21 பிப்ரவரி, 2011
பலசாலிகளும் கத்துக்குட்டிகளும்
சென்ற வாரம் கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகள் வெகு விமரிசையாக தொடங்கிவிட்டன.
இந்த வருடம் இந்தப்போட்டிகளில் 14 அணிகள் விளையாடுகின்றன.சென்ற வருடம் 16 அணிகள்
இடம்பெற்றிருந்தன. அவற்றில் பேர்முடா அணியும் ஸ்கொட்லாந்து அணியும் இந்த வருடம் இடம் பெறவில்லை. முன்பு 50 ஓவர் ஆட்டங்கள் மிகவும் விரும்பி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தன..ஆனால் IPL Twenty Twenty 20 போட்டிகள் வந்த பிறகு ஒரு நாள் 50 ஓவர் ஆட்டங்களில் சுவாரஸ்யம் குறைந்து போனது.ஆனாலும் உலக கிண்ணப்போட்டிகள்
இன்னும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்தாலும் அதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இதையெல்லாவற்றையும் விட கத்துக்குட்டி அணிகளையும் உலகக்கிண்ண போட்டிகளில் இணைத்துக்கொண்டதன் விளைவாக பல சாதனைகளை பலசாலிகளாக இருக்கும் நாட்டு அணிகளின் வீரர்கள் சாதாரணமாக நிறைவேற்றத்தொடங்கிவிட்டார்கள்.
ஆனாலும் கத்துக்குட்டிகள் என்று நினைத்துகொண்டிருக்கும் சில அணிகள் சிங்கங்களாய் சிலிர்த்து நின்ற போட்டிகளும் உண்டு. உதாரணத்துக்கு பங்களாதேஸ் அணியை சின்னப்பெடியங்கள் என்று நினைத்து களமிறங்கிய இந்திய அணியை
அதிர்ச்சி வைத்தியம் கொடுது 5 விக்கெட்டுகளால் வென்று வீட்டுக்கு திரும்ப வைத்த பெருமை பங்களாதேஷ் அணியைச்சாரும்.இதைப்போல பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்று
பாகிஸ்தான் வீரர்களின் கண்களீல் விரலை விட்டு ஆட்டியது.
அதேபோல பலம் வாய்ந்த அணிகள் இவ்வாறான புதிய அணிகளை மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தன.அதுமட்டுமில்லாமல் 100 க்கும் குறைந்த ஓட்ட எண்ணிக்கைகளுக்குள் மூட்டைப்பூச்சிகளை நசுக்குவது போல அடித்து துவைத்திருந்தன.
இந்ததடவையும் இதேபோல கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைக்கணக்கா ஒரு சில அப்பிராணிகளை எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அடிச்சு துவைச்சு காயப்போட்டு விட்டார்கள் ஆரம்ப போட்டியான இந்தியா & பங்களாதேஷ் போட்டியில் போனமுறை பட்ட அவமானத்தையெல்லாம் சேர்த்து வைத்து இந்த முறை விளாசித்தள்ளினார்கள். பட்ட அவமானத்துக்கு இந்த முறை நான் பங்களாதேஷ்க்கு
பாடம் படிபித்தே தீருவேன் என்று மாமியார் மேல சத்தியம் செய்து வந்த சேவாக் சோலோவாய் 175 ரன்களை அடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தளபதியாய் ஆட்சிபீடமேறியது மட்டுமில்லாமால் 50 ஓவர்களும் நின்று அடிப்பேன் எண்டு
ரெரராய் மற்றைய வீரர்களுக்கு வீர சபதம் போட்டு பிலிம் காட்டியுள்ளார்..அது நிறைவேற எமது வாழ்த்துகளும்..
ஆனாலும் ஆரம்பத்தில் அநியாயமாய் சச்சின் ரன் அவுட்டாகிய போது காண்டான கோடான கோடி ரசிகர்களை நிண்டு நிதான ஆடி கோபக்கனல்களை தணித்திருந்தார்.
அதேபோல கென்யாவை 69 ரன்களுக்குள் சுருட்டியது நியூசிலாந்து அணி . ஆனாலும் இதை முன்னமே அறிந்த்திருந்ததால் என்னமோ ரசிகர்கள் கூட்டம் வரவில்லை.
ஆனால் இலங்கை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இலங்கை & கனடா அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வீரர்கள் அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.டேய் லெக்கில போடாதே மச்சான் அடிக்கிறான்ல... எண்டு விக்கெட் கீப்பர் சொல்ல .அவன் எந்தப்பக்கம் போட்டாலும் அடிக்கிறாண்டா எண்டு கனடா நாட்டு பந்து வீச்சாளர்கள்
கடுப்பேறியதை டீவியில் பார்க்கக்கூடியதாக இருந்தது.தனது சொந்த ஊரில் சொந்த பெயரில் மைதானம் அமைத்து முதல் போட்டியை நடத்துவதால் மிகப்பெரிய ஓப்பினிங் கொடுப்பதற்காக ரோட்டில போன பயபுள்ளைகளையெல்லாம் பஸ் விட்டு ஏத்தி கொண்டு வந்து இறக்கியிருந்தாக ..
இதே போன்று வரும் போட்டிகளிலும் எத்தனை டீம் அடிவாங்கப்போகுதோ தெரியல..ஆனால் இப்படியான கத்துக்குட்டி அணிகளால் 50 ஓவர் உலகக்கிண்ண போட்டிகள் சரிவுகளை சந்திக்க போகின்றதோ என்று யோசிக்க தோன்றுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக