11 மார்ச், 2011

பழைய இரும்புச்சாமானுகளுக்கு தும்புமுட்டாஸ்..

1990 ம் ஆண்டு நடுப்ப்பகுதி வரையில் யாழ்ப்பாணத்திலே முஸ்லீம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள்.. அவர்களுடைய பகுதிக்கு சோனகர் தெரு என்று பெயர். அவர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று வியாபாரம் செய்வதில் கைதேர்ந்த வர்களாக இருந்தனர். அவர்களில் ஏரியா சீற் தைப்பது, பாண் பேக்கரி.. வீட்டுப்பாவனைப்பொருள் விற்பனை என்று சில வியாபாரங்களில் களைகட்டி காணப்பட்டது.

நாங்கள் சிறுவயதாக இருந்த காலமாதலால் 1 மணிக்கெல்லாம் பாடசாலை முடித்துகொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.அன்றையகாலங்களில் எமது பகுதிக்கு "காக்கா" என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு முஸ்லீம் நபர் ஒருவர் கிழமைக்கு ஒரு தடவை எமது பிரதேசமெங்கும் ஒரு சைக்கிளில் அனைத்து வீட்டு உபயோகப்பொருட்களை கட்டிக்கொண்டு விற்பதற்காக வருவார். கூடுதலாக பெண்களைக்கவரும் .. அலுமினியம், பிளாஸ்டிக் சமையலறைப்பாத்திரங்களாகவே இருக்கும்,இவர் வந்து விட்டு போனபிறகு இன்னொருவர் சைக்கிளில் மணியடித்துக் கொண்டு வருவார் .. இந்த மணிச்சத்தம் கேட்டதுமே
சும்மா காலில் பம்பரம் கட்டி சுழலுவதைப்போல அலேர்ட்டாகி நானும் எனது அக்காவும் வீட்டுக்கும் வாசலுக்குமாக ஓடித்திரிவோம் .ஏனெண்டு கேட்கிறீங்களா.. அந்த மணீ அடித்து கொண்ட் சைக்கிளில் வருபவர் அந்த சைக்கிளின் பின்னால் ஒரு பெட்டியில் பிங்க் கலரில "தும்பு முட்டாஸ் " ( தற்போது அது சோன் பப்டி என்று அழைக்கப்படுகிறது) கொண்டு வருவார்.
நாங்கள் காசு கொடுத்தும் வேண்டலாம் இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் பழைய இரும்புச்சாமானுகள் ( பழைய வாளி, சைக்கில் றிம்,) அலுமினிய பாத்திரங்களைக்கொடுத்தும் வாங்கலாம்..கரகாட்டக்காரன் படத்தில பழைய இரும்புச்சாமன்களுக்கு பேரிச்சைம்பழம் எண்ட சீன் மாதிரி...


அதனால அந்தாள் வாறன்னைக்கு நம்மிடம் ஒரு 5 ரூபாயோ, 10 ரூபாயோ இருந்திட்டா நம்மளுக்கு கொண்டாட்டம் தான் ..அப்படி இல்லாட்டி நானும் அக்காவும் நம்மட வளவுக்குள்ள ஏதாச்சும் பழைய இரும்புச்சாமான் இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்திடுவோம்..அங்கேயும் கிடைகலைன்னா , வீட்டுக்கு முன்னால இருக்கிற வெறும் வளவுக்குள்ள தேடப்போவோம் அங்கேதான் நம்ம ஏரியாக்கள் எல்லாரும் குப்பையை கொண்டு வந்து கொட்டுவார்கள்.. அங்கே எப்படியாச்சும் ஏதாவது ஒரு பழைய இரும்புச்சாமான் இருக்கும்.. சிலவேளைகளில் மணீச்சத்தம் கேட்டவுடனேயே பட்ஜெட் இடிக்கிற நம்ம ஏரியா பயபுள்ளக எல்லாரும் அந்த வளவுக்குள்ள வந்து நிண்டு தேடிக்கொண்டிருப்பானுக.. இது சிலவேளைகளில அடிதடியில கூட முடிஞ்சிருக்கு..ஆனாலும் வீட்டில அடிச்சு கேட்டாலௌம் சொல்லமாட்டோம் என்ன பிரச்சைனை எண்டு.


ஆனால் அந்த தும்பு முட்டாஸ் சுவை இருக்கே , சொல்ல இப்ப கூட நாக்கில எச்சி ஊறுது ... சூப்பரா இருக்கும்.. அந்த ரேஸ்டுக்காக நாங்க பழைசை பொறுக்குவதில் தவறே இல்லை எண்டு நாங்கள் எங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுவோம்.
நாங்கள் கொடுக்கும் காசுக்கும்/ பழைய இரும்புச்சாமான் மதிப்புக்கு ஏத்தவாறு ஒரு பேப்பரில் எடுத்து மடித்துத்தருவார் அந்த முஸ்லீம் பெரியவர். ஆனால் இது வீட்டுக்கு தெரியாமல்தான் நாங்கள் வாங்கி சாப்பிடவேண்டும்.. ஏனெனில் அந்த பெரியவர் ஊரெல்லாம் வேர்க்க வியர்க்க சைக்கிளில் போய் வருவார்.. அதே வியர்வை காஇயுடனேயே தும்பு முட்டாஸையும் கையாள்வார்.இதனால் வீட்டில்
கண்டிப்பான உத்தரவு எனக்கும் அக்காவுக்கு அம்மாவிடம் இருந்து போடப்பட்டிருந்தது.அதை வாங்கிச்சாப்பிட வேண்டாம் எண்டு.. ஆனா நாங்க எங்க சொல் பேச்சு கேட்டிருக்கிறோம் மணீ அடிச்சதுமே பெரியம்மா வீட்டுக்கு போய்ட்டு வாறோம் எண்டு சொல்லிட்டுப்போய் அந்த தும்புமுட்டாஸை வாங்கிக்கொண்டு நம்மவீட்டுக்கு பக்கத்தில இருக்கிற வைரவர் கோயில் பின்பக்கத்துக்கு போவோம்..,ஆனால் ஏற்கனவே
நம்மளைப்போல நம்ம ஏரியா பயபுள்ளகளும் அங்கே வந்து நிண்டுகொண்டு அந்த தும்பு முட்டாஸை ஒரு கை பார்த்துகொண்டிருப்பானுக. ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிடமாட்டோமில்ல ... (பச்சைத் தமிழன்டா)..

சரி இப்படித்தான் ஒருநாள் நானும் அக்காவும் தும்பு முட்டாஸ் வாங்கித்தின்னுட்டு ஹாயாக வீட்டுக்கு வந்திட்டோம் .ஒரு 10 நிமிடம்தான் போயிருக்கும் " தும்புமுட்டாஸ் தின்னுட்டு கமுக்கமா இங்கே வந்து நிக்கிறியா எண்டு அம்மா பெரியம்மாவீட்டுக்கு கத்திகொண்டேவந்தார் ...அம்மாவின் ஒருகையில் . அக்காவோ அழுதுகொண்டிருந்தார்... துரோகி காட்டிக்கொடுத்திட்டாளா எண்டு நினைத்துக்கொண்டு அடுத்த கையில் பூவரசு தடி அடியில தும்பு மாதிரி மாறியிருந்திச்சு ஆஹா அக்காவுக்கு ஏற்கனவே ஒரு ரவுண்டு
போய் முடிஞ்சிருச்சு போலா எதுக்கும் இந்த நேரம் பார்த்து விலக்குபிடிக்க பெரியம்மா வேற இல்லையே..கண்ணில பீதியை காட்டாம சமாளிடா கீர்த்தி எண்டு மனசுக்குள்ளே நினைச்சுக்கொண்டே என்னம்மா ஆச்சு எண்டு அப்பாவித்தனமா கேட்க.. டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் தும்பு முட்டாஸ் வாங்கி சாப்பிடவேணாம் எண்டு...இல்லைம்மா நான் வாங்கிச்சாப்பிடவேயில்ல.. என்னட்ட காசே இல்லை எண்டு சொல்ல..... டேய் அதுதான் வீட்டில கறி காய்ச்ச வைச்சிருந்த புது
அலுமினியச்சட்டியை கொண்டு போய்க்கொடுத்து தும்புமுட்டாஸ் வாங்கினீங்களாடா... நேற்றுதான் அதை 250 ரூபா கொடுத்து வாங்கினேன் எண்டு சொல்லவும் .. நான் அப்படியே ஷாக்காயிட்டேன் என்னாது 250 ரூபாயா.. அடப்பாவி 10 ரூபாக்குதானே தும்பு முட்டாஸ் கொடுத்தான்..மிச்சம் 240 ரூபா கம்பெனிக்கணக்கா.. ஏமாந்திட்டியேடா கீர்த்தி , அம்மா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நம்மட ஏரியா எல்லையைத்தாண்டியிருக்கமாட்டான் போய் எப்படியாச்சும் அந்த அலுமினியச்சட்டியை வாங்கிட்டு வாறேம்மா எண்டு அட் த டைமிலேயே அப்புரூவர் ஆனேன்..

ஏண்டா போய் மிச்சக்காசுக்கும் தும்பு முட்டாஸ் வாங்கி வரவா எண்டு கேட்டுக்கொண்டே பூவரசுத்தடி நம்மோட கால்களைப்பதம் பார்த்தா...அடடே நம்ம ரெரர் பிளானை அடுத்த செக்கனிலேயே அம்மா கண்டு பிடிச்சிடாய்ங்களே.. ஏந்தான் இதுக்கும் மட்டும் இப்படி அறிவாளித்தனமா யோசிக்கிறாய்ங்களோ..பின்னே நம்மட ரெர்ர் அறிவில அவிங்களுக்கு 10% மவது இருக்கிறது ஜகஜம் தானே..

அம்மா நம்பிக்கைதான் வாழ்க்கை! எப்புடி திரும்பி வர்றேன்னு மட்டும் பாருங்கம்மா எண்டு சொல்லி கெஞ்சிக்கூடத்தான் பார்த்தேன்.. ம்கூம்
வேர்க்கவுட்டே ஆகல... ஆனா அந்தாள் எப்படியும் திரும்பி வாருவாரு ஒரு கை பாத்திடணும்டு நம்மட ஏரியா பயபுள்ளகளிடம் சொல்லி நம்மளோட கூட்டணி சேர்த்து காத்திருந்தேன்... ஆனால் அடுத்த நாள் பேப்பரில நியூஸ் வந்திருந்தது.. அனைத்து முஸ்லீம் மக்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் எண்டு... அப்போ மிச்ச 240 க்கும் தும்புமுட்டாஸ் .....

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

apudi boss ipudi ellam poisolurenka ...............apudi mudithu......nadakadum nadakadum