29 ஏப்ரல், 2011

ரஜனியை தூக்கி எறிந்த வடிவேலு..மறைத்த சண்டீவியும் போட்டுக்கொடுத்த தினமலரும்

சற்று முன் சன் டீவியிலும் கலைஞர் டீவியிலும் வடிவேலு கலைஞரை சந்தித்து விட்டு வேளியேறும் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த காணொளியை பிளாஷ் நியூஸில் போட்டுக்காண்பித்துக்கொண்டிருந்தார்கள்

"அதில் தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.

ஆனால் அடுத்ததாக நிருபர் கேட்ட ஒரு கேள்வியையும் பதிலையும் கட் பண்ணிவிட்டார்கள் ஆனாலும் விடுவார்களா நம்ம நிருபர்கள் வெளியிலே பத்தவைச்சிவிட்டார்கள்
அந்த உலக மகா கேள்வியும் பதிலும் இதுதான்


"ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க... என்று சிரித்தபடியே கூறினார்"

இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே என்ற சவுந்தர்ராஜனின் பாட்டுத்தான் நினைவு வருகிறது...


அதுசரி கலைஞருக்கே ஆறுதல் சொல்லுமளவிற்கு வடிவேல் அரசியலில் பெரிய அறிவாளியாகிட்டாரா... இல்லை மத்திய அமைச்சர் பதவி கேட்கிறாரா?

4 கருத்துகள்:

bigilu சொன்னது…

ஆப்பு விசய்கா அல்ல வடிவேலுகா என மே 13 அன்று தெரியும்.


இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே - இது கண்ணதாசன் பாட்டுதனங்கோ ?? #டவுட்..

raam சொன்னது…

96 ஆம் ஆண்டு மனோரமா சூப்பர் ஸ்டாரை தாக்கி பேசிவிட்டு
முகவரியே இல்லாமல் போனார். பிறகு ரஜினி பெருந்தன்மையுடன்
தனது அருணாசலம் படத்தில் நடிக்க வைத்து மறு வாழ்வு தந்தார். அந்த
மாபெரும் நடிகைக்கே இந்த கதி என்றால் வடிவேலு ஜுஜுபி...பாரதிராஜா
மன்சூர் அலிகான் ,சரத்குமார் என்று பாவமன்னிப்பு பட்டியல் நீளும். வடிவேலு
மன்னிப்பு கேட்கும் நாள் தொலைவில் இல்லை.

மணிப்பக்கம் சொன்னது…

தேர்தலுக்கு முன் 'தம்பி வடிவேலு'

பின் ...

'சிரிப்பு நடிகர் வடிவேலுக்கு நன்றி'

... இதான் கருணாநிதி!

பெயரில்லா சொன்னது…

தேவையா எனக்கு இந்த வேண்டாத வேலை...
ஒரு புறாவை தின்றுவிட்டு நான் படுகிற பாடு...