1996 ம் ஆண்டு இலங்கையில் மழைவிழ்ச்சி குறைவானதால நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனை ஈடு செய்யும் முகமாக அன்றைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் இலங்கை நேரத்தை 30 நிமிடங்களால்
முன்நகர்த்த ஏற்பாடு செய்தார்.அப்போது இலங்கை நேரமும் இந்திய நேரமும் ஒரேநேரமாகத்தான் இருந்து வந்தது( ஒரு சிலநிமிடங்கள் வேறுபாடு) ஆனால் இந்த ஏற்பாட்டின் பின்பு இலங்கையில் காலை 8 மணியென்றால் இந்திய நேரம்
7.30 ஆக இருந்தது. இந்த நேர மாற்றத்தின் காரணமாக பாமர மக்கள் மத்தியில் பாரிய சிக்கல்களை ஏற்படுட்தியது. அப்போது மாணவர்களாக இருந்த நம்மத்தியிலும் கூடத்தான்.யாழில பல பாடசாலைகள் இந்த நியூ டைமை( புதிய நேரம்)
தமது பாடசாலை இறுக்கமாக கடைப்பிடிட்தார்கள்.. சிறு பாடசாலைகளில் ஓல்ட் டைமையே( பழைய நேரத்தை)கடைப்பிடித்தார்கள்..
இந்த சிக்கல் காரணமாக யாராவது டைம் கேட்டால் நமக்கு ரெண்டு விதமா டைம் சொல்லவேண்டிய கடப்பாடு இருந்திச்சு.அப்படி மொட்டையா 8 மணி எண்டால் திருப்பி நம்மகிட்ட நியூ டைமா ஓல்ட் டைமா எண்டு கேட்பானுக.
இப்படி இருக்கையில் நமது க.பொ.த உயர்தர வகுப்பறையில் நடந்த கதைதான் இது.நம்ம கிளாஸில வெறைட்டிய நம்ம பயலுக இருந்தானுக.... ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப். ஒரு சிலர் புத்தகத்துக்குள்ளேயே மூஞ்சியை எந்த நேரமும்
புதைச்சு வைச்சிருப்பானுக.. ஒருசிலர் புத்தகம் அரட்டை , அடுத்தது நம்ம கோஷ்டி.. எப்பவும் அரட்டை..வகுப்புக்குள்ள சேர் வந்தா மட்டும் நல்லபிள்ளையாட்டம் பாடத்தை கவனிக்க ஆரம்பிச்சிடுவோம்..நாமெல்லாம் உயர்தர கணித பாட பிரிவில படிச்சுக்கொண்டிருந்தோம்.. அப்போ நமக்கு பிரயோக கணித பாடத்தை( Applied Maths)
சிறிதரன் ஆசிரியர் எடுத்து வந்தார். அவர் அநியாயத்துக்கு ரெம்ப சின்சியரா படிப்பிப்பார்.. நாங்க இடையில கேள்வி கேட்டா மனுசன் கிளீன் போல்ட் ஆகிடுவார்..அதுக்கப்புறம் எல்லா புத்தங்களையும் Refer பண்ணி நமக்கு விடை சொல்லுவார்.
அதனால நாங்கெல்லாம் அடிக்கடி அவரை குழப்பி விடுவதுண்டு.
அன்றையதினம் எமக்கு சார்பு வேகம் பற்றி பாடம் எடுத்து விட்டு .டேய் நான் சொல்லுற இந்த கணக்க எழுதுங்கடா எண்டு சொல்லிவிட்டு புத்தகத்தில் இருந்த ஒரு கணக்கை வாசிக்கத்தொடங்கினார்.
ஒரு கப்பலானது காலை 9 மணிக்கு துறைமுகத்தைவிட்டு புறப்பட்டது என்று தொடங்க
நாங்க பின்னுக்கிருந்து
"சேர் நியூ டைமா ஓல்ட் டைமா "எண்டு கேட்க மனுசனும் ஏதோ நினைப்பில் நியூடைம்தாண்டா எண்டு சொல்லிவிட்டார்..
அப்புறம் பாருங்க சிரிப்பு சத்தம் வகுப்பறையையே அதிரவைத்தது.அப்போதுதான் சுதாகரித்துக்கொண்டு முன்னுக்கிருந்த பையன் கிட்டகேட்டார் ஏண்டா சிரிக்கிறாங்கள் எண்டு அவனும் நம்ம கதையை சொல்ல...
டேய் அப்பிடியே அந்த பின் பெஞ்ச்காரர் முன்னுக்கு வாங்கடா எண்டு கூப்பிட்டு.... பிறகென்னா எல்லாருக்கும்...
சங்கே முழங்கு ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக