03 மார்ச், 2011

ராங்கோலும் மொபிட்டல் சிம்மும்..

2003 ம் ஆண்டு காலப்பகுதியில் டயலொக் சிம் வாங்குவதெண்டால் வீட்டு முகவரி, டெலிபோன் பில் இல்லாட்டால் மின்சார பில் கொடுக்கவேணும் எண்டு பல கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் நாங்களெல்லாம் நம்பி இருந்தது இரவு 10 மணிக்கு பிறகு 5 ரூபா குற்றீயைப்போட்டு 10 நிமிடம் கதைக்கும் SLT பப்ளிக் டெலிபோன் பூத்தைத்தான். நம்ம கெளடான ஏரியாவில ஒரே ஒரு பூத் மட்டும் இருந்திச்சு.அதுவும் அந்த நேரம் பார்த்து கியூவில நித்திரை முழிச்சு வந்து நிப்பானுக.அப்படியே லைனில நிண்டு ஒருமாதிரி நம்ம டேர்ண் வந்தவுடனேயே போய் ஒரு வாயில வந்த 10 நம்பரைப்போட்டு டேய் மச்சி ஏண்டா இண்டைக்கு லெக்சர்ஸ்க்கு வரல எவ்வளவு நேரம் பார்த்துக்கிட்டு நின்னோம் தெரியுமா …இண்டைக்கு பிரக்டிக்கல் நல்லாப்போச்சு எண்டு ஒரு பிட்டை போடுவோம்.(கேக்கிறவன் கேனயனா இருந்தா நாங்க கிபிரே (Kifir )ஓட்டுவோமில்ல_.. மறுபக்கத்தில யாராச்சும் பொண்ணு கதைச்சா சாரி மிஸ் மாறி அடிச்சிட்டோம்னு ஒரு பிட்டை போட்டு அந்த பக்கதில ரியாக்சன் என்னன்னு பார்ப்போம் , பரவாயில்ல ,நீங்க எந்த யூனிவேர்சிட்டியில படிக்கிறீங்க எண்டு அந்த பொண்ணு மட்டும் கேட்டிட்டான்னு வைச்சுக்குங்களேன்..அப்படியே அந்த நம்பரை நம்ம டேட்டா பேசில அப்லோட் பண்ணிவைச்சிடுவோம்... யாராச்சும் ஆம்பிளீஸ் கதைச்சா லைன் கட்தான்.



இப்பிடி நம்ம டெலிபோன் ராங்கோல மேட்டர் போய்க்கொண்டிருக்கும் போதுதான்2003 ம் ஆண்டு ஜீன் மாதம் என நினைக்கிறேன் ,அப்போ மொபிடல் நிறுவனம் இலங்கையிலே தனது சேவையை தொடங்குவதற்கான ஆரம்ப வேலைகளில் மும்முரமாக இருந்தது.மொபிடலின் வருகை எமக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது. அப்போ நம்ம வேலாசென்னும் அதற்கு அப்பிளை பண்ணீயிருந்தாப்பில.

நம்மளக்கு செமிஸ்டர் லீவு விட்டதனால நான் யாழ்ப்பாணம் போய்விட வேலாசென் மட்டுமே ரூமில் தங்கியிருந்தான். நான் யாழ் போய் 3 ம் நாள் விக்கி அக்கா ஓடி வந்து சொன்னா ,கீர்த்தி உன்னோட பிரண்ட் றமணனும் வேலசென்னும் இத்தோட 4 தடவையா போன் பண்ணிட்டாங்கள் இன்னும் 15 நிமிடத்தில போன் பண்ணுறன் எண்டு சொன்னவங்கள் கெதியா வா எண்டு சொல்லிட்டு போனா.

விக்கி அக்கா எங்கட வீட்டுக்கு ஒரு 100 மீட்டர் தூரத்திலதான் இருக்கிறா.அவவோட வீட்டில லாண்ட் லைன் போன் இருக்கு.அவங்க வீட்டில குட்டி கொமினிகேசனே நடத்தி வந்தாங்க அந்த ஏரியாவுக்கு. அப்போ லாண்ட் லைன் போன் வீட்டுக்கு எடுப்பதெல்லாம் முடியாத காரியம் ஆகையால் அந்த ஏரியாவில் உள்ள எல்லாரும் அவவோட வீட்டு நம்மரைத்தான் தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து வைச்சிருந்தோம் அவசரத்துக்கு கோல பண்ணுவதற்காக.

நானும் வீட்டில இருந்து உடனேயே விக்கி அக்காவீட்டுக்கு போய் விட்டேன்.ஏன் இவனுங்க இவ்வளவு தடவை கோல் பண்ணினாங்க எனக்கு என்ன அப்படி அவசரமா இருக்கும்.... வேலாசென்னுக்கு ஏதாச்சும் லவ் கிவ் சக்கஸ் ஆகிட்டா ? எந்த பொண்ணாவது லவ் லெட்டர் கொடுத்திட்டாளா ? இல்லாட்டி ஏதாச்சும் நம்ம கெளடான ஏரியாவுக்குள்ள பிராப்பிளம் ஆகிட்டா எண்டு சோசிச்சுகொண்டிருக்கும்போதே டெலிபோன் மணி ஒலிக்கத்தொடங்கியது.அது உண்ட பிரண்டாத்தான் இருக்கும் எடு எண்டு விக்கி அக்கா சொல்லவும் நான் எடுத்து ஹலோ என்றேன்.. அடுத்த முனையில டேய் மச்சான் கீர்த்தி எப்படி இருக்கிறாய் எண்டான் வேல சென்..
நல்ல சுகம் மச்சான் ஏண்டா எடுத்..... அதை கேட்டு முடிக்கவிடாமல் வேலாவே கதைக்கத்தொடங்கினான்.... என்னமச்சான் காலைல சாப்பிட்டாய் எண்டு கேட்டான் ? புட்டும் கிழங்குக்கறியும் எண்டு சொல்ல , டேய் கிழங்கை மச்சான் நல்லா
வதக்கி கறி வைச்சு புட்டோட சாப்பிட்டு பாரு மச்சான் சூப்பரா இருக்கும் ,கட்டாயம் கருவப்பிலை இலை போடணும்
அப்பதான் கறி வாசமா இருக்கும் அதுசரி நைட்டில அங்கே மழையாடா... இங்கே ஒரே வெய்யில் மச்சான்..
இப்பிடி என்னை கதைக்கவிடாமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே போனான். அதுக்கு பக்கத்தில நிண்டு றமா
எடுத்துகொடுத்துக்கொண்டிருந்தான்.. நானும் கடுப்பாகி டேய் ஏண்டா அவசரமா கோல் பண்ணினாய் எண்டு
கேட்டேன்... அப்போ வேலா கேட்டான் , மச்சான் காலங்காத்தாலேயெ 4 தரம் நாங்க எடுத்திட்டம் எண்டு விக்கி அக்கா
சொல்லியிருப்பாவே ... நானும் ஓம் மச்சான் அதுதான் நானும் ஏதாச்சும் அவசரமோ எண்டு ஓடிவந்தனான் என்ன மேட்டர் சொல்லுடா
எண்டு சீரியஸாய் கேட்டேன் அதுக்கு அவன் சொன்னான்

இல்லை மச்சான் மொபிட்டல் சிம்முக்கு அப்பிளை பண்ணியிருந்தேன் தானெ அது இண்டைக்கு தந்திட்டாங்கடா எண்டு சொல்லவும்
அதைச் சொல்லவாடா இவ்வளவு அவசரமா எடுத்தாய் எண்டு கேட்டேன்... இல்ல மச்சி இந்த சிம்மில அவுட்கோயிங்,இன்கம்மிங்,SMS
எல்லாமெ பிறீடா,அதுதான் எடுத்தனாங்கள் நீ கதைச்சுக்கொண்டிரு மச்சான்... 11 நிமிசத்துக்கு ஒரு தடவை கட்டாகும்
திரும்ப நான் எடுக்கிறேன் எண்டு சொல்லவும் எனக்கு ரெம்ப கடுப்பாகிட்டு... ஏன்னா நான் இன்கமிங் வதாலும் நிமிடத்துக்கு
விக்கி அக்காவுக்கு காசு கொடுக்கணுமெல்லோ...அதனால் டேய் வேலா நீ பிறகு எடுடா எனக்கு கொஞ்சம் அலுவல்
இருக்கு எண்டு சொல்லி நழுவப்பார்க்க அவனும் ஓக்கேடா.. நீ கொழும்பு வரும்போது உனக்கு தெரிஞ்ச பிகர்களோட வீட்டு
நம்பரை எடுத்துக்கொண்டு வாடா பிறீதானே கதைக்கலாம் எண்டு வேற உசுப்பேத்தி விட்டான்... அப்போ நான் சொன்னேன்
வேண்டாம் மச்சான் பிறகு பிடிபட்டா பிரச்சைனை ஆகிடும் எண்டு சொல்ல... அப்போ.. உண்ட ஏரியாவில
இருக்கிற நல்ல பிகருகள் வேர்க் பண்ணுற கொமினிக்கேசன் நம்பர் எல்லாம் நோட் பண்ணிட்டு வா மச்சான் டைம்
பாஸிங்கா கதைக்கலாம்டா எண்டு பிஞ்சு மனசில நச்சு விதையை வேற விதைச்சு விட்டான் வேலாசென்.. நாமளும் அப்போ
மந்திரிச்சு விட்ட கோழியாட்டம் சரி கொஞ்சம் போய்த்தான் பார்ப்பமே எண்டு முக்கியமான நம்பர்களை நோட்
பண்ணிக்கொண்டு கொழும்புக்கு 2 வது கிழமையே போனேன்... அதுக்குப்பிறகுதாங்க
வேலாசென்னுக்கு சுக்கிரதிசையும் நம்மளுக்கு 7 1/2 நாட்டு சனி சுழட்டி அடிக்க ஆரம்பிச்சிச்சு....

தொடரும்...

3 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்க வலைப்பூ பேயரே வித்தியாசமாக உள்ளது..


http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

சக்தி கல்வி மையம் சொன்னது…

followers widjetஐ சோ்க்கவும், அப்போதுதான் நீங்கள் புதுபதிவு போடும்போது எனக்கு தெரியும்..

நான் உங்களின் பாலோவர் ஆகிவிடுவேன்..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

மன்மதகுஞ்சு சொன்னது…

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.. நான் எவ்வளவோ தடவை முய்யற்சி செய்து பார்த்துவிட்டேன்... followers widjet இப்போது என்னால் இணைக்க முடியாமல் உள்ளது... உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்...