27 மார்ச், 2011

அ.தி.மு.க விற்கான விஜய் இன் ஆதரவினால் விஜய்-வடிவேல் முறுகல்


எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்துள்ளதாக, அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சாமானிய மக்கள் விலைவாசிப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியோ ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டி வருகிறது.

எனவே, தமிழகத்துக்கு நன்மை ஏற்படும் வகையில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

அதிமுகவின் வெற்றிக்காக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும், நாங்களும் கடுமையாக பாடுபடுவோம்," என்றார் எஸ்.ஏ.சந்திர சேகரன்.

மேலும், திமுக ஆட்சியால் திரைத்துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தனது 'சட்டப்படி குற்றம்' படத்தை வெளியிட முடியாத வகையில் மேற்கொள்ளப்பட்ட சதிதிட்டங்கள் குறித்தும் அவர் நிருபர்களிடம் விளக்கினார்.

இந்த அறிவிப்பினால் தொடர்ந்தும் விஜய் உடன் கைகோர்த்து விஜயின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் வடிவேல் தன ஆதரவாளர்களிம்" என்னட இந்தப்பயபுள்ள இப்பிடி பொசுக்குன்னு முடிவு எடுத்திடிசு என்று புலம்பித்திரிகிறாராம்.. இதனால் இருவருக்கும்
எதிர்வரும் காலங்களில் திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் விடயத்தில் விரிசல் விழலாம் என தமிழக வானியல் எதிர்வு கூறல் துறையினர் கூறியிருப்பதால்(ஆமா இவிங்க சொல்லி மழை வந்திட்டாலும்) விஜய் ரசிகர் மத்தியில் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.அத்துடன் வேலாயுதம் படத்தினை இயக்குனர் ராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விற்க இருந்ததாகவும் இதனால் அந்த புழைப்பில் மண் விழுதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சுறா படத்தில் வடிவேலுவின் சிரிப்பு வெடிகளினால் தான் அந்த படம் ஓடியது
என்பது நினைவிருக்கலாம்..

3 கருத்துகள்:

பொ.முருகன் சொன்னது…

என்ன சுறா ஓடிச்சா போங்க சார், காமெடிப்பன்னதிங்க.

பொ.முருகன் சொன்னது…

என்ன சுறா ஓடிச்சா போங்க சார், காமெடிப்பன்னதிங்க.

மன்மதகுஞ்சு சொன்னது…

அண்ணே அப்போ கொஞ்சநாளாச்சும் ஓடலயா...அப்போ சன் டீவில வெற்றீகரமாக 100 நாள் எண்டு போட்டங்களே.. சீ ரெம்ப ஏமந்திட்டமோ...