1 ஆம் நூற்றாண்டின் ஒரு அரச குடும்ப மணப்பெண்ணான கேட் மிடில்ட்டன், தனது திருமணத்தின் போதான பிரமாணத்தில், தனது கணவருக்கு கீழ்ப்படிந்து நடப்பேன் என்று வாக்குறுதி அளிக்காமல், அவர் மீது காதலுடனும், மரியாதையுடனும், ஆறுதலுடனும் அவரை வரிந்திருப்பேன் என்று வாக்குறுதிவழங்குவது என்று முடிவு செய்திருக்கிறார்.
வில்லியத்தின் தாயாரான டயனாவை பின்பற்றும் வகையிலேயே இவ்வாறு பிரமாணத்தை எடுத்துக்கொள்வதென அவர் முடிவு செய்துள்ளார்.
1902 ஆம் ஆண்டு ஏழாவது எட்வேர்ட் அரசருக்கு முடிசூட்டுவதற்காக இசையமைக்கப்பட்ட வைபவ பாடல் இசைக்கும் போது தேவாலய நடைபாதை வழியாக எதிர்கால அரசியாக வரக்கூடிய அவர் பவனி வருவார்.
ஜெரூசலம் மற்றும் கிறீன்ஸ்லீவ்ஸ் ஆகிய பிரபலமான பாடல்களும் இந்த திருமணத்துக்கான இசையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரித்தானியத் தன்மையும், அரங்கியல் உணர்வும் வரவேண்டும் என்ற காரணத்துக்காக இளவரசர் சார்ள்ஸ்தான் இதனை தேர்வு செய்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
திருமண நிகழ்ச்சி நிரல் தற்போது இணயத்தில் பிரசுரமாகியிருக்கிறது. அதில் தமது திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்து தம்மீது மக்கள் காண்பித்த அபிமானமும் ஆதரவும் தம்மை நெகிழச் செய்துள்ளதாக திருமண ஜோடி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக