31 மே, 2011

கட்டுநாயக்காவில் சிங்கள மக்கள் மீது சிங்கள பொலிசார் அடிதடி-காணொள் இணைப்பு

இலங்கை அரசாங்கம் கொண்டுவர இருக்கும் தனியாருக்கான் பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் பெரு ஆர்ப்பாட்ட பேரணீ ஒன்றை நடத்தினர்.

இவ் ஆர்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாவித்ததோடு, துப்பாக்கி ரவைகளைப் பாவித்தும் அவர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளால், அப்பகுதி மேகமூட்டம் நிறைந்த பகுதிபோல காணப்பட்டது. இதனிடையே வழி தெரியாது, ஆர்பாட்டக் காரர்கள் பக்கமாகச் சென்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை ஆர்பாட்டக்காரர்கள் பிடித்து நையப்புடைந்துள்ளனர், இவரைக் காப்பாற்ற அங்கே ஓடிய மேலும் 15 பொலிசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்து அடித்துள்ளனர்.

இதில் கலவரம் எதுவும் நடாக்காதபோதும் அங்குவந்த பொலிசார் திடீரென கண்ணீர் புகைகளைப் பரவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க முயன்றதாலேயே மோதல் பலமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட மேலும் 14 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, சர்ச்சைக்குரிய இந்த ஓய்வூதியத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்த செய்தியை தமிழ் மக்கள் மீது சிங்கள பொலிசார் கொலை வெறி தாக்குதல் என்று மாற்றி போடுவது தான் இப்போ நடைபெறுபவை.உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.