தனித் தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.துவண்டு கிடக்கும் தனது செல்வாக்கை கபால்ன்னு செங்குத்தாக தூக்கி
நிறுத்த இப்பிடி அந்தர் பல்டி அடித்துள்ளார் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதை தொடர்ந்து திமுக தீர்மானம் மற்றும் திமுக உயர்நிலைக்கூட்டத் தீர்மானம் ஆகியவற்றை விளக்கும் வகையிலான ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், தனி தமிழீழமே திமுகவின் குறிக்கோள் என்றார்.
அத்துடன், இலங்கை யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்;.
இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்ட குழு இன்று வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று இடம்பெற்ற திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. (அய்யா அப்போ நீங்க உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்னாச்சு)
போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது. (அதுசரி உங்கட மகளை 2 ஜீ ஊழல் குற்றப்பத்திரிகையில சேர்த்திருக்காங்களே அதுக்கும் இதே பதில்தானா)
இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
3 கருத்துகள்:
மன்மதக்குஞ்சு என்ற உங்களின் தலைப்புக்கு ஏற்றாப் போல் எழுதியுள்ளீர் உங்களை நினைத்து பரிதாப படுகிறேன் காரணம் தமிழ் ஈழத்துக்கா தொடர் குரல் யார் என்று பழைய நாழிதல் எடுத்து பார்க்கவும்
என்னை பார்த்து நீங்கள் ஏன் பரிதாபப்படுகிறீர்கள் என புரியவில்லை.அத்துடன் நீங்கள் என்ன சொல்லவாறிர்கள் என்று புரியும்படியும் சொல்லலாமே..."தமிழ் ஈழத்துக்கா தொடர் குரல் யார் என்று பழைய நாழிதல் எடுத்து பார்க்கவும்"
இவ்வளவு காலம் தமிழ் ஈழம் என்ற வார்த்தையே பயன்படுத்தாத கலைஞர் அய்யா ஏன் இப்போ அதைச்சொல்லணூம்.எல்லாம் மக்களோட கவனத்தை திசை திருப்பத்தான் என்று 3 வயசு பிள்ளைகூட சொல்லுமே அண்ணே..
//தமிழ் ஈழத்துக்கா தொடர் குரல் யார் என்று பழைய நாழிதல் எடுத்து பார்க்கவும் //
பழைய நாளிதழ்கள் மட்டுமல்ல இப்போதைக்கு வெளிச்ச்ம் போட்டுக் காண்பிக்கும் உண்மைகள் பலவற்றையும் ஆராயும் போது தமிழக முதல்வராக உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கருணாநிதியின் செயல்களாக இந்திய ராணுவம் திரும்பும் போது புரொட்டகால் படி வரவேற்க போகாததும்,தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்பா பாடிய இரு தருணங்கள் மட்டுமே.கருணாநிதிக்கு ஈழத்தின் மீது அக்கறை இல்லையென்று சொல்ல முடியாது.ஆனால் விடுதலைப்புலிகள் எம்.ஜி.ஆர் சார்பு நிலை எடுத்ததில் அவருக்கு கோபம் என்பதும்,உண்ணாவிரத நாடகம்,மத்திய அரசின் நிலையே மாநில அரசின் கருத்தும் என்று இனப்படுகொலைக்கு துணை போனதில் அவரது தமிழ் இன உணர்வை விட சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
வரலாறு ஒரு முறை மட்டுமே நிகழும்.வரலாற்றை மாற்றும் தகுதியிருந்தும் நழுவ விட்டார் என்பதை விட வரலாற்றுத் துரோகம் செய்தார் என்பது மட்டுமே தமிழகம்-ஈழம் சார்ந்த கருணாநிதியின் வரலாறாக இருக்கும்.இதனை மாற்றுவது இயலாது.
இந்த கால கட்டத்தில் அவர் குரல் எழுப்புவது தானும் தனது குடும்பமும் இருக்கும் இக்கட்டான 2G என்பதால் மட்டுமே.
தனி ஈழம் இறுதி தீர்வு என்பதிலாவது மந்திரி பதவியிலோ அல்லது இல்லாமலோ இருக்கும் பட்சத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை இனி மேல்தான் கணிக்க இயலும்.அவர் மன உறுதியோடு செயல்பட நினைத்தாலும் சந்தேக கண்ணோட பார்ப்பதையும் தவிர்க்க இயலாது.
கருத்துரையிடுக