23 மார்ச், 2011

விசேட பயிற்சி அளிக்கப்பட்ட கன்னிப்பெண்கள் பாதுகாப்பில் கடாபி!




லிபிய ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் இருந்து தப்புவதற்காக பாதாள அறையில் பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவின் 'சபஹா' ஒரு பாலைவன நகரமாகும். இங்கு சுமார் 130,000 கடாபியின் அதி தீவிர விசுவாசிகள் உள்ளனர். கடாபி இம்மாவட்டத்திற்கு சென்றிருக்கலாம் என ஐக்கிய இராச்சிய விசேட படைகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் இறக்கும் வரை போர் புரிவதாக கடாபி கூறினாலும் அது பொய்யென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடாபி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை தோன்றும் போது தனது நேச நாடுகளான சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் ஆபிரிக்காவின் நைஜர் போன்ற நாடுகளுக்கு தப்பியோடலாம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடாபி தன்னைப் போன்ற உருவம் கொண்ட பலரை உருவாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவருக்கு 40 கன்னிப்பெண்களைக் கொண்ட மெய்ப்பாதுகாவலர் பாதுகாப்பு அளித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் விசேட பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.

அப்பெண்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது .மேலும் சாகும் வரை கடாபியின் உயிரை பாதுகாப்போம் என சத்தியம் மேற்கொண்டவர்கள் ஆவர்.

கடாபி பெண்களுக்கு சமவுரிமை வழங்குபவன் என்பதனை அடையாளப்படுத்துவதற்காக இவர்களை தன்னுடன் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: