
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த தீவிரமான தேடுதலில், டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டது.
முன்னதாக, பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் யூரோகாப்டர் பி3 ரக ஹெலிகாப்டரில் டோர்ஜி காண்டு உள்ளிட்ட 5 பேர் தவாங்கில் இருந்து மாநிலத் தலைநகர் இடாநகருக்குப் பயணம் செய்தனர். இரு விமானிகள் அந்த ஹெலிகாப்டரை இயக்கினர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்குமோ என்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி தீவிரமானது.
பூடான் எல்லைப் பகுதி, தவாங் - இடாநகர் இடையே கடந்த ஐந்து நாட்களாக தேடும் பணியில் விமானப்படையின் சுகோய், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அத்துடன், தரை வழித் தேடும் பணியில் சுமார் 3,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், செவ்வாய்க்கிழமை இரவு வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், செலா பாஸ் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்ததை தேடலில் ஈடுபட்ட வான்படையினர் இன்று காலை கண்டறிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் டோர்ஜி காண்டு உள்பட 5 பேரில் 3 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக