1996 க்கு பின்பு இலங்கை அரசாங்கத்தின் ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்பு இந்த நிலைமை மாறியது. திரும்பும் இடமெல்லாம் சிறிய சினிமா கொட்டகைகள முளைத்திருந்தன.
இதில் உலகம் முழுவதும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு சினிமா கொட்டகை என்றால் அது சந்திரன் தியட்டர் தான்.சந்திரன் என்பவர் இந்த சிறிய தியட்டரை நடத்திவந்தார்.அவரை யாழில் எல்லோரும் செல்லமாக மாஸ்டர் என்றுதான் அழைப்பார்கள்.ஏனெனில 1996 வரை ஆங்கிலத்திரைப்படங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுத்தான் புலிகளின் திரைப்படத்துறையினர் வெளியிட்டிருந்தனர்.அதனால் ஆங்கில மொழியில் எந்த திரைப்படங்களையும் பார்க்க முடியாது.ஆனால் சந்திரன் உலக ஆங்கில மொழி திரைப்படங்களையும் தனது தியட்டரில் வெளியிடத்தொடங்கினார்.
சிம்பிளா சொல்லுறதெண்டா ஆங்கில மொழியை எம்போன்ற இளைஞர்கள் மத்தியில் இலகுவாக கற்றுக்கொள்வதற்கு பெரும் பங்காற்றியிருந்தார்.இன்று உலகம் முழுக்க ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று எமது இளைஞர்கள் முன்னேறியிருப்பதற்கும் அவர்தான் குரு.இதனால்தான் அனைவரும் அவரை செல்லமா சந்திரன் மாஸ்டர் என்று அழைப்பதுண்டு.
சிறிய வீட்டையே தியட்டராக மாற்றியிருந்தார்.அதிலே ஸ்பெசாலிட்டி என்னவெண்டா பக்கத்திலே இருக்கிறவன் யாருன்னு கூட தெரியாது அந்தளவுக்கு இருட்டாக இருக்கும். அந்த 21 இன்ச் டிவியில படம் பார்ப்பது ஏதோ தெய்வ தரிசனம் கிடைச்சது போல அப்போதையகாலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் தியட்டரில் குவிவார்கள் இளைஞர்கள்.
அதிலும் மாஸ்டரின் விளம்பரமே தனியாக இருக்கும்.. ஒரு ஒழுங்கையூடாகத்தான் அந்த தியட்டருக்கு செல்ல வேண்டும். அந்த ஒழுங்கையின் தொடக்கத்தில் உள்ள சுவரில் அழகான எழுத்தில் அன்றைய தினம் திரையிடப்படும் படத்தின் அனைத்து விபரங்களையும் எழுதி..அத்துடன் கதையை ஒரு சிறு வரியில் எழுதிவிடுவார்.. உதாரணத்துக்கு
"இப்படியும் காதலிக்கலாமா-காதலர்கள் இணைவார்களா " இது காதல்கோட்டைக்கு அவர் எழுதியிருந்தது...
ஆனால் இதைவிட அவர் ஆங்கிலத்திரைப்படங்களுக்கு எழுதப்படும் ஒரு வரிதான் அனைவரும் விரும்பி படிப்பார்கள் அது " வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற வாசகம்... சனி, ஞாயிறு தினங்களில் காலை டவுனில் உள்ள
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவர்கள் இந்த வீதியாலேயே வந்து அன்று என்ன திரைப்படம் என்று பார்த்துக்கொண்டு போவதுதான் வழமை.அன்று வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்று போடப்பட்டிருந்தால் அந்த நியூஸ் அப்படியே டியூசனிலும் தலைப்புச்செய்தியா எல்லாருக்கும் வாசிச்சிடுவானுக நம்மாளுக..
மச்சான் இண்டைக்கு மாஸ்டரிட்டை இங்கிலிஸ் கிறமர் மச்சான்.. சுப்பர் படம் போல கிடக்கு ( ஆமா அதில ஒளிபதிவு, ஒலிப்பதிவு.. சிறந்த நடிப்பு தானெ பார்க்கப்போறாய்ங்க). ஆனாலும் ஆஸ்கார் அவார்ட் கிடைச்ச படம்
ரேஞ்ச்சுக்கு நம்மாளுகளே விளம்பரம் பண்ணிடுவானுக..அதுக்கப்புறம் எப்படி படிப்பு ஏறும் .. அய்யயோ எப்படியாச்சும் 10.30 சோ , இல்லாட்டி 2.30 சோவுக்காவது போயிடணும் எண்டு துடிப்பானுக. பல தடவை டியூசன் செக்கி சந்திரி தியட்டருக்கு வந்து டியூசனுக்கு மாசக்காசு கட்டாதவங்களை வலுக்கட்டாயாம தூக்கிட்டே போயிருக்காங்க எண்டா பார்த்துக் கொள்ளுங்களேன் தியட்டரோட மதிப்பை பற்றி...
அப்போ நம்மில் பாலா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவன்
மாஸ்டரின் ரெகுலர் கஸ்டமரா ஆகியிருந்தான்.. இங்கிலீஸ் கிறமர் படங்களை ஒன்றும் கூட மிச்சம் வைக்காமல் பார்த்து விடுவான்., நம்மட பள்ளிகூட கா.பொ.த உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலுக்காக நாங்கள் முதல் நாள் பின்னேரம் பாடசாலைக்கு வந்து அனைத்து ஆயுதங்களை செய்து கொண்டிருந்தோம்.ஆனால பாலா மட்டும் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. மாலை 4 மணியாகிவிட்டதால் நாங்கள் அனைவரும் அனைத்து ஆயத்தங்களையும் செய்து முடித்துவிட்டு எல்லோரும் வீட்டுக்கு சென்று விட்டோம். ஆனால் பாலா வீட்டிற்கு 5 மணி வரை போய்ச் சேரவில்லை.இதனால் அச்சமுற்ற அவனின் அம்மா பக்கத்தில் உள்ள டில்சான் வீட்டுக்கு சென்று அவனிடம் பாலா எங்கே என்று கேட்க அவனும் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்று கூறிவிட அவனது தாய் அழவே தொடங்கிவிட்டார்... ஏனென்றால் அன்றைய காலப்பகுதியில் யுத்தம் நமது பகுதியில் நடைபெற்றுகொண்டிருந்தபடியால் பின்னேரம் 6 மணிக்கும் முன்பு அனைவரும் வீட்டிற்குள் சென்று விடவேண்டும்...அத்துடன் இளைஞர்கள் காணாமல் போவது அதிகரித்திருந்தது இதனால் டில்சானின் தாயும் அவனிடம் பாலா எங்கே போயிருப்பான் என்று கேட்டு நச்சரிக்க தொடங்கிவிட டில்சானால் ஒன்றும் செய்யமுடியவில்லை... ஏனெனில் டில்சானுக்கும் தெரியும் அவன் எங்கே போயிருப்பான் என்ற சரி இருங்கோ அன்ரி அங்கே ஒரு பிரண்ட் வீடு இருக்கு அங்கே போயிருப்பான் என்று வெளிக்கிட.. இல்லை நானும் வரேன் எண்டு பிடிவாதமாக அவனுடன் செல்லதொடங்கினார்.
டில்சானும் சந்திரன் தியட்டர் செல்லும் வீதிக்கு வெளியே நின்று,அன்ரி நீங்க இங்கேயே நிண்டு பாருங்கோ ரோட்டால சிலவேளை பாலா வருவான் எண்டு சொல்லி அவரை ரோட்டில நிப்பாட்டி விட்டு அவன் சந்திரன் தியட்டர் ஒழுங்கைக்குள்ள சென்றான்.தியட்டரில் வெளியே நிண்டு எத்தனை மணிக்கு படம் முடியும் எண்டு கேட்கவும் படம் முடியப்போகுது எண்டு வாசலில நிண்ட பொடியன் சொல்லவும் பாலா படம் முடிஞ்சு வெளில வந்து கொண்டிருந்தான்.. டில்சானும் அவனைக்கண்டது சந்தோசடமடைந்து
டேய் பாலா கெதியா வெளீல வாடா "
எண்டு கூப்பிட சைக்கிளை வெளியில எடுத்துகொண்டு வந்த பாலா..
"ஏண்டா மச்சான் பள்ளீக்கூடத்துக்கு வரேல்ல"
என்று டில்சான் கேட்க.. பாலாவும்
"மச்சான் சுப்பர் படம்டா மச்சான்..சீனைக்கேட்க மாட்டாய் சூப்பரா இருந்திச்சுடா ,நல்ல ஒரு சுப்பர் பிகரை போட்டிருந்தாய்ங்க என்னா ஒரு பர்போமன்ஸ்"
எண்டு சொல்லிகொண்டு வந்தவன் அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டான்முன்னாலே அவனின் தாய் அவன் சொன்னதை எல்லாம் கேட்டபடி நின்றுகொண்டிருந்தார்.. அவருக்கு அருகில் இருந்த சுவரில் சந்திரன் மாஸ்டரின் கைவண்ணத்தில் திரைப்படத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது...மலையாள கனவுக்கன்னி ஷகிலா நடிக்கும் " மயக்கும் மோகினி " வயது வந்தவர்களுக்கு மட்டும்.....
2 கருத்துகள்:
இப்படி நாங்கள் படம்பார்கப்போக வீட்டில சுதந்திரம் தரவில்லையே.நகைச்சுவையானபகிர்வு வாழ்த்துக்கள்
பாஸ் நாங்க மட்டும் என்ன வீட்டில சொல்லிட்டா தியட்டருக்கு போவோம்... வீட்டில டியூசனுக்குன் போறோம்னு சொல்லிட்டுத்தான் போவோம்...
கருத்துரையிடுக