20 மார்ச், 2011

சோனியா காந்தியின் பிரித்தானியா வரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் பிரித்தானியா வரவுக்கு எதிராக ஈழத்தமிழ் மக்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (17) பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் சோனியா காந்தி உரையாற்றியபோதே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.




இந்திய அரசுக்கு எதிராக கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்தியா நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் 14 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றுவதற்காகவே சோனியா காந்தி லண்டன் சென்றிருந்தார்.

காமன்வெலத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்ற சோனியா காந்தி லண்டன் வந்திருந்தார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகள் உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா ? எனக் கேட்ட போது அது குறித்து கருத்து வெளியிட்ட முடியாது என மறுத்துள்ளார்.
மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடையம் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தான் பார்த்ததாகவும் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் கூறியுள்ளார் சோனியா காந்தி.

வடக்கில் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியா காந்தியிடம் வினவப்பட்டபோது இலங்கையில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டுள்ளார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், அப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி முதன்முதலில் எனது வலைப்பூவில் லண்டன் செல்லும்
" சோனியாகாந்திக்கெதிராக புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு " என்ற தலைப்பில் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்..

கருத்துகள் இல்லை: