17 மார்ச், 2011

திசை மாறிய சுனாமி

சென்ற மாதம் வரை உலக நடப்பில் பிளாஷ் நியூசில் நம்பர் 1 ஆக இருந்து வந்தது இந்தியாவில் ஆ.ராசா அடித்த 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான்.இது எந்தளவுக்கு பேமஸ் என்றால் எல்.கே.ஜி சின்னப்புள்ளைகள் கூட 1.76 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று சரியாகச்சொல்லும் அளவில் அனைவரையும் உள்வாங்கியிருந்தது.வீட்டில் அம்மாக்கம் தமது குழந்தைகளை ராசா என்று கூப்பிடக்கூட விருப்பப்ப்டாத அளவிற்கு அந்த ஊழல் மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.இதனால் அதிகம் கவலைப்பட்டது நம்ம ஜயா கருணாந்திதான் வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் இதன் பலன் எதிரொலிக்கப்போகிறது என பெரும் வருத்தம் கொண்டிருந்தார்.இதனால் பல வருடங்கள் வசனமெழுதி தயாரித்த நாடங்களையெல்லாம் தற்போது அரங்கேற்றினார்.அதில் ஒன்று தமிழக மீன்வர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதும்,கைது செய்யப்பட்டதும் கொந்தளித்து அறிக்கைவிட்டது.இதில் மேலும் ஒரு படி போய் தி.மு.வினரே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பொலிஸாரும் அனைவரும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு நீதி என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியையும் கைது செய்து சென்றது.ஆனால் அந்தக்கைதுக்கு பலர் பல வியாக்கியானாம் சொன்னாலும் உண்மையான காரணம் அந்த கைதின் மூலமாக கனிமொழி சிறை சென்று ஆ.ராசாவை சந்திச்சு லவ்வுதற்கென்றே என்று உளவுத்துறையினர் அவர்களின் மாமியார் மேலெ சத்தியம் செய்தனர்.


இது இப்படியிருக்க இதையெல்லாம் மறகடிக்கும் முகமாக எதிப்தில் புரட்சி ஏற்பட்டு 30 ஆண்டு முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட அதைதொடர்ந்து லிபிய மக்களும் வீதியில் இறங்கி போராட கேணல் கடாபி எகிப்து அதிபர் போல் அல்லாது அனைவரையும் இரும்புக்ககரம் கொண்டு அடக்க முயல அனைவர் மத்தியில் இந்த விடயமே பிரபலமாகியது.இதன் பின்னால் கலைஞரின் "ராஜினாமா நாடகம் ' 2009 ம் ஆண்டு இலங்கைப்பிரச்சினைக்குப்பிறகு 2011 ல் தொகுதிப்பிரச்சினையின் போது மீண்டும் அரங்கேற்றப்பட்டது.ஆனால் இந்த நாடகத்தை கலைஞரின் வசனத்தில் ஏற்கனவே பார்த்துவிட்ட மக்கள் இதனை பிரிதாக எடுக்கவில்லை.ஆனால் கலைஞர் அந்த நாடக அரங்கேற்றத்தை கையில் வைத்துக்கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை " பூனை கண்ணை மூடி
பால் குடிப்பது போல " மூடிமறைக்கலாம் என எடை போட்டார்.ஆனால் மக்கள் எதை மறந்தாலும் இந்த விடயத்தை மறக்க முன்வரவில்லை.


இப்பிடியான சூழலில்தான் சென்றவாரம் வெள்ளிக்கிழமை பகல் 2.45 மணீயளவில்
யப்பானைத்தாக்கியது பாரிய சுனாமி..இதனை சண்டீவி,கலைஞர் டீவி விளம்பரமே போடாமல் தொடர்ந்து யப்பானின் அழிவுகளை காட்டிக்கொண்டிருந்தன...ஏனென்பது உங்களுக்குதெரியும்.. ஆனால் யப்பான் மக்கள் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவார்கள்.அதைப்பற்றி நாங்கள் கவலைப்படத்தேவையில்லை.நம்மட பிரச்சினை என்னான்னா..இந்த தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்யப்போகிறார்கள் என்பதே..
ஏற்கனவே விஜயகாந்தின் கட்சியினரும் அ.இ.அ.தி.மு.க இல் இணைந்து கொள்வதற்கு
ஏற்கனவே பல தில்லுமுல்லுகளை திமுக உளவுத்துறையூடாக நடத்தியிருந்தது.ஆனாலும் அதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் எதிர்கட்சியில் கைகோர்த்துக்கொண்டனர்.இது
தி.மு.க கழக கண்மணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருந்தது.இதனால் அவர்களால் முடிந்தவரைக்கும் அவர்களின் குடும்ப டீவிக்கள் மூலமாக எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டவர்கள் பற்றிய குறைபாடான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தது.


இவர்களின் வயித்தில் பீர் வார்த்தது போல நேற்றிலிருந்து சில அசம்பாவிதங்கள் நிகழ ஆரம்பித்தன.சுனாமி திசைமாறி போயஸ்கார்டனில் சுழட்டி அடித்தது .(அப்பாடா பதிவின் தலைப்புக்கு வந்திட்டோம்)


அ.தி.மு.க தம்முடன் இணைந்து கொண்ட இதரகட்சிகளை மதிக்காமல் தொகுதிகளை ஒதுக்கியது.இது இன்று தேர்தலில் தே.தி.மு.க, இடதுசாரிகள்.ம.தி.மு.க கட்சிகள் எல்லாம் ஒன்றீணைந்து மூன்றாவது அணீயை உருவாக்கும் நிலைமைக்கு அத்திவாரம் போடப்பட்டுள்ளது.இதனை வரவேற்பது போல திமுக வின் குடும்ப டீவிக்கள் அவர்களின் செயற்பாடுகளை சரியென துணைக்கு நிற்பது போல இன்றுமுதல் விளம்பரம் போடமலேயே பிளாஷ் நியூசில் போட்டுக்கொண்டிருக்கின்றன்ர்( நல்லா உசுப்பேத்துறாங்கைய்யா).. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒளவையார் சொன்னது போல இவர்கள் செயற்படத்தொடங்கிவிட்டனர்.நாளைக்கு அனைவரும் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை எடுக்க இருப்பதாக கூறி வருகின்றனர்..

கலைஞர் அய்யா " ரெண்டாவது லட்டும் திங்க ஆசையா"

கருத்துகள் இல்லை: