யாழ்ப்பாணத்தில் மிகவும் பேமஸாக இருக்கிற தனியார்கல்வி நிலையங்களில் (டியூசன்) "Science Hall " டியூசனும் ஒன்று. இந்த டியூசனில் க.பொ.த உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களையும் மிகப்பிரபலமான ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது .இங்கே யாழில் மட்டுமில்லாது தென்மராட்சி,வடமராட்சி பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படிப்பார்கள்.ஏனெனில் அனைத்து பாட ஆசிரியர்களும் மிகவும் பிரபலமானவர்கள் மட்டுமல்ல,பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாக கற்பித்துக்கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால் இந்த டியூசன் பற்றி இங்கே சொல்லியாகவேண்டும்... நாங்கள் அனைவரும் "Science Hall " டியூசனுக்கு போறோம் என்று சொல்வதில்லை... அனைவரும் செல்லமாக " கொட்டிலுக்கு" போறோம் என்று சொல்வதே வழமையானது.
ஏனெனில் அங்கே கிடுகுகளால் வேயப்பட்ட 7 மிகப்பெரிய கொட்டில்கள் உண்டு. இதில் குறைந்தது 500 மாணவர்களாவது கல்வி பயிலமுடியும்.. இதிலும் வாங்குகள் ,இருக்கைகளாக இருப்பவை சாதாரண பலகைகளால் செய்யப்பட்டவை.
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தால் நமது காற்சட்டைகளின் பின்பக்கத்தில் ஓட்டை வந்துவிடும் நிலைமைதான்..ஆனாலும் எம்மைப்பொறுத்தவரை அது ஒன்றும் பெரிதாகப்படுவதில்லை.ஏனெனில் நாங்கள் போர்க்காலத்தில் அனைத்து
பொருளாதார பிர்ச்சினைகளுக்கு முகம் கொடுத்து வளர்ந்துவிட்டதால் இதை நாம் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அத்துடன் நிலம் கூட சீமெந்து தரையினால் ஆனது இல்லை.. மணல் பரப்பப்பட்ட தரையாகும்.
சரி மேட்டருக்கு வருவோம்.கணித பிரிவில் கல்வி பயிலும் பலருக்கு இரசாயனவியல் ( மானாட மயிலாட ஸ்டைலில் சொல்வதென்றால் "கெமிஸ்டிரி "மச்சான்ஸ்) என்றால் ஒரு சிலருக்கு தேன் குடிப்பது போல் ஆனால் பலருக்கோ புளிக்கரைசலைக்குடிப்பது போன்றது..
கெமிஸ்ட்ரிக்கு ஒரு ஆசிரியர் கொட்டிலில் படிப்பித்துக்கொண்டிருந்தார்..அவர் மிகவும் அமைதியனவர்..சிறந்த ஆசிரியர்..வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அனைவருக்கும் புரியும்படி கெமிஸ்ட்ரி பாடத்தை படிப்பிப்பார்.அவர் ஒரு சில ஆண்டுகளுக்கு
முன்பு தீராத நோய் ஒன்றினால் எமை விட்டுப்பிரிந்த்திருந்தார்.ஆனாலும் அவரின் கெமிஸ்ட்ரி பாடபுத்தங்கள் இன்னும் அவரை எம்மத்தியில் வாழவைத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு நாள் எமது வகுப்பிற்கு அவர் கெமிஸ்ட்ரியில் பென்சீனைப்பற்றி - Benzene படிப்பித்துக்கொண்டிருந்தார்.
பென்சீன் வளையத்தை படத்தில் குறிப்பிடப்பட்ட
மாதிரி குறியீட்டை வரைய வேண்டும்.அதில் உள்ளே உள்ள வட்டத்தை போடாவிட்டால் அந்தக்குறியீடு பென்சீனைக்குறிக்காது.மொத்தமே தப்பாகிப்போய்விடும்.இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அன்று முன்வரிசையில் இருந்த ஒரு மாணவி
இதை மறந்துவிட்டு அந்தகுறியீட்டின் உள்ளே உள்ள வட்டத்தை போடாமலேயே அனைத்து குறிப்புக்களை எழுத்திக்கொண்டிருந்தார்.இதனை முதலிருந்தே எமது ஆசிரியரும் நோட் பண்ணிக்கொண்டிருந்தார். இறுதியில் பொறுக்கமுடி யாமல் அந்த பென்சீன் குறியீட்டின் முக்கியத்துவத்தை நினைத்துக் கொண்டு அந்த மாணவியிடம் பின்வருமாறு எல்லாருக்கும் முன்னால் சர்வசாதரணமாக சொன்னார்.
"பிள்ளை நானும் உம்மை வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் .. முன்னுக்கு இருந்து கொண்டு உள்ளுக்கும் ஒன்றும் போடாமல் இருக்கிறீர்"
அவர் சொன்னது அந்த பென்சீன் குறீயீட்டின் உள்ளே போடப்படும் வட்டக்குறியீட்டை..ஆனால் அது சந்தர்ப்ப சூழ்நிலையால்
இரண்டாவது அர்த்தத்திலேயே அங்கிருந்த அனைத்து மாணவர்களிடம் போய்ச்சேர்ந்தது... அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று
நினைத்துப்பாருங்கள்... ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று ஆரம்பித்த மாணவர்களின் சத்தம் நீண்ட நேரத்தின் பின்புதான்
நிசப்தமானது...ஆனால் தனது வார்த்தைப்பிரயோகம் தப்பாகிப்போனதை அறிந்த அந்த ஆசான் ஏன் தான் அப்படி சொன்னேன் என்பதற்கு
தன்னிலை விளக்கம் அளித்தார்...ஆனாலும் நம்மாளுக... விடுவானுகளா.. பாவம் அந்தப்பொண்ண்னு.. கனகாலம் பிறகு கிளாஸிக்கு வருவதில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக