா எண்டு கைண்ட் ரிக்குவஸ்ட்டை வேற போட்டிட்டு வந்திட்டானுக .
இது தெரியாம நாம நம்ம டீமெல்லாத்தையும் சேர்த்து ரிவன்ஞ் அட்டாக் கொடுக்கிறாதுக்கு
பிளானைப்போடத்தொடங்கினோம்.( ஆமா பெரிய தீச்சுவலை நடவடிக்கை பிளான் போடுறாய்ங்க).நம்ம அத்தியடி டீமும் மற்ற பயபுள்ளைகளுமா சேர்ந்து எப்படியும் மிகப்பெரிய பில்லை ஏத்திவிடுறதெண்டு சபதம் போட்டொம் ,உடனேயே வீட்டில அம்மா,அப்பா,அக்காகிட்ட விசயத்தை சொல்லி நான் ஒரு கிழமைக்கு
பட்டினி கிடக்க போறேன் நானே தண்ணி கேட்டாலும் கொடுக்கக்கூடாது ,மீறிக்கொடுத்திட்டா உறவு கெட்டுப்போயிடும்ன்னு ரொம்ப ஸ்ரிக்ட்டான கண்டிசனை போட்டுவிட்டேன் (கலைஞர் ஜயா எல்லாம் நம்மகிட்ட கத்துக்கணும் )
அந்த நாளும் வந்த உடனேயே பின்னேரம் 4 மணிக்கே எல்லாரும் குறூப்பா போய் அட்டெண்டன்ஸைப்போட்டு விட்டோம்.வீட்டுக்குள்ளபோய்ப்பார்த்தா யாழ்ப்பாணத்தில 99 A/L படிச்ச எல்லாப்பயபுள்ளைகளும் வந்திருந்தானுக..( பயபுள்ள ஊரில ஒருத்தன் விடாமா அட்டாக்கை போட்டிருக்கான் போல)உடனேயெ குசினியில இருந்து வீட்டு கோலுக்கு வாற ஓடைப்பகுதியை நம்மட டீம் கைப்பற்றிகொண்டோம்..அங்கிருந்து கொண்டு
குசினியில் இருந்து வரும் சப்ளையை அட்டாக் பண்ணி நம்மகுள்ளையே முடிச்சிடுவதுதான் நம்மோட ரெரர் பிளான்.ஆரம்பமே அமர்க்களமா ஆரம்பிச்சது. நம்மளோட டீமில ஆச்சி றமா,பப்பா நிசாந்தன்,மக்கர் சஞ்சீ,நம்ம அத்தியடி பிரபல ரவுடிகளான அனுராஜ்,பிரியா,முகுந்தன் அண்ணாவிசு அண்ணா,பிரதீபன் அண்ணா.. .. ..
கேக் வந்தவுடன் காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா நாம ஊடறுத்து கடும் தாக்குதலைக்கொடுத்து எல்லா கேக்குகளையும் கைப்பற்றி வாய்க்குள்ளே போட்டுவிட்டோம்.நம்ம கைகளைத்தாண்டி கேக் தட்டு வெறுமையாக முன்னால் போக கொலை பட்டினி கிடந்து வந்து முன்னால காத்திருந்தவங்க கடுப்பாயி சண்டைக்கு போய்ட்டானுக யோக்கட்டோட.. ரணகளமாகிட்டு... பிறகென்ன ... யோக்கட் பாடு
திண்டாட்டமா போயிட்டு. நம்மளை திட்டவும் முடியல கண்டிக்கவும்முடியல, முன்னால ஜட்டங்களை சப்ளை பண்ணமுடியல, பின்ன
எவ்வளவுதடவைதான் அவனும் தட்டு நிறைய ஜட்டங்களை அனுப்பிறது..(1 கிழமையா பட்டினி கிடந்தோமில்ல)...ஆனா அது அவனுக்குள்ளை தூங்கிட்டிருந்த சிங்கத்தோட பிடறி மயிரை சொறிஞ்சு எழுப்பி விட்டிட்டு... அப்பத்தான் அவன் அந்த கொடூரமான திட்டத்தை ஆரம்பிச்சான். நாங்களும் வானத்தில போன சனியனை ஏணிபோட்டு இறக்கி விட்ட கதையாப்போய்ச்சுங்க..
அக்கா ரோல்ஸ் தட்டைக்கொண்டுவாங்க எண்டு குசுனிக்குள்ளகுரல் கொடுத்தான்..அந்த செய்தி நம்ம காதுக்குள்ள தேனாப்பாய்ஞ்சிது.
மச்சான் ரோல்ஸ் வரப்போகுதடா.. ரெடியாகு எண்டு எல்லாரையும் ஆசுவாசப்படுத்தினோம்.
மெயின் அட்டாக்குக்கு ரெடியானோம்.கையில் ரோல்ஸ் தட்டு வந்திச்சு பாய்ஞ்சு விழுந்து எடுத்தா அது அவிங்கட வீட்டிலயே செஞ்ச ரோல் சாதரண ரோலை விட பெரிசா இருந்திச்சு.. ஆஹா இண்டைக்கு வேட்டைதாண்டி எண்டு நினைச்சுகிட்டு கடிச்சா... பொரிச்ச மா மட்டும்தான் வருது கறியையே காணேல்ல.. முக்கால்வாசி ரோலையும்
கடிச்ச பிறகுதான் கறியே வந்திச்சு..நாம ஆளாளுக்கு 5 ரோல்ஸ் படி எடுத்திருந்தோம் கொலைப்பட்டினியில இருந்ததால அப்பாவியான நாங்க யோக்கட்டோட மாஸ்டர் பிளானில பலியாடாகிப்போனோம்..சாப்பிட்டு முடிச்சவுடனேதான் தெரிய வந்திச்சு அது ரோல்
இல்லை ரொட்டின்னு..கொடுமை கொடுமைன்னு கோயில்லுக்கு போன கதையா வயிறு ஊதிப்போக நெக்ஸ்ட்டு ரெஸ்ட்டு எண்ட நிலைமையில நம்ம டீம் பயபுள்ளக வந்திட்டானுக, அந்த நேரம் பார்த்து யோக்கட் கொண்டு வந்தான் பாருங்க இதரை வாழைப்பழம்...பயபுள்ள வாழைகுலைக்கு யூரியாப்போடு பழுக்க வைச்சிருப்பான் போல
ஒவ்வொண்ணும் 1/2 கிலோ தேறுங்க..சனியனைதூக்கி பனியனுக்குள்ள போட்ட கதையா நாங்களும் அதையும் அட்டாக் பண்ணி உள்ள அனுப்பிட்டோம்..
நம்மால எழும்ப கூட முடியலங்க அந்தளவுக்கு ரொட்டியும் ( ரோல்ஸாமா) இதரைப்பழமும் ஸ்ரோர் ஆகிட்டு.
அதுக்குப்பிறகு யோக்கட்டோட சப்ளையில நம்மால் ஒண்ணையும் புடுங்க முடியல... ஏன்னா நம்மால முடியல..அன்னைக்கு முடிவு பண்ணினோம் யோக்கட் பார்ட்டி வைச்சா நாம முதல்ல செக் பண்ணுறது வீட்டிலையா இல்லை ரெஸ்ரோரண்ட்டிலயா எண்டுதான்..
அதுக்குப்பிறகு ரோல்ஸ் பார்த்தாலே எனக்கு கண்ணைகட்டத்தொடங்கிடும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
'றியோ'வில் கொண்டாடப்படும் பார்ட்டிகள்! எனக்குள்ளேயும் பழைய ஞாபகங்கள் இன்னும் பசுமையாக.. நன்றி நண்பா!
'இன்ட்லி' வாக்களிப்பு பட்டனையும் இணைத்துக்கொள்ளுங்கள்!
நன்றி நண்பரே.....
கருத்துரையிடுக