சின்னவயசிலேர்ந்து கிரிகெட் என்றால் சச்சின் பட்டிங் ,வெங்கடேஸ் பிரசாத் பந்து வீச்சு என்றேடீவியையும் நமது அண்ணன்களின் பேச்சைக்கேட்டே இந்திய கிரிக்கெட் டீமுக்கு நம்மை அறியாமலேநம்முள்ளே கோட்டை கட்டிட்டோம் ( தம்பி வாடகை இன்னும் தரல) அன்றைய காலங்களில் எமது பிரதேசங்களில் ரூபவஹினியை விட தூரதர்ஷன் சனல்தான் நமக்கெல்லாம் தேசிய தொலைக்காட்சி சேவையாகிப் போனது. "நைட் ரைடர் " என்ற தொடர் மட்டும் இலங்கை ரூபவஹினியில் பார்ப்போம்..
எஸ்.வீ.கேசரின் வண்ண வண்ணப்பூக்கள் , மகா பாரதம் என்று ஞாயிற்றுக்கிழமைகளில் டைட்டில் போட்டும்போதே டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்துவிடுவோம்.அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 க்கு வரும் ஒலியும் ஒளியும் ...
சொல்ல வார்த்தைகள் இல்லை.புதிய பாடல்களைப்பார்ப்பதற்காக எப்போ வெள்ளிக்கிழமை வருமென தவம் இருப்போம்.அப்போதைய காலத்தில் யாழ் மக்களுக்கு தூரதர்சன் சனல் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்ததை மறக்கமுடியாது.இதனால் தூரதர்ஷனில் போடப்படும் கிரிகெட் போட்டிகளைப்பார்த்து பார்த்து
அந்த அணிக்கு ரசிகர்களாக மாறியதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அத்துடன் அன்றைய காலத்தில் இந்திய பிரதமராக இருந்த அன்னை இந்திராகாந்தி,முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றோர் இலங்கை தமிழ் மக்கள் மேல் வைத்திருந்த அளவில்லாத அன்பும் இரக்கமும் ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.
அதன்பின்பு 1987-1990 வரை இந்திய ராணுவம் நடத்திய தமிழ் இன அழிப்பின் பின்பு
இந்தியா மீதான மக்களின் நல்மதிப்பு இல்லாமல் போனாலும் இந்திய கிரிக்கெட் அணியின் மீதான பாசம் விட்டுப்போகவில்லை.2 ம் ஈழப்போர் யுத்தம் தொடங்கிய காலத்தில் எமது பகுதிகளில் மின்சாரத்தை நிறுத்தியது இல.அரசு..ஆனாலும் தடைகள் வரினும் மீண்டு எழுவான் தமிழன் என்பது போல அத்தனை பொருளாதார தடைகளுக்கும் உள்ளூர் பொருட்களை வைத்தே மாற்றீடு கண்டு கொண்டோம்.
டீவி,வானொலி,வீட்டு லைட்டுக்கென வீட்டில் வீசேடமாக சைக்கிள் சில்லை சுற்றீ டைனமோவில் இருந்து மின்சாரம் பெற்று நமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டோம்.
கிரிக்கெட் போட்டிகளைக்கூட சைக்கிள் டைனமோவை வீட்டில் உள்ள நண்பர்களின் உதவியுடன் ரொட்டேசன் போட்டு சுற்றவைத்து பார்ப்போம்.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ,பலர் கேட்கிறார்கள் ஏன் நீ ஒரு இலங்கையனாக இருந்து கொண்டு அந்த அணியை வரவேற்பதில்லை என்று .. சிம்பிள் பதில் ... நாங்கள் அவர்களை எமது நாட்டு அணீயாக பார்க்கவில்லை
என்பதுதான்... எமது பகுதிகளில் எத்தனையோ திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களால் இன்றுவரை இலங்கை அணிக்காக தெரிவு செய்யப்படவில்லை.அதுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஆனால் 1996 க்கு பிறகு யாழ் மண் இலங்கை அரசின் கைகளிலேயே இருக்கிறது இன்றுவரை அந்த மண் வீரர்களுக்காக எந்த விதமான
முன்னுரிமைகளோ,சிறந்த பயிற்சிகளோ கொடுக்கப்படவில்லை.அண்மைக்காலங்களில் ஒரு சில பாடசாலைகள் தமது சொந்த நிதியைக்கொண்டு கிரிக்கெட் டேவ் மைதானத்தை அமைக்க முயற்சி செய்து வருகின்றன.ஆனாலும் அரசாங்கம் அக்கறைகாட்டவில்லை.
எவ்வளவு காலம்தான் முத்தையா முரளிதரன் என்ற இலங்கை-மலையக-இந்திய வம்சாவளி வீரரை அணியில் வைத்துக்கொண்டு உலகத்துக்கு படம் காட்டுப்போகிறார்கள் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்று ?அண்மைக்காலமாக முரளியினூடாக இலங்கை அரசு வடக்கில் சில அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சர்வதேச விளையாட்டரங்கை நிர்மாணிக்கமுன்மொழிந்திருக்கிறது..ஆனால் இந்து எந்தளவுக்கு
எமது வீரர்களை வளர்த்துவிடப்போகிறது என்பது ஜயமே..முரளியின் சாதனை என்பது வேறு ...ஒரு வீரனை பாராட்டவேண்டும் அதில் இன மத மொழி பேதம் இல்லை...ஆனாலும் இவர்களுக்கு முன்னால் சிம்பாவே முன்னாள் வீரர் "ஒலங்கா "
சிறந்தவீரராக தெரிகிறார்.தமது நாட்டில் அரச அதிபர் மக்களுக்கு இழைக்கும் கொடுமையை உலகறியச்செய்தத்தன் மூலமாக...
2007 ம் ஆண்டு உலககிண்ணப்போட்டி என்னால் மறக்கமுடியாதது.அன்றையதினம் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அணி வாங்கிக்கட்டிக்கொண்டிருந்தபோது.. கோப்பையைக்கைப்பற்றி இலங்கை உள்நாட்டு போரில் மக்கள் கொல்லப்படுவதன் மேலான
உலகத்தின் பார்வையை திருப்பிவிடலாம் என எண்ணீக்கொண்டிருந்தவர்களுக்கு இரண்டு பேரிடி விழ்ந்தது.
ஒன்று போட்டியில் 53 ஓட்டங்களால் தோல்வி
இரண்டாவது அனைத்துவிதமான பாதுகாப்புக்கள் நவீன போர்விமானங்கள் வைத்திருந்த இல.இராணுவத்தினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இரண்டு இலகு ரக விமானங்களில் விடுதலைப்புலிகள் கட்டுநாயக்கா விமானத்தளத்தின் மீது
குண்டுகளை வீசிவிட்டு வந்திருந்தனர்.இதன் காரணமாக கட்டுநாயக்க விமானநிலையம் பூட்டப்பட போட்டியை கண்டு களிக்க சென்ற ஜனாதிபது ராஜபக்ஷே இலங்கை வரமுடியாமல் திணறினார்.
அதைவிட.. அந்த இரு இலகு ரக விமானங்களும் குண்டு போட்டுவ்விட்டு பாதுகாப்பாக தளம் திரும்பிவிட...சில மணித்தியாலங்களின் பின்பு வன்னி வான்பரப்புக்குள் நுழைந்த கிபிர் விமானங்கள் கிளிநொச்சி இரணைமடுக்காட்டுப்பகுதிக்கு மேல பல நூற்றுக்கணக்கான பரா லைட்டுக்களை ஏவி குண்டுகளை பொழிந்தது.. ஆனால் காடுகள் அழிந்ததுதன் மிச்சம்..அப்போ நித்திரையில் இருந்தநாம் என்னவென்று அறியாது ஏன் இந்த இரவுத்தாக்குதல் என்று முழித்தோம்..அடுத்தநாள் பேப்பர் பார்த்தபோதுதான் விடயமறிந்து கொண்டாடினோம்... இரண்டு தோல்விகளுக்குமாக..
இன்றும்கூட இலங்கை அதிபர் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார்... இலங்கை அணீ வென்றால் திங்கட்கிழமை தேசிய விடுமைறை என்று..
யாருக்கு வேணும் இந்த மானம் கெட்ட விடுமுறை.... நீ ஆணியே புடுங்கவேணாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக