18 மார்ச், 2011
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுமா...
உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான, வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றால், இரு நாடுகள் மட்டுமல்ல, உலகமே அன்று தனது இயக்கத்தை சற்று நிறுத்தி வைத்துவிட்டு, போட்டியை பார்க்கத் துவங்கி விடும். இதை ரசிகர்களும் போட்டியாக பார்க்காமல், இரு நாடுகள் இடையிலான யுத்தமாக நினைத்துக் கொள்வார்கள்.
இந்தியா ஆதிக்கம்:
பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் (மொத்தம் 119) இந்தியாவை (46 வெற்றி) விட, பாகிஸ்தான் அணி தான் (69 வெற்றி) அதிக வெற்றிகள் பெற்றுள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை. ஆனால் உலக கோப்பை தொடர் என்று வரும் போது, பங்கேற்ற 4 போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றுள்ளது.
முதல் வெற்றி:
முதன் முதலாக கடந்த 1992 தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி (216/7), பாகிஸ்தானை (173/10), 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின் 1996ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை காலிறுதியில், முதலில் விளையாடிய இந்திய அணி 287/8 ரன்கள் எடுத்தது. பின் பாகிஸ்தான் அணி 248/9 ரன்கள் மட்டும் எடுத்து, 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
"ஹாட்ரிக்' இந்தியா:
பின் 1999 தொடர் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்திய அணி (227/7), மீண்டும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை (180/10) சாய்த்தது. கடந்த 2003 தொடரில் பாகிஸ்தான் நிர்ணயித்த (273/7) இலக்கை, இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
மீண்டும் வருமா?
இம்முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த பிரிவில் இடம் பெற்றதால், இரு அணிகள் இடையிலான மோதல் இல்லாமல் போனது. தற்போது காலிறுதியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மோதல் ஏற்படும் என்று தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக