02 மார்ச், 2011

உலகசைவ மகாநாடும் வாடகைக்காரும்..





2004 ஆம் ஆண்டு இலங்கையிலே 2ம் உலக சைவ சமய மகாநாடு நடத்துவதற்கு அப்போதைய இந்து கலாச்சார அமைச்சராக இருந்த அமரர் மகேஸ்வரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். எமது நண்பனான றமாவுக்கு அவவுடைய தந்தை மூலமா அதற்கான வி.ஜ.பி அனுமதி சீட்டுக்கள் கிடைத்திருந்தன.அதனால நாங்கள் அந்த நிகழ்வுக்கு சென்று அந்த மகாநாட்டை பெருமைப்படுத்து முடிவை எடுத்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் சைவப்பெரியார்கள் வருகை தர இருந்தகாரணத்தினால் நாமும் ஒரு அட்டெண்டன்ஸை போட்டு வரலாற்றில் இடம் பிடிப்பதென தீர்மானித்திருந்தோம்.அதனால் தமிழர் கலாச்சார உடையில் போவதற்கான
அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தோம்.

இந்த நேரத்தில் நாமிருந்த இடத்தைப்பற்றி கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.தெகிவளையில் கெளடான என்ற முற்று முழுதாக சிங்கள பெரும்பான்மை மக்கள் வாழும் இடத்தில்தான் அன்றையகாலகட்டத்தில் நானும் வேலாசென்னும் வாடகைக்கு ஒரு வீட்டில வடகைக்கு குடியிருந்தோம்.ஆங்காங்கே ஒரு சில தமிழ் குடும்பங்கள் குடியிருந்தார்கள். அதில் இளம் பெண்களும் அடங்கியிருந்தபடியினால் அந்த ஏரியாவை நம்ம கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம்.அதில் எமது தளபதி பிரிகேடியர் வேலாசென்னும் நானும் ஓரளவு வெற்றி கண்டிருந்தோம்.அந்தக்காலத்தில் அப்பர் ஒரு மாசச்செலவுக்கு அனுப்பிற ரூபா 5000 இல் எப்படியாவது மிச்சம் பிடிச்சு ODEL ல் லேட்டஸ்ட் உடுப்புக்களை வாங்கி அந்த ஏரியாவுக்கே நாங்கதான் இறக்குமதி செய்து பாசன் சோ பிலிம் காட்டுவொம் .நம்மோட டிரஸ்ஸிங் சென்சே அந்த வீதி மக்களை மட்டுமல்ல நம்ம வீட்டு ஓனரைக்கூட நம்மீது நல் மதிப்பு வைப்பதற்கு உதவியிருந்தது.அந்த கெத்தை நாமும் மெயிண்டென் ண்ணிக்கொண்டிருந்தோம்.அதை மேலும் அதிகரிக்கும் விதமாக நம்ம வேலா சென்னும் ஒரு பிளானைசொன்னான்.



மச்சான் நாங்க வேஷ்டி, நஷனல் எண்டு சூப்ப்ரா கொஸ்டீம் போட்டு ஒரு வாடகைக்காரைப்பிடிச்சுகொண்டு உலக சைவ மகாநாடு நடைபெற இருக்கும் பண்டாரநாயக்கா மண்டபத்துக்கு (B.M.I.C.H) போய்ட்டுவருவோம் மச்சான். அப்போதான் ஊருக்குள்ள நம்மேல ஒரு மதிப்பு வரும்.ஆத்திர அவசரத்துக்கு மூலைக்கடையில கூட கடன் கொடுப்பானுக எண்டு
ஒரு குண்டைத்தூக்கிப்போட்டான்.ஆனால் அது அப்போ எமக்கும் சரியெனபட்டது .அதெல்லாம் சரி மச்சான் ,ஆனா காருக்கு எப்படி ரூபா 1000 மாவது வேணுமே அதுக்கு என்ன செய்ய எண்டு கேட்க..
அதொண்ணும் பெரிய விசயமே இல்லை மச்சான்… எங்கிட்ட கிடக்கிற காசை கொடுப்போம் மிச்சத்தை றமா போடுவான் எண்டு றமாவை உசுப்பேத்திவிடவும் றமாவும் கவசகுண்டல கர்னன் கணக்கா , நான் அப்பாகிட்ட வாங்கிட்டு வாறன் மச்சான் எண்டு நண்பேண்டா என்று சத்தியம் செய்து
நம்ம வயித்தில பாலைவார்த்தான். பிறகென்ன அடுத்த நாள் நாங்களும்
ஒட்டுமொத்த தமிழர்களினதும் தளபதிகள் நாங்கள் எண்டு அந்த வீதி மக்கள்
அனைவரும் எண்ணும் விதமா வேஷ்டி,நஷனல் நெத்தியில் பட்டை எண்டு சும்மா வீதியே கம கமக்க சென்ரை நம்மில் பீச்சி அடித்து வீட்டில் இருந்து வெளிக்கிடும்போது வேலாசென் என்னையும் றமாவையும் தடுத்து,மச்சான் வீட்டுக்கார மனுசி வெளிலநிக்குதா பாரு ,ஏன்ன நம்ம எண்ட்ரி எப்படியிருக்கணும்னா எல்லாருமே நம்மையே கவர்பண்ணுற மாதிரி இருக்கணும் எண்டு அட்வைஸை போட்டான் (எப்படித்தான் இப்படியெல்லாம் பயபுள்ள சோசிக்கிறனோ தெரியல)

நானும் வெளியே எட்டி பார்க்கும் போது நம்ம வீட்டுக்கார மனுசியும் முன் வீட்டு அன்ரியும் அவாவோட பொண்ணும் வெளியில நிண்டு கதைச்சு கொண்டிருந்தாங்கள்.மச்சான் இதுதாண்டி சரியான டைம் வாங்கடா சூப்பர் என்ரியைக்கொடுப்போமெண்டு மூவரும் 3 இடியட்ஸ் ஹீரோக்கணக்கா கீழே இறங்கி வந்தோம்… அவிங்க கண்கள் எல்லாமே நம்ம மேலேயே மொய்க்க தொடங்கின.. உள்ளே
ஏ.ஆர் ரகுமானின் இசையே ஒலிக்கத்தொடங்கியிருந்தது.அப்போ நாங்கள் அழைத்திருந்த வெள்ளை நிற டொயாட்டா வாடகைக்காரும் வந்திருந்தது.அதில் நாங்கள் மூவரும் ஏறி போவதையே அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பதை வேலாசென் கடைக்கண்ணால பார்த்துகொண்டு வந்து காருக்குள்ளே ஏறினவுடன் சொன்னான் ,மச்சான் இந்த பிலிம் இந்த மாசத்துக்கு போதும் மச்சி.. ஊருக்குள்ள நாமதான் இனி கிங்கு எண்டு..எமக்கு அது அப்போ இனிப்பாய்த்தான் இருந்திச்சு.
அப்படியே மகாநாட்டு மண்டபத்துக்கு போயிருந்தவேளையில் அங்கே அனைத்துபிரபலங்களையும் சந்திக்கமுடிந்தது.அந்த வேளையில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த சரத்குமார் ராதிகா தம்பதியினரையும் சந்த்தித்து
புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்( வரலாறு முக்கியமில்ல)





அதன்பிறகு நிகழ்ச்சிகளைப்பார்த்துவிட்டு பின்னேரம் வீட்டுக்கு வந்திறங்கினோம்.ஆனால் நம்ம வீட்டுக்காரம்மா எம்மீது ஒரு மரியாதையான பார்வையை தொடுக்க ஆரம்பித்தார். எமக்குள்ளே அதன்பிறகு ஒரே பட்டாம் பூச்சிகள் பறக்கத்தொடங்கியிருந்தன.அதன்காரணமா வேலாசென் நம்மத்தியில் ஒரு ஹீரோவாகவே உருவாகியிருந்தான். இது நடந்து முடிந்து இரண்டு வாரங்களின் பின்பு நாங்கள் வீட்டு வாடகை ரூபா 3000 த்தை கொடுக்க வீட்டுக்காரம்மாவை பார்க்கபோனோம்.அப்போ அவர் சொன்ன வார்த்தைகள்
எம்மீது இடியென இறங்கியது.

தம்பி அடுத்த மாசத்தில இருந்து வாடகை ரூபா 7000 தாங்கோ எண்டு சொல்லவும் நானும் வேலாசென்னும் வாதாடத்தொடங்கினோம்,நாங்க படிச்சுக்கொண்டிருக்கிறோம் , அதனால அந்தளவு தரமுடியாது வாதிடவும் அந்தம்மா போட்டிச்சு பாருங்க பொக்ரான் அணுகுண்டை….
உங்களுக்கெல்லாம் இது பெரிய காசா தம்பி… நீங்க எவ்வளவு பெரிய வீட்டுபையங்க… வாடகைக்காரில் எல்லாம் போய் வாரீங்க,இது உங்களுக்கு தூசிக்காசு தம்பி எண்டு சொல்லவும் , கெத்தை அப்படியே மெயிண்டென் பண்ணுவதா. இல்ல அதெல்லாம் பில்டப் தாங்க எண்டு சொல்லி
வாதாடுவதா எண்டு தெரியாம ,கடைசில வாயை மூடிக்கொண்டு ரூமுக்குள்ளே வந்து படுத்துக்கொண்டோம்.. அப்போ வேலாசென் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி என்னைப்பார்த்து….

மச்சான் ODEL இல சேல் போட்டிர்க்காங்களாம் வாறியாடா போய் புது அயிட்டங்களா அள்ளிட்டு வருமோன்னு…..

2 கருத்துகள்:

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

உலக சைவ மாநாட்டுக்கும் சரத்,ராதிகாவுக்கும் என்னங்க தொடர்பு?

அமாவாசை,அப்துல் காதர் மாதிரியில்ல இருக்கு...

மன்மதகுஞ்சு சொன்னது…

அண்ணே நீங்க சொல்லுறதும் கரெக்ட் ... அப்போ அவிங்க M.P யாக இருந்தாய்ங்க போல தமிழ்நாட்டில இருந்து சிறப்பு விருந்தினரா வந்திருந்தாய்ங்க....